Thursday, 28 February 2019

ஈழத்தமிழர் போண்டா மணி

ஈழத்தமிழர் போண்டா மணி

என் இயற்பெயர் கேதீஸ்வரன்.
அம்மா கடல்பயணத்தில் குண்டுபோட்டபோது தவறிவிட்டார்கள்.
இப்போது அவர் இருக்கிறாரா இல்லையா என்று தெரியவில்லை.

தமிழ்நாட்டில் சேலம் அகதி முகாமில் தஞ்சமடைந்தேன்.
எடப்பாடியில் இப்போதும் நண்பர்கள் இருக்கிறார்கள்.

இலங்கையில் வசதியாக வாழ்ந்தவன்.
இப்போது அப்படியிருக்க முடியவில்லையே என்கிற கவலையை தமிழக மக்கள் போக்கிவிட்டார்கள்.
என்னை வளர்த்துவிட்ட மண்ணுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

1985இல் அப்பாவை தமிழகம் அழைத்துவந்து கோவில்களை சுற்றிக் காட்டியபோது சிதம்பரம் பஸ் நிலையத்தில் டீ வாங்கித் தரமுடியாத நிலையில் என் மடியில் அப்பாவின் உயிர் பிரிந்தது.

பசியைப் போக்க போன்டா சாப்பிட்டு வந்ததால் அதுவே பெயராகிவிட்டது.
'ஒண்ணா இருக்க கத்துக்கணும்' (1992) என் முதல் படம்.

முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தாலும் வடிவேலு அண்ணனுடன் நடிக்க ஆரம்பித்த பிறகே பிரபலம் ஆனேன்.
வடிவேலு அண்ணன் சொல்லித்தான் எனக்கு பெண்கொடுத்தனர்.

சிங்கமுத்து அண்ணன் நிறைய உதவிகள் செய்திருக்கிறார்.
என் திருமணத்தை தன் செலவில் நடத்திவைத்தவர் அவர்தான்.

நான் வாய்ப்பு தேடிய காலங்களில் மன்சூர் அலிகான் அண்ணன்தான் தங்க இடம் கொடுத்து மளிகை சாமான்கள் வாங்கித் தந்தவர்.
நல்ல தமிழ் பற்றாளர்.

ஒரு முறை ரஜினி சாரிடம் வாய்ப்பு கேட்டேன்.
'இயக்குனர் கையில்தான் எல்லாமே இருக்கிறது' என்று சொல்லிவிட்டார்.

சினிமாவில் நிறைய ஆண்டுகள் இருந்தாலும் சொந்தமாக வீடு, வாசல் அமைத்துக் கொள்ளவில்லை.
ரசிகர்கள்தான் என் சொத்து.
தற்போதும் 15 படங்கள் கைவசம் உள்ளன.

நன்றி: தினமலர் 24.02.2019
------------------
எங்கெங்கோ அலைஞ்சு திரிஞ்சு உயிர் தப்பிச்சு, குண்டு பட்ட காயங்களோட 90-ம் வருஷம் நான் வந்து சேர்ந்த இடம் எடப்பாடி முகாம்.
படுகாயத்தோட வந்த என்னை வீரப்பன் என்கிற அண்ணன்தான் ஆஸ்பத்திரியில சேர்த்து உசிரைக் காப்பாத்தினார்.
அப்புறம் டீக் கடையில வேலை பார்த்தேன்.
எடப்பாடி மக்கள் என்கிட்ட சொந்தக்காரங்க மாதிரி பழகுவாங்க. 
எப்பவுமே பிரிச்சுப் பார்த்ததே இல்லை.

உதாரணத்துக்கு என் குழந்தைகள் படிக்க வசதி இல்லாம இருந்தாங்க.
சம்பத் அண்ணன், மகாலிங்கம் அண்ணன் உட்பட ஊர்ப் பெரிய மனுஷங்க சேர்ந்து உள்ளூர் அரசுப் பள்ளியில எங்க முகாம் குழந்தைகளைச் சேர்த்து படிப்புக்கு ஏற்பாடு செஞ்சாங்க.

இன்னொரு விஷயம் தெரியுமா?
சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து எடப்பாடிக்குப் போக நிறைய டவுன் பஸ்கள் வரும்.
நாங்கசேலத்துக்குப் போகும்போது பஸ் நடத்துனர்கள் யாருமே எங்ககிட்ட காசு வாங்க மாட்டாங்க.

இந்தப் பகுதியில மில்கள் அதிகம்.
அப்பப்ப முகாம் பக்கம் எட்டிப் பார்க்கிற மில் முதலாளிங்க அரிசி மூட்டை, பருப்பு மூட்டைனு கொடுத்துட்டுப் போவாங்க.

மனசு விட்டு சொல்றேங்க.
இலங்கையில வயித்துக்குச் சாப்பாடு இல்லாம பலநேரம் கொலைப்பட்டினி கிடந்து இருக்கேன். 
ஆனா, இங்க வந்தபின்னாடி நானும் சரி,  என்னை சேர்ந்த மக்களும் சரி, ஒருவேளைகூடப் பட்டினி கிடந்தது கிடையாதுங்க.

டீக்கடை பாலு அண்ணன், முகாமில் இருந்து வெளியே கூலி வேலைக்குப் போறவங்களுக்குத் தினமும் காலையில 25 போண்டா இலவசமா கொடுப்பார்.

ஒருமுறை என் அண்ணன் இலங்கையில குண்டடிபட்டு ராமேஸ்வரம் கடற்கரைப் பக்கமா ஒதுங்கி இருக்கிறதாத் தகவல் கிடைச்சுது.
கையில காசு இல்லாம தவிச்சப்ப, நடுராத்திரி எடப்பாடியில் உள்ள அன்புமதி அண்ணன் செலவுக்குப் பணம் கொடுத்து, கூடவே ராமேஸ்வரம் வரைக்கும் வந்தார்.
நாங்க போறதுக்குள்ள அண்ணன் உசிரு போயிடுச்சு.
எடப் பாடிக்குத் தகவல் கொடுத்து, ஊர்க்காரங்களை வரவழைச்சு, இறுதிச் சடங்கைச்  செஞ்சாங்க.
நன்றி: விகடன் 01.05.2012@
---------------

போண்டாமணி தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகராவார்.
நூற்றி எழுபத்தியைந்து திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.
இவருடைய இயற்பெயர் கேதீஸ்வரன் என்பதாகும்.
இவருடன் உடன் பிறந்த 16 நபர்களில் 8 நபர்கள் இலங்கை இனக்கலவரத்தில் இறந்துவிட்டார்கள்.

எம்.மாரிமுத்து செட்டியார் - மகேஷ்வரி தம்பதியரின் மகனாக போண்டாமணி 15 செப்டம்பர் 1963ல் பிறந்தார். 
இவருடைய தாயகம் இலங்கையில் உள்ள மன்னார் பகுதியாகும்.
நன்றி: Wikipedia
-------------------

No comments:

Post a Comment