Monday 26 July 2021

சாதிப்பட்டம் சாதிவெறியைத் தூண்டுமா

சாதிப்பட்டம் சாதிவெறியைத் தூண்டுமா?

 தமிழகத்தில் சாதிவெறி அதிகம் என்று கூறுபவர்கள் கூட மதவெறி இல்லை என்று ஒத்துக்கொள்வர். இவற்றை ஒப்பிடுவோம். 

 நான் வட இந்தியாவில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது யாராவது கையில் பை ஏதாவது கொண்டு போனால் அதில் தமிழ் எழுத்துக்கள் இருக்கிறதா என்று பார்ப்பேன்.
 (இது தமிழர்களை அடையாளம் காணத் துடிக்கும் புலம்பெயர் வாழ் தமிழர்கள் அனைவரும் செய்கின்ற ஒரு வழக்கமாகும்). இந்த பழக்கதோஷம் தமிழ்நாட்டிற்கு வந்தாலும் தொடரும். அவ்வாறு ஜவுளிக்கடை போன்று கையில் ஏதாவது வைத்திருந்தால் அதில் தமிழ் எழுத்துக்கள் இருக்கிறதா என்று பார்ப்பேன். தமிழ் இஸ்லாமியர் கையில் ஏதாவது கொண்டு போனால் அதில் இருக்கும் பெயர்கள் பெரும்பாலும் இசுலாமிய பெயராக இருக்காது (இஸ்லாமிய நிறுவனங்கள் மற்றும் கடைகள் வெளிப்படையான இஸ்லாமிய பெயர்களை பெரும்பாலும் வைத்துக் கொள்வதில்லை. ஆங்கில எழுத்துக்களையோ அல்லது ஆங்கில பெயரையோ வைத்திருப்பார்கள். இதை என்னால் அடையாளம் காண இயலும்). தமிழகத்தில் இஸ்லாமியர்கள் இஸ்லாமியரிடம்தான் கொடுக்கல் வாங்கல் வைத்துக்கொள்வார்கள் என்கிற தவறான எண்ணம் சிலருக்கு உண்டு. ஆனால் பெரும்பாலும் அது உண்மை இல்லை. நான் பார்த்தவரை தமிழக இஸ்லாமியர்கள் பெரும்பான்மை தமிழர்கள் போலவே பிரபலமான மதம் சாராத கடைகளில்தான் பொருட்களை வாங்குவர்.

 உலகம் முழுவதுமே கூட மதவெறியானது தலைவிரித்து ஆடுகிறது. அதிலும் இஸ்லாமியருக்கு எதிரான போக்கு இந்தியா முழுவதும் மூலைமுடுக்கெல்லாம் காணப்படுகிறது. தமிழகம் கேரளா ஆகியவற்றை தவிர்த்து ஏனைய இடங்களில் மதவெறி தலைவிரித்தாடுகிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் அப்படி ஒரு நிலை இன்றுவரை இல்லை. இத்தனைக்கும் தமிழின இஸ்லாமியர்கள் தான் ஒரு இஸ்லாமியர் என்ற வெளிப்படையான அடையாளத்துடன் தான் இருக்கிறார்கள். இஸ்லாமிய பெயர்களை வைத்துக் கொள்கிறார்கள். இஸ்லாமிய இஸ்லாமிய உடைகளை அணிந்து கொள்கின்றனர். இஸ்லாமிய பண்டிகைகளைக் கொண்டாடுகின்றனர். பாஜக எதிர்ப்பையும் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். அவர்கள் மக்கள் தொகையில் ஓரளவு கணிசமான அளவு இருந்தும் இனப்பற்று என்று வரும்போது அவர்கள் அளித்த பங்கு என்று பார்த்தால் குறைவு என்றுதான் கூற வேண்டும். அப்படி இருந்தும் பிற தமிழர்கள் தமது ரத்த சகோதரர்களான தமிழ் இசுலாமியரை ஒதுக்குவதில்லை. ஒருவர் தனது உண்மையான அடையாளத்தை வெளிக்காட்டுவது அந்த அடையாளத்திற்கு எதிராக பிறரைத் தூண்டுவதாக ஆகாது என்று இதன் மூலம் உணரலாம்.

