Monday, 8 June 2020

பிராமணரல்லாதோர் என்றாலே தமிழரல்லாதோர்


பிராமணரல்லாதோர் என்றாலே தமிழரல்லாதோர்
பிராமணர் அல்லாதோர் என்ற போர்வையில் பதவிகளைப் பிடித்தவர்கள் யார் என்று இப்போது பார்ப்போம்.
ஆங்கிலேய ஆட்சியில் இந்தியருக்கு பதவிகளைப் பகிர்ந்தளிப்பது 1909 லிருந்தே நடைபெற்று வந்தாலும் 1919 இல் மாண்டேகு - செம்ஸ்போர்டு  சீர்திருத்தம் நடைமுறைக்கு வந்த பிறகே முறைப்படி நடந்தது.
இவ்வாறு கிடைக்கும் பதவிகளில் பிராமணர்கள் இடம்பெறக்கூடாது என்று கலகம் செய்து பிராமணரல்லாதோர் என்ற போர்வையில் தமிழரல்லாதவர் மெல்ல நுழைந்தனர்.
1947 வரை இவ்வாறு பதவிபெற்ற அப்படியான "பிராமணரல்லாதார்" பட்டியல் வருமாறு,
* கவர்னர் கவுன்சில் உறுப்பினர் (நியமன அமைச்சர்):-
வாசுதேவ ராஜா (தெலுங்கர்)
முகம்மது அபிபுல்லா (உருது)
முகம்மது ஊஸ்மான் (தமிழர்)
எம். கிருஷ்ணன் நாயர் (மலையாளி)
* உயர்நீதிமன்ற நீதிபதி:-
சி.சங்கரன் நாயர் (மலையாளி)
அப்துல் ரகீம் (உருது)
சி.கிருஸ்ணன் (தெலுங்கர்)
எம்.வெங்கடசுப்பா ராவ் (தெலுங்கர்)
சி.மாதவன் நாயர் (மலையாளி)
பண்டாலை (மலையாளி)
கே.சுந்தரம் செட்டியார் (தமிழர்)
வி.பாண்டுரங்க ராவ் (தெலுங்கர்)
பி.வெங்கடரமணராவ் நாயுடு (தெலுங்கர்)
கே.பி.லட்சுமணன் (தெலுங்கர்)
முகமது அப்துல் ரஹ்மான் (உருது)
பி. சோமையா (தெலுங்கர்)
சி.குன்றிராமன் (மலையாளி)
முகமது சாகிபுதீன் (உருது)
எம் டேவிட்தாஸ் (மலையாளி)
வேப்பா ராமேசம் (தெலுங்கர்)
யாகியா அலி சாகிப் (உருது)
பி.சத்தியநாராயண ராவ் (தெலுங்கர்)
பி.கோவிந்த மேனன் (மலையாளி)
கே.சுப்பாராவ் (தெலுங்கர்)
* உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (ஆக்டிங்):-
அப்துல் ரகீம் (உருது)
வேப்பா ராமேசம் (தெலுங்கர்)
எம்.வெங்கடப்ப ராவ் (தெலுங்கர்)
சி.மாதவன் நாயர் (மலையாளி)
-------
1920 முதல் 1937 வரையான ஜஸ்டிஸ் ஆட்சியில் மதராஸ் மாகாணத்தில் பல்வேறு துறைகளில் ஆங்கிலேயர் அகன்று அதில் இடம்பெற்ற இந்தியர்களில் "பிராமணரல்லாதவர்" பட்டியல் வருமாறு,
* தொழில்துறை இயக்குநர்:-
முகமது பஸ்லுல்லா (உருது)
* விவசாயத்துறை இயக்குநர்:-
டி. ஆனந்த ராவ் (தெலுங்கர்)
* சென்னை மாநகராட்சி ஆணையர்:-
ஜே. வெங்கட நாராயணா (தெலுங்கர்)
* பதிவுத்துறை ஐ.ஜி:-
பி.வி.ஹரிராவ் (தெலுங்கர்)
* மீன்வளத்துறை இயக்குநர்:-
டாக்டர் பி.சுந்தர்ராஜ் (தெலுங்கர்)
* டவுன் பிளானிங் இயக்குநர்:-
ஆர்.டி.என். சிம்மன் (தெலுங்கர்)
* அபிவிருத்தித் துறை:-
வி.பாண்டுரங்க ராவ் (கன்னடர்)
* உள்ளாட்சி:-
எஸ்.ஜி.செங்கோடையன் (தமிழர்)
* சிறைச்சாலை ஐ.ஜி:-
முகமது மூசாகான் (உருது)
* பிரதம மாகாண மாஜிஸ்திரேட்:-
பண்டாலே (மலையாளி)
* மருத்துவத்துறை இயக்குநர்:-
கே.எஸ்.நாயர் (மலையாளி)
ஜஸ்டிஸ் கட்சி ஆட்சியில் ஒரே ஒரு பிராமணரல்லாத தமிழர்தான் பதவி பெற முடிந்தது.
