Monday, 21 February 2022

மொழி மொழி என்று சிந்தித்தது போதும்

மொழி மொழி என்று சிந்தித்தது போதும்

 தாய்மொழி நாளான இன்று மொழிப்பற்றினால் இனத்தையே பலியிட்ட தமிழினத்திற்கு ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
 இந்த தாய்மொழி நாள் வங்கதேசத்தவர்கள் தமது மொழிக்காக உயிர்நீத்த நாளாகும்.
 வெறும் ஏழு பேர் இறந்த இந்த தினத்தை உலகமே தாய்மொழி நாளாக கொண்டாடுகிறது என்றால் அவர்களுக்கு சில ஆண்டுகள் முன்பே மொழிக்காக நூற்றுக்கணக்கில் உயிர்நீத்த தமிழினம் ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று சிந்தியுங்கள்.
 ஏனென்றால் வங்காளிகளிடம் தனி நாடு இருக்கிறது. நம்மிடம் மொழிப்பற்று மட்டுமே இருக்கிறது.

 இனம் என்பது மனிதன் நாடோடியாக வாழ்ந்தபோதே தமக்குள் கூட்டு சேர்ந்து தற்காப்பு அடிப்படையில் உருவாக்கிக் கொண்ட குழுவை அடிப்படையாகக் கொண்டது.
 நாடோடி வாழ்க்கை முடிந்து நிலையாக மனிதன் வாழத் தொடங்கியதும் இயற்கையான எல்லைகளுக்கு மத்தியில் நிலையாக வாழும் மக்கள் பொதுவான மொழியை உருவாக்கிக்கொண்டனர்.
 இனம் என்பது மொழி என்பதை விட பழமையான கட்டமைப்பு!
அந்தக் கட்டமைப்பில் மொழி என்பது ஒரு மேம்படுத்தப்பட்ட அம்சம் மட்டுமே!

 இந்த உலகம் ஒரு போர்க்களம் என்றால் நாம் இனமாகத் திரண்டு போரிட்டால் மட்டுமே தப்பிப் பிழைக்க முடியும்.
 என்றால் நம் கையில் இருக்கவேண்டிய வாள் இனப்பற்று. மொழிப்பற்று என்பது கேடயம் போன்றதுதான்.
நாம் இரண்டு கைகளிலும் கேடயத்தை எடுத்துக் கொண்டு போவதால் மட்டுமே தொடர்ந்து தோல்வியை தழுவிக் கொண்டு இருக்கிறோம்.
தலை போனாலும் பரவாயில்லை எதிரிகளை வெல்வதுதான் முக்கியம் என்று இனி இரண்டு கைகளிலும் வாளுடன் போருக்குச் செல்வோம்.
 இந்த வீரமே நம் முன்னோர் நமக்குக் காட்டிய வழி!
நம் முன்னோர்கள் வீரத்துடன் இருந்ததால்தான் நம் இனம் அழியாமல் இன்றுவரை நிலைத்து நிற்கிறது!
 நாம் கோழைத்தனமாக இருப்பதினால் நமது இனம் அழிவை சந்தித்து வருகிறது!

பிறப்பு அடிப்படையிலான இனம் என்பதே (மனிதர் மத்தியில்) நமது முதலும் இறுதியுமான அடையாளம்!
சாதி மதம் போன்றவை மிகவும் பிற்காலத்தில் தோன்றிய கோமாளித்தனமான தேவையற்ற வடிவங்கள்!

 இன்று வந்தேறிகளின் ஊடுருவலுக்கு மத்தியில் நம்மை நாம் அடையாளம் கண்டுகொள்ள மட்டுமே சாதி அடையாளத்தை கையில் எடுக்கிறோம்! 
நமது தாய்நிலம் அமைந்த பிறகு நாம் சாதியை தூக்கி எறிந்துவிட்டு நமது இனத்தின் பெயரால் நம்மை அடையாளப்படுத்திக் கொள்வோம்!

 "தமிழ் வாழ்ந்தால் தமிழன் வாழ்வான்" என்கிற வந்தேறிகளின் மூளைச்சலவை இனி எடுபடாது போகட்டும்!
 இனம் வாழ்ந்தால் மட்டுமே அதன் மொழி வாழும்!

அப்படி மொழி அழிந்தாலும் பரவாயில்லை இனம் அழியக்கூடாது!

