Showing posts with label ஸ்பெயின். Show all posts
Showing posts with label ஸ்பெயின். Show all posts

Saturday, 1 July 2017

அமெரிக்க விடுதலைப் போரும் அதைத் தூண்டிய வரிவிதிப்பும்

அமெரிக்க விடுதலைப் போரும்
அதைத் தூண்டிய வரிவிதிப்பும்

அமெரிக்கா என்ற நாடு உருவான வரலாறு தெரியுமா?

அமெரிக்க கண்டத்தை ஆக்கிரமித்து அதன் பூர்வகுடிகளை கொன்றுவிட்டு (ஸ்பானியர்களுக்கு அடுத்ததாக) ஆங்கிலேயர் குடியேறிக்கொண்டனர்.
மிகப்பெரிய நிலம், குறைவான மக்கட்தொகை, கொழிக்கும் வளம் என ஆங்கிலேயர் நல்ல வசதியாக வாழத் தொடங்கினர்.

இவர்கள் தமது தாய்நாட்டையே எதிர்த்து போராடி தனிநாடு ஆனது ஏன் தெரியுமா?

இங்கிலாந்து அவர்கள் மீது விதித்த வரியும்
தன்னிடம்தான் வணிகம் வைத்துக்கொள்ளவேண்டும் என்ற கட்டுப்பாடும்தான்

அதாவது ஒரே தேசம்! ஒரே வரி! ஒரே வணிக வழி!

இதனால் அமெரிக்க மாநிலங்கள் தானே சுயமாக எந்த அரசுடனும் வணிகம் செய்யமுடியாத நிலை.
உற்பத்தி அனைத்தும் இங்கிலாந்துக்கே போனது!
இறக்குமதியும் அங்கிருந்தே வந்தது!
வரிச்சுமையும் அழுத்தியது!

இறுதியில் 13 ஆங்கிலேய மாநிலங்கள் ஒன்றுசேர்ந்து 'ஒருங்கிணைந்த அமெரிக்க மாநிலங்கள்' அதாவது 'United States of America' ஆகி தம்மை குடிவைத்து பெரிய நிலம் கொடுத்து வாழ்வளித்த தமது தாய்நாடான ஆங்கிலேய பேரரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கின.
அது வாஷிங்டன் தலைமையில் விடுதலைப் போராட்டமாக வெடித்தது.

இராணுவத் தோல்வியையே காணாத நாடாக அன்று உலகின் கால்பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருந்த மாபெரும் ஆங்கில பேரரசு,
தனது சொந்த இனத்தாலேயே மிகமோசமாகத் தோற்கடிக்கப்பட்டது.
அமெரிக்கா என்ற அறியப்படும் U.S.A உருவானது.

அதன்பிறகு மிக வேகமாக வளர்ந்த அமெரிக்கா நெப்போலியனிடம் லூசியானா பகுதியை விலைக்கு வாங்கி இரு மடங்காக பெருத்தது.
பிறகு அருகே குடியிருந்த ஸ்பானிய பகுதிகளையும் ஆக்கிரமித்து விடுதலைப் போரைத் தொடங்கிய வெறும் 100 ஆண்டுகளுக்குள் 6 மடங்கு பெருத்து வீங்கி
பிறகு ரஷ்யாவிடம் அலாஸ்காவை விலைக்கு வாங்கி
இரண்டாம் உலகப்போருக்கு பிறகு மிகப்பெரிய வல்லரசாக உருவெடுத்தது.
(ஸ்பானியரை ஆங்கிலேயருக்கு அறவே பிடிக்காது.
இதுதான் ஸ்பானிய குடிவழி நாடான மெக்சிகோ மீதான வெறுப்புக்கு காரணம்)

இன்று அமெரிக்காவில் கால்வாசி மக்கள் ஆங்கில குடிவழிகள்.
ஆனால் எங்கும் எதிலும் இவர்கள் ஆதிக்கமே!
(கனடாவிலும் இதே நிலைதான்!
பிரெஞ்சு குடியேற்றப்பகுதியான கியூபெக் மட்டும் அங்கே விதிவிலக்கு)

ஆங்கில பேரரசைத் தோற்கடித்தாலும் ஆங்கில தாய்நாட்டுக்கு ஒன்றென்றால் பதறி ஓடி வந்து உயிரைக் கொடுத்து காப்பாற்றும் அமெரிக்கா!

அமெரிக்கர் மத்தியில் தாய்நிலத்திலிருந்து யாராவது வந்தால் அத்தனை மரியாதை!
தாய்நில ஆங்கில உச்சரிப்புக்கு அதாவது british english accent க்கு அத்தனை மதிப்பு!

அதாவது இனப்பற்றில் உலகில் ஈடு இணையே சொல்லமுடியாத ஆங்கில இனமே கூட தனது இனப்பற்றையும் மீறி தனிநாடு கேட்க காரணம் அவர்கள் மீது விதிக்கப்பட்ட வரியும் சுரண்டலும்தான்!

