Monday, 26 July 2021

சாதிப்பட்டம் சாதிவெறியைத் தூண்டுமா

சாதிப்பட்டம் சாதிவெறியைத் தூண்டுமா?

 தமிழகத்தில் சாதிவெறி அதிகம் என்று கூறுபவர்கள் கூட மதவெறி இல்லை என்று ஒத்துக்கொள்வர். இவற்றை ஒப்பிடுவோம். 

 நான் வட இந்தியாவில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது யாராவது கையில் பை ஏதாவது கொண்டு போனால் அதில் தமிழ் எழுத்துக்கள் இருக்கிறதா என்று பார்ப்பேன்.
 (இது தமிழர்களை அடையாளம் காணத் துடிக்கும் புலம்பெயர் வாழ் தமிழர்கள் அனைவரும் செய்கின்ற ஒரு வழக்கமாகும்). இந்த பழக்கதோஷம் தமிழ்நாட்டிற்கு வந்தாலும் தொடரும். அவ்வாறு ஜவுளிக்கடை போன்று கையில் ஏதாவது வைத்திருந்தால் அதில் தமிழ் எழுத்துக்கள் இருக்கிறதா என்று பார்ப்பேன். தமிழ் இஸ்லாமியர் கையில் ஏதாவது கொண்டு போனால் அதில் இருக்கும் பெயர்கள் பெரும்பாலும் இசுலாமிய பெயராக இருக்காது (இஸ்லாமிய நிறுவனங்கள் மற்றும் கடைகள் வெளிப்படையான இஸ்லாமிய பெயர்களை பெரும்பாலும் வைத்துக் கொள்வதில்லை. ஆங்கில எழுத்துக்களையோ அல்லது ஆங்கில பெயரையோ வைத்திருப்பார்கள். இதை என்னால் அடையாளம் காண இயலும்). தமிழகத்தில் இஸ்லாமியர்கள் இஸ்லாமியரிடம்தான் கொடுக்கல் வாங்கல் வைத்துக்கொள்வார்கள் என்கிற தவறான எண்ணம் சிலருக்கு உண்டு. ஆனால் பெரும்பாலும் அது உண்மை இல்லை. நான் பார்த்தவரை தமிழக இஸ்லாமியர்கள் பெரும்பான்மை தமிழர்கள் போலவே பிரபலமான மதம் சாராத கடைகளில்தான் பொருட்களை வாங்குவர்.

 உலகம் முழுவதுமே கூட மதவெறியானது தலைவிரித்து ஆடுகிறது. அதிலும் இஸ்லாமியருக்கு எதிரான போக்கு இந்தியா முழுவதும் மூலைமுடுக்கெல்லாம் காணப்படுகிறது. தமிழகம் கேரளா ஆகியவற்றை தவிர்த்து ஏனைய இடங்களில் மதவெறி தலைவிரித்தாடுகிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் அப்படி ஒரு நிலை இன்றுவரை இல்லை. இத்தனைக்கும் தமிழின இஸ்லாமியர்கள் தான் ஒரு இஸ்லாமியர் என்ற வெளிப்படையான அடையாளத்துடன் தான் இருக்கிறார்கள். இஸ்லாமிய பெயர்களை வைத்துக் கொள்கிறார்கள். இஸ்லாமிய இஸ்லாமிய உடைகளை அணிந்து கொள்கின்றனர். இஸ்லாமிய பண்டிகைகளைக் கொண்டாடுகின்றனர். பாஜக எதிர்ப்பையும் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். அவர்கள் மக்கள் தொகையில் ஓரளவு கணிசமான அளவு இருந்தும் இனப்பற்று என்று வரும்போது அவர்கள் அளித்த பங்கு என்று பார்த்தால் குறைவு என்றுதான் கூற வேண்டும். அப்படி இருந்தும் பிற தமிழர்கள் தமது ரத்த சகோதரர்களான தமிழ் இசுலாமியரை ஒதுக்குவதில்லை. ஒருவர் தனது உண்மையான அடையாளத்தை வெளிக்காட்டுவது அந்த அடையாளத்திற்கு எதிராக பிறரைத் தூண்டுவதாக ஆகாது என்று இதன் மூலம் உணரலாம்.

 இப்போது கூறவந்த விடயத்திற்கு வருகிறேன். உலகம் முழுவதும் சாதிப் பட்டத்தைப் பயன்படுத்துகின்றனர் (சமீபத்தில் வெளிவந்த tomorrow war என்கிற ஹாலிவுட் படத்தில் கூட தொலைந்த தன் மகளை froster என்கிற குடிப்பட்டத்தின் மூலம் கதாநாயகன் அடையாளம் கண்டுகொள்கிறான்).
 சாதிப் பட்டம் போட்டுக் கொள்வதன் மூலம் வந்தேறிகளை முழுமையாக அடையாளம் காண முடியாவிட்டாலும் பெரும்பான்மையான வந்தேறிகளை அடையாளம் கண்டுவிட முடியும். இதனாலேயே சாதிப் பட்டத்தை வந்தேறி அரசுகள் ஒழித்தனர். இதனை மீண்டும் கொண்டுவர தமிழ் தேசியவாதிகள் முயற்சிக்கும் பொழுது சாதிப் பட்டம் போட்டால் சாதிவெறி தலைதூக்கும் என்கிற அடிப்படையே இல்லாத ஒரு வாதத்தை முன்வைக்கின்றனர். அப்படியென்றால் தமிழகத்தில் இசுலாமியருக்கு எதிரான மதவெறி தலைதூக்கி யிருக்கவேண்டும்  இல்லையா?! 
மத அடையாளம் மத நல்லிணக்கம் அமையத் தடையில்லை என்றால் அடையாளத்துடன் கூடிய சாதிய நல்லிணக்கம் சாத்தியம்தான்.

 தமிழர்களுக்கு சாதிவெறியும் மதவெறியும் கிடையாது. தமிழர்கள் எப்போதுமே ஒரு பண்பட்ட சமூகம். 

 தமிழக கிராங்களில் பல்வேறு சாதியினர் உறவுமுறை சொல்லி அழைத்துக்கொள்வதும், ஒரே தெருவில் பல சாதியினர் வாழ்வதும், ஒரே குலதெய்வக் கோவிலில் ஒன்றுக்கும் மேற்பட்ட சாதியினர் ஒற்றுமையாக வழிபடுவதும். சாதி தாண்டிய உயிர் நண்பர்கள் இருப்பதும், ஊருக்கு பொதுவான கோவிலுக்கு அந்த ஊரில் இருக்கும் சமுதாயங்கள் முறைவைத்துக் கொண்டு விழா எடுப்பதும் சர்வ சாதாரணம்.  ஒரே பொருளாதார அந்தஸ்தில் இருக்கும் இருவேறு சாதியினர் கலப்புத் திருமணம் செய்துகொள்வதும் பன்னெடுங்காலமாக இயல்பாகவே நடந்து வருகிறது (உங்கள் பெற்றோரை விசாரித்துப் பாருங்கள் உங்கள் தாத்தா பாட்டி காலத்திற்கு முன்பே சாதிதாண்டிய திருமணம் நடந்திருக்கும்). 

