மும்மொழி தற்குறிகளின் கேள்விகள்
எவனும் இந்தியை விரும்பி காதலித்து தனியார் பள்ளிக்கு போவதில்லை!
தனியார் பள்ளிகள் நல்ல தரத்துடன் உள்ளதால் வசதி உள்ளவர்கள் அங்கே பிள்ளைகளை சேர்க்கிறார்கள்.
தனியாரில் ஏன் இந்தி இருக்கிறது என்றால் தனியாரின் பிடி மத்திய அரசின் கையில் உள்ளது!
இந்தி உட்பட இந்துத்துவ கோட்பாடுகளை உள்ளே அனுமதிக்கவில்லை என்றால் தேர்வுகள் நடத்த அனுமதி கிடைக்காது!
இந்துத்துவத்தை அனுசரித்தால் அதிக கட்டணம் வாங்குவதில் இருந்து விதிமுறைகளை இஷ்டத்துக்கு மீறலாம்!
இது எல்லாருக்கும் தெரியும்!
ஆனாலும் தனியாரில் தமிழ்வழி பள்ளிகள் தொடங்கலாம் ஆனால் எந்த தமிழனிடம் அவ்வளவு பணம் இருக்கிறது?!
அப்படியே தொடங்கினாலும் தமிழர்களிடம் அவ்வளவு பீஸ் கட்ட வலு இருக்கிறதா?!
கல்வி நிறுவனங்களைத் தொடங்குபவர்கள் அதற்கு அனுமதி கொடுப்பவர்கள் அதில் படிப்பவர்கள் என எல்லா நிலையிலும் தமிழரல்லாதவரே ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
இன்று தமிழில் படித்து தமிழின் உயிர்மூச்சை பிடித்துவைத்திருப்போர் ஆங்கிலேயர் காலத்தில் ஆரம்பிக்கப் பட்ட 'அரசு உதவி பெறும் கிறித்துவ பள்ளிகளும்' ஏழை எளிய பிள்ளைகள் படிக்கும் அரசுப் பள்ளிகளும் தான்!
இதில் போதாக்குறைக்கு திராவிட அரசுகள் முடிந்த அளவு கல்வி நிதியை கொள்ளையடித்து அரசாங்கப் பள்ளிகளை குட்டிச்சுவர் ஆக்கி வைத்துள்ளனர்.
திராவிட சமாதிகள் உயர்தரத்திலும் பள்ளிகள் சமாதி போலவும் இருக்கின்றன.
நிலைமை இப்படி இருக்க சில தற்குறிகள் "தமிழ் தமிழ் என்று பேசுபவர்கள் அரசுப் பள்ளியில் தமிழ்வழியில் ஏன் பிள்ளைகளைச் சேர்ப்பதில்லை?" என்று கேட்கின்றனர்.
மூன்றாவது மொழி கட்டாயம்! இல்லையென்றால் மத்திய அரசு நம்மிடம் வாங்கிய நிதியை நமக்கே தரமுடியாது என்று சொல்வது ரவுடித்தனம்!
இந்த நிதி ஒவ்வொரு ஏழை மாணவனுக்கும் சேரவேண்டிய 4000 ரூபாயை தடுத்து வழிப்பறி செய்ததற்க்கு சமம்!
இரண்டாவது மனைவி என்றாலே அவள் வைப்பாட்டிதான் அதுபோல மூன்றாவது மொழி என்றாலே அது இந்திதான்!
தமிழர்களுக்கு ஜெர்மன் அல்லது பிரெஞ்சு கற்பிக்கவா மும்மொழிக் கொள்கை வரப் போகிறது?!
இருக்கும் பாடத்தை ஒழுங்காக நடத்தவே துப்பில்லாத கல்வி கட்டமைப்பை வைத்துக்கொண்டு இப்படி பேசலாமா?!
ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் வெவ்வேறு மொழிகளை தேர்ந்தெடுத்தால் எப்படி கற்பிப்பீர்கள்?!
திராவிட அரசுகளோ இதை சரியாக எதிர்க்காமல் பம்மாத்து காட்டிக்கொண்டு தமிழை மறைமுகமாக கொல்கிறது!
மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டு தமிழே இல்லாத மத்திய அரசுப் பள்ளிகளை நடத்த விட்டுவிட்டு தமிழைக் கட்டாயமாக ஆக்காமல் பாடங்களில் தமிழுக்கு திராவிட சாயம் பூசி தமிழில் பெயர்பலகை வைக்க போராடியவர்களை சிறையில் தள்ளி ஹிந்தி வெறியருக்கு சற்றும் சளைக்காத வெறுப்புடன் தமிழை அழிக்கின்றனர் திராவிடப் போர்வையில் இருக்கும் வந்தேறிகள்!