இங்கே நடப்பதும் கிட்டத்தட்ட அதேதான்!

வேறுபாடு என்னவென்றால் நாம் தாய்நாட்டால் சுரண்டப்படவில்லை!
வேற்றின ஹிந்தியரால் சுரண்டப்படுகிறோம்!

ஆங்கில அரசு அதன் குடியேற்ற மாநிலங்களைக் கொள்ளைதான் அடித்தது!

ஆனால் ஹிந்தியா அதன் மாநிலங்களை கொள்ளையடிப்பது மட்டுமன்றி முற்றாக அழித்துவிடவும் துடிக்கிறது!

இத்தனைக்கும் அதன் ராணுவம் வலிமையானதும் கிடையாது!
நம்மிடம் மோதி வெல்லவும் முடியாது!

தமிழர் ராணுவமான விடுதலைப் புலிகளிடம் மோதி ஹிந்தியா மண்ணைக் கவ்விய வரலாறு கண்முண்ணே நடந்துள்ளது!

நாம் ஏன் விடுதலைப் போரைத் தொடங்கக்கூடாது?!

Tuesday, 10 May 2016

கியூபாவின் பிரபாகரன்

கியூபாவின் பிரபாகரன்
ஜோஷ் மார்ட்டி

கியூப விடுதலைப் போராளி என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது 'பிடல் காஸ்ட்ரோ'  என்ற பெயர்தான்.

ஆனால், பிடல் காஸ்ட்ரோ என்ற 32 வயது இளைஞன் மூன்றே ஆண்டுகள் போர்நடத்தி வெற்றிபெற்று கியூபா விடுதலை அடைந்தது என்று நீங்கள் நினைத்தால் ,மன்னிக்கவும் அது உண்மையில்லை.

விரல்சொடுக்கில் விளைந்ததல்ல கியூபவிடுதலை.

1820 ல் இருந்து 1920 வரை ஸ்பெயின் வல்லாதிக்கத்தை எதிர்த்தும்,
1920 ல் இருந்து 1958 வரை அமெரிக்க வல்லாதிக்கத்தை எதிர்த்தும் நடந்த மிக நீண்ட விடுதலைப்போர்தான் கியூபாவுக்கு வெற்றியைத் தந்தது.

கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் அதில் பெரும்பாலும் ஆயுதப்போராட்டம்.

கியூபர்கள் தாங்கிய வலிகளுக்கு அளவே கிடையாது.
முதலில் செஸ்டபஸ் தலைமையில் ஆயுதக் கிளர்ச்சி பின் அது முற்றிலும் முறியடிக்கப்பட்டு 1880ல் செஸ்படஸ் கொல்லப்பட்டார்.

அதன்பிறகு பதினைந்தாண்டுகள் கழித்து 1895ல் ஜோஷ் மார்ட்டி தலைமையில் ஆயுதக் கிளர்ச்சி மாபெரும் அளவில் எழுந்தது.
1898ல் ஜோஷ் மார்ட்டி வீரமரணம் அடைந்த பிறகும் போர் தொடர்ந்து நடந்து கடைசியில் தோல்வியில் முடிந்தது.

அதன் பிறகு ஐம்பத்தி நான்கு ஆண்டுகள் கழித்து 1952ல் பிடல் காசுட்ரோ தலைமையில் ஆயுதப் போராட்டம் முளையிலேயே முறியடிக்கப்பட்டு அவர் தீவுச் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதன்பிறகு மீண்டும் 1958ல் பிடல் காசுட்ரோ மற்றும் சே குவேரா தலைமையில் மாபெரும் விடுதலைப்போர் மூன்றாண்டுகள் நடந்து அதன்பிறகுதான் கியூபா தனது மூச்சுக்குழலில் விடுதலைக் காற்றை உணரமுடிந்தது.

கியூபாவின் பிரபாகரன் ஐயத்திற்கிடமில்லாமல் 'ஜோஷ் மார்ட்டி' ஆவார்.

அன்று அவர் கியூபதேசியவாதியாக விதைத்த விதைதான் இன்று கியூப மக்களின் தலைநிமிர்ந்த வாழ்வு.

புரட்சி வெற்றிபெற்ற பிறகுதான் அங்கே பொதுவுடைமை நுழைகிறது.

கியூபாவுக்கு விடுதலை பெற்றுத் தந்தது அவர்களின் தேசிய உணர்வே ஆகும். கம்யூனிசம் இல்லை.

நாமும் தமிழ்த்தேசிய உணர்வோடு நமது தனித்தமிழ்க்குடியரசை நிறுவியபின் நமது வெற்றியை பங்குபோட கம்யூனிசம் வந்தாலும்  வரும்,
வந்து கைகுலுக்கிவிட்டு தமது மாணவர்களிடம் பிரபாகரன் என்று ஒரு கம்யூனிஸ்ட் இருந்தார்.
அவர்தான் இன்று வல்லரசாக விளங்கும் தமிழ்க்குடியரசின் விடுதலைப்போராளி என்று பாடமும் நடத்தும்.