Wednesday 21 April 2021

அகதிகள் குடியுரிமை பெறும் வரையறை

 அகதிகள் குடியுரிமை பெறும் வரையறை 


 அகதிகளுக்கு தஞ்சம் கொடுப்பதில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு வரையறை வைத்திருக்கிறது அதேபோல அமையவிருக்கும் தமிழர்நாட்டின் அகதிகள் அந்தஸ்து பற்றிய வரையறை பற்றி பார்ப்போம் .

  அகதிகளில் பல விதம் உண்டு. அவை,

1) பணம் பொருளுடன் தொழில் செய்யவும் பணம் சம்பாதிக்கவும் இன்னொரு இனத்தின் தாய்நிலத்தில் குடியேறுபவர்களை ஆதிக்க அகதிகள் எனலாம். 

( மார்வாடிகள், மலையாளிகள், ஜைனர், விஜயநகர காலத்து தெலுங்கு கன்னட வந்தேறிகள்)


2) தன் தாய்நிலத்தில் பிழைக்க வழியில்லாமல் தன் இனத்தின் சுரண்டல்காரர்களால் பாதிக்கப்பட்டு வேறு ஒரு இனத்தின் தாய் நிலத்தில் குடியேறுபவர்களை கூலிக்கார அகதிகள் எனலாம்.

(தமிழக நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் உடலுழைப்பு வேலை பார்க்கும் வடயிந்தியர்)


3) தன் தாய்நிலத்தை விட கல்வியோ வேலைவாய்ப்போ சலுகைகளோ இன்னொரு இனத்திடம் இருந்தால் அந்த வளமான எதிர்காலத்தைப் பெற குடிபெயர்வோரை பிழைப்புவாத அகதிகள் எனலாம்.

( அரசாங்க வேலைவாய்ப்புகள் பெரிய நிறுவன ஊழியர் பதவிகள் கல்வி இருக்கைகள் ஆகியனவற்றைக் குறிவைத்து வருபவர்கள்)


4) தான் குடியேறாமல் தனது ஆதிக்கத்தை இன்னொரு தாய்நிலம் வரை பரப்பி தன்னுடைய ஆட்களை வைத்து சுரண்டலில் ஈடுபடுபவர்களை ஏகாதிபத்திய அகதிகள் எனலாம். 

(ஆங்கிலேயர் காலத்தில் நடந்தது மற்றும் பெருமுதலாளிகள் உலகம் முழுவதும் நிறுவனங்கள் நடத்தி தற்காலத்தில் சுரண்டுவது இந்த வரையறையில் வருகிறது)


 தன் தாய் நிலத்திலிருந்து வெளியேறி மீண்டும் (சிறிது காலத்திற்குப் பிறகு அல்லது சில தலைமுறைகளுக்குப் பிறகு) மீண்டும் வந்து குடியேறுபவர்கள் முழுமையான அகதி வரையறையில் வருவதில்லை. இவர்களை தாய்நிலம் மீண்டோர் எனலாம். இவர்களை குறிப்பிட்ட காலம் கண்காணித்து பிறகு முழுமையான குடியுரிமை வழங்கலாம்.


ஆனால் 'உண்மையான அகதிகள்' யார் என்று பார்த்தோமேயானால் தன் தாய் நிலத்தில் தன் இருப்பை முடிந்தவரை தக்கவைக்கப் போராடி பெரும் இழப்பை சந்தித்து வேறு வழியில்லாமல் உயிரையும் மானத்தையும் காப்பாற்றிக் கொள்ள எந்த பொருளும் இல்லாமல் இன்னொரு தாய் நிலத்தில் குடியேறுபவர்கள். இவர்களே குடியுரிமைக்குத் தகுதியான அகதிகள்.


 நமது தமிழ்நாட்டில் நம் தாய் நில வளங்களை பொறுத்து நமது மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் தமிழர்களுக்கே நிலம் போதவில்லை என்று கூறலாம். தனக்குப் போகத்தான் தானமும் தர்மமும் என்கிற அடிப்படையில் நாம் அகதிகளை வெளியேற்றுவது அவசியமாகிறது.


 தற்போது பெருமளவில் (கிட்டத்தட்ட ஒரு கோடிப் பேர்) வட இந்தியர் தமிழகத்திற்குள் பிழைக்க வந்துள்ளனர்.

'இவர்கள் பாவம்' என்றும் 'வயிற்றுப் பிழைப்பிற்காக வந்தவர்களை வெறுக்க வேண்டாம் ' என்றும் சிலர் கூறுகின்றனர்.


 உண்மை என்னவென்றால் தமிழக முதலாளிகள் அவர்களை பயன்படுத்திக் கொள்கின்றனர்.

