Friday, 7 July 2023

அம்பேத்கரின் பின்புலம்

அம்பேத்கரின் பின்புலம்

 எல்லோரும் நினைப்பது போல அம்பேத்கர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் கிடையாது. அம்பேத்கரின் அப்பா ஒரு ராணுவ மேஜர். 
அவரது பெயர் ராம்ஜி சக்பால்.
இவர் பிரிட்டிஷ் ராணுவத்தில் 1865 முதல் 1893 வரை பணிபுரிந்துள்ளார். 1880 களில் ஆங்கிலேயர் ராணுவத்தில் சாதிய அடிப்படையில் பார்த்தால் அதிகமாக இருந்தவர்கள் மகர்கள். பிற்பாடு பாம்பே மாகாண ராணுவத்தில் 25% மகர்களே இருந்தனர்.
அதிலும் குறிப்பாக ரத்னகிரி பகுதி மகர்கள். அன்றைய ரத்னகிரி மகர்களில் ஆறில் ஒருவர் ராணுவத்தில் இருந்தார். இவர்களில் ஒருவர்தான் அம்பேத்கர் அப்பா. அவர் 27 ஆண்டுகள் ராணுவத்தில் இருந்து பின் பணி ஓய்வு பெறும்போது சுபேதார் ஆக பதவி வகித்தவர். அதாவது இன்றைய மேஜர் அல்லது கேப்டன் போன்ற உயர்பதவி. அதாவது அடிநிலையில் இருந்து (சிப்பாய்) ஏழாவது படிநிலை (சுபேதார்). இவர் அவரை விட உயரதிகாரி ஒருவரின் மகளை மணமுடித்தார். அம்பேத்கருக்கு 18 வயது இருந்தபோதே அவரது சிறிய கிராமத்தில் 106 பேர் ராணுவப் பணியில் இருந்தனர். அன்று ராணுவத்தில் இருந்தவர்களுக்கு மில் தொழிலாளி போன்ற சம்பளம் இருந்தாலும் அவர்களது குடும்பத்துக்கு இலவச தங்குமிடம், இலவச மருத்துவம், குறைந்த விலையில் உணவு மற்றும் உடை, ஓய்வூதியம் ஆகியன உண்டு. இதைவிட முக்கியம் குறைந்த கட்டணத்தில் கல்வி வழங்கப்பட்டது. சமூகத்தில் மரியாதையும் இருந்தது. ராணுவம் நடத்திய பள்ளிகளில் படித்த ராணுவ வீரர்கள் ஆசிரியர்களாகவும் பணியாற்றினர். அப்படி அம்பேத்கரின் அப்பா ஒரு சிறிய பள்ளிக்கு தலைமை ஆசிரியராகவும் இருந்துள்ளார். இவரது அனைத்து பிள்ளைகளுக்கும் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியா முழுவதும் எதிர்ப்பை அடக்கிய பிறகு ராணுவத்தில் ஆட்குறைப்பு செய்தது பிரிட்டிஷ் அரசு. அப்படி ராம்ஜி வேலையை விட்டபோது அம்பேத்கர் கைக்குழந்தை. வேலையை இழந்த பிறகு ராணுவப் பள்ளிகளில் தமது குழந்தைளுக்கு  இடம் கேட்டு ராணுவ ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது (இப்படியாக அம்பேத்கர் சேர்ந்த பள்ளியில் தீண்டாமையை எதிர்கொள்கிறார். அதனால் பள்ளியிலேயே இவருடைய ஆசிரியர் அம்பேத்கர் (பிராமணர்) என்பவர் தன் பெயரைச் சேர்த்து எழுதி அட்மிசன் போட்டார். அம்பேத்கர் ஊர் அம்படாவே என்பது, இதுவே அவரது பெயரானது என்போரும் உண்டு. ஆனால் அம்பேத்கரின் உடன்பிறந்தோர் சக்பால் என்றே இன்று வரை பெயர்வைத்துள்ளனர்).
1895 இல் இந்த ராணுவ ஓய்வூதியர் சங்கம் கோபால்பாபா வாலங்கர் எனும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தலைமையில் 'தவறுகள் நீக்கும் ஆரியர் அல்லாதார் சங்கம்' (Non Aryan assosiation for removal of wrongs)' எனும் பெயரில் ஒரு இயக்கம் தொடங்கி மீண்டும் மகர்களை ராணுவத்தில் சேர்த்துக்கொள்ள கோரிக்கை மனு வைக்கிறது. இந்த மனுவில் உயர் சாதியினர் வெளியில் இருந்த வந்து தங்களை அடிமைப் படுத்தியதாக எழுதப்பட்டுள்ளது. இது அன்று ஆங்கிலேயர் கொண்டுவந்த பிரித்தாளும் தத்துவமான ஆரியர் - திராவிடர் கொள்கையை அடியொற்றி உள்ளது. 