இதற்குச் சான்றாக இருவேறு சாதிகள் தங்களுக்குள் பெண்கொடுத்து பெண்ணெடுத்து அந்த இரு சாதிகளுக்கு நடுவிலேயே ஒரு சிறுபான்மை சாதி உருவாகியிருக்கும். உதாரணமாக நான் சேனைத்தலைவர் சாதியைச் சேர்ந்தவன் (மூப்பனார் பட்டம்) நாங்கள் செங்குந்தர் மற்றும் மறவர் ஆகியோர் கலந்து உருவான சிறுபான்மை சாதி (தமிழக மக்கட்தொகையில்  0.4 சதவீதம்). 

பிரச்சனை எப்போது வருகிறது என்றால் பொருளாதார அந்தஸ்து வேறுபாடான இரு குடும்பங்களில் திருமண சம்பந்தம் நடைபெறுவதில்லை. அதாவது (அது ஒரே சாதியாக இருந்தாலும்) வெவ்வேறு அந்தஸ்தில் இருக்கும் குடும்பங்கள் சம்பந்தம் செய்துகொள்வது இல்லை. இந்நிலையில் ஒரு ஆண் ஏழையாக இருந்தால் அவரது முறைப்  பெண் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றால்  பிரச்சனைகள் வருவது இயல்பு (அதிலும் காதலர்கள் காத்திருந்து காரியத்தைச் சாதிக்காமல் ஊரைவிட்டு ஓடிவிடுவது பெரிய பிரச்சனைகளைக் கொண்டுவரும்). ஆக நாம் இங்கே செய்யவேண்டியது பொருளாதார சமநிலை தான்.  அதாவது அனைத்து சாதியினருக்கும் சம வாய்ப்பு வழங்கி சமமான பொருளாதாரத்திற்கு உயர்த்தி விட்டால் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் பெண்கொடுத்து பெண்ணெடுத்து கலந்து விடுவது இயல்பாகவே நடந்துவிடும். ஆனால் வந்தேறி அரசுகளும் இயக்கங்களும் ஊடகங்களும் தமிழகத்தில் எங்கோ நடக்கும் சாதிய கொடுமைகளை ஏதோ தமிழகத்தின் பொதுக் கலாசாரம் போல பிரச்சாரம் செய்கின்றனர். புள்ளிவிவரங்கள் அடிப்படையில் பார்த்தால் தமிழகத்தில் தான் சாதிய மோதல்கள், ஆணவக்கொலைகள், தீண்டாமை, சாதிய கலவரங்கள் ஆகியன பிற மாநிலங்களை விட மிகவும் குறைவு. இங்கே நடந்த அத்தகைய சில அசம்பாவிதங்களும் திராவிட அரசியல் செய்யும் சாதிய அரசியலே காரணம்.

 ஆகவே தமிழர்களே! நாம் அனைவரும் உலகில் எல்லா முன்னேறிய சமூகங்களும் செய்வது போல நமது தாத்தா பாட்டிகள் போல நமது குடிப் பட்டத்தை நமது பெயருக்கு பின்னால் போட்டுக் கொள்ளவேண்டும். குடிப்பட்டத்தை பெயருடன் இணைத்துக்கொள்வது சட்டப்படி தவறு இல்லை.  இதை நாம் செய்தால் வந்தேறிகளை அடையாளம் காண்பது மிகவும் எளிதாகிவிடும். தமிழ்ச்சாதிகளின் பட்டங்கள் போன்றே பட்டம் கொண்ட பிற இனத்து சாதிகள் மிகவும் குறைவு.  பெரும்பான்மையான தமிழ் குடி பட்டங்கள் தனித்துவமானவை. ஒருவர் தமிழர் என்று அடையாளம் காண இன்று நமக்கு வேறு வழியில்லை. வெளிப்படையாக நான் ஒரு தமிழன் என்று சொல்லிக் கொள்வதில் பட்டம் முக்கிய பங்கு வகிக்கும்.

 தன் குடிப்பெயரை பெயருடன் இணைத்து பயன்படுத்துவது சாதிவெறியாக பார்க்கப்படுவதை தவிர்க்க தமிழ்தேசியவாதிகள் பிரச்சாரம் செய்ய வேண்டும். அதற்கு 'தமிழர் நிலத்தில் சாதியவேறுபாடுகள் வேற்றின ஆட்சிக்கு முன்பு இல்லை' என்று ஏராளமான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. அவற்றை வெளிக்கொண்டு வந்த எந்த சாதிக்கும் மேலேயோ கீழேயோ கிடையாது என்பதையும் தமிழ் தேசியவாதிகள் பிரச்சாரம் செய்ய வேண்டும். 

உலகில் தனது இனத்தை ஓரணியில் திரட்டிய தலைவர்கள் சாதி மத வர்க்க அடையாளங்களை அழித்துவிட்டுத்தான் வரவேண்டும் என்று பிரச்சாரம் செய்ததில்லை. 

சாதியை ஒழித்து விட்டு மதத்தை ஒழித்து விட்டு தூய தமிழில் பேசி வர்க்க முரண்பாடுகளை ஒழிக்கும் திட்டத்துடன்தான் ஒரு தமிழ் தேசியவாதி இருக்க வேண்டும் என்று நம்மை மூளைச்சலவை செய்துவைத்துள்ளனர். சாதிய, மத வேறுபாடுகளை ஒழித்தால்தான் தமிழினம் ஒன்றிணைய முடியும் என்பது பித்தலாட்டம். நடக்கவே நடக்காது என்று தெரிந்துதான் வந்தேறிகள் 'இனத்தின் முதல் எதிரி சாதி' என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்துவருகின்றனர். நாமும் அந்த வழியை முயன்றுபார்த்து தோற்றுவிட்டோம். வந்தேறிகள் தமது அடையாளத்தை மறைத்துகொண்டு எளிமையாக அதிகாரத்தைக் கைப்பற்றி கொழுத்துவிட்டனர்.

 ஆகவே இனி வழியை மாற்றுவோம் சாதி அடையாளத்துடனும் மத அடையாளத்துடனும் இனவுணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு ஒன்றிணைவோம். தனிப்பட்ட கொள்கைகள், விருப்பு வெறுப்புகள், நம்பிக்கைகள் போன்றவற்றைப் பொருட்படுத்த வேண்டாம். 

 முதலில் இன உணர்வு அதற்குப் பிறகு பிற உணர்ச்சிகள் என்று இருந்தால் போதும். குடிப்பட்டத்தை பயன்படுத்தும் ஒரு தமிழருடன் நம்பிக்கையுடன் ஒன்றிணைய முடியும். இந்த வழியில் நம்மால் எளிமையாக ஒன்றிணைய முடியும். 

 ஆகவே முதல்வேலையாக நமது குடிப்பட்டத்தை பெயருடன் இணைப்போம்.  வந்தேறிகள் கதறத்தான் செய்வார்கள். எதையும் பொருட்படுத்தாமல் நாமும் உலகில் வெற்றி பெற்ற இனங்களின் பாதையில் பயணிப்போம். வந்தேறிகளை அடையாளம் காண்போம். அதிகாரத்தைக் கைப்பற்றுவோம். முன்னேறுவோம்.