 மொழி என்பது ஊடகம் மட்டுமல்லாது உணர்ச்சி, அறிவு, கல்வி என பலவற்றிற்கும் அடிப்படையானது.
ஆனால் இனம் என்பது மக்களை, அவர்களின் இருப்பை, அவர்களின் உயிரை அடிப்படையாகக் கொண்டது.

 எனவே இன்றிலிருந்து நீங்கள் மொழிப்பற்றை ஒத்திவைத்துவிட்டு அழிந்து வரும் நமது இனத்தை பற்றி கடுகளவேனும் சிந்திக்கவாவது தொடங்குங்கள்!

 மொழி மொழி என்று தமிழை வைத்து தமிழரை அழிக்கும் வந்தேறிகளை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்!

  இனம் பற்றிய எனது சிந்தனை என்னவென்றால்,
 இனம் என்றால் மக்கள்!
 மக்கள் என்றால் உயிர்!
 உயிர் என்றால் உணவு, உறைவிடம்!
உணவு, உறைவிடம் என்றால் மண்!

ஆக மண்தான் இனத்தின் உயிர்!

 தாய் மண்ணை விட்டு வெளியேறுவது கேவலம்!
ஆனால் இன்று நாம் உலகம் முழுவதும் பரவி வாழ்வதாக பெருமைப்பட்டுக் கொள்கிறோம்.
 நாம் ஒன்றும் உலகம் முழுவதும் ஆளச் சென்றவர்கள் இல்லை!
 வணிகத்திற்காகவோ சுற்றுலாவிற்காகவோ வேலைவாய்ப்பிற்காகவோ சிறிது காலம் சென்றால் கூட பரவாயில்லை!
 ஆனால் தாய் மண்ணில் இருந்து வெளியேறி வேர் அறுந்து தானும் தொலைந்து தன் சந்ததியையும் தொலைப்பது பிறந்த இனத்திற்கு செய்யும் பெரிய துரோகம் ஆகும்!
  
 ஆகவே இனத்தைக் காக்க மண்பற்று கொள்ளுங்கள்!
 நம் தாய்மண்ணை மீட்டால் மட்டுமே இனம் தொடர்ந்து வாழ முடியும்!

 இந்திய ஏகாதிபத்தியத்தில் இருந்தும் வந்தேறிகளின் ஆதிக்கத்திலிருந்தும் சிங்களப் பேரினவாதத்தில் இருந்தும் தமிழர்கள் தம்மை விடுவித்துக் கொள்வது முதல் தேவையாகும்!
இந்த போராட்டத்தில் நம்மால் மொழியின் வளர்ச்சியை கவனிக்க முடியாது போனாலும் பரவாயில்லை!
நமது பழமையான சான்றுகள் அழிந்து போனாலும் பரவாயில்லை!

  நாம் நமது முன்னோர் காட்டிய வீரப்பாதையில் புலிகள் வழியில் நமது தமிழர் நாட்டை நமது கட்டுப்பாட்டில் கொண்டுவருவோம்!

  நமது கட்டுப்பாட்டில் தாய்மண்ணின் பெரும்பகுதியைக் கொண்டுவந்து உலகம் ஏற்காவிட்டாலும் தனிநாட்டை அறிவிப்போம்!
 இதனை செய்து விட்டால் நமது மொழி தானே வளரும்!
 நமது இனம் தானே வாழும்! 
நம் மக்கட்தொகையும் கட்டுப்பாட்டு நிலமும் பெருகும்!
நமது பழமையான சான்றுகளை எளிதாக நம்மால் வெளிக்கொணர முடியும்!
 அப்படி சான்றுகள் இல்லை என்றாலும் போலியாக உருவாக்கிக் கொள்ளவும் முடியும்!


 ஆனால் 'கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போக' ஆசைப்பட்ட கதையாக இந்திய ஏகாதிபத்தியத்தின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள மிச்ச சொச்ச மாநில உரிமைகளை கூட தக்கவைக்க முடியாத தமிழர்கள் 'உலகின் பழமையான இனம்' என்று தம்மை நிறுவி உலகையே ஆள துடிப்பது முட்டாள்தனம்!
 
 நாம் நமக்கான அரசை நிறுவிவிட்டால் நம்முடைய மொழியையும் வரலாறையும் சிறப்பாக பாதுகாப்பதுடன் உலகின் பார்வைக்கு கொண்டுசெல்லவும் முடியும்.

