Thursday 29 September 2022

சோழப் பாண்டியர்

சோழப் பாண்டியர்

 பாண்டிய நாட்டிலிருந்து சேரநாட்டுக்கு போகும் செங்கோட்டைக் கணவாயில் இருந்து சேனைத்தலைவர் குடியைச் சேர்ந்த நான் எழுதும் பதிவு.

 நான் தோற்றத்தால் சேர நாட்டான். பூர்வீகத்தால் சோழ நாட்டான். பிறப்பால் பாண்டிநாட்டான்.

 பாவாணர் கூற்றுப்படி சேடைத்தலைவர் சங்ககால கோசர் வழிவந்த தமிழ்க்குடி (இது தெரியாமல் நன்னன் - கோசர் பங்காளிச் சண்டையை வைத்து கோசர் வடுகர் என்று நானே பதிவு இட்டுள்ளேன்).
 கோசர் ஆண்ட குறுநிலம் சேர நாட்டின் பகுதியான கொங்குக்கும் சேரநாட்டுக்கு அடுத்த வடக்கு கடற்கரையை ஆண்ட நன்னனுக்கும் துளுநாட்டுக்கும் கொங்கின் வடபகுதியான கொங்காணத்துக்கும் இடையில் இருந்தது. அதாவது தற்போதைய கேரள கர்நாடக எல்லைக் கோட்டின் மத்தியில் என்று சொல்லலாம்.

 இவர்கள் குதிரைமலை (Gudremukh - Karnataka) பிட்டங்கொற்றன் மீது போர் தொடுத்துள்ளனர்.

 கோசர் சக வேளிர் குடியான ஏழில்குன்றம் (Ezhimala - Kerala) நன்னர்களுடன் பங்காளி சண்டை போட்டு தோற்று பிறகு சூழ்ச்சியால் நன்னனை கொன்றுவிட்டதாக சங்க இலக்கியம் கூறுகிறது.
அதன்பிறகு இவர்கள் கொங்கு வந்து சேரர் படையில் சேர்ந்து பிறகு சோழநாட்டு வடக்கு எல்லைக்கு போர்த்தொழில் செய்யச் சென்றுள்ளதாக ஊகிக்கலாம் (திருநெல்வேலி முதல் தஞ்சாவூர் வரை தொடர்ச்சியாக வாழும் சேனைத்தலைவர் அதன் பிறகு திருவண்ணாமலை அருகே மட்டும் காணக் கிடைக்கின்றனர்).

 இப்படி தமிழகம் வந்த கோசர் இளங்கோசர் என்றும் இவர்களது மூதாதையர் துளு எல்லையில் வாழ்ந்த செம்மல் கோசர் என்றும் சங்க இலக்கியங்களில் குறிக்கப்பட்டுள்ளனர்.  
 கொங்கில் இவர்கள் ஏற்கனவே இருந்ததால் பிரச்சனை வரவில்லை. கொங்கு தாண்டி வந்தபோது சோழநாட்டு தமிழகத்து சிற்றரசர்களுடன் பிரச்சனஐ வந்து அவர்களுடன் மோதிக்கொண்டு இருந்தனர்.
 அப்போது கிள்ளி வளவன் இவர்களைத் தோற்கடித்தான்.
 பிறகு படைத்தலைவராகவும் ஊர்த்தலைவராகவும் சோழ நாட்டிலும் பாண்டிநாட்டிலும் சங்ககாலத்திலேயே பரவிவிட்டனர். 

 (சங்ககாலத்தில் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி எனும் சோழன் படையெடுத்தபோது அவனுக்கு பணிந்து தம் ஊரை காப்பாற்றிக்கொண்ட அஃதை எனும் கோசர் தலைவன் உண்டு. இவன் வழியினரே அகதா மறவர் என்பர். தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் போரில் வென்ற பிறகு தோற்ற கோசர் படை அவனுக்கு பணிந்து பல வெற்றிகளை ஈட்டித் தந்தது)

 பிற்பாடு பல போர்க்குடிகளுடன் கலப்புகள் ஏற்பட்டு கோயர் என்கிற பெயருடன் தமிழகம் முழுக்க பரவினர் எங்கள் முன்னோர்கள்.