Monday, 19 July 2021

இனம் என்றால் என்னவென்றே தெரியாத தமிழர்கள்

இனம் என்றால் என்னவென்றே தெரியாத தமிழர்கள்

ஒரு நபர் இருப்பார்,
தாய்மொழியில் பெயர் கிடையாது.
அவர் சாதிப் பட்டத்தை தன் பெயருடன் போட்டுக் கொள்வார்.
தன் மத அடையாளத்தை வெளிப்படையாக அணிந்துகொள்வார்.
தன் தாய் மொழியுடன் ஆங்கிலம் கலந்து பேசுவார்.
நடை உடை பாவனைகளில் நவீன மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றுவார். 
இனம் தாண்டிய கட்சி அல்லது இயக்கத்தில் உறுப்பினராக இருப்பார் (கம்யூனிச கட்சி அல்லது இந்திய அளவிலான கட்சி).
ஏன் இந்தியா மீது பற்றுடன் கூட இருப்பார்.
ஆடம்பரமாகவும் வாழ்வார்.
இயற்கை பற்றிய எந்த புரிதலும் இருக்காது.
உடல் உபாதைகளுக்கு ஆங்கிலவழி மருத்துவமும் செய்து கொள்வார்.
கெட்ட பழக்கங்களும் இருக்கும்.
ஒழுக்கமான குடும்ப வாழ்க்கையும் இருக்காது.
பாடபுத்தகத்தைத் தவிர ஒரு புத்தகத்தைக்கூட படித்திருக்கமாட்டார்.

மேற்குறிப்பிட்ட நபர் ஒரு வேளை கன்னட இனத்திலோ, அல்லது தெலுங்கு இனத்திலோ, அல்லது  மலையாள இனத்திலோ, அல்லது சிங்கள இனத்திலோ பிறந்திருந்தால் அவருக்கு அந்த இனத்தின் தேசியவாதத்தில் இடம் உண்டு.

ஆனால் தமிழ் தேசியத்தில் இப்படிப்பட்ட ஒரு நபருக்கு, ஏன் இதில் ஒரு அம்சம் இருக்கும் நபருக்குக் கூட இடம் கிடையாது என்கிற நிலைதான் இருக்கிறது.

இந்த மனநிலை தற்போது மாறி வருகிறது என்றாலும் அது போதவே போதாது என்பேன். இனம் என்றால் என்னவென்றே புரியாதவாறு நம்மை மூளைச்சலவை செய்துள்ளனர்.

ஒருவன் தமிழ் தேசியத்தை ஏற்றுக்கொண்டாலே அவள் வெள்ளை வேட்டி சட்டையுடன் எந்த மத அடையாளங்களும் இல்லாமல் தூய தமிழில் பேசிக் கொண்டு கலப்பு திருமணமும் செய்திருக்க வேண்டும். அவன் எந்த கட்சியிலும் இருக்கவும் கூடாது. ஒழுக்கமாக எளிமையாக மொழிப்புலமையுடன் இருக்கவேண்டும். இப்படியெல்லாம் பல எழுதப்படாத நிபந்தனைகள் இங்கே இருக்கின்றன்.

சாதி, மதம், குடும்பம், சுயநலம், மேற்கத்திய மோகம் என எல்லாவற்றையும் விட்டுவிட்டு தமிழனாக மட்டும் ஒன்றிணையவேண்டும் என்றால் அது ஏழேழு ஜென்மத்திற்கும் நடக்காது. அதனால்தான் தமிழ்மொழியைக் கரைத்துக் குடித்த வந்தேறிகள் அந்த இலக்கு நோக்கியே நம்மைத் தள்ளுகிறார்கள்.

தமிழருக்காக அனைத்தையும் துறந்து கிளம்பிய பலரை மேற்கண்டவாறு மாற்றி வெகுஜன மக்களிடம் இருந்து அவரை வேறுபடுத்தி தனிமைப்படுத்தி இறுதியில் பைத்தியக்காரன் போல திரியவேண்டிய நிலைக்குத் தள்ளிவிடுவர்.
மற்ற இனங்கள் பேசும் தேசியவாதத்தில் இனம் தவிர வேறு எந்த விடயத்தையும் அவர்கள் வலிந்து திணிப்பதில்லை. அவர்களின் தேசியவாதத்தில் மொழிக்குக் கூட முக்கியத்துவம் இருக்காது.

இங்கே தற்சார்பு பொருளாதாரம், சங்க கால இலக்கியம், சித்த மருத்துவம், சூழலியல், கார்ப்பரேட் எதிர்ப்பு என அத்தனையையும் தமிழ்தேசியத்தில் கொண்டுவந்து கலந்துவிட்டனர்.  மற்ற இனங்களில் இந்த மடத்தனமான போக்கு இல்லை. அவர்கள் இனத்தில் பிறந்தால் மட்டும் போதும் அவர்களது தேசியவாதத்தில் அவர்களுக்கு இடம் உண்டு.
இப்படித்தான் அத்தனை இனங்களும் வெறும் இனப்பற்றை மட்டும் அடிப்படையாகக் கொண்டு முன்னேறுகின்றன.

நாமோ மொழிப்பற்றை அடிப்படையாகக் கொண்டு நம் இனத்தில் பிறக்காத மற்றவர்களையும் சேர்த்துக்கொண்டு கடந்தகால வரலாற்றையும் கல்வெட்டுகளையும் நோண்டிக்கொண்டு இருக்கிறோம்.

நம்மைச் சுற்றி பிற இனங்கள் விஸ்வரூபம் எடுத்து நம்மை வீழ்த்த நேரம் பார்த்துக்கொண்டு இருக்கின்றன.
நாமோ இனவாதம் என்றால் என்னவென்றே தெரியாமல் கொஞ்சம் இனப்பற்று கொண்டு முன்வருபவரையும் மேற்கண்ட terms and conditions போட்டு விரட்டிவிடுகிறோம்.
கொஞ்சமே கொஞ்சம்பேர் சேர்ந்து எதாவது போராட்டம் செய்துகொண்டு போலீஸ்காரனிடம் உதைவாங்கிக்கொண்டு இன விடுதலையைக் கேலிக் கூத்தாக்கி கொண்டிருக்கிறோம்.

உலக இனங்கள் சாதி, மதம், கொள்கை என எதையுமே சமரசம் செய்யாமல் இயல்பான இனப்பற்றுடன் ஒன்றிணைந்து தனக்கான ராணுவத்தை அமைத்து கொண்டு நாட்டை அமைத்துக் கொண்டு சர்வதேச அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றன.

நாம் நமது பழங்கால பேரரசுகளை நமது மனதிற்குள் அமைத்துக்கொண்டு அதில் நம்மைத் நாமே ராஜராஜ சோழனாக நினைத்துக்கொண்டு கனவில் கற்பனையில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

இனம் என்பது மக்கள், மக்கள் என்பது உயிர், உயிர் என்பது வயிறு.
வயிற்றுப் பசிக்கு உணவிடாத அதாவது தன் இன மக்களின் வருமானத்திற்கு வழிசெய்யாத தேசியவாதம் மணிநேரம் நிலைக்காது.

  உதாரணத்திற்கு கர்நாடகத்தில் ஒரு தொழிற்சாலை அமைகிறது என்று வைத்துக்கொள்வோம் அந்த தொழிற்சாலையிம் கன்னடர்களை எவ்வாறு வேலைக்கு அமர்த்துவது என்றுதான் கன்னட தேசியவாதிகள் சிந்திப்பார்கள். அந்த தொழிற்சாலை சுற்றுச்சூழலுக்கு விரோதமாக இருந்தால் அதை அங்கே இருக்கும் சூழலில் போராளிகள்தான் எதிர்ப்பார்கள். இரண்டிற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. நாமோ தேசியவாதத்துடன் பலவற்றையும் குழப்பிக்கொண்டு விழிபிதுங்கி நிற்கிறோம்.