---------
அடுத்து 1937-1939 காங்கிரஸ் ஆட்சியில் ஆங்கிலேயர் விட்டுக்கொடுத்த பதவிகளில் அமர்ந்த "பிராமணல்லாதோர்" பட்டியல் வருமாறு,
* நீதித்துறை செயலர்:- சி.கே.விஜயராகவன் (மலையாளி)
* கூட்டுறவுசங்கப் பதிவாளர்:-
எம்.கிரியப்பா (கன்னடர்)
-------
இதன் பிறகு 1946 வரை ஆங்கில கவர்னர் ஆட்சியில் ஆங்கிலேயர் விட்டுக்கொடுத்த பதவிகளில் அமர்ந்த பிராமணரல்லாதோர்
* பிரதம செயலாளர்:-
எஸ்.வி.ராமமூர்த்தி (தெலுங்கர்)
* கல்வித்துறை இயக்குநர்:-
டாக்டர் பி.பி. டே (வங்காளி)
* ரெவின்யூ செயலர்:-
சி.எஸ்.ஹெச்மாடி (கன்னடர்)
* தொழிலாளர் நல கமிசன்:-
சி.கே.விஜயராகவன் (மலையாளி)
* ரெவின்யூபோர்டு மெம்பர் :-
கே.ராமுண்ணி மேனன் (மலையாளி)
* பிரின்டிங் சூப்பரிரெண்டு:-
எம்.கரீம் அப்துல்லாம் (உருது)
-------
1946-1947 மீண்டும் காங்கிரஸ் ஆட்சியில் அதாவது தெலுங்கர் தலைமையிலான ஆட்சியில் ஆங்கிலேயர் விட்டுக்கொடுத்த பதவிகளில் அமர்ந்த "பிராமணரல்லாதோர்"...
* நீதித்துறை செயலர்:-
பி.வி.சுப்பாராவ் (தெலுங்கர்)
* பொதுசுகாதார இயக்குநர்:-
டாக்டர். ஆர்.எம்.மேத்யூ (மலையாளி)
* பிர்க்கா அபிவிருத்தி செயலர்:-
எம்.எஸ்.செகநாயகலு (தெலுங்கர்)
* சென்னை நகர போலீஸ் கமிசனர்:-
ஏ.வி.பாத்ரோ (தெலுங்கர்)
* போலீஸ் ஐ.ஜி:-
சி.கே.விஜயராகவன் (மலையாளி)
* சர்ஜன் ஜெனரல்:-
டாக்டர். பி.வி. செரியன் (மலையாளி)
* ரெவின்யூ போர்டு உறுப்பினர்:-
சி.கே.விஜயராகவன் (மலையாளி)
இவ்வாறு ஆங்கிலேயர் விட்டுக்கொடுத்த பதவிகள் பிராமணர் அல்லாதவர் என்ற பெயரில் தமிழரல்லாதவர் கைக்கே போயின.
அன்று இருந்த தமிழின அரசியல் தலைவர்கள் கண்ணிருந்தும் குருடராக இதை வேடிக்கை பார்த்தபடி இருந்தனர்.
-----
சரி! ஆங்கிலேயர் விட்டுக்கொடுத்த பதவிகளில் அமர்ந்த பிராமணர்?!
அவர்களாவது தமிழினத்தவரா?!