 கோயம்பேடு, கோயம்புத்தூர், இளங்கோயக்குடி (அம்பாசமுத்திரம்) இப்படிப்பட்ட ஊர்கள் கோயர் உருவாக்கியவை என்பது பாவாணர் சொல்லாய்வு முடிவு.

 கோயர் பிற்பாடு பல கலப்பு நடந்து கோளர் என்றாகினர்.
 அவர்களே கைக்கோளர் எனும் படைப்பிரிவு ஆகி சோழருக்கு போர்த் தொழில் செய்துகொண்டு இருந்தனர்.
 மேலும் கலப்பு நடந்து பிற்கால சோழர் காலத்தில் எல்லைக்கு சற்று பின்னே நிலைகொண்டு இருக்கும் உள்நாட்டு படையான (special force) செங்குந்தர் என்றாகினர் என்கிறார் பாவாணர்
 (இவையெல்லாம் ராகவையங்கார் கோசர் பற்றி எழுதி அவர்கள் வெளியார் என்று கூறியபோது அதை மறுத்து கோசர் தமிழரே என்று பாவாணர் எழுதியவை).

 இந்த சிறப்புப் படையின் தலைவர்கள் பிற்பாடு தனிச் சாதியாகி சேனைக்குடையார், சேனைத் தலைவர் என்றாகி இருக்கவேண்டும்.

 16 ஆம் நூற்றாண்டில் தமிழர் ஆட்சி வீழ்ந்த பிறகு கைகோளர், செங்குந்தர், சேனைத்தலைவர் ஆகியோர் போர்த்தொழிலை விட்டுவிட்டனர். நெசவுத் தொழிலுக்கு மாறினர் (போத்தீஸ் - சேனைத்தலைவர் நிறுவனம்). பிறகு சேனைத்தலைவர் வெற்றிலை விவசாயம் போன்ற கொடி விவசாயத்திற்கு மாறினர். 

 முருகனை முதன்மைத் தெய்வமாகக் கொண்ட இவர்கள் பிற்பாடு முருகன் படைத் தளபதி வீரபாகு வழிவந்தவராக கற்பனைப் புராணங்களை எழுதிக்கொண்டனர்.

 சேனைத்தலைவரில் பெரும்பான்மையானோர் செங்கோட்டை முதல் தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் இடம் வரை வாழ்கின்றனர்.
தேனி, தஞ்சாவூர் வரை சிறுசிறு தொகையாக பரவி உள்ளனர் (நீயா நானா கோபிநாத்தை இங்கே குறிப்பிடலாம்). இதற்கு அடுத்து எந்த தொடர்பும் இல்லாமல் திருவண்ணாமலையில் காணக்கிடைக்கின்றனர். செங்குந்தர் அல்லது மறவர் மத்தியில்தான் பெரும்பாலும் சேனைத்தலைவர் வாழ்கின்றனர். 

 என்னுடைய கணிப்பு சோழப் பேரரசு விரிவடைந்தபோது நாங்கள் படைத்தலைவர்களாக பாண்டிய நாடு வந்து தங்கி அப்படியே செங்கோட்டை வழியே சேரநாட்டின் மீதும் படையெடுத்து சென்றுள்ளோம் (ஆனால் சங்ககாலத்திலேயே பாண்டிநாடு வரை கோசர் பரவிவிட்டனர். ஊர்த் தலைவர்களாக இருந்தனர். செல்லூரை ஆண்ட கோசர் தலைவர் செல்லிக் கோமான். ஊர்முது கோசர் எனும் குறுக்கை ஊர் கோசர் சபை  திதியனுடன் போர் செய்துள்ளனர். இதுவே நம்மாழ்வார் பிறந்த திருக்குறுக்கை. இந்த நம்மாழ்வார் பாடிய திருத்தலம் கன்னியாகுமரியில் உள்ள வாட்டாறு இவ்வூரிலும் சங்ககாலத்தில் எழினியாதன் தலைமையில் கோசர் இருந்தனர்).
 