 தனிநாடு அமையாமல் ஒவ்வொரு தமிழனும் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் இழந்தாலும் தமிழின் பழமையையும் பெருமையையும் அருகில் இருக்கும் மாலைத்தீவுக்கு கூட கொண்டு சேர்க்க முடியாது!

இதுவே நாம் வல்லரசாகி விட்டால் நாம் வேண்டாம் என்று சொன்னாலும் உலகம் நம்மை பற்றி ஆராயும்.
நமது பழமையையும் பெருமையையும் உலகம் முழுவதும் இருக்கும் தன்னார்வ ஆராய்ச்சியாளர்கள் வெளிக் கொணர்வார்கள்.

 இஸ்ரேல் வரலாறு நமக்கு தெரிய காரணம் என்ன?
 அமெரிக்க வரலாறும் ரசிய வரலாறும் நமக்கு தெரிந்திருக்கிறதே அது எப்படி?
பழைய வல்லரசுகளான ஜெர்மானிய வரலாறும் என்றோ முடிந்து போன ரோம பேரரசின் வரலாறும் கூட நமக்கு தெரிந்திருக்கிறதே!
 காரணம் என்ன?
 நமது முன்னோர்கள் நிறுவிய பேரரசுகள் பற்றி உலகிற்கே தெரிந்திருக்கிறதே அதே காரணம்தான்.

 ஆக நாம் இந்த உலகில் நமக்கான மதிப்பையும் மரியாதையையும் பெறுவதற்கு ஒரே வழி நமக்கான நாட்டை நாம் நமது சொந்த பலத்தால் நிறுவி தன்னுரிமையுடன் அதனை ஆண்டு வல்லரசாக உருவாக்குவது மட்டுமே!

 மொழி அழிந்தாலும் மீட்டுக்கொள்ள முடியும்!
 நிலம் அழிந்தாலும் கடலில் இறங்கி நமது குமரிக்கண்ட சான்றுகளை வெளிக்கொணர முடியும்!

 நமது அரசு உலகம் முழுவதும் தூதரகங்களை பரப்பினால் உலகம் முழுவதும் கொடுக்கல் வாங்கல் செய்தால் நம்மை பற்றி இந்த உலகிற்கு தெரியும்.

 அதை விடுத்து மணிக்கணக்கில் தொண்டை கிழிய நமது பழம் பெருமையை பேசுவதாலும் கைவலிக்க நமது பழைய பெருமைகளை எழுதுவதாலும் எந்த மாற்றமும் வரப்போவதில்லை.
 தமிழர்கள் தலைக்கு நான்கு புத்தகங்கள் போட்டாலும் எந்தப் பயனும் இல்லை!

 நம் முன்னோர்களின் சாதனைகள் நமக்கு வழிகாட்டவே!
அதைக்காட்டி புகழ்பிச்சை வாங்க அல்ல!

 வரலாற்றில் அதாவது இறந்த காலத்தில் வாழ்வதைக் கைவிடுங்கள்!

 அப்படியே ஒருவேளை நம்மிடம் இருக்கும் அத்தனையையும் இழந்து நாம் தான் இந்த உலகின் பழமையான குடி என்று நாம் நிறுவி விட்டாலும் அதனால் நமக்கு கிடைக்கப்போவது என்ன?!
 அப்படி கிடைத்தாலும் இனம் அழிந்த பிறகு பயன்தருமா?

 இனத்தைப் பற்றி பேசாமல் மொழிப்பற்றை வந்தேறிகள் தொடர்ந்து வலியுறுத்த காரணம் அவர்களும் நமது மொழியை பேசி நம்மை ஏமாற்றுவதற்கு மட்டுமே!

 வந்தேறிகளின் சதிக்கு ஆளாக வேண்டாம்!

 தமிழ் தெரியாத தமிழ் இனத்தவரும் தமிழரே!
 எத்தனை தலைமுறைகள் இங்கே வாழ்ந்தாலும் வேற்று இனத்தவர் வேற்றாரே!
2009 இனப்படுகொலை நடந்தபோது நமக்காக துடித்தவர்கள் யார் என்று எண்ணிப்பாருங்கள் இந்த உண்மை புரியும்!

 இனத்தைக் காக்க தனிநாடு நிறுவும் முயற்சியில் இனமே அழிந்தாலும் பரவாயில்லை!
 அப்படி இருக்கும்போது மொழி எல்லாம் ஒரு பொருட்டே இல்லை!

No comments:

Post a Comment