 இப்போது கூறவந்த விடயத்திற்கு வருகிறேன். உலகம் முழுவதும் சாதிப் பட்டத்தைப் பயன்படுத்துகின்றனர் (சமீபத்தில் வெளிவந்த tomorrow war என்கிற ஹாலிவுட் படத்தில் கூட தொலைந்த தன் மகளை froster என்கிற குடிப்பட்டத்தின் மூலம் கதாநாயகன் அடையாளம் கண்டுகொள்கிறான்).
 சாதிப் பட்டம் போட்டுக் கொள்வதன் மூலம் வந்தேறிகளை முழுமையாக அடையாளம் காண முடியாவிட்டாலும் பெரும்பான்மையான வந்தேறிகளை அடையாளம் கண்டுவிட முடியும். இதனாலேயே சாதிப் பட்டத்தை வந்தேறி அரசுகள் ஒழித்தனர். இதனை மீண்டும் கொண்டுவர தமிழ் தேசியவாதிகள் முயற்சிக்கும் பொழுது சாதிப் பட்டம் போட்டால் சாதிவெறி தலைதூக்கும் என்கிற அடிப்படையே இல்லாத ஒரு வாதத்தை முன்வைக்கின்றனர். அப்படியென்றால் தமிழகத்தில் இசுலாமியருக்கு எதிரான மதவெறி தலைதூக்கி யிருக்கவேண்டும்  இல்லையா?! 
மத அடையாளம் மத நல்லிணக்கம் அமையத் தடையில்லை என்றால் அடையாளத்துடன் கூடிய சாதிய நல்லிணக்கம் சாத்தியம்தான்.

 தமிழர்களுக்கு சாதிவெறியும் மதவெறியும் கிடையாது. தமிழர்கள் எப்போதுமே ஒரு பண்பட்ட சமூகம். 

 தமிழக கிராங்களில் பல்வேறு சாதியினர் உறவுமுறை சொல்லி அழைத்துக்கொள்வதும், ஒரே தெருவில் பல சாதியினர் வாழ்வதும், ஒரே குலதெய்வக் கோவிலில் ஒன்றுக்கும் மேற்பட்ட சாதியினர் ஒற்றுமையாக வழிபடுவதும். சாதி தாண்டிய உயிர் நண்பர்கள் இருப்பதும், ஊருக்கு பொதுவான கோவிலுக்கு அந்த ஊரில் இருக்கும் சமுதாயங்கள் முறைவைத்துக் கொண்டு விழா எடுப்பதும் சர்வ சாதாரணம்.  ஒரே பொருளாதார அந்தஸ்தில் இருக்கும் இருவேறு சாதியினர் கலப்புத் திருமணம் செய்துகொள்வதும் பன்னெடுங்காலமாக இயல்பாகவே நடந்து வருகிறது (உங்கள் பெற்றோரை விசாரித்துப் பாருங்கள் உங்கள் தாத்தா பாட்டி காலத்திற்கு முன்பே சாதிதாண்டிய திருமணம் நடந்திருக்கும்). 

இதற்குச் சான்றாக இருவேறு சாதிகள் தங்களுக்குள் பெண்கொடுத்து பெண்ணெடுத்து அந்த இரு சாதிகளுக்கு நடுவிலேயே ஒரு சிறுபான்மை சாதி உருவாகியிருக்கும். உதாரணமாக நான் சேனைத்தலைவர் சாதியைச் சேர்ந்தவன் (மூப்பனார் பட்டம்) நாங்கள் செங்குந்தர் மற்றும் மறவர் ஆகியோர் கலந்து உருவான சிறுபான்மை சாதி (தமிழக மக்கட்தொகையில்  0.4 சதவீதம்). 

பிரச்சனை எப்போது வருகிறது என்றால் பொருளாதார அந்தஸ்து வேறுபாடான இரு குடும்பங்களில் திருமண சம்பந்தம் நடைபெறுவதில்லை. அதாவது (அது ஒரே சாதியாக இருந்தாலும்) வெவ்வேறு அந்தஸ்தில் இருக்கும் குடும்பங்கள் சம்பந்தம் செய்துகொள்வது இல்லை. இந்நிலையில் ஒரு ஆண் ஏழையாக இருந்தால் அவரது முறைப்  பெண் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றால்  பிரச்சனைகள் வருவது இயல்பு (அதிலும் காதலர்கள் காத்திருந்து காரியத்தைச் சாதிக்காமல் ஊரைவிட்டு ஓடிவிடுவது பெரிய பிரச்சனைகளைக் கொண்டுவரும்). ஆக நாம் இங்கே செய்யவேண்டியது பொருளாதார சமநிலை தான்.  அதாவது அனைத்து சாதியினருக்கும் சம வாய்ப்பு வழங்கி சமமான பொருளாதாரத்திற்கு உயர்த்தி விட்டால் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் பெண்கொடுத்து பெண்ணெடுத்து கலந்து விடுவது இயல்பாகவே நடந்துவிடும். ஆனால் வந்தேறி அரசுகளும் இயக்கங்களும் ஊடகங்களும் தமிழகத்தில் எங்கோ நடக்கும் சாதிய கொடுமைகளை ஏதோ தமிழகத்தின் பொதுக் கலாசாரம் போல பிரச்சாரம் செய்கின்றனர். புள்ளிவிவரங்கள் அடிப்படையில் பார்த்தால் தமிழகத்தில் தான் சாதிய மோதல்கள், ஆணவக்கொலைகள், தீண்டாமை, சாதிய கலவரங்கள் ஆகியன பிற மாநிலங்களை விட மிகவும் குறைவு. இங்கே நடந்த அத்தகைய சில அசம்பாவிதங்களும் திராவிட அரசியல் செய்யும் சாதிய அரசியலே காரணம்.

