Tuesday, 18 January 2022

பாரதி ஏன் சிங்களத் தீவு என்று சொன்னார்

பாரதி ஏன் சிங்களத் தீவு என்று சொன்னார்

ஈழத்துப் பூதனார் என்று சங்க காலத்திலேயே ஈழத்தைப் பெயரோடு சேர்த்துக்கொண்ட புலவர் இருந்திருக்கிறார்.
பட்டினப்பாலையில் காவிரிப் பூம்பட்டினத்தில் ஈழத்து உணவு என்று ஈழத்தின் பெயரோடு உணவு இருந்திருக்கிறது.
இராமாயணத்தில் இலங்கை இருக்கிறது.
அப்படியிருக்க ஈழத்தையும் இலங்கையையும் விட்டுவிட்டு, பாரதியார் சிங்களத் தீவினுக்குப் பாலம் அமைக்கச் சொன்னது ஏன்?
பாரதியின் அடுத்த வரியும் நினைவுக்கு வந்தது.
"சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்.
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்" .
ஒரே நாட்டுக்கு வீதியும் பாலமும் ஏன்?
தமிழுக்கு வீதி; சிங்களத்துக்குப் பாலமா?
உறவுக்கு வீதி; ஒற்றுமைக்குப் பாலமா?
வீதிக்கும் பாலத்துக்கும் பாரதியார் வேறுபாடு காட்டிப் பாடியிருப்பது புரிந்தது.

ம. இராசேந்திரன்
முன்னாள் துணைவேந்தர்,
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
-----------------------

தமிழர் பழமை மற்றும் சோழர் பேரரசு பற்றி அறிந்திருந்திருந்த பாரதியார் பூகோள அறிவும் வானியல் அறிவும் கொண்டிருந்தார் என்பது அவரது பாரத தேசம் கவிதை பாடலில் இருந்து அறிந்துகொள்ளலாம்.

ஈழம் தமிழகம் இடையே மண் போட்டு நிரப்பி நிலவழித் தொடர்பு ஏற்படுத்துவது பற்றி அவர் கூறியிருப்பது மிகமிக வியப்பாக இருக்கிறது.

அவர் சிங்களவர் நாட்டுக்குப் பாலம் என்று குறிப்பிடுவது குமரி முனையில் இருந்து கொழும்பு நோக்கி என ஊகிக்கலாம்.

இதே பாடலில் சந்திர மண்டலம் வரை சென்று பார்த்து கற்கவேண்டும் என்று கூறியிருப்பதும்  வியப்பாக இருக்கிறது. 1917 லேயே ரஷ்ய அரசியல் பற்றி தெரிந்துவைத்திருந்த பாரதியார் அப்போது அங்கே ஆரம்பகட்ட ஆய்வில் இருந்த ராக்கெட் விஞ்ஞானம் பற்றியும் அறிந்துவைத்துள்ளார்.

No comments:

Post a Comment