 எந்த அடிப்படை வசதிகளும் செய்து தராமல் தமிழகத்தில் அவர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது. இது அவர்களுக்கு நன்மை என்று கருதமுடியாது . இந்த 'வடவர் குடியேற்ற ஆதரவு நிலைப்பாடு' அவர்களுக்குமே கூட தீமையையே தரும்.


 அதாவது தமிழகத்திற்குள் குடியேறும் வடயிந்தியர் போரினால் பாதிக்கப்பட்டவர்களோ அல்லது பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டவர்களோ இல்லை. தங்களது தாய்நிலத்தில் தங்கள் இன (அல்லது தங்கள் அருகாமை இனத்து) ஆதிக்க சுரண்டல்காரர்களால் பாதிக்கப்பட்டு அவர்களை எதிர்த்து போராடாமல் கோழைத்தனமாக இன்னொரு இனத்தின் தாய்நிலத்திற்கு ஓடிவந்தவர்கள். அண்டை இனங்கள் கதவை அடைத்தால்தான் இவர்கள் தன் சொந்த மண்ணில் இருந்து உரிமைகளை மீட்க எண்ணுவார்கள்.

 இவர்கள் தாம் குடியேறிய நிலத்தின் பூர்வீக இனத்தைச் சேர்ந்த தொழிலாளரின் வேலைவாய்ப்பை (அவர்களை விட குறைவாக சம்பளம் வாங்குவதன் மூலம்) பறித்து தானும் பலனடையாமல் அவர்களுக்கும் நட்டம் விளைவிக்கின்றனர்.

 இது சரியான வழிமுறை என்று நம்மால் கூற முடியாது. இது அவர்களை மேலும் சோம்பேறிகளாகவே ஆக்கும். தமிழகத்திலிருந்து பஞ்சத்தின் போது பல்வேறு நாடுகளுக்கு தோட்டத் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களின் நிலை இன்றுவரை முன்னேற்றம் அடையவில்லை என்பது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு


அதுமட்டுமில்லாமல் வேறு ஒரு இனத்தின் மத்தியில் குடியேறி இருக்கும் அகதிகள்  இங்கே எப்படி நடந்து கொண்டாலும் அது அவர்களுடைய  தாய்நிலத்தில் அவர்களுடைய சமுதாயத்திற்கு தெரியாது. எனவே அவர்களிடம் சமுதாயப் பொறுப்புணர்வு இருக்காது.

 எனவே அவர்கள் குற்றச்செயல்களிலும்  சண்டித்தனம் செய்வதிலும் ஈடுபடுவது  வழக்கமாகிவிட்டது.

அதே போல வேறொரு இனத்திற்குள் நுழைந்து குடியேறியிருக்கும்  ஒரு  வந்தேறி இனத்திடம் ஒருங்கிணைப்பும்  ஒற்றுமையும் (அவர்கள்  தாய்நிலத்தை ஒப்பிடும்போது)  அதிகமாகவே இருக்கும்.  தமிழகத்தில்  வந்தேறிகள் ஆதிக்கம் அவ்வாறுதான் உருவாயிற்று.  தாய்நில மக்களான தமிழர்கள் ஒற்றுமையின்றி இருக்க உள்ளே நுழைந்தவர்கள் (தமது பாதுகாப்பு உணர்ச்சியின் காரணமாக) ஒன்றிணைந்து செயல்பட்டு  அதன் மூலம் தமிழர்களை பிரித்தாண்டு ஏமாற்றி ஆதிக்க சக்தியாக நம்மிடையே அமர்ந்துள்ளனர். இதனாலேயே நாம் வேற்றினத்தார்  குடியேற்றத்தைக்  கவனமுடன் அணுகவேண்டியது  அவசியமாகிறது.

 இதுவே காஷ்மீரிகள் அல்லது வடகிழக்கு மக்கள் நம் மண்ணில் அகதிகளாக குடியேறினால் நாம் வரவேற்க வேண்டும் ஏனென்றால் அவர்கள் முடிந்த அளவுக்கு வல்லாதிக்கத்தை எதிர்த்துப் போராடியவர்கள்.

ஆனால் நாம் அகதி என்று அழைப்பது யாரை என்றால், நம் இனத்தின் நம் தாய்நிலத்தின் மைந்தனான ஈழத்தமிழரை. இது எந்தவகையிலும் ஏற்புடையது அல்ல. ஒரு இனத்தின் தாய் நிலத்தில் வாழும் அவ்வின மக்கள் தமது எல்லைக்குள் எந்த மூலைக்கு சென்று குடியேறினாலும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை. அதாவது தென்தமிழகத்தில் இருந்து  சென்னை கோவை போன்ற நகரங்களுக்கு வேலைவாய்ப்புக்காவும் பஞ்சம் பிழைக்கவும் தொழில் செய்யவும் குடியேறியுள்ள தமிழர்களை அப்பகுதியில் பூர்வீகமாக வாழும் தமிழர்கள் வெளியாராகப் பார்ப்பது இனத் துரோகமாகும்.