 ஆகவே தமிழர்களே! நாம் அனைவரும் உலகில் எல்லா முன்னேறிய சமூகங்களும் செய்வது போல நமது தாத்தா பாட்டிகள் போல நமது குடிப் பட்டத்தை நமது பெயருக்கு பின்னால் போட்டுக் கொள்ளவேண்டும். குடிப்பட்டத்தை பெயருடன் இணைத்துக்கொள்வது சட்டப்படி தவறு இல்லை.  இதை நாம் செய்தால் வந்தேறிகளை அடையாளம் காண்பது மிகவும் எளிதாகிவிடும். தமிழ்ச்சாதிகளின் பட்டங்கள் போன்றே பட்டம் கொண்ட பிற இனத்து சாதிகள் மிகவும் குறைவு.  பெரும்பான்மையான தமிழ் குடி பட்டங்கள் தனித்துவமானவை. ஒருவர் தமிழர் என்று அடையாளம் காண இன்று நமக்கு வேறு வழியில்லை. வெளிப்படையாக நான் ஒரு தமிழன் என்று சொல்லிக் கொள்வதில் பட்டம் முக்கிய பங்கு வகிக்கும்.

 தன் குடிப்பெயரை பெயருடன் இணைத்து பயன்படுத்துவது சாதிவெறியாக பார்க்கப்படுவதை தவிர்க்க தமிழ்தேசியவாதிகள் பிரச்சாரம் செய்ய வேண்டும். அதற்கு 'தமிழர் நிலத்தில் சாதியவேறுபாடுகள் வேற்றின ஆட்சிக்கு முன்பு இல்லை' என்று ஏராளமான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. அவற்றை வெளிக்கொண்டு வந்த எந்த சாதிக்கும் மேலேயோ கீழேயோ கிடையாது என்பதையும் தமிழ் தேசியவாதிகள் பிரச்சாரம் செய்ய வேண்டும். 

உலகில் தனது இனத்தை ஓரணியில் திரட்டிய தலைவர்கள் சாதி மத வர்க்க அடையாளங்களை அழித்துவிட்டுத்தான் வரவேண்டும் என்று பிரச்சாரம் செய்ததில்லை. 

சாதியை ஒழித்து விட்டு மதத்தை ஒழித்து விட்டு தூய தமிழில் பேசி வர்க்க முரண்பாடுகளை ஒழிக்கும் திட்டத்துடன்தான் ஒரு தமிழ் தேசியவாதி இருக்க வேண்டும் என்று நம்மை மூளைச்சலவை செய்துவைத்துள்ளனர். சாதிய, மத வேறுபாடுகளை ஒழித்தால்தான் தமிழினம் ஒன்றிணைய முடியும் என்பது பித்தலாட்டம். நடக்கவே நடக்காது என்று தெரிந்துதான் வந்தேறிகள் 'இனத்தின் முதல் எதிரி சாதி' என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்துவருகின்றனர். நாமும் அந்த வழியை முயன்றுபார்த்து தோற்றுவிட்டோம். வந்தேறிகள் தமது அடையாளத்தை மறைத்துகொண்டு எளிமையாக அதிகாரத்தைக் கைப்பற்றி கொழுத்துவிட்டனர்.

 ஆகவே இனி வழியை மாற்றுவோம் சாதி அடையாளத்துடனும் மத அடையாளத்துடனும் இனவுணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு ஒன்றிணைவோம். தனிப்பட்ட கொள்கைகள், விருப்பு வெறுப்புகள், நம்பிக்கைகள் போன்றவற்றைப் பொருட்படுத்த வேண்டாம். 

 முதலில் இன உணர்வு அதற்குப் பிறகு பிற உணர்ச்சிகள் என்று இருந்தால் போதும். குடிப்பட்டத்தை பயன்படுத்தும் ஒரு தமிழருடன் நம்பிக்கையுடன் ஒன்றிணைய முடியும். இந்த வழியில் நம்மால் எளிமையாக ஒன்றிணைய முடியும். 

 ஆகவே முதல்வேலையாக நமது குடிப்பட்டத்தை பெயருடன் இணைப்போம்.  வந்தேறிகள் கதறத்தான் செய்வார்கள். எதையும் பொருட்படுத்தாமல் நாமும் உலகில் வெற்றி பெற்ற இனங்களின் பாதையில் பயணிப்போம். வந்தேறிகளை அடையாளம் காண்போம். அதிகாரத்தைக் கைப்பற்றுவோம். முன்னேறுவோம்.

No comments:

Post a Comment