இனியாவது நடைமுறையில் எது சாத்தியப்படுமோ அதைப்பற்றி பேசுவோம்.
இன்றைய நிலையில் நடைமுறையில் வேலைக்கு ஆகும் விடயங்கள் இரண்டுதான் ஒன்று சாதி இன்னொன்று வன்முறை. இதை தவிர்த்து எந்த கொள்கையும் தத்துவமும் சிந்தனையும் நடைமுறையில் உதவப் போவதில்லை.

ஆகவே தமிழ்ச் சாதிகளாக ஒன்றிணைவோம்.
சாதிய அடையாளத்துடனேயே தமிழர் என்கிற இனப்பற்றுடன் வேறு எந்த நிபந்தனைகளும் இல்லாமல் ஆயுதம் தாங்கி விடுதலைப் போராட்டத்தில் இறங்கி நமது தாய் நிலத்தை நமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும். விடுதலை பெற ஆயுதவழியைத் தவிர்த்து வேறு வழியே இல்லை.

விடுதலைப் புலிகள் போலவா என்று நீங்கள் கேட்கலாம். புலிகள் போல நேர்மையான ஒழுக்கமான விடுதலை இயக்கம் என்றெல்லாம்கூட வேண்டாம். ஏனென்றால்  நாம் எத்தனை நேர்மையாக போரிட்டாலும் நம் எதிரிகள் நம்மிடம் அப்படி நடக்கப்போவதில்லை. இதற்கு 2009 இனப்படுகொலைக் கொடூரங்களே சான்று. இன்றைய நிலையில் இனப்பற்று மட்டும் போதாது இனவெறி வேண்டும். அதிலும் நாம் இருக்கும் பலவீனமான நிலையில் மிருகத்தனமான இனவெறி இருக்கவேண்டும். நாம் ஆயுதம் தூக்கியாக வேண்டும். நம்முடையதை மீட்டதுபோக பிறரதை ஆக்கிரமிக்கவும் வேண்டும். பல இனப்படுகொலைகள் செய்யவேண்டிய சூழலும் வரலாம். அதாவது மற்ற இனங்கள் போல நாமும் அடித்துப் பிடுங்கத் தயாராக இருக்கவேண்டும். அறம் முறம் என்று பிதற்றிக்கொண்டு இருக்கக்கூடாது. அப்படி இல்லையென்றால் நம் இனம் வரலாற்றில் நிலைத்திருப்பது கடினம்.

Saturday, 10 July 2021

தமிழ்தேசியப் பார்வையில் மேதகு திரைப்படம்

தமிழ்தேசியப் பார்வையில் மேதகு திரைப்படம்

படம் தொடங்கியதுமே இப்படத்தில் காட்டப்படும் அனைத்திற்கும் படக்குழுவினர் பொறுப்பு என்று வருகிறது. இதுவரை நான் பார்த்த திரைப்படங்களில் எல்லாமே கற்பனை என்று டிஸ்க்ளைமர் போட்டு பொறுப்பிலிருந்து நழுவிக்கொள்வதையே பார்த்திருக்கிறேன். இது ரொம்ப பெரிய விஷயம்.
படம் டாக்குமென்ட்டரி போல அல்லது வெப்சீரிஸ் போல இருக்கும் என்று நினைத்தேன்.
ஆனால் அப்படி இல்லை. இவ்வளவு குறைந்த பட்ஜெட்டில் இவ்வளவு தரமான படத்தை எப்படி எடுத்தார் என்று ஆச்சரியமாக உள்ளது. இதில் வரும் கதாபாத்திரங்கள் அப்படியே நிஜம் போல இருக்கிறார்கள். மாணவராக நடித்துள்ள ஒரே ஒரு துணைநடிகரைத் தவிர அத்தனை பேர் நடிப்பும் அபாரம். டைம் மிஷினில் அந்த காலகட்டத்திற்கே போய் நேரில் அமர்ந்து பார்ப்பது போல இருக்கிறது. உடைகள், பொருட்கள், சூழல் என எல்லாமே கனகச்சிதம். வசனங்கள், கேமரா, இசை, திரைக்கதை எல்லாமே வியந்துபோகும் அளவுக்கு அருமையாக இருக்கிறது.

இனி விமர்சனங்கள்...

* வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்லும் முதல் காட்சியில் இலங்கைத் தீவில் தமிழர் பெரும்பான்மை பகுதிகள் சுட்டிக்காட்டப்படவில்லை.
சிங்களவர் - தமிழர் மக்கட்தொகை மற்றும் சதவீதம் கூறப்படவில்லை.

* மகாவம்சம் புத்த புராணம் அதில் சிங்களவர் பற்றியோ சிங்களம் பற்றியோ எதுவுமில்லை. பிற்காலத்தில் தொகுக்கப்பட்ட அதை சிங்களவர் தமதாக்கிக்கொண்டனர் என்பதைக் கூறியிருக்கலாம்.

* மகாவம்சத்தில் சிங்கள இனத்தின் மூதாதை விஜயன் ஒரு வந்தேறி என்பது தெளிவாக உள்ளது அதை சேர்த்திருக்கலாம்.
ஐரோப்பியர் காலம் வரை தீவின் பாதி தமிழர் பெரும்பான்மை என்பதை சுட்டியிருக்கலாம்.

* பிரபாகரன் கருவுற்றபோது அவர்கள் குடும்பம் இருந்த இடம் அனுராதபுரம். எல்லாளன் நினைவிடத்திற்கு மிக அருகில். இதை சுவாரசியத்தைக் கூட்ட பயன்படுத்தியிருக்கலாம். கிபி 1750 வரை அனுராதபுரம் தமிழர் பகுதி. அதை குறிப்பிட்டிருக்கலாம்.

* உயிர்தப்பி வந்த பெண் நடு இரவில் பிரபாகரன் பெற்றோரிடம்  நடந்ததைக் கூறும் காட்சியில் சிறுவனான பிரபாகரன் வரவில்லை. ஆனால் அந்த சம்பவம்தான் பிரபாகரன் அவர்களைப் பாதித்த முதல் நிகழ்வு.

* பிரபாகரன் வீட்டைவிட்டுத் தப்பும் முன் தனது அத்தனை புகைப்படங்களையும் அழித்துவிட்டு போனதை காட்டியிருக்கலாம். இதனால்தான் அவர் நெடுநாள் தலைமறைவாக இருக்க முடிந்தது.
பள்ளிச் சிறுவனாக வெடிமருந்து செய்ய முயன்று விபத்தாகி பிரபாகரனின் காலின் ஒரு பகுதி கருகியதைச் சேர்த்திருக்கலாம்.

* 16 வயதில் வீட்டைவிட்டு வெளியேறும் பிரபாகரன் 21 வயதில் ஆல்பிரட் துரையப்பாவைக் கொலை செய்யும் வரையான வயது முதிர்ச்சி காட்டப்படவில்லை. (ஆனால் பெற்றோருக்கு காட்டப்பட்டுள்ளது)

* ஈழத்தமிழர் ராமேஸ்வரம் சென்று வருவதைக் கூறும் இடத்தில் ஈழத்திற்கும் தமிழகத்திற்குமான குறைவான ஆழமற்ற கடல் தூரம் பற்றி குறிப்பிட்டிருக்கலாம்.

