Sunday 10 July 2022

தமிழ்ப் பெருஞ்சுவர்

 



தமிழ்ப் பெருஞ்சுவர்


 தமிழர்நாடு நமது இலக்கு!

 அதாவது நாம் இழந்த நமது நிலத்தை மீட்டு பிற நாடுகளைப் போல ஒரு நாடாக இருப்பது நம் இலக்கு!

ஆனால் சூழ்நிலை மாறும்போது இலக்கும் மாறலாம்.

வரலாற்றில் பிற இனங்கள் செய்தது போல ஒரு பேரரசை அமைக்க வேண்டிய அவசியம் அல்லது கட்டாயம் ஏற்படலாம். 


அதாவது எல்லை என்பது எப்போதும் தாக்கப்படலாம்.

 இன்று பாதுகாப்பாக வல்லரசாக இருக்கும் இனங்கள் எல்லாமே தமது எல்லையைத் தாண்டி பிற இனங்களின் நிலத்தை ஆக்கிரமித்து அவற்றை எல்லையாக வைத்துக்கொண்டு தமது உண்மையான எல்லையை பாதுகாப்பாக வைத்தே தமது நிலத்தைக் காத்துக்கொண்டு இருந்துள்ளன.


 அப்படி நமது எல்லையைத் தாண்டி ஒரு எல்லையை அமைத்து அதைப் பாதுகாக்க நினைத்தால் அதற்கு என்ன செய்வது என்று இப்போது பார்க்கலாம்.

தென்னிந்திய நிலப்பரப்பில் தமிழர்நாட்டு எல்லைக்கு சற்று அப்பால் கிழக்கு - மேற்காக ஒரு கோடு வரைந்து அதை நிரந்தர வடக்கு எல்லையாக அமைக்கவேண்டும்.

 அந்த எல்லைக் கோடு அதிகம் வளைந்து நெளியாமல் அதிகம் ஏறி இறங்காமல் இருக்கவேண்டும்.

 இதற்கு தெற்கே இருக்கும் நிலப்பரப்பு அதாவது மாலத்தீவு வரை அனைத்தும் தமிழர் ஆளுகையில் இருக்க வேண்டும்.


 (ஏற்கனவே 'அகன்ற தமிழர்நாடு' பதிவில் இது பற்றி விரிவாக கூறியிருந்தேன்) 


இது ஏறத்தாழ கன்னியாகுமரி முதல் சென்னை வரையான சாலைப் பயண தொலைவு இருக்கும் (673 கிமீ நீளம், 296 மீ அதிகபட்ச உயரம்)


 ஏற்கனவே கூறியபடி குண்டபுரா முதல் சிங்கராயகொண்டா வரையான எல்லைக்கோடு சரியாக இருக்கும் (கூகுள் நடைபயண தெரிவு அடிப்படையில் 746 கிமீ நீளம், 789 மீ அதிகபட்ச உயரம்).


 [இது படத்தில் காட்டப்பட்டுள்ளது. இவ்வழித்தடம் மேற்குத் தொடர்ச்சி மலையை hulikal falls எனும் இடத்தில் கடக்கிறது. கிழக்குத் தொடர்ச்சி மலையை pedda polu kunta எனும் இடத்தில் கடக்கிறது. இதன் புவியியல் ஏற்ற இறக்கம் கீழே உள்ளது]


இதற்கு மாற்றாக சிலவையும் உள்ளன.

* பாட்கல் முதல் சிங்கராயகொண்டா வரை (714 கிமீ நீளம், 696 மீ அகிகபட்ச உயரம்)


* குண்டபுரா முதல் தம்மினாபட்டிணம் வரை (708 கிமீ நீளம், 785 மீ அதிகபட்ச உயரம்)


* உடுப்பி முதல் தம்மினாபட்டிணம் (713 கிமீ நீளம், 786 மீ அதிகபட்ச உயரம்)


* மங்களூர் முதல் தம்மினாபட்ணம் வரை (693 கிமீ நீளம், 1100 மீ அதிகபட்ச உயரம்)


 * (அல்லது குறைந்தபட்சம் நமது தமிழர்நாடு எல்லையை ஒட்டி) கோழிக்கோடு முதல் தம்மினாபட்டிணம் (687 கிமீ நீளம், 944 மீ அதிகபட்ச உயரம்)


 மேற்கண்ட ஐந்து கோடுகளும் கர்நாடக கடற்கரைக்கு அடுத்தபடி மேற்குத் தொடர்ச்சி மலையில் அதிகபட்ச உயரத்தை அடைகின்றன. 


 நாம் இந்த எல்லையைப் பாதுகாக்க இங்கே காவலரண்களை அமைத்து படைகளை நிறுத்தி வைக்கலாம்.

 நமது பொருளாதாரம் வலுவடைந்த பிறகு மூன்று பெரிய திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

 முதலாவது சேது சமுத்திரத்தில் மணல் கொட்டு நிரப்பி ஈழ தமிழக நில இணைப்பை ஏற்படுத்துவது.

 அதற்கு அடுத்த பெரிய திட்டங்கள் குமரிக்கண்ட ஆய்வு அல்லது எல்லைச் சுவர் எழுப்புதல். இரண்டில் எது முக்கியம் என்பதை காலம் முடிவு செய்யும்.


 சீனப் பெருஞ்சுவர் 21000 கிமீ ஆகும். மேலே குறிப்பிட்ட பாதுகாப்புச் சுவர் 1000 கிமீ கூட வராது. அதிலும் எல்லைக் கோட்டில் உயரமாக மலைகளை விட்டுவிட்டு மீதி தொலைவில் சுவர் அமைக்கலாம்.

1 comment:

  1. ஏங்க ஒட்டு மொத்த இந்தியாவையும் பைந்தமிழர் தேசம் என்ற பெயரை சூட்டி ஹிந்தியாவிலிருந்து பாரசீகத்திற்கு ஹிந்தியை விரட்டி தமிழ் பால் புகட்டவேண்டுமென்று.... நாங்கள் எண்ணிகொண்டிருப்பது மிகையாகுமோ 💚🖤

    ReplyDelete