 சேனைத்தலைவரின் ஒரு பிரிவு வேங்கடத்திற்கு அப்பால் படையெடுப்புக்குச் சென்றுள்ளது. இன்றும் வடக்கு எல்லையிலும் மேற்கு எல்லையிலும் செங்குந்தர் அதிகம் உள்ளனர் (பாரதிதாசன் - செங்குந்த முதலியார்)

செட்டியார், முதலியார், மூப்பனார், பிள்ளை என பல பட்டங்கள் கொண்டவர்கள் என்பதால் பல குடிகள் கலந்த கலப்பு என்று அறியலாம். பொட்டல்புதூர் இசுலாமியர் பெரும்பாலும் சேனைத்தலைவர் குடிதான். 
 நான் இங்கே கூறவருவது என்னைப் போல எல்லா குடிகளையும் ஆராய்ந்தால் அது தன்னாட்சி புரிந்த ஒரு வேளிர் இலிருந்து தொடங்கி சங்ககாலத்தின் ஏதாவது ஒரு குடியைத் தொட்டு பிறகு மூவேந்தர் ஆட்சியில் எதாவது ஒரு தொழில்வழிச் சாதி ஆகி பின்னர் இன்றைய பிறப்பு வழிச் சாதியாகி நிற்கும்.

 பொன்னியின் செல்வன் திரைப்படம் வந்துள்ள இந்நேரத்தில் சோழர் - பாண்டியர் பங்காளிச் சண்டை போடவேண்டாம்.
அப்படி சண்டை போட்டாலும் என்னை இழுக்க வேண்டாம்!



 
 

Tuesday 27 September 2022

அடுத்தது ரிக் வேதப் பொய்

அடுத்தது ரிக் வேதப் பொய் 

 ரிக் வேதம் 62:10 கடவுளை விட பிராமணர் உயர்வு என்று சொல்வதாக இன்னொரு பொய் திராவிடவாதிகளால் பரப்பட்டு வருகிறது.

அந்த வரிகள்,

தை³வாதீ⁴னம்ʼ ஜக³த்ஸர்வம்ʼ
மந்த்ராதீ⁴னம்ʼ து தை³வதம்।
தன்மந்த்ரம்ʼ ப்³ராஹ்மணாதீ⁴னம்ʼ
ப்³ராஹ்மணா மம தே³வதா:॥

“தெய்வங்களின் வசத்தில் உலகம். மந்திரங்களின் வசத்தில் தெய்வங்கள். அந்த மந்திரங்கள் பிராமணர் வசத்தில். அத்தகைய பிராமணர் எனது தெய்வங்கள்” என்று இதற்குப் பொருளாம்.

 உண்மை என்னவென்றால் இந்த வரிகள் கொண்ட ஸ்லோகம் ரிக் வேதத்திலேயே இல்லை.
 ரிக், யஜூர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களிலும் கூட இந்த அல்லது இதுபோன்ற பொருள் தரும் சுலோகம் இல்லை.

ஆம். சூத்திரன் என்றால் வேசிமகன் என்று திராவிடவாதிகள் சான்று காட்டிய ஸ்லோகத்தில் எப்படி சூத்திரன் பற்றி எதுவுமே இல்லையோ அதுபோலவே இதுவும். 
அடிப்படையே இல்லை.
 திரிப்பு வேலையைக் கூட ஒழுங்காகச் செய்ய துப்பில்லை இவர்களுக்கு! 

 உண்மையான அந்த ஸ்லோகமும் மேற்கண்டதில் இருந்து சற்று மாறுபட்டது.
 Mantra dhinam Jagat sharvam, Mantra dhinam cha devatha,. Tan Mantra Brahmana adheenam TASMAT Brahman Devta. 

 இதன் பொருள் மந்திரங்கள் உலகத்தையும், தெய்வங்களையும் ஆட்டிப்படைக்கின்றன. எனவே மந்திரம் ஓதும் பிராமணன் தெய்வம் போன்றவன்.
 