 இந்த கோரிக்கை அப்போது நிறைவேறவில்லை ஆனாலும் 20 ஆண்டுகள் கழித்து 1914 இல் முதலாம் உலகப் போர் தொடங்கியதும் ராணுவ ஆளெடுப்பு தொடங்கியது. மகர்கள் மீண்டும் வேலை பெற்றனர். அப்படியாக 1917 இல் '111 மகர்கள்' எனும் படையணி மீண்டும் உருவானது.  இது 1919 இல் '71 பஞ்சாபிகள்' என்ற படையணியுடன் இணைக்கப்பட்டு உலகப் போர் முடிந்த பிறகு அதுவும் 1922 இல் கலைக்கப்பட்டது. 

 அதன் பிறகு 1939 இல் இரண்டாம் உலகப் போர் தொடங்குகிறது. இப்போது மீண்டும் ராணுவத்திற்கு ஆளெடுப்பு நடக்கிறது. இந்தியர்கள் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர பல தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் (நேதாஜி- காந்தி முரண்பாடு). ஆங்கிலேயரை ஒடுக்கப்பட்டோரின் மீட்பர்களாகப் போற்றி வந்த அம்பேத்கர் ஆங்கிலேயரிடம் பேரம் பேசுகிறார். 1941 இல் பிரிட்டிஷ் ராணுவ ஆலோகர் பதவி பெறுகிறார் (Defence Advisory Committee of the Viceroy's Executive Council). உலகப் போரில் ஆங்கிலேயருக்கு உதவ தமது சாதியினரை மீண்டும் ராணுவத்திற்கு அழைக்கிறார். மகர்கள் மீண்டும் ராணுவத்தில் சேருகிறார்கள். இவ்வாறாக அம்பேத்கர் முயற்சியால் மகர் படையணி மீண்டும் உருவாகிறது. இவர்கள் ஆங்கிலேயரின் நம்பகமான படையணியாக இருந்ததால் நவீன வலுவான ஆயுதங்கள்  இவர்களிடம் மட்டுமே வழங்கப்பட்டன.   (1956 இல் மூன்று படையணிகள் இணைக்கப்பட்டு இன்று பல்வேறு சாதியினர் இருந்தாலும்) இன்று வரை மகர் எனும் பெயரில் அப்படையணி இருக்கிறது. எப்போதும் 'சாதியை ஒழிக்க வேண்டும்' என்று கூறி வந்த அம்பேத்கர் கடைசி வரை தன் சாதிப் பெயரால் ஒரு அரசாங்க ராணுவ படையணி இருப்பதைப் பற்றி பேசவே இல்லை. அதைக் கலைக்கவோ அல்லது பெயர் மாற்றவோ கூட கடைசி வரை நினைக்கவில்லை. அவர் கடைசியாக புத்த மதத்தின் புதிய பிரிவிற்கு மாறிய போது அவருடன் மாறியதும் அவரது சாதியினரே! இன்று அந்த புத்தமதப் பிரிவில் இருப்போர் 90% மகர் சாதியினரே!

 ஆங்கிலேயர் ஆயுத நாட்டாமையைத் தொடங்கியபோது இங்கே பெரும் சவாலாக இருந்தது மராத்திய பேரரசு. அது பிராமணர்களால் ஆளப்பட்டது. அதில் தீண்டாமை நிலவியது. எனவே ஆங்கிலேயர் அப்படி தீண்டப்படாத சமூகங்களை தமது ராணுவத்தில் சேர்த்து மராத்திய பேரரசை முறியடிக்கின்றனர். அப்படி ஆங்கிலேய விசுவாசிகளாக மாறிப் போன மகர் சமுதாயம் பல சலுகைகளைப் பெறுகிறது.
 அப்படி முழுக்க ஆங்கிலேயருக்கு ஆதரவான சமூகத்தில்
 முழுக்க ஆங்கிலேயருக்கு ஆதரவான வட்டாரத்தில்
முழுக்க ஆங்கிலேயருக்கு ஆதரவான குடும்பத்தில்
பிறந்த அம்பேத்கரை ஆங்கிலேயர் தமது அரசியலுக்காக வளர்த்து எடுத்தனர் எனலாம்.

 அப்படி வளர்ந்த அம்பேத்கர் ஆங்கிலேயருக்கும் பிறகு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபிறகும் அவர்களுக்கும் என ஆள்பவர்களுக்கு ஆதரவாக இருந்தார்.

 அவரது பௌத்த மதமாற்றம் கூட பூச்சாண்டி காட்டத்தான். பௌத்தர்களை இந்து என்று சட்டம் எழுதியதே அவர்தான். இது மகர்களுக்கு தனி அடையாளம் உருவாக்க செய்யப்பட்டது எனலாம்.

 அம்பேத்கர் ஒரு தனிமனிதர் இல்லை!
 ஒரு சாதியின் அரசியல் நகர்வின் அடையாளம்! 

No comments:

Post a Comment