தமிழ்தேசியப் பார்வையில் இப்போர்
இரு நாடுகளுக்கு இடையே போர் என்றால் ஒன்று எந்தப் பக்கம் என்று அறிவிக்க வேண்டும் அல்லது நடுநிலை என்று அறிவிக்க வேண்டும்.
இன்றைய ரஷ்ய உக்ரைன் போர்ச் சூழலில் யாருக்கு ஆதரவு என்று கேட்டால்...
தமிழர் படையெழுப்பி தாய்மண்ணை மீட்டு தனிநாடு ஆனதாக அறிவிப்பர். இதற்கு விடுதலை அறிவிப்பு என்று பெயர்.
தமிழர்நாடு விடுதலையை அறிவிப்பதற்கு முன் என்றால்....
தமிழர்நாட்டு விடுதலைக்கு எந்த பக்கம் ஆதரவாக உள்ளதோ அதற்கு ஆதரவு. அது எவ்வளவு மோசமான நாடாக இருந்தாலும் சரி.
தமிழர்நாடு விடுதலையை அறிவித்த பிறகு என்றால்....
எந்த பக்கம் தேசிய இனம் ஒடுக்கப்படுகிறதோ அதற்கு ஆதரவு.
நாம் இன்னும் விடுதலைப் போராட்டத்தைத் தொடங்கவில்லை.
எனவே நாம் தேசியவாதி என்கிற நிலையில் மட்டும் நின்று நடுநிலையாக இந்த பிரச்சனையை நோக்கினால் 2014 இல் ரஷ்ய மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் க்ரிமியா வை ரஷ்யா கைப்பற்றி இணைத்துக்கொண்டது சரி. ஆனால் தற்போது உக்ரேனின் எல்லையில் உள்ள சிறுசிறு ரஷ்ய பகுதிகள் தாண்டி உக்ரேனிய இனம் வாழும் உக்ரைன் நிலப்பரப்பை ஆக்கிரமித்தால் அது தவறு.
No comments:
Post a Comment