 இந்த ஸ்லோகம்(பதிகம்) எந்த புராணத்தில் (பெருங்காப்பியம்) இருக்கிறது என்று தெரியவில்லை.

பிராமணர் கடவுளுக்கு நிகர் என்று வேதத்தில் இல்லை. அதாவது கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் இல்லை.

Wednesday 21 September 2022

நம்மை அவர்கள் என்றனர்

நம்மை அவர்கள் என்றனர் 

அவர்கள் வேசி மகன்கள்; ஆனால் நம்மை தேவடியாள் மகன்கள் என்றனர்.

அவர்கள் சாதிவெறியர்கள்; ஆனால் நம்மை சாதியவாதிகள் என்றனர்.

அவர்கள் பிராமண அடிமைகள்; ஆனால் நம்மை பார்ப்பன அடிமைகள் என்றனர்.

அவர்கள் பெண்பித்தர்கள்;  ஆனால் நம்மை வெள்ளைத்தோல் விரும்பிகள் என்றனர்.

அவர்கள் மானங்கெட்டவர்கள்; ஆனால் நம்மை சுயமரியாதை இல்லாதவர்கள் என்றனர்.

அவர்கள் தம் வீட்டுப் பெண்களை வைத்து விபச்சாரம் செய்பவர்கள்; ஆனால் நம்மை ஆணாதிக்கவாதிகள் என்றனர்.

அவர்கள் மூட நம்பிக்கை நிறைந்தவர்கள்; ஆனால் நம்மை காட்டுமிராண்டிகள் என்றனர்.

 அவர்கள் திரிந்து சிதைந்த மொழி பேசுபவர்கள்; ஆனால் நம் மொழியை தகுதியற்றது என்றனர்.

அவர்கள் ஆக்கிரமித்து கொழுப்பவர்கள்; ஆனால் நம்மை ஆதிக்கவாதிகள் என்றனர்.

அவர்கள் வடுகர்கள்; ஆனால் நம்மை திராவிடர்கள் என்றனர்.

19.06.2021 முகநூல் பதிவு மீள்

Monday 19 September 2022

திராவிடத்திற்கு முன்பே காங்கிரசை வீழ்த்திய தமிழ்தேசியம்

திராவிடத்திற்கு முன்பே காங்கிரசை வீழ்த்திய தமிழ்தேசியம் 

  அண்ணாதுரைக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பே காங்கிரஸை வென்றவர் ஆதித்தனார்!
 ஆம். 1967 இல் அண்ணாதுரை கூட்டணி அமைத்து காங்கிரசை வீழ்த்தியதை பெரும் சாதனையாகத் திராவிடவாதிகள் கூறுவர்.
 ஆனால் 1952 லேயே காங்கிரஸ் 153 இடங்களில் வென்றது. காங்கிரசை எதிர்த்து கூட்டணி அமைத்து 166 இடங்களில் வென்று காட்டினார் ஆதித்தனார்.
(1937 லிருந்தே தமிழருக்குத் தனிநாடு கோரிவந்தவர் ஆதித்தனார்)
 ஆனால் அன்றைய கவர்னர் ஸ்ரீபிரகாசா கூட்டணியை ஒரே கட்சியாகக் கணக்கில் கொள்ளமுடியாது என்று கூறி காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க அழைத்தார். 
 (இது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை ஆகும்.
சமீபத்தில் சசிகலா பெரும்பான்மை பலத்துடன் இருக்கும்போது ஆட்சியமைக்க அழைக்காமல் ஜனநாயகப் படுகொலை நடந்தது போல!)

 அப்போது ராஜாஜி ஆதித்தனாரின் 'ஐக்கிய கூட்டணி' யிலிருந்து மாணிக்கவேலர் என்பவரை பதவி ஆசை காட்டி கட்சி மாறச் செய்தார். தான் முதலமைச்சர் ஆகி ஆட்சியும் அமைத்தார்.
 அப்போது அவர் கொண்டுவந்த கல்வித் திட்டம் அன்று பெரும்பான்மை பலத்துடன் இருந்த ஆதித்தனார் கூட்டணியால்தான் தோற்கடிக்கப்பட்டது (இந்த திட்டமே குலக் கல்வித் திட்டம் என்று அவதூறு பரப்பப்பட்டது).