* தனது கணவரைக் கொலை செய்த புத்த பிக்குக்களை எந்த கட்டாயத்தின் பெயரில் சிறிமாவோ ஏற்றுக்கொண்டு அவர்கள் சொற்படியே நடந்தார் என்பதை விரிவாக காட்டியிருக்கலாம். (பண்டாரநாயக ஒரு கிறித்தவர்) அதன் மூலம் புத்த மத ஆதிக்கத்தை புரியும்படி விளக்கியிருக்கலாம்.

* தமிழாராய்ச்சி மாநாட்டுப் பாடல் மற்றும் சொற்பொழிவுக் காட்சிகளில் கூட்டம் அதிகமாகக் காட்டியிருக்கலாம். அந்த சொற்பொழிவில் தமிழர் வீரம் பற்றி சங்க இலக்கியம் கூறுவதற்குப் பதிலாக சங்ககாலத்தில் இருந்தே ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் இருந்த தொடர்பினைக் கூறியிருக்கலாம். சோழர் பாண்டியர் ஆட்சி ஈழம் வரை பரவியிருந்ததை கூறியிருக்கலாம்.

* தந்தை செல்வா ஒரு மலேசியத் தமிழர் மற்றும் கிறித்தவர் என்பதைக் கூறியிருக்கலாம்.

* வெள்ளை நிற சிறிய எழுத்துக்கள் சரியாக இல்லை. கொஞ்சம் பெரிய அளவில் கருப்பு அவுட்லைன் உடன் சப்டைட்டில் போட்டிருக்கலாம்

* துப்பாக்கி பயிற்சி காட்சிகள் வரவில்லை (சிலம்ப பயிற்சிகள் வருகின்றன)

* தலைமறைவு வாழ்க்கையில் உணவு உட்பட அடிப்படைத் தேவைகள் பெறுவதில் உள்ள சிக்கல்களைக் காட்டியிருக்கலாம்.

* கண்டி நாயக்கர்கள் பற்றி கூறியிருக்கலாம்.

* ஏன் திருப்பி அடிக்கல என்று கேட்கும் காட்சியில் இது பாண்டியரின் குரல் என்று வருகிறது. ஆனால் சிங்களவரை படாதபாடு படுத்தியது சோழர்கள். தமிழ் இளைஞர்கள் புலிகள் என்ற பெயரை தேர்ந்தெடுக்க காரணமும் அதுவே.

* பண்டாரநாயக தந்தை செல்வாவுடன் போட்ட ஒப்பந்தத்தை புத்த பிக்குகள் மற்றும் சிங்கள எதிர்க் கட்சிகள் நடத்திய போராட்டத்தால் வெளிப்படையாகக் கிழித்தெறிந்தவர். ஆனால் கிழித்தெறியும் முன்பே கொல்லப்படுவதுபோல காட்டப்பட்டுள்ளது.

* பேருந்தைக் கொளுத்தும் காட்சியில் ஒரு சிறுவனாக தனியாளாக எப்படி இரண்டு பேரை பயமுறுத்தி ஓடச்செய்தார் என்பதைத் தெளிவாகக் காட்டியிருக்கலாம்.

* பொன் சிவகுமாரன் ஏற்கனவே துரையப்பாவின் காரில் வெடிகுண்டு வைத்தவர். துரையப்பா வரும் முன்னரே வெடித்ததால் அவர் தப்பினார். முதல் ஆயுத ரீதியான தாக்குதல் இதுவே. திருப்பியடித்து முதன்முதலில் கைதானவரும் இவரே. துப்பாக்கி, வெடிகுண்டு, சயனைட் என மூன்றையும் பயன்படுத்தியவர். சிவகுமாரன் பற்றிக் கூறுமிடத்தில் அதை சேர்த்திருக்கலாம்.

* பிரபாகரன் தேநீர் குடிக்கும் பழக்கம் இல்லாதவர்.

* துரையப்பா கொலை நடந்த தேதியை அல்லது காலகட்டத்தைக் குறிப்பிட்டிருக்கலாம்.

அதாவது ஈழம் பற்றி எதுவுமே தெரியாத ஒருவருக்குக்கூட புரியும்படி இருக்கவேண்டும் என்பது எனது கருத்து. மற்றபடி இவை அனைத்துமே சின்னச்சின்ன குறைகள்தான். இனிவரும் அத்தியாயங்களில் சரி செய்வார்கள் என்று நம்புகிறேன். இது அத்தனையையும் தாண்டி படத்தின் தரத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும். கற்பனை கதைகளை மட்டுமல்லாது நிஜ வரலாற்றையும் சுவாரசியமாகக் காட்டமுடியும் என்று நிரூபித்துள்ளனர். எதையும் மிகைப்படுத்திக் காட்டவில்லை என்பதையும் இங்கே கூறவேண்டும்.   படம் முடிந்தபிறகு உதவிய அத்தனை பேரின் பெயர்களும் வருவது இன்னொரு பெரிய விஷயம்.
பல சோதனைகளைச் சந்தித்து தனது தரத்தை நிரூபித்துவிட்ட இயக்குனர் தி.கிட்டு அவர்களுக்கு இனி உலகத் தமிழர்களின் பெரிய ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

ராஜராஜசோழர் தனது "ராஜராஜ" பட்டத்தை சோழ ஆட்சியில் முக்கிய பங்கு வகித்தவர்களுக்கு வழங்கியது போல, இனி இப்பட இயக்குநர் அவர்களை "மேதகு" கிட்டு என்று அழைக்குமாறு அனைவரிடமும் கோரிக்கை வைக்கிறேன்.
அரும்பாடுபட்டு இந்த திரைப்படத்தை கொடையளித்த படக் குழுவினருக்கும் இதை துணிந்து வெளியிட்ட பிளாக் ஷிப் குழுவினருக்கும் தமிழினத்தின் சார்பாக மனமார்ந்த நன்றி!

தலைவரின் வரலாற்றில் இது தொடக்கப்புள்ளியே, இதுவே இப்படி என்றால் இனி வரும் அடுத்தடுத்த பகுதிகள் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்கும்போதே நெஞ்சம் சிலிர்க்கிறது.

இதைப் பார்க்காத, பார்த்துப் பாராட்டாத தமிழர் எவராயிருந்தாலும் அவர் தமிழராய்ப் பிறந்ததற்கே அர்த்தம் இல்லை என்று உறுதியாகக் கூறுவேன்.

இதை நான் உண்ர்ச்சிவசப்பட்டு கூறவில்லை. ஏனென்றால் இது வெறும் திரைப்படம் இல்லை. உண்மையை அப்படியே பதிவு செய்யும் வரலாற்று ஆவணம். தரமான ஆவணம்!

28.06.2021

கல்வெட்டுகளில் பறையர் மற்றும் பள்ளர்

கல்வெட்டுகளில் பறையர் மற்றும் பள்ளர்

பிப்ரவரி 2005 இல் வெளிவந்த "புதுவிசை" கலாச்சார மாத இதழில் பேரா. ஆ. சிவசுப்ரமணியன்  அவர்கள் எழுதிய "மழைச் செம்புச் சடங்கும் மூதேவி வழிபாடும்" கட்டுரையின் வரிகள்.