"ஒரு மொழி கூடுதலாக கற்பது நல்லதுதானே?!" என்று சில தற்குறிகள் கேட்கின்றனர்.
ஏற்கனவே நம் பாடத்திட்டத்தில் நடைமுறை வாழ்க்கைக்கு தேவையற்ற சுமைதான் அதிகம் உள்ளது.
தமிழக பாடத்திட்டத்தில் ஹிந்திய வரலாறு உள்ளதே தவிர தமிழக வரலாறு இல்லை!
வாழ்நாளில் 15 ஆண்டுகள் பணத்தையும் நேரத்தையும் செலவளிக்கும் ஒரு மாணவன் உருப்படியாக எதையும் கற்பதில்லை!
இதனாலேயே விஞ்ஞானிகள் உருவாவதில்லை!
இதில் கூடுதலாக ஒரு பாடத்தை ஏன் திணிக்க வேண்டும்?!
மொழி தேவை என்றால் வெளியில் கற்றுக் கொள்ளட்டும்!
இன்றைய தொழில்நுட்ப காலத்தில் ஒரு மொழியை விரைவாகவும் கற்றுக்கொள்ள முடியும்!
நான் வடக்கே வேலைக்குச் சென்றபோது அங்கே மக்களுடன் பேசியே 3 மாதங்களில் இந்தி பேச ஆரம்பித்துவிட்டேன்!
ஒரே ஆண்டில் சரளமாக பேச வந்துவிட்டது!
எந்த மொழியும் அப்படித்தான்!
"இந்தி இல்லாமல் தமிழ்நாட்டைத் தாண்ட முடியாது" என்று மிரட்டல் வேறு!
ஏன் தாண்டவேண்டும்?! சுற்றுலா போகும்போது தாண்டலாம்! அதற்காக சுற்றுலா போகும் இடங்களுக்கு எல்லாம் அந்த மொழி கற்றுக்கொண்டா போவது?!
மத்திய அரசு வேலை தமிழருக்கு எட்டாக்கனி!
தமிழகத்தின் உள்ளேயே மத்திய அரசின் வேலைவாய்ப்புகள் 90% தமிழரல்லாதார் கைக்கு போய்விட்டது!
பிற மாநிலங்கள் இந்த 90% தமது மண்ணின் மைந்தருக்கு கிடைக்க சட்டம் இயற்றியுள்ளன!
திராவிடம் இதைச் செய்யவில்லை!
அப்படியே மத்திய அரசு வேலை கிடைத்தாலும் 3 மாதத்தில் இந்தியைக் கற்கலாம்!
வேலைக்காக தலையணை தடிமனுக்கு புத்தகம் படிப்பவன் இதைப் படிக்கட்டும்! எல்லாரும் ஏன் படிக்கவேண்டும்!
வெளிநாட்டில் வாழும் தமிழரை விட பிற மாநிலங்களில் வாழும் தமிழர் குறைவு!
தமிழகத்தில் பிறந்து பிற மாநிலங்களில் வாழும் தமிழர்கள் வெறும் 20 லட்சம்!
அதாவது தமிழர்களில் பத்தில் ஒருவர் கூட இல்லை!
இதிலும் முக்கால்வாசி பேர் அண்டை மாநிலங்களில் வசிக்கின்றனர்! இந்தி பேசும் மாநிலங்களில் தமிழர்கள் மிகவும் குறைவு!
இதற்காக தமிழகத்தில் இருக்கும் எல்லா தமிழனையும் கூடுதலாக ஒரு மொழி கற்க கட்டாயப்படுத்த வேண்டுமா?!
"ஆங்கிலத்தை ஏற்கிறீர்கள் இந்தியை ஏற்க முடியாதா?" என்றும் சில தற்குறிகள் கேட்கின்றனர்.
ஆங்கிலேயர் உலகையே ஆண்டனர்.
உலகம் முழுவதும் ஆங்கில ஆதிக்கம் அப்போதே வேரூன்றி விட்டது. அதிலும் தொழில்நுட்பம் முன்னேறிய பிறகு அதிலும் கணினி, கைபேசி போன்றவை ஆங்கிலத்தில் உருவான பிறகு ஆங்கிலம் படிக்கமாட்டேன் என்பது முட்டாத்தனம்!
இது அடக்குமுறையா என்றால் அடக்குமுறைதான்!
