திராவிடத்திற்கு முன்பே காங்கிரசை வீழ்த்திய தமிழ்தேசியம்
அண்ணாதுரைக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பே காங்கிரஸை வென்றவர் ஆதித்தனார்!
ஆம். 1967 இல் அண்ணாதுரை கூட்டணி அமைத்து காங்கிரசை வீழ்த்தியதை பெரும் சாதனையாகத் திராவிடவாதிகள் கூறுவர்.
ஆனால் 1952 லேயே காங்கிரஸ் 153 இடங்களில் வென்றது. காங்கிரசை எதிர்த்து கூட்டணி அமைத்து 166 இடங்களில் வென்று காட்டினார் ஆதித்தனார்.
(1937 லிருந்தே தமிழருக்குத் தனிநாடு கோரிவந்தவர் ஆதித்தனார்)
ஆனால் அன்றைய கவர்னர் ஸ்ரீபிரகாசா கூட்டணியை ஒரே கட்சியாகக் கணக்கில் கொள்ளமுடியாது என்று கூறி காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க அழைத்தார்.
(இது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை ஆகும்.
சமீபத்தில் சசிகலா பெரும்பான்மை பலத்துடன் இருக்கும்போது ஆட்சியமைக்க அழைக்காமல் ஜனநாயகப் படுகொலை நடந்தது போல!)
அப்போது ராஜாஜி ஆதித்தனாரின் 'ஐக்கிய கூட்டணி' யிலிருந்து மாணிக்கவேலர் என்பவரை பதவி ஆசை காட்டி கட்சி மாறச் செய்தார். தான் முதலமைச்சர் ஆகி ஆட்சியும் அமைத்தார்.
அப்போது அவர் கொண்டுவந்த கல்வித் திட்டம் அன்று பெரும்பான்மை பலத்துடன் இருந்த ஆதித்தனார் கூட்டணியால்தான் தோற்கடிக்கப்பட்டது (இந்த திட்டமே குலக் கல்வித் திட்டம் என்று அவதூறு பரப்பப்பட்டது).
1957 லும் ஆதித்தனார் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சியை வீழ்த்த முயன்றார். ஆனால் முடியவில்லை.
இருந்தாலும் அக்கட்சி பலவீனமடைந்தது.
1958 இல் சுதந்திரத் தமிழ்நாடு கோரி மிகப்பெரிய மாநாடு ஒன்றை ஆதித்தனார் நடத்தினார். இதில்தான் இந்திய வரைபட எரிப்பு போராட்டம் பற்றி முடிவெடுக்கப்பட்டது.
1960 இல் ஈ.வே.ரா வுடன் இணைந்து (தமிழகம் நீங்கலாக) இந்திய வரைடத்தை எதிர்க்கும் போராட்டத்தை ஏற்பாடு செய்தார். ஆனால் போராட்டம் தொடங்கும் முன்பே இரு தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். ஆனாலும் மக்கள் தடையை மீறி மிகப் பெரிய அளவில் வரைபடத்தை எரித்தனர். 4000 பேர் இதற்காகக் கைது செய்யபட்டனர். மும்பை தமிழர்களும் இப்போராட்டத்தை நடத்தினர். அதிலும் சிதம்பரத்தில் வி.கே.சாமித்துரை என்பவர் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் கைது செய்யப்பட்டது பலருக்கும் அதிர்ச்சி தந்தது. காங்கிரசு பரவலான மக்கள் எதிர்ப்பைப் பெற்றது.
அதே 1960 இல் ஆகஸ்ட் மாதம் இந்தி திணிப்பை எதிர்த்து குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்ததுக்கு கறுப்புக் கொடி காட்ட முயன்ற ஆதித்தனார் மற்றும் அவரது 'நாம் தமிழர்' கட்சியினர் 126 பேர் கைது செய்யப்படனர். வெளிவந்த பிறகும் அக்டோபரில் ஆதித்தனார் 'தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்' கீழ் கைது செய்யப்பட்டு தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். மூன்று மாத சிறைவாசத்தில் 12 கிலோ உடல் எடை குறைந்து வெளிவந்தார். அப்போதும் காங்கிரஸ் மீது இளைஞர்களுக்கு பலத்த அதிருப்தி ஏற்பட்டது.
1965 மொழிப்போரை மாணவர்கள் முன்னெடுத்தபோது ஈ.வே.ரா காங்கிரசுடன் சேர்ந்துகொண்டார். அப்போது மாணவர்களை வழிநடத்தியது அண்ணாதுரையும் ஆதித்தனாரும். அண்ணாதுரை பாதியில் விலகிக் கொள்ள நாம் தமிழர் கட்சி கடைசிவரை உறுதியாக நின்றது.
1967 இல் அண்ணாதுரை காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க ஆதித்தனார் மிக முக்கியமான காரணம். அன்று திருநெல்வேலி காங்கிரஸ் கோட்டையாக இருந்தது. அண்ணாதுரை ஆதித்தனாரிடம் அத்தொகுதிப் பணியை ஒப்படைத்தார். 1962 இல் அதன் 19 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. 1967 ல் ஆதித்தனார் 14 தொகுதிகளில் தி.மு.க வை வெல்லவைத்தார். 5 தொகுதிகளே காங்கிரசுக்குக் கிடைத்தது.
தேர்தலுக்குப் பின் காங்கிரஸின் தோல்வியில் கால்வாசி பங்கு தினத்தந்தி க்குரியது என்று கூறினார் ராஜாஜி.
அண்ணாதுரைக்கு கிடைக்கும் புகழ் உண்மையில் ஆதித்தனாருக்குக் கிடைக்க வேண்டியது ஆகும்.
No comments:
Post a Comment