// குடியிருப்பு என்ற பொருளிலேயே சேரி என்ற சொல் சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பார்ப்பனச்சேரி என்ற சொல்லாட்சி சங்க காலத்தில் வழக்கில் இருந்துள்ளது. சோழர் கால கல்வெட்டுக்களிலும் குடியிருப்பு என்ற பொருளிலேயே சேரிஎன்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.//

// தீண்டாச்சேரியும் பறைச்சேரியும் என்று சோழர்காலக் கல்வெட்டொன்று குறிப்பிடுகிறது (தெ.இ.க.II;4). //

// பறைச்சேரி (தெ.இ.க;4, க.எ.529;52,81,83) (தெ.இ.க;26, க.எ.686) மேலைப்பறைச்சேரி (தெ.இ.க. தொகுதி2, க.எ.5) என்று வரும் வரிகள் இதற்குச் சான்றாகும். //

//மேலும் நிலங்கள் பறைத்துடவை (தெ.இ.க. 26, க.எ.686) பள்ளன் விருத்தி (தெ.இ.க.8 க.எ.151) என்றும் சுடுகாடு பறைச்சுடுகாடு (தெ.இ.க.4, க.எ.529, 68, 79, 83, தெ.இ. க. உ.தொகுதி 1,2, க.எ. 5) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.//

// குதிரைகளுக்கு புல்லிடும் பணியை பறையர்களில் ஒரு பிரிவினர் மேற்கொண்டிருந்தனர். 'குதிரைக்கிப் புல்லிடும் பறையர்' என்று சோழர்காலக் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.//

// உழுதொழிலை மேற்கொண்டு வாழ்ந்த பறையர்கள் உழப்பறையர் என்று அழைக்கப்பட்டனர். இதனால் பறையர்கள் வெவ்வேறானதொழில்களில் ஈடுபட்டிருந்தமையும் உழுதொழிலில் ஈடுபட்டவர்கள் மட்டுமே உழப்பறையர் என்று அழைக்கப்பட்டனர் என்பதும் புலனாகிறது.//

// பொய்யாத் தமிழ்நம்பி என்ற பறையர் பூசகராகப் பணிபுரிந்துள்ளார். (தெ.இ.க.26, க.எ.253) //

// பாண்டியமன்னனின் மெய்க்காப்பாளராகப் பறையர் ஒருவர் பணியாற்றியமையை 'அரையன் அணுக்க கூவன் பறையனேன்' என்ற கல்வெட்டு வரிஉணர்த்துகிறது (தெ.இ.க. 14; க.எ. 56). //

// உமையாள்வான் என்ற பெண் 13ம் நூற்றாண்டின் இறுதியில் செங்கல்பட்டு மாவட்டம் கூவம் கிராமத்தின் 'திருவிற்கோலமுடைய நாயனார்' கோவிலுக்கு சக்தி விளக்குஎரிப்பதற்கு கொடை வழங்கியுள்ளார். அதை பெற்றுக் கொண்ட மூவரில் முதலாமவர் 'வைத்தான் பள்ளன்' என்றும், கல்வெட்டின் இறுதியில் 'இவை பள்ளன் எழுத்து' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. //

//வரி கட்டமுடியாத நிலையில் ஒல்லையூர் மறவர்கள் மதுராந்தகம் என்ற குடிகாடை விற்று வரி செலுத்தியுள்ளனர். இவ்விற்பனைதொடர்பான கல்வெட்டில் 'அஞ்சாத கண்டப்பறையின் நெடும்பறி கால்' என்று ஒரு கால்வாய் குறிப்பிடப்பட்டுள்ளது. பாண்டியர் காலகல்வெட்டொன்றில் (IPS 309) இச்செய்தி இடம்பெற்றுள்ளது. இக்கல்வெட்டில் பறையர் சிலர் கையொப்பமிட்டுள்ளனர்.//

// ஜடாவர்மன்சுந்தரபாண்டியனின் நான்காவது ஆட்சியாண்டுக் காலத்திய கல்வெட்டொன்றில், துக்கைப்பட்டன், சொக்கப்பட்டன் என்ற சிவபிராமணர்கள் கையெழுத்திடத் தெரியாத நிலையில் தற்குறி இட்டுள்ளனர். ஆனால் இதே கல்வெட்டில் அரசர் மிகா பறையர், கானாட்டுப்பறையன் என்பவர்கள் கையெழுத்திட்டுள்ளனர் (IPS 421). //

// மாறவர்மன் குலசேகர பாண்டியனின் நான்காவது ஆட்சியாண்டில் புதுக்கோட்டை மாவட்டம் திருமய்யம் வட்டத்திலுள்ள விரையாச்சிலைஎன்ற ஊரில் பனையன்குன்று என்ற நீர்நிலை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்விற்பனை தொடர்பான ஆவணத்தில் பெரியநாட்டுப்பறையன், கானாட்டுப் பறையன், ஐநூற்றுப் பறையன், அரசர் மிகா பறையன், அகலிங்கப் பறையன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர் (IPS 535) //

// மாறவர்மன் குலசேகரன் என்ற பாண்டி மன்னனின் ஆட்சிக்காலத்தில் நீர்க்குட்டை ஒன்று விற்பனை செய்யப்பட்டுள்ளது. இக்கல்வெட்டைஆராய்ந்த ஆர்.திருமலை (1981:28) பெரும்பாலான மறவர்களும் குறுநில மன்னர்களின் வழித்தோன்றல்களும் கூட கல்வியறிவு இல்லாதவர்களாக இருக்க பறையர்களும் கைவினைஞர்களும் கையெழுத்திட்டுள்ளனர் என்று அவதானித்துள்ளார்.//

// அரண்மனைக்குக் காணிக்கைப் பணமாக மக்கள் செலுத்தவேண்டிய வரி வாசல் காணிக்கை எனப்பட்டது. இவ்வரியிலிருந்து பள்ளர்களுக்கு விலக்களிக்கப்பட்டதை பள்ளக்குடிக்கு வாசல் பணம்மானியமாகவும் (தெ.இ.க. 26, க.எ.336) என்ற கல்வெட்டு வரி தெரிவிக்கின்றது.//

// தஞ்சை பெருவுடையார் கோவிலில் விளக்கெரிக்க ஆடுகளைத் தானம் வழங்கியதைக் குறிப்பிடும் நீண்ட கல்வெட்டொன்று உள்ளது. இவ்வாறு தானம் வழங்கியவர்களுள் ஓலோக மாறாயன், பள்ளன், கூத்தன், பள்ளன் கிழான், முகத்தி எழுவன் என்ற பள்ளர்களும் அடக்கம் (தெ.இ.க.II பகுதி 4:95 வரி 75,76).//

// திருமானிக்குழி ஆளுடையார் கோவில் பெரிய நாச்சியாருக்கு நந்தா விளக்கேற்ற 'ஊர்ப்பறையன் மண்டை கோமான்' என்பவர் பால் எருமை ஒன்றை அதன் கன்றுடன் 'குலோத்துங்க சோழக்கோன் என்ற மன்றாடியிடம்' வழங்கியதை மூன்றாம் ராஜராஜனின் ஐந்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்று (தெ.இ.க. 7,க.எ.794) குறிப்பிடுகிறது.//