ஆம்!
ஆங்கிலேயர் அகன்ற இனத்தில் அமர்ந்த "பிராமணர்" பட்டியல் வருமாறு:-
* பல்கலைக்கழக துணைவேந்தர்:-
கனம் கே.சீனிவாச ஐயங்கார் (தமிழர்)
* தற்காலிகத் தலைமை நீதிபதி:-
சி.வி.குமாரசாமி சாஸ்திரி (தமிழர்)
* உயர்நீதிமன்ற நீதிபதி:-
சி.வி.அனந்தகிருஷ்ண ஐயர் (மலையாளி)
எஸ்.வரதாச்சாரியார் (தமிழர்)
கே.எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார் (தமிழர்)
எம்.பதஞ்சலி சாஸ்திரி (தமிழர்)
என்.சந்திரசேகர ஐயர் (தமிழர்)
வி.கோவிந்த ராசாச்சாரி (தமிழர்)
* அடிஷனல் நீதிபதி:-
சி.கிருஷ்ணசாமி ராவ் (தமிழர்)
வி.வி.சீனிவாச ஐயங்கார் (தமிழர்)
சி.வி.விஸ்வநாத சாஸ்திரி (தமிழர்)
சி.ஆர். திருவேங்கடாச்சாரியார் (தமிழர்)
வி.பாஷ்யம் ஐயங்கார் (தமிழர்)
சி.என்.குப்புசாமி ஐயர் (தமிழர்)
* தலைமைப் பொறியாளர் (மின்):-
ஜி. சுந்தரம் (தமிழர்)
* தலைமைப் பொறியாளர் (நீர்):-
எல்.வெங்கடகிருஷ்ண ஐயர்
*அறநிலையக் குழுத் தலைவர்:-
சர்.டி.சதாசிவ ஐயர் (தமிழர்)
* சட்டமன்றத் தலைவர் (நியமனம்):-
பி.ராஜகோபாலாச்சாரி (தமிழர்)
* (நியமன) அமைச்சர்கள்:-
சர்.சி.பி. ராமசாமி ஐயர் (தமிழர்)
டி.ஆர்.வெங்கடராம சாஸ்திரியார் (தமிழர்)
* அட்வகேட் ஜெனரல்:-
கே.சீனிவாச ஐயங்கார் (தமிழர்)
எஸ்.சீனிவாச ஐயங்கார் (தமிழர்)
சர்.சி.பி.ராமசாமி ஐயர் (தமிழர்)
டி.ஆர்.வெங்கடராம சாஸ்திரியார் (தமிழர்)
சி.வி.அனந்த கிருஷ்ண ஐயர் (தமிழர்)
அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் (தெலுங்கர்)
"பிராமணரல்லாதோர்" அரசியல் என்பது தமிழர் முன்னேற்றத்தின் மீதான குறிப்பாக தமிழினப் பார்ப்பனர் மீதான பிறமொழியினர் வெறுப்பே ஆகும்.
ஆங்கிலேயருக்கு அடுத்த நிலையில் அவர்கள் இடத்தை நிரப்ப தயாராக இருந்தனர் தமிழ்ப் பார்ப்பனர்.
அவர்கள் மீதான இனவெறுப்பினை நேரடியாகக் காட்டாமல் முதலில் அவர்களை "பிராமண ஆதிக்கம்" என்ற பெயரில் பிற தமிழரிடமிருந்து பிரித்தனர் வேற்றினத்தவர்.
பார்ப்பனர் மீதான பிற தமிழரின் பொறாமையை பயன்படுத்தி இடையில் புகுந்து தாம் "பிராமணல்லாதோர்" என்ற பெயரில் பதவிகளைப் பிடித்தனர் வேற்றினத்தவர்.
இன்றுவரை தமிழரை இவ்வாறே ஏய்த்தும் வருகின்றனர்!
பிராமணரல்லாதோர் என்றாலே தமிழரல்லாதோர்!
(தகவல்களுக்கு நன்றி:
ம.பொ.சி அவர்கள் எழுதிய 'தமிழகத்தில் பிறமொழியினர்' நூல்)

No comments:

Post a Comment