 1957 லும் ஆதித்தனார் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சியை வீழ்த்த முயன்றார். ஆனால் முடியவில்லை.
 இருந்தாலும் அக்கட்சி பலவீனமடைந்தது.

 1958 இல் சுதந்திரத் தமிழ்நாடு கோரி மிகப்பெரிய மாநாடு ஒன்றை ஆதித்தனார் நடத்தினார். இதில்தான் இந்திய வரைபட எரிப்பு போராட்டம் பற்றி முடிவெடுக்கப்பட்டது. 

 1960 இல் ஈ.வே.ரா வுடன் இணைந்து (தமிழகம் நீங்கலாக) இந்திய வரைடத்தை எதிர்க்கும் போராட்டத்தை ஏற்பாடு செய்தார். ஆனால் போராட்டம் தொடங்கும் முன்பே இரு தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். ஆனாலும் மக்கள் தடையை மீறி மிகப் பெரிய அளவில் வரைபடத்தை எரித்தனர். 4000 பேர் இதற்காகக் கைது செய்யபட்டனர். மும்பை தமிழர்களும் இப்போராட்டத்தை நடத்தினர். அதிலும் சிதம்பரத்தில் வி.கே.சாமித்துரை என்பவர் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் கைது செய்யப்பட்டது பலருக்கும் அதிர்ச்சி தந்தது. காங்கிரசு பரவலான மக்கள் எதிர்ப்பைப் பெற்றது.

 அதே 1960 இல் ஆகஸ்ட் மாதம் இந்தி திணிப்பை எதிர்த்து குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்ததுக்கு கறுப்புக் கொடி காட்ட முயன்ற ஆதித்தனார் மற்றும் அவரது 'நாம் தமிழர்' கட்சியினர் 126 பேர் கைது செய்யப்படனர். வெளிவந்த பிறகும் அக்டோபரில் ஆதித்தனார் 'தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்' கீழ் கைது செய்யப்பட்டு தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். மூன்று மாத சிறைவாசத்தில் 12 கிலோ உடல் எடை குறைந்து வெளிவந்தார். அப்போதும் காங்கிரஸ் மீது இளைஞர்களுக்கு பலத்த அதிருப்தி ஏற்பட்டது.

 1965 மொழிப்போரை மாணவர்கள் முன்னெடுத்தபோது ஈ.வே.ரா காங்கிரசுடன் சேர்ந்துகொண்டார். அப்போது மாணவர்களை வழிநடத்தியது அண்ணாதுரையும் ஆதித்தனாரும். அண்ணாதுரை பாதியில் விலகிக் கொள்ள நாம் தமிழர் கட்சி கடைசிவரை உறுதியாக நின்றது.

 1967 இல் அண்ணாதுரை காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க ஆதித்தனார் மிக முக்கியமான காரணம். அன்று திருநெல்வேலி காங்கிரஸ் கோட்டையாக இருந்தது. அண்ணாதுரை ஆதித்தனாரிடம் அத்தொகுதிப் பணியை ஒப்படைத்தார். 1962 இல் அதன் 19 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. 1967 ல் ஆதித்தனார் 14 தொகுதிகளில் தி.மு.க வை வெல்லவைத்தார். 5 தொகுதிகளே காங்கிரசுக்குக் கிடைத்தது. 
தேர்தலுக்குப் பின் காங்கிரஸின் தோல்வியில் கால்வாசி பங்கு தினத்தந்தி க்குரியது என்று கூறினார் ராஜாஜி. 

 அண்ணாதுரைக்கு கிடைக்கும் புகழ் உண்மையில் ஆதித்தனாருக்குக் கிடைக்க வேண்டியது ஆகும்.
 

Saturday 17 September 2022

ஈ.வே.ரா மக்கள் ஆதரவு பெற்றவரா

ஈ.வே.ரா மக்கள் ஆதரவு பெற்றவரா?!