ஆனால் வேறு வழியில்லை ஆங்கிலத்தை உலகமே ஏற்கத்தான் வேண்டும்!
ஆங்கிலத்தை குறைந்தது ஆயிரம் ஆண்டுகள் அசைக்க முடியாது!
இந்த கேள்வியை ஆங்கிலேயருக்கு இணையாக ஆதிக்கம் செலுத்திய ஒரு ஐரோப்பியர் கேட்கலாம்!
ஹிந்தியர் கேட்கலாமா?!
ஹிந்தியர்கள் எங்களை போரில் வென்று ஆட்சியின் கீழ் கொண்டுவந்தனரா?!
ஆங்கிலத்தில் இருக்கும் எல்லாவற்றையும் இந்தியில் உருவாக்கி வைத்துள்ளனரா?!
சீனரைப் போல தொழில்நுட்பத்தில் இந்தியை வளர்த்து எடுத்துள்ளனரா?!
"அதெல்லாம் முடியாது! இந்தி என்கிற தகுதியற்ற மொழியை திணிப்பது மட்டும்தான் எங்களுக்குத் தெரியும்! எங்கள் பெரும்பான்மையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி தமிழை அழிப்போம்! அப்போதுதான் வடயிந்தியர் இங்கே குடியேற வசதியாக இருக்கும்! நீங்கள் எங்களுக்கு சேவகம் செய்ய வசதியாக இருக்கும்!" என்று ஆண்டான் அடிமை மனநிலையில் பேசுவதும் நிதி தரமால் ரவுடித்தனம் பண்ணுவதும் எப்படி நியாயம்?!
"பிற மாநிலங்கள் ஏற்றுக் கொண்டனர் நீங்கள் மட்டும் ஏன் ஏற்கவில்லை" என்று கேட்கும் தற்குறிகள் பிற இனத்தவர் ராணுவத்தின் பக்கமே வருவதில்லை! எல்லையோர இனங்கள்தான் ராணுவத்திற்கு வருகின்றனர். தமிழர்கள் கடைக்கோடியில் இருந்து கிளம்பி 2 நாட்கள் ரயிலில் வந்து ஏன் ராணுவத்தில் சேருகிறீர்கள்?!
6% மக்கட்தொகை கொண்ட தமிழர்கள் எண்ணிக்கைப்படி ராணுவத்தில் மூன்றாவது இடத்தில் ஏன் இருக்கிறீர்கள் என்று கேட்கலாமே?!
அறிவில் சிறந்து ஏன் இஸ்ரோ தலைவர்களாக இருக்கிறீர்கள் என்று கேட்கலாமே?!
கார்கில் போரின்போது பிற மாநிலங்களை விட இரண்டு மடங்கு நிதி திரட்டி ஏன் தந்தீர்கள் என்று கேட்கலாமே?!
ஏன் வரி தருவதில் முதலிடத்தில் இருக்கிறீர்கள்?!
இந்தியாவுக்கு அணு ஆயுதம் ஏன் உருவாக்கித் தந்தீர்கள்?! பிற இனங்கள் போல மதக் கலவரம் செய்துகொண்டு இருக்க வேண்டியதுதானே என்று கேட்கலாமே?!
பிற இனங்கள் என்ன செய்தன என்பது பற்றி எங்களுக்குக் கவலை இல்லை!
எங்களுக்கு எங்கள் மொழி முக்கியம் அவ்வளவுதான்!
இன்று இந்துமதி வரை நீட் தற்கொலைகளை கண்ணால் கண்டபோதே தமிழர்கள் நாம் சிந்திக்க வேண்டாமா?!
இதற்கு நிரந்தரத் தீர்வு இந்திரா காந்தி எமர்ஜென்சி காலத்தில் இதுதான் சாக்கு என்று மாநிலத்திடம் இருந்து பிடுங்கிய கல்வி அதிகாரத்தை மீட்பதுதான்!
உதயநிதியை அரியணை ஏற்றுவது இதற்கு தீர்வாகாது!
நாம் இந்தியாவில் இருக்கிறோம் அதற்காக இந்தியாவுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்ததாக பொருள் இல்லை!
தாய்மொழியில் கல்வி கற்றால்தான் அறிவு வளரும்!
அதுதான் எந்த நாட்டுக்கும் நல்லது!
அறிவுகெட்ட மூட வடக்கர்கள் அவர்களுக்கு சாமரம் வீசும் அடிமைகள் இதைப் புரிந்து கொள்ளுங்கள்!