Sunday, 10 July 2022

தமிழ்ப் பெருஞ்சுவர்

 



தமிழ்ப் பெருஞ்சுவர்


 தமிழர்நாடு நமது இலக்கு!

 அதாவது நாம் இழந்த நமது நிலத்தை மீட்டு பிற நாடுகளைப் போல ஒரு நாடாக இருப்பது நம் இலக்கு!

ஆனால் சூழ்நிலை மாறும்போது இலக்கும் மாறலாம்.

வரலாற்றில் பிற இனங்கள் செய்தது போல ஒரு பேரரசை அமைக்க வேண்டிய அவசியம் அல்லது கட்டாயம் ஏற்படலாம். 


அதாவது எல்லை என்பது எப்போதும் தாக்கப்படலாம்.

 இன்று பாதுகாப்பாக வல்லரசாக இருக்கும் இனங்கள் எல்லாமே தமது எல்லையைத் தாண்டி பிற இனங்களின் நிலத்தை ஆக்கிரமித்து அவற்றை எல்லையாக வைத்துக்கொண்டு தமது உண்மையான எல்லையை பாதுகாப்பாக வைத்தே தமது நிலத்தைக் காத்துக்கொண்டு இருந்துள்ளன.


 அப்படி நமது எல்லையைத் தாண்டி ஒரு எல்லையை அமைத்து அதைப் பாதுகாக்க நினைத்தால் அதற்கு என்ன செய்வது என்று இப்போது பார்க்கலாம்.

தென்னிந்திய நிலப்பரப்பில் தமிழர்நாட்டு எல்லைக்கு சற்று அப்பால் கிழக்கு - மேற்காக ஒரு கோடு வரைந்து அதை நிரந்தர வடக்கு எல்லையாக அமைக்கவேண்டும்.

 அந்த எல்லைக் கோடு அதிகம் வளைந்து நெளியாமல் அதிகம் ஏறி இறங்காமல் இருக்கவேண்டும்.

 இதற்கு தெற்கே இருக்கும் நிலப்பரப்பு அதாவது மாலத்தீவு வரை அனைத்தும் தமிழர் ஆளுகையில் இருக்க வேண்டும்.


 (ஏற்கனவே 'அகன்ற தமிழர்நாடு' பதிவில் இது பற்றி விரிவாக கூறியிருந்தேன்) 


இது ஏறத்தாழ கன்னியாகுமரி முதல் சென்னை வரையான சாலைப் பயண தொலைவு இருக்கும் (673 கிமீ நீளம், 296 மீ அதிகபட்ச உயரம்)


 ஏற்கனவே கூறியபடி குண்டபுரா முதல் சிங்கராயகொண்டா வரையான எல்லைக்கோடு சரியாக இருக்கும் (கூகுள் நடைபயண தெரிவு அடிப்படையில் 746 கிமீ நீளம், 789 மீ அதிகபட்ச உயரம்).


 [இது படத்தில் காட்டப்பட்டுள்ளது. இவ்வழித்தடம் மேற்குத் தொடர்ச்சி மலையை hulikal falls எனும் இடத்தில் கடக்கிறது. கிழக்குத் தொடர்ச்சி மலையை pedda polu kunta எனும் இடத்தில் கடக்கிறது. இதன் புவியியல் ஏற்ற இறக்கம் கீழே உள்ளது]


இதற்கு மாற்றாக சிலவையும் உள்ளன.

* பாட்கல் முதல் சிங்கராயகொண்டா வரை (714 கிமீ நீளம், 696 மீ அகிகபட்ச உயரம்)


* குண்டபுரா முதல் தம்மினாபட்டிணம் வரை (708 கிமீ நீளம், 785 மீ அதிகபட்ச உயரம்)


* உடுப்பி முதல் தம்மினாபட்டிணம் (713 கிமீ நீளம், 786 மீ அதிகபட்ச உயரம்)


* மங்களூர் முதல் தம்மினாபட்ணம் வரை (693 கிமீ நீளம், 1100 மீ அதிகபட்ச உயரம்)


 * (அல்லது குறைந்தபட்சம் நமது தமிழர்நாடு எல்லையை ஒட்டி) கோழிக்கோடு முதல் தம்மினாபட்டிணம் (687 கிமீ நீளம், 944 மீ அதிகபட்ச உயரம்)


 மேற்கண்ட ஐந்து கோடுகளும் கர்நாடக கடற்கரைக்கு அடுத்தபடி மேற்குத் தொடர்ச்சி மலையில் அதிகபட்ச உயரத்தை அடைகின்றன. 