 ஈ.வே.ராமசாமி க்கு எப்போதும் மக்கள் ஆதரவு இருந்ததே இல்லை!
 ஈ.வே.ரா தலைமை தாங்கிய அல்லது ஆதரவு தெரிவித்த எந்தவொரு கட்சியோ நபரோ தேர்தலில் வென்றதே இல்லை!
 வென்றதில்லை என்றாலே ஆட்சிக்கு வந்ததும் இல்லை என்பது புலப்படும்.
  அதைவிடக் கொடுமை எவர் வென்றாலும் உடனே எதிர்ப்பைக் கைவிட்டு ஓடோடிச் சென்று  ஒட்டிக்கொள்வது ஈ.வே.ரா வழக்கம்.

 இத்தகைய ஒரு நபரைத்தான் தமிழ் இனத்தின் தலைவனாக திராவிடம் சித்தரிக்கிறது.

திராவிடமும் தமிழர்களின் ஆதரவை எப்பொதும் பெற்றதில்லை!

 காங்கிரஸ் தேர்தலைப் புறக்கணித்ததால் மட்டுமே நீதிக் கட்சி ஆங்கிலேயர் ஆதரவுடன் வெல்ல முடிந்தது.

 பிறகு நீதிக் கட்சி வீழ்ந்தபிறகு முப்பது ஆண்டுகள் ஈ.வே.ரா தலைமையில் திராவிடம் பீடை பிடித்தது போல் இருந்தது.

 அண்ணாதுரை தான் திராவிடத்தை அரியணை ஏற்றினார் அதுவும் திராவிடம் என்கிற பெயரில் முழுக்க தமிழ்தேசியத்தைப் பேசித்தான் ஆட்சிப் பிடித்தார்.

 அதன்பிறகும் தமிழக அரசியலில் தி.மு.க பெரும்பாலும் ஓரங்கட்டப்பட்டு இருக்கும் அல்லது  மைனாரிட்டி அரசு அமைக்கும். 

 ஆனால் அ.தி.மு.க தோன்றிய காலத்தில் இருந்தே பெரும்பான்மை ஆதரவையும் மெஜாரிட்டி அரசு அமைக்கும் திறனும் கொண்டு விளங்கியது. 
காரணம் அது பெயருக்கு மட்டும்தான் திராவிடக் கட்சி.

 அ.தி.மு.க தலைவர்கள் வீழ்ந்தபிறகே ஸ்டாலின் மெஜாரிட்டி அரசு அமைத்துள்ளார். 
 அதுவும் பணபலத்தின் துணை மட்டும் கொண்டே இதைச் சாதித்தார்.

 

 
 
 

Friday 9 September 2022

பிரிட்டிஷ் அரசர் மரணத்திற்கு ஈ.வே.ரா அஞ்சலி

பிரிட்டிஷ் அரசர் மரணத்திற்கு ஈ.வே.ரா அஞ்சலி

 சவர்க்கர் கூட பிறகுதான் ஆங்கிலேய அடிமையாக மாறினார் ஈ.வே.ரா எப்போதுமே ஆங்கிலேயர் அடிமைதான்.

 மன்னர் ஜார்ஜ் இறந்தபோது ராஜ விசுவாசத்துடன் ஈ.வே.ரா  எழுதிய உருக்கமான இரங்கல். 
(26.01.1936, குடி அரசு தலையங்கம்)
 இதில் 'ஆங்கில ஆட்சியின் குறைகளுக்கு மன்னரை குறை சொல்லக்கூடாது' எனும் கருத்து கவனிக்கத்தக்கது.

 மேலும், இந்தியா பிரிட்டிஷ் அரசிடமிருந்து சுதந்திரம் பெறும் காலம் கனிந்தபோது கூட 'தமிழகத்தை மட்டுமாவது ஆங்கிலேயர் தொடர்ந்து ஆள வேண்டும்' என்று ஈ.வே.ரா வலியுறுத்தியதையும் காணலாம்.