 தமிழகத்தில் இன்றைய தேதியில் உண்மையிலேயே தகுதியான அகதி யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தால் அப்படி யாருமே இல்லை என்றுதான் கூற வேண்டும்.

 நம் மண்ணில் குடியேறி இருக்கும் வேற்றினத்தார் அனைவருமே ஆதிக்க மனப்பான்மையுடன் பொன்பொருளுடன் (வேற்றின ஆட்சி) அரசு ஆதரவுடன் குடியேறியவர்கள் அல்லது குடியேறிக்கொண்டு இருப்பவர்கள்.

இவர்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்தாலும் இவர்களை தமிழக் குடிகளாக ஏற்க முடியாது.

இவர்களில் பலரும் 'எங்களுக்கு தாய் நிலத் தொடர்பு இல்லை', 'எங்களுக்கு எங்கள் உண்மையான தாய்மொழி மறந்து விட்டது' என்றெல்லாம் கூறுகிறார்கள். 'நானும் பச்சை தமிழன் தான்' என்றும் கூறுகிறார்கள்.

 ஆனால் தமிழக வரலாற்றை ஆதியிலிருந்து அந்தம் வரை புரட்டிப் பார்த்தோமேயானால் தமிழ் இனத்துக்கும் தமிழ் மொழிக்கும் தமிழக வந்தேறிகளின் பங்களிப்பு ஏறத்தாழ சுழியம் ஆகும்.  ஈவேரா கூட இத்தகைய பொய்களை கட்டவிழ்த்து விட்டுள்ளார். தான் கன்னடர் என்பதை ஒத்துக் கொண்டாலும் தனக்கு தன் தாய் மொழி தெரியாது என்றும் பதிவு செய்துள்ளார். தன் தாய் மொழி தமிழ் தான் என்றும் தமிழர் தன் இனத்தார் என்றும் கூறிவந்தார். ஈவேரா எப்படிப்பட்ட தமிழ் மொழி மற்றும் தமிழ் இன வெறுப்பாளர் என்பது தற்காலத்தில் ஐயமின்றி நிரூபிக்கப்பட்டுவிட்டது.

 சில தமிழக வந்தேறிகள் தற்போது தமது இன அடையாளத்துடன் தமிழ் தேசியம் பேசத் தொடங்கியுள்ளனர்.  இதுவும்கூட வரவேற்கத் தக்கது இல்லை. இதுவும் எப்போது நடந்தது என்றால் நம் வெற்றினத்தாரால் படுகொலை செய்யப்பட்டபோதோ விரட்டியடிக்கப்பட்ட போதோ நமது உரிமைகள் பறிக்கப்பட்டபோதோ நாம் நமது உரிமைகளுக்காக போராடியபோதோ நடந்தது அல்ல. நாம் என்று தமிழ்த்தேசியத்தை கையில் எடுத்தோமோ அன்றுதான் அவர்கள் அஞ்சவுணர்ச்சி காரணமாக தன் இன அடையாளம் தாண்டி தமிழ் தேசியத்தை ஆதரிக்கத் தொடங்கியுள்ளனர். இதை பங்களிப்பாக நாம் ஏற்றுக்கொள்ளமுடியாது.

 ஆனால் தமிழகத்தில் இருக்கும் பழைய மற்றும் புதிய வந்தேறிகள் அனைவரும் தங்களது தாய்நிலத்துடன் தொடர்பில் தான் இருக்கிறார்கள்.

 (இங்கே வந்து முற்றிலும் தாய்நிலத் தொடர்பு அறுந்து போனது ஆதிக்க அகதிகளான சௌராஷ்டிரர் மட்டுமே) மற்றபடி நாம் நமது மாநிலத்தில் இத்தகைய ஆடம்பர அகதிகளுக்கு குடியுரிமை கொடுப்பது அவசியமற்றது. அமெரிக்கா கனடா போன்ற நாடுகள் வெளியார் குடியேற்றத்திற்கு பெரிய எதிர்ப்பு கூறுவதில்லை. ஏனென்றால் அவர்கள் அந்த நிலத்தின் சொந்த மக்கள் கிடையாது. அதேபோல அவர்களின் நிலத்தை பார்த்தோமேயானால் மக்கட்தொகை மிகவும் குறைவு .