// விக்கிரம சோழ தேவன் காலத்திய (1292-93) கல்வெட்டொன்றில், 'வெள்ளாட்டி பூசகரான பறையன் ஆளுடை நாச்சி' என்பவரும் அவருடைய சிறிய தாயாரும் சேர்ந்து உடுமலைப்பேட்டை வட்டம் சோழமாதேவி நல்லூர் ஊரிலுள்ள குலசேகர சுவாமி கோவில் மண்டபத்திற்கு திருநிலைக்கால் இரண்டும் படியிரண்டும் செய்வித்துள்ளார் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது (தெ.இ.க. 26,க.எ. 253).//

// போர்க்களத்தில் இரத்தம் சிந்தி உயிர் நீத்த வீரர்களைப் போற்றும் வகையில் அவர்களது குடும்பத்தாருக்கு வழங்கப்படும் நிலம் உதிரப்பட்டி அல்லது இரத்தக்காணிக்கை எனப்படும். ஊரின் நன்மைக்காக வேறு வகையில் உயிர் துறந்தவர்களின் குடும்பத்தாருக்கு வழங்கப்படும் நிலமும் உதிரப்பட்டி என்றே பெயர் பெற்றது. திருமய்யம் வட்டம் தேவமலைக் குடபோகக் கோவிலுக்கு இடதுபுறம் பாறையில் உள்ள கல்வெட்டு 'மலையாலங்குடி ஊர் பெரியான் பேரையூர் பறையன்' மகள் நாடியாருக்கு உதிரப்பட்டியாக மூன்று மா நிலம் வழங்கியதைக் குறிப்பிடுகிறது. வெள்ளம் பெருக்கெடுத்தநேரத்தில் குளத்தை அடைக்கும் பணியில் பெருந்தேவப் பள்ளர் என்பவர் இறந்துபோக, அவரது மகளுக்கு உதிரப்பட்டியாக நிலம் வழங்கப்பட்டது. இச்செய்தியைக் குறிக்கும் கல்வெட்டு வருமாறு:
குலைசேகர தேவ
ர்க்கு யாண்ட34வ
துக் கருங்குளர்த்திக்
கு ஒரு பழி உண்திடான படியாலே
இப்பழிக்கு இவ்வூர்
குடும்பரில் பெரிய
தேவப் பள்ளன் அணை
வெட்டிப் போகையா
லே இவன் மகளுக்கு
ஊரார்களிட்ட உதி
ரப்பட்டி குடுத்தபடி தபான
வ நிலம் அரை மா அணை
நிலம்......//

// விக்கிரமச் சோழன் காலத்தியக் கல்வெட்டொன்றில் 'வெள்ளான் மாப்புள்ளிகளில் சோழன் பறையனான தனபாலன்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வேளாண்மைத் தொழில் செய்து வந்த பறையர்கள் வெள்ளாளன் என்று அடைமொழியிட்டு அழைக்கப்பட்டனர் என்பதை இக்கல்வெட்டு வெளிப்படுத்துகிறது (SII ங:253).//

// புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டத்திலுள்ள 'காரையூர் திருமாங்கனி ஈஸ்வரர்' கோவிலில் உள்ள கல்வெட்டொன்று ஊரைப்பாதுகாக்கும் பணியில் பறையர் ஒருவர் நியமிக்கப்பட்டதை குறிப்பிடுகிறது. ஆதனமழகியான் என்பவருக்கு 'காரையூர்ப் பறையன்' என்றுபட்டம் கட்டி பாதுகாவல் உரிமையை ஊரார் வழங்கியுள்ளனர். இதற்காக அவரிடமிருந்து நூற்றுப் பத்துப் பணம் பெற்றுள்ளனர். இக்காவல்பணிக்காக இடையர்கள் நெய்யும், வலையர் முயலும், பள்ளர் பறையர் கோழியும் அவருக்கு வழங்கவேண்டுமென்று ஊரவர்கள் முடிவுசெய்துள்ளனர் (IPS 843) //

// திருமயம் வட்டம் தேக்காட்டூர் தருமசமர்த்தினி அம்மன் கோவிலிலுள்ள கல்வெட்டொன்று அவ்வூர் பறையர்கள் களஞ்செதுக்கி வந்ததாகவும், பின்னர் களஞ்செதுக்க மாட்டோம் என்று அறிவித்ததாகவும் குறிப்பிடுகிறது. ஊரவர்கள் பறையர்களின் அறிவிப்பை ஏற்றுக்கொண்டதுடன் ஊரிலேயே குடியிருந்துகொண்டு முன்னர் பெற்று வந்த சுதந்திரத்தை அவர்கள் பெற்று வர அனுமதித்ததையும் இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. (IPS 948)//

// திருமயம் வட்டம் மேலப்பனையூர் ஞானபுரீஸ்வரர் கோவில் மண்டபத்திலுள்ள கல்வெட்டு, மறவருக்கும் பறையருக்கும் இடையிலான உடன்படிக்கையைக் குறிப்பிடுகிறது. "நம்மில் வினைவிரோதங்களும் வந்து இரண்டு வகையிலும் அழிவில் இருக்கையிலே" என்று கல்வெட்டு குறிப்பிடுவதால் பறையர்கள் மறவர்களை எதிர்த்து நின்றுள்ளனர் என்பதை அறிய முடிகிறது.
"செம்மயிர்யிட்டும் பாடிக்கொண்டும் பறையர் வரலாம்" என்று இவ்வுடன்படிக்கை குறிப்பிடுவதால் பண்பாட்டு அடையாளம் தொடர்பாக மறவருக்கும் பறையருக்குமிடையே மோதல்கள் நிகழ்ந்திருக்கலாம் என்று கருதலாம் (IPS 828).//

// திருமயம் வட்டம் மேலத்தானையம் மாரியம்மன் கோவிலுக்கு முன்பாக இருக்கும் கல்தூணில் பொறிக்கப்பட்ட கல்வெட்டொன்று 'வீரசின்னு நாயக்கர்' என்ற குறுநில மன்னன் காலத்தில் விருதுகள் தொடர்பாக பள்ளருக்கும் பறையருக்கும் இடையே நிகழ்ந்த பூசலைத்தெரிவிக்கிறது. வெள்ளானை, வாழை, கரும்பு ஆகிய விருதுகள் தங்களுக்கு மட்டுமே உரியதென்றும் பறையர்களுக்கு இல்லையென்றும் கூறி, கொதிக்கும் நெய்யில் பள்ளர் கைமுக்கினராம். அவர்கள் கை சுடாமையால் இவ்விருதுகள் பள்ளருக்கு மட்டுமே உரியதென்று தீர்ப்பு வழங்கப்பட்டதாக இக்கல்வெட்டு தெரிவிக்கிறது (IPS 929).//

// மேளமடிப்பது தொடர்பாக பள்ளர், பறையர் என்ற இருவகுப்பினருக்கும் இடையே நடந்த பிணக்கில் உடன்பாடு ஏற்பட்டதாக திருமயம் வட்டம் பேரையூர் நாகநாத சுவாமி கோவில் கல்வெட்டொன்று குறிப்பிடுகிறது (IPS 976).//