 நாம் இந்த எல்லையைப் பாதுகாக்க இங்கே காவலரண்களை அமைத்து படைகளை நிறுத்தி வைக்கலாம்.

 நமது பொருளாதாரம் வலுவடைந்த பிறகு மூன்று பெரிய திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

 முதலாவது சேது சமுத்திரத்தில் மணல் கொட்டு நிரப்பி ஈழ தமிழக நில இணைப்பை ஏற்படுத்துவது.

 அதற்கு அடுத்த பெரிய திட்டங்கள் குமரிக்கண்ட ஆய்வு அல்லது எல்லைச் சுவர் எழுப்புதல். இரண்டில் எது முக்கியம் என்பதை காலம் முடிவு செய்யும்.


 சீனப் பெருஞ்சுவர் 21000 கிமீ ஆகும். மேலே குறிப்பிட்ட பாதுகாப்புச் சுவர் 1000 கிமீ கூட வராது. அதிலும் எல்லைக் கோட்டில் உயரமாக மலைகளை விட்டுவிட்டு மீதி தொலைவில் சுவர் அமைக்கலாம்.

Saturday, 9 July 2022

தமிழ்தேசியம் மிகவும் கடினமான அரசியல்

தமிழ்தேசியம் மிகவும் கடினமான அரசியல்

 ஜனநாயகத்தில் எந்தவொரு அரசியலும் அதன் வரையறையில் எத்தனை சதவீத மக்கள் வருகின்றனர் என்பதைப் பொருத்து பலம் பெறுகிறது.

 இந்தியா வைப் பொருத்தவரை 

 தலித் அரசியல் என்பது,
தலித் vs தலித் அல்லாதவர்,
அதாவது 17% vs 83%.

 திராவிட அரசியல் என்பது,
தென்னிந்தியர் vs பிற இந்தியர்,
அதாவது 22% vs 78%.
 அல்லது,
பிராமணரல்லாதோர் vs பிராமணர்
அதாவது 96% vs 4%.

 மதவழி சிறுபான்மை அரசியல் என்பது,
இசுலாமியர் vs பிற மதத்தினர்,
அதாவது 15% vs 85%.

 இந்துத்துவ அரசியல் என்பது,
இந்துக்கள் vs பிற மதத்தினர்,
அதாவது 80% vs 20%

 மொழி அரசியல் என்பது,
(அந்தந்த மாநிலங்களின்) 
மண்ணின் மைந்தர் vs பிறமொழியினர்
(தமிழகத்தைப் பொறுத்தவரை)
இது 85% vs 15%.

 சாதி அரசியல் என்பது,
பெரும்பான்மை சாதி vs பிற சாதியினர்
இது 10-20% vs 80-90%.

 தொழிலாளர் அரசியல் என்பது,
தொழிலாளி vs முதலாளி
அதாவது 90-95% vs 5-10%

இலங்கையில் ஈழ அரசியல் என்பது,
தமிழர் vs சிங்களவர்,
அதாவது 25% vs 75%.

 (நான் கூறுவது வரையறை மட்டுமே!
நடைமுறையில் இருதரப்பு மக்களும் முழு ஆதரவு தராமலும் இருக்கலாம் அல்லது எதிர்தரப்பை ஆதரிப்பவர்களும் இருக்கலாம்)

 இங்கே நாம் பேசவேண்டியது இன அரசியல்,
அதாவது தமிழினம் vs பிற இந்திய, இலங்கை இனங்கள்,
இது 6% vs 94%.

 ஆக மிகவும் குறைந்த பலத்தை வைத்துக்கொண்டு மிகப் பெரிய பலத்தை நாம் எதிர்க்கிறோம்.

 தனிநாடு அடையும் போராட்டத்தில் இறுதி கட்டத்தில் உலகமே எதிர்க்கும்.
 அதாவது தமிழினம் vs உலக மக்கள்
இது 0.5% vs 99.5% ஆகும்.

பெரும்பான்மையாக இருந்துகொண்டு சிறுபான்மையை எதிர்ப்பது வீரமில்லை.

 கணிசமான சிறுபான்மையாக இருந்துகொண்டு அரசியல் செய்வதும் பெரிய வீரமில்லை.
 
ஆக இன அரசியல் பேசுபவர்கள் பெருமைக்குரிய அரசியல்வாதிகள்!

 ஒரு தமிழனுக்கு 200 தமிழரல்லாதவர் எதிர்க்கும் அவ்வேளையிலும் நாம் உறுதியாக வெல்வோம்!

 ஏனென்றால் ஈழத்தில் நாம் செய்து பார்த்துள்ளோம்!