 தமிழகமோ அப்படி இல்லை!  (ஈழத்தை கூட மக்கள் செறிவு குறைந்த இடம் என்று கூறலாம்) தமிழகம் மக்கள்தொகையில் மக்கள் செறிவில் அடர்த்தியில் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. நாம் நமது நன்மைக்காக குடும்பக்கட்டுப்பாடு செய்து கொண்டு இரண்டு அல்லது ஒரு பிள்ளை பெற்றுக் கொண்டு நமது மக்கள்தொகையை குறைத்தோம். ஆனால் அது கணக்கு வழக்கே இல்லாமல் பிள்ளைகள் பெற்று நாட்டை நிறைத்துவரும் வட இந்தியர்களுக்கு அது வசதியாகப் போய்விட்டது. எனவே நமது தியாகத்தின் பலனை நமது அடுத்த தலைமுறைக்குக் கிடைக்கச் செய்வோம்.

 போதாக்குறைக்கு  தமிழக அரசு தமிழக மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கி வைத்திருக்கும் கல்வி தொழில்  போன்ற  விஷயங்களையும்  மத்திய அரசு ஒவ்வொன்றாக பொதுச் சொத்து ஆக்கி இந்தியர்கள் குடியேறி ஆதிக்கம் செய்ய  வழி வகுத்துக் கொடுக்கிறது அதற்கு  அடிமை  திராவிட அரசுகள் உதவி செய்கின்றனர். 

 நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் நமது இனம் நமது தாய் நிலத்தை ராணுவ வேலி போட்டு ஆட்சியில் அமரும் வரை பொதுமக்களான நாம் தன்னெழுச்சியாக பிற இனத்தவரை ஆதரிக்காமல் புறக்கணிப்போம் (பிற இனங்கள் நமக்குச் செய்வதுபோல).

 நம் மண்ணில் நமது ராணுவ ஆட்சியும் அரச கட்டமைப்பும் வலுப்பெற்ற பிறகு நாம் மேற்கண்ட மக்களை வேலைவாய்ப்புக்காக குறிப்பிட்ட அளவில் தற்காலிக குடியேற்றம் கொடுத்து அனுமதிக்கலாம் (அதாவது அரபு நாடுகளைப் போல, யாரும் சுற்றுலா கடவுச்சீட்டு அல்லது பணிநிமித்த கடவுச்சீட்டு எடுத்து குடிவரலாம், வேலை செய்யலாம், சம்பாதிக்கலாம், எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் குடியிருக்கலாம், ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அல்லது கடைசி காலத்தில் தங்களது தாய் நிலத்திற்கு திரும்பிவிடவேண்டும். வேலைவாய்ப்பிலும் தொழில் தொடங்கவும் நமது இனத்தாருக்கு முன்னுரிமை வழங்கப்படும் அதுபோக அவசியப்படும் பட்சத்தில் வெளியிலிருந்து தொழிலாளர்களையும் நிபுணர்களையும் நாம் குறிப்பிட்ட காலத்திற்கு இறக்குமதி செய்துகொள்ளலாம். அவர்களுக்கு எல்லா அடிப்படை உரிமைகளும் மனித உரிமைகளும் வழங்கப்படும்) அதேபோல தன்னுடைய நிலத்தில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி அதில் வெற்றி கிடைக்காத பட்சத்தில் வேறு வழியில்லாமல் தஞ்சம் புகுவோரை நாம் அரவணைப்போம். அவர்களை எப்போதும் தாய்நிலம் திரும்பக் கட்டாய்ப்படுத்தவும் கூடாது. ஆனால் ஆதிக்க எண்ணத்துடனும், அரசியல் ஆசையுடனும், வளமான வாழ்விற்காகவும்,  தன் தாய்நிலத்தில் அடக்குமுறையை எதிர்த்துப் போராடாமல் கோழைத்தனமாகவும் ஓடி வந்தவர்களையும் நாம் ஆதரிக்கக்கூடாது.

 எனவேதான் தற்போது தமிழகத்தில் தமிழ்ச் சாதிகளை தவிர வேற்றினத்துச் சாதியினரை வெளியேறச் சொல்கிறோம்.

 இதுவே நமது வரையறையாக இருக்க வேண்டும். அகதிகளை அளவுக்கதிகமான நேசித்ததால்தான் நாம் இன்று அவர்களிடம் ஆட்சியையும் அதிகாரத்தையும் செல்வத்தையும் இழந்து தாய்நிலத்தை விட்டு கூட்டங்கூட்டமாக படித்த அகதிகளாக வெளியேறிக்கொண்டு இருக்கிறோம்.

இதற்கு இன்றே முற்றுபுள்ளி வைப்போம்.


ஒழியட்டும் வேற்றின மோகம்!

செழிக்கட்டும் தமிழின தேசம்!

No comments:

Post a Comment