// திருமலை நாயக்கர் காலத்தில், குடும்பர் சாதியினருக்கு "திருமலைக் குடும்பர்" என்ற பட்டம் வழங்கப்பட்டதன் பின்புலத்தை ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது. திருவில்லிப்புத்தூரில் தேவேந்திரக் குடும்பருக்கும் பறையருக்கும் ஏற்பட்ட பூசலை ஒட்டியே இப்பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இச்செய்தியைக் குறிப்பிடும் கல்வெட்டில் தேவேந்திரக் குடும்பர் தோற்றம் குறித்த புராணக்கதை ஒன்று இடம்பெற்றுள்ளது. அதாவது "பழங்காலத்தில் சேர, சோழ, பாண்டிய நாடுகளில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. பாண்டிய மன்னன் ஒருவன் தேவேந்திரனுடன் சமமாக அமர்ந்து நான்கு தேவ கன்னியரையும் கரும்புக்கணுக்களையும், வாழைக்கன்றுகளையும் ஒரு பனங்கொட்டையையும் பல வகையான நெல்வித்துக்களையும், காளை ஒன்றையும் தேவலோகத்திலிருந்து கொண்டு வந்தான். இக்கடும் பஞ்சகாலத்தில் பனிரெண்டாயிரம்கிணறுகளை ஒரே நாளில் தோண்டி பாசன வசதியை, தேவேந்திரக் குடும்பன் உருவாக்கினான். இப்பணியை மதித்து தேவேந்திரக்குடும்பனுக்கு சில சலுகைகளை வழங்கினர். இதன்படி வெள்ளை யானை, தீவட்டி, நடைபாவாடை, இரட்டைச் சிலம்பு, இரண்டு கொடுக்கு, பதினாறு கால் பந்தல், இறப்பில் மூன்றடுக்குத் தேர் பயன்படுத்தல், பஞ்சவன் என்ற பட்டம், பதினெட்டு வகை இசைக்கருவிகள், கனகதப்பு ஆகியன தேவேந்திரக் குடும்பருக்கு உரியன. இவை தமக்கும் உரியன என்று கூறி பறையர்கள் அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கினர்.வாகைக்குளத்தைச் சேர்ந்த குட்டி குடும்பனும் மலையன்குளத்தைச் சேர்ந்த அல்லகாரக் குடும்பனும் மன்னனைச் சந்தித்துப் பறையர்களின் இச்செயல் குறித்து முறையிட்டனர். முன்னர் வெளியான செப்புப்பட்டயங்களின் அடிப்படையில் திருவிழாக்களில் மூன்றுகால் பந்தல் இடுவதும், ஒரு கொடுக்கு, ஒரு சாம்பு, ஒரு மப்பு, ஒரு தீப்பந்தம், மாடியில்லா வீடு ஆகியன பறையருக்குரியன என்று முடிவுசெய்யப்பட்டது. அத்துடன் குடும்பர்களுக்கு திருமலைக் குடும்பன் என்ற பட்டமும் வரிவிலக்கு அளிக்கப்பட்ட இரண்டு கோட்டை நெல்பயிரிடும் பரப்புள்ள நிலமும் வழங்கப்பட்டன (ARE 1926 பக்.119-120).//

// சோழ சேர்வைக்காரன், அவன் மனைவி கொண்பொடிக்காரி ஆகியோருக்கு புல்லாங்குடியிலுள்ள பெரியகூத்தன், சின்னக்கூத்தன், ராக்கக்குடும்பன் ஆகிய மூவரும் தங்கள் ஊரிலுள்ள அம்பலத்தை விற்றுவிடும்படி ரகுநாத சேதுபதி ஆணையிட்டார். இதன்படி ஐம்பது பணத்திற்கு மூவரும் அம்பலத்தை விற்றனர். மேலும் அங்கு புதிதாய் கண்மாய் வெட்ட நூறு பணம் வழங்கப்பட்டது. அங்கு புதிதாகக் குடியேறும் கைக்கோளக்குடி மூன்றுக்கு ஐந்து பணம் வீதம் பதினைந்து பணமும், புதிதாய் குடியேறிய பள்ளர்குடி ஒன்றுக்கு மூன்று பணமும் ஆக நூற்றியெண்பது பணம் மூவரிடமும் வழங்கப்பட்டது. இந்த  17ம் நூற்றாண்டு செப்பேடு (21-5-1696) பின்வரும் மூன்று செய்திகளை நமக்குஉணர்த்துகிறது.
1. புதிய ஊர்களை வேளாண்மை செய்ய ஏற்கனவே இருந்த தங்கள் உடைமையான அம்பலத்தை விற்கும்படி குடும்பர்கள் மூவருக்கும் சேதுபதி மன்னன் கட்டளையிட்டுள்ளார்.
2. புதிய ஊரில் வேளாண்மை செய்ய உழவர்களான பள்ளர்களும் கைவினைத் தொழில் செய்ய கம்மாளர்களும் குடியேற்றப்பட்டுள்ளனர்.
3. கம்மாளர்களுக்கு வழங்கியதை விட குறைவான பணமே பள்ளர்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் இவர்கள் நிலத்துடன் கொடையாக வழங்கப்பட்டுள்ளனர். அல்லது விற்பனை செய்யப்பட்டுள்ளனர் என்பதனை சேதுபதி செப்பேடுகளில் இடம் பெறும் பின்வரும் வரிகள் உணர்த்துகின்றன.
பள்ளுப்பறை சகலமும் சர்வ மானியமாக (இராசு.1994; 208)
பள்ளுப்பறை இறை, வரி ,ஊழியம்.... ஆண்டனுபவித்துக் கொள்ளவும் (மேலது, 242)
பள்ளுப்பறை... சந்திராக்கமாக அனுபவிச்சிக் கொள்வாராகவும் (மேலது, 451)
பள்ளுப்பறை சகலமும் ஆண்டு கொள்வது (மேலது, 528) //

குறிப்புகள்:-
தெ.இ.க.: தென் இந்திய கல்வெட்டு
க.எ.: கல்வெட்டு எண்
IPS: Inscripts of Pudukkottai State

-----------------------------------
இப்பதிவின் அடிப்படையில் எனக்குத் தோன்றுவது என்னவென்றால் பறையர் மற்றும் பள்ளர் ஆகிய குடியினர் சோழர், பாண்டியர் ஆட்சிக் காலத்தில் சமூகத்தில் நல்ல நிலையில் இருந்துள்ளனர்.

நாயக்கர், சேதுபதி ஆட்சிக் காலத்தில் இவர்கள் நிலை சிறிது தாழ்ந்து பள்ளர் பறையர்களுக்கு இடையேயான பூசல்களும் தோன்றியுள்ளன.

நாயக்கர் காலப் பள்ளு இலக்கியங்கள் பள்ளர்களின் விளைச்சல் வரி என்கிற பெயரில் அளவுக்கதிகமாக சுரண்டப்பட்டு கடைசியில் நிலத்தை விற்று அத்தோடு அடிமையாகப் போன வரலாற்றைப் பதிவு செய்துள்ளன.

ஆனால் சேதுபதி ஆவணங்களில் வரும் பள்ளுபறை என்கிற சொல் நிலத்தோடு அடிமைகளாக விற்கப்பட்ட பள்ளர் மற்றும் பறையர்களைக் குறிக்கிறதா என்பதும் ஆராயப்பட வேண்டும். ஏனென்றால் நிலத்தை விற்றவர்களில் குடும்ப பள்ளர்கள் உள்ளனர். குடியேறியவர்களிலும் பள்ளர்கள் உள்ளனர்.  பறை என்பதற்கு அளக்கும் கருவி என்றும் பொருளுண்டு. விளைச்சலுக்கு இத்தனை பறை என்கிற வகையில் வரி கட்டியதால் பள்ளுபறை என்பது விவசாய வரி என்கிற பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பு அதிகம்.

- ஆதிபேரொளி
---------------------------