பாஜக செய்த ஈழத்திற்கு எதிரான நடவடிக்கைகள்
* 2000 ஆம் ஆண்டு புலிகள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் பலத்துடன் இருந்த சமயம் புலிகளை மிரட்டி தடுத்து நிறுத்தி 40,000 சிங்கள ராணுவத்தினர் உயிரைக் காப்பற்றியது பாஜக அரசு.
(ஈழம் அமைவது மயிரிழையில் தவறியது என்றும் கூறலாம்)
* இன்று வரை இலங்கைக்கு கிடைத்த மிகப்பெரிய வெளிநாட்டு உதவி அப்போது பாஜக அரசு வழங்கிய 100 மில்லியன் டாலர் நிதிதான்.
* 2003 இல் 90 கோடி மதிப்பிலான INS SARAYU என்னும் போர்க் கப்பலை வாஜ்பாய் அரசாங்கம் இலங்கைக்கு கொடுத்தது. விடுதலைப் புலிகளின் 8 கப்பல்களை அழித்தது.
* மூன்று செடக் ஹெலிகாப்டர்களையும் கொடுத்தது.
* முப்பத்தியாறு ஏவுகணைகள் (SURFACE TO AIR MISSILES, IGLA LAUNCHERS) வாஜ்பாய் அரசால் கொடுக்கப்பட்டன.
* வாஜ்பாய் அரசு அப்போது உலகிலேயே அதிக உயரத்திற்கு பறக்கும் தன்மை படைத்த மூன்று CHEETAH ஹெலிகாப்டர்கள் வழங்கியது .
* இருபத்தி நான்கு போபர்ஸ் விமான எதிர்ப்பு தானியங்கி துப்பாக்கிகள் (40 MM AUTOMATIC ANTI AIRCRAFT GUN) வாஜ்பாய் அரசால் கொடுக்கப்பட்டன.
* பத்து "கண்ணிவெடிகள் தாக்கமுடியாத வாகனங்கள்" (MINE PROTECTED VEHICLES) பாஜக அரசால் கொடுக்கப்பட்டன.
* வாஜ்பாய் அரசு 300 இலங்கை ராணுவத்தினரை அழைத்து வந்து சிறப்பு பயிற்சி கொடுத்தது.
* வாஜ்பாய் அரசாங்கம் பல ராடார்களையும் இலங்கை அரசிற்கு கொடுத்தது.
* 2009 இல் நாக்பூர் மாநகரில் உள்ள பாஜக தலைமைச் செயலகத்தில் நடந்த வருடாந்திர ஒன்றுகூடலில் தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் இலங்கையில் போரை நிறுத்த தீர்மானம் போடுமாறு மிக நீண்ட வாதம் செய்தும் அதை புறக்கணித்து போரை நடத்துமாறு தீர்மானம் போட்டது பாஜக.
* இனப்படுகொலை நடத்திய கையோடு மகிந்த ராஜபக்ச இந்தியா வந்தபோது அவரைச் சந்தித்த அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் அவரை வாழ்த்தி பாஜக என்றும் அவரை ஆதரிக்கும் என்று உறுதி கொடுத்தார்.
* சமீபத்தில் நடந்த இலங்கை போர்க்குற்றத்திற்கு எதிரான சர்வதேச வாக்கெடுப்பிலும் இந்தியா வாக்களிக்காமல் இலங்கைக்கு உதவியது.
* 2018 இல் வாஜ்பாய் இறந்தபோது இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அவரை "இலங்கையின் உண்மையான நண்பன்" என்று மனமுருகிக் கூறினார்.
* தற்போது இலங்கை மூழ்கும் நிலையிலும் மோடி அரசு வாராக்கடனாக 75,000 கோடி அளித்துள்ளது.
* சில நாட்களுக்கு முன் இலங்கை சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழர் பகுதிகளுக்குச் செல்லாமல் சீதை சிறையிருந்த இடத்தை மட்டும் பார்வையிட்டுவிட்டு வந்ததால் விமர்சிக்கப்பட்டு அதை பூசிமெழுக தற்போது ஈழ நினைவேந்தலில் கலந்துகொண்டு நாடகமாடுகிறார்.
No comments:
Post a Comment