 27-08-44ல் சேலம் நகரில் கூடிய திராவிடர் கழக மாநாட்டிலே, கீழ்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,
”திராவிடர் கழகத்தின் முக்கிய கொள்கைகளில் திராவிட நாடு என்ற பெயருடன் நம் சென்னை மாகாணம் மத்திய அரசாங்கம் நிர்வாகத்தின் ஆதிக்கம் இல்லாததும், 

நேரே பிரிட்டிஷ் செக்கரடரி ஆப் ஸ்டேட்டின் நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டதுமான 

ஒரு தனி (ஸ்டேட்) நாடாக பிரிக்கப்பட வேண்டுமென்ற கொள்கையை முதற்கொள்கையாக சேர்க்கப்பட்டிருக்கிறது என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது”.

நமது குறிக்கோள் ‘விடுதலை’ வெளியீடு :- 1948
(நூல்:- புதிய தமிழகம் படைத்த வரலாறு)

Sunday 4 September 2022

ரயில்வே திட்டங்களில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிப்பு

ரயில்வே திட்டங்களில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிப்பு 

நமக்கு எல்லா வசதிகளையும் செய்வது மாநில அரசு. மாநில அரசை விட அதிகம் வரி வாங்கும் மத்திய அரசு நமக்கு செய்வது ரயில், தபால், ராணுவ பாதுகாப்பு போன்றவை மட்டுமே!
 மத்திய அரசு எப்படி தமிழகத்தைச் சுரண்டி கொழுக்கிறது என்பதை பலமுறை சான்றுகளுடன் பார்த்துள்ளோம்.
 தற்போது மத்திய அரசால் நமக்கு ஓரளவு பலனளிக்கும் ரயில்வே பற்றி பார்ப்போம்.
 கேரளாவுடன் ஒப்பிட்டால் தமிழகம் ரயில்வே வளர்ச்சியில் 20 ஆண்டுகள் பின்தங்கி உள்ளது. 
 இத்தனைக்கும் இவ்விரு மாநிலங்களும் ஒரே (தென்னக ரயில்வே) மண்டலத்தில் உள்ளன.
 அதாவது மாநில எல்லைகள் வேறு ரயில்வே எல்லைகள் வேறு (காண்க: படம்)
 இதில் தென்னக ரயில்வே மண்டலத்துக்கு ஒதுக்கப்படும் நிதியும் திட்டங்களும் கேரளாவுக்கு பலனளிக்கும் வகையில் செலவு செய்யப்படுகின்றன.
 
 
இது பற்றி 02.09.2022 இல் தினகரன் வெளியிட்ட செய்தி வருமாறு,

கேரளாவுக்கு அடிக்கும் ஜாக்பாட்!
ரயில்வே திட்டங்களில் தமிழகம் புறக்கணிப்பு: 
கிடப்பில் கிடக்கும் நீண்ட கால கோரிக்கைகள்

நாகர்கோவில்:
 கேரளாவில் ரயில்வே துறை சம்பந்தமான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி, துவங்கி வைத்துள்ளார். மேலும் பல்வேறு புதிய ரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் உள்ளார்.

 இதில் முக்கியமாக 750 கோடியில் 27 கி.மீ தூரம் உருவாக்கப்பட்ட குருப்பந்தாரா - கோட்டயம் - சிங்கவனம் புதிய ரயில் பாதை இரு வழி பாதை திட்டம் 
மற்றும் 76 கோடியில் கொல்லம் - புனலூர் மின்மயமாக்கல் திட்டம் உள்ளிட்டவற்றை நாட்டுக்கு அர்ப்பணித்தார். 

இது தவிர எர்ணாகுளம் சந்திப்பு, கொல்லம் ஆகிய ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு திட்டத்துக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

 இருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ள இருப்பு பாதை தடத்தில் எர்ணாகுளம் - கோட்டயம்- காயங்குளம் மார்க்கத்தில் புதிய மெமு ரயில் சேவையும் துவங்கப்பட்டுள்ளது. 

கொல்லம் - புனலூர் மார்க்கத்தில் இயங்கி வந்த இரு ரயில்கள் மெமு ரயில் ஆக மாற்றம் செய்யும் சேவையும் தொடங்கி வைக்கப்பட்டது.

