இனப்படுகொலை மற்றும் செம்மொழி மாநாடு
2010 இல் கருணாநிதி இனப்படுகொலை பழியிலிருந்து தப்பிக்க செம்மொழி மாநாடு நடத்தினார்.
ஆனால் தொல்காப்பியம் தமிழை செம்மொழி (அதாவது செந்தமிழ்) என்று குறித்துள்ளது.
தமிழகம் வந்த ஐரோப்பிய அறிஞர்களும் அவ்வாறு குறித்துள்ளனர்.
'செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு' என்றும் 'இயற்சொல் தாமே செந்தமிழ் நிலத்து வழக்கொடு' என்றும் தொல்காப்பிய காலத்திலேயே குறிக்கப்பட்டுள்ளது.
அதாவது தமிழ் என்பது (பேச்சு, எழுத்து என அனைத்துக்கும்) பொதுவான சொல். செந்தமிழ் என்பது இலக்கணத்தோடு முறையாக எழுதப்படுவது (அதாவது standard ஆனது). பேச்சு தமிழ் இதிலிருந்து மாறுபடும் (இன்றும் கூட பேச்சுத் தமிழுக்கும் எழுத்துத் தமிழுக்கும் வேறுபாடு இருப்பது போல).
இதேபோல பதினெட்டாம் நூற்றாண்டிலேயே கால்டுவெல் போன்ற மேலைநாட்டினர் தமிழின் செம்மையையும் பழமையையும் பற்றி குறித்துள்ளனர்.
முக்கிய சான்று கி.பி.1880 களில் வெளிவந்த Johnson's new universal cyclopedia கலைக் களஞ்சியத்தில் "classical tamil differs from collquial tamil" என்று கூறப்பட்டுள்ளது.
ஆக கருணாநிதி தான் தமிழை செம்மொழி ஆக்கினார் என்பது பொய்ப் பிரச்சாரம்.
ஜப்பானிய தமிழ் ஆய்வாளரான நெபுரு கரோஷிமா அவர்கள் செம்மொழி மாநாடு தகுதி வாய்ந்த அறிஞர்கள் இல்லாமல் அரசியல் காரணங்களுக்காக அவசர அவசரமாக நடத்தப்பட்டதாக கூறியிருக்கிறார்.
வந்தேறிகள் தமிழ் இனத்தை வீழ்த்த தமிழ் மொழியை பயன்படுத்துகின்றனர்.
தமிழர்கள் இன உணர்வு கொள்ளாமல் மொழி உணர்வு கொண்டு மொழியை வளர்ப்பதிலேயே கவனம் செலுத்துமாறு வந்தேறிகள் தொடர்ந்து நம்மை மடையமாற்றிக் கொண்டு வருகின்றனர்.
(மேற்கண்ட தகவல்களுக்கு நன்றி: தென்காசி சுப்பிரமணியன்)
2004 இல் ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருக்கும்போதுதான் தமிழை செம்மொழி என்று இந்திய அரசு அங்கீகரித்தது.
2008 இல் தெலுங்கு மற்றும் கன்னடம் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. அதற்கு கருணாநிதி முக்கிய காரணம்.
2009 இல் ஈழம் அழிந்து இனப் படுகொலை நடந்தபோது இந்திய அரசை கவிழ்க்கும் வலு இருந்தும் கருணாநிதி அதைச் செய்யவில்லை.
கருணாநிதி தெலுங்கர் என்கிற உண்மையும் அப்போது வெளிவந்தது. இந்த விமர்சனத்தில் இருந்து தப்பவே அவர் 2010 இல் செம்மொழி மாநாடு நடத்தினார்.
ஆனால் தமிழர்கள் ஏமாறவில்லை.
No comments:
Post a Comment