 கேரளாவில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த திட்டத்தில் கொல்லம் - புனலூர் மின்மயமாக்கல் திட்டம் முழுக்க முழுக்க தமிழகத்தில் உள்ள மதுரை கோட்டம் நிர்வகித்து வருகிறது. 

கோட்டம் எதுவாக இருந்தாலும் கேரள மாநிலம் அதிகளவில் புதிய ரயில்களை பெறுகிறது. 

ஆனால் தமிழகம் அந்தளவுக்கான ரயில்வே திட்டங்களை பெற முடிவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருக்கிறது. 

தற்போது தொடங்கப்பட்டுள்ள திட்டங்களும் அதை நிரூபிக்கும் வகையில் இருப்பதாக ரயில் பயணிகள் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


அப்படியே தமிழகத்தில் புதிய ரயில்வே திட்டம் வந்தாலும் கூட, கேரள பயணிகளுக்கு ஏதோ ஒரு விதத்தில் பயன்படும் விதத்தில் தான் இயக்கப்படுகிறது என்பதும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

 திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் உள்ள கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருவனந்தபுரம் - திருநெல்வேலி மெமு ரயில் சேவை இன்னும் கனவாகவே உள்ளது. 


இந்த பகுதி மின்மயமாக்கல் 2014-ம் ஆண்டு நிறைவு பெற்று இதுவரை ரயில்வே துறையால் மெமு இயக்கப்படவில்லை.


நாகர்கோவில் - திருவனந்தபுரம் மார்க்கத்தில் இயங்கும் பழைய ரயில்கள் மாற்றம் செய்து விட்டு மெமு ரயில்களாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை தெற்கு ரயில்வே தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.

 இதே போல் சென்னை முதல் மதுரை வரை இருவழி பாதை பணிகள் முடிந்து 5 வருடங்கள் ஆகி விட்டது. மதுரை முதல் கன்னியாகுமரி வரை உள்ள பாதை இரு வழியாக மாற்றும் பணிகள் 80 சதமானம் முடிவு பெற்றுவிட்டன. ஆனாலும் இந்த பாதையில் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்பதும் இன்னும் பரிசீலனை செய்யப்படாமல் உள்ளது.


சென்னையிலிருந்து செல்லும் ரயில்களான 
தாம்பரம் - ஐதராபாத் சார்மினார், 
சென்னை- புதுடெல்லி ஜிடி எக்ஸ்பிரஸ், 
சென்னை - ஹவுரா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் 
போன்ற ரயில்களை மதுரை வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கையிலும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.

 தமிழ்நாட்டில் சமீபத்தில் திண்டுக்கல் - பொள்ளாச்சி, திருவாரூர் - காரைக்குடி, மதுரை - தேனி ஆகிய பகுதிகள் அகல பாதையாக மாற்றம் செய்யப்பட்டு விட்டது. இதில் இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் ரயில் கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த 15 ஆண்டுகளாக ரயில் வசதி இல்லாத தேனி மாவட்ட மக்களுக்கு கூட தேனி - சென்னை புதிய ரயில் சேவையை தொடங்க வில்லை. 

இவ்வாறு செய்வதை பார்க்கும் போது ரயில்வே துறையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்பதை நன்கு அறிய முடிகின்றது என குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் செயலாளர் எட்வர்ட் ஜெனி கூறினார். 

கடந்த இருபது வருடங்களாக ஒவ்வொரு ரயில் பட்ஜெட்டில் தமிழகத்தை போல் எதிர்கட்சி எம்.பிக்கள் அதிகம் உள்ள கேரளா ஜொலித்தது.
பாரதிய ஜனதா ஆட்சியிலும் இது தொடர்ந்து கொண்டே வருகிறது. 

ஆனால் தமிழ்நாடு ரயில்வே துறை வளர்ச்சியில் கேரளத்தை விட இருபது வருடம் பின் தங்கி காணப்படுகிறது. 

இந்த நிலையை மாற்ற தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஒன்றிணைந்து ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.