தமிழ்ப் புத்தாண்டு குழப்பத்திற்குத் தீர்வு
தமிழர்களிடம் புத்தாண்டு கொண்டாடும் வழக்கம் இல்லை.
இருந்தாலும் புத்தாண்டு என்பது இருந்திருக்க வேண்டும்.
இந்திய துணைக்கண்டம் முழுவதும் பரவி வாழ்ந்த இனமல்லவா?
அதனால் பல நாட்காட்டிகள் நடைமுறையில் இருந்தன.
கதிரவனின் இயக்கத்தைப் பின்பற்றி ஒரு நாட்காட்டி
நிலவின் இயக்கத்தைப் பின்பற்றி ஒரு நாட்காட்டி.
விண்மீன்களைப் பின்பற்றி ஒரு நாட்காட்டி.
தற்போது தமிழ் மாதங்களும் பஞ்சாங்க ஆண்டுகளும் 15ம் நூற்றாண்டுக்குப் பிறகு அதாவது தெலுங்கர் ஆட்சியில் சமஸ்கிருதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
ஹேவிளம்பி என்பது தமிழில் பொற்றடை என்று வழங்கப்பட்டது.
இதற்கு சான்று 'விவேக சிந்தாமணி' என்ற நூல் 1400 களில் எழுதப்பட்டது,
அதில் 60 ஆண்டுகளும் (தமிழில்) வருமாறு ஒரு பாட்டு உள்ளது.
ஆக நாரதர் - கிருஷ்ணர் ஆபாசக்கதையை (அதை எழுதியதும் வந்தேறிகளே) திராவிடம் மூலம் பரப்பி அதை ஆரியப் புத்தாண்டு ஆக்கி
தமிழர்கள் தற்போதும் பின்பற்றும் (சமஸ்கிருத மயமாக்கப்பட்ட) தமிழ் (கதிரவன்) நாட்காட்டியை நாமே எதிர்க்குமாறு செய்து நம்மை முட்டாளாக்கி வருகின்றனர்.
நாம் எந்த நாட்காட்டியைப் பின்பற்றவேண்டும்?
எது நமது புத்தாண்டு?
இதையெல்லாம் தமிழர்நாடு அமைந்ததும் வானியல், மெய்யியல், இலக்கியம், வரலாறு என பலதுறைகளைச் சேர்ந்த வல்லுநர் குழுவை அமைத்து முடிவு செய்யவேண்டும்.
அதுவரை குழம்பாமல் அடித்துக்கொள்ளாமல் கதிரவன் புத்தாண்டையே பின்பற்றுங்கள்.
தற்போதைய பஞ்சாங்க ஆண்டுகளின் உண்மையான (தமிழ்ப்)பெயர்களை அண்ணன் மேகநாதன் அவர்கள் பதிவிட்டுள்ளார்.
அது பின்வருமாறு,
01. பிரபவ -நற்றோன்றல்
02. விபவ - உயர்தோன்றல்
03. சுக்ல - வெள்ளொளி
04. பிரமோதூத - பேருவகை
05. பிரசோற்பத்தி - மக்கட்செல்வம்
06. ஆங்கீரச - அயல்முனி
07. ஸ்ரீமுக - திருமுகம்
08. பவ - தோற்றம்
09. யுவ - இளமை
10. தாது - மாழை
11. ஈஸ்வர - ஈச்சுரம்
12. வெகுதானிய - கூலவளம்
13. பிரமாதி - முன்மை
14. விக்கிரம - நேர்நிரல்
15. விஷு - விளைபயன்
16. சித்திரபானு - ஓவியக்கதிர்
17. சுபானு - நற்கதிர்
18. தாரண - தாங்கெழில்
19. பார்த்திப - நிலவரையன்
20. விய - விரிமாண்பு
21. சர்வசித்து - முற்றறிவு முழுவெற்றி
22. சர்வதாரி - முழுநிறைவு
23. விரோதி - தீர்பகை
24. விக்ருதி - வளமாற்றம்
25. கர - செய்நேர்த்தி
26. நந்தன - நற்குழவி
27. விஜய - உயர்வாகை
28. ஜய - வாகை
29. மன்மத - காதன்மை
30. துன்முகி - வெம்முகம்
31. ஹேவிளம்பி - பொற்றடை
32. விளம்பி - அட்டி
33. விகாரி - எழில்மாறல்
34. சார்வரி - வீறியெழல்
35. பிலவ - கீழறை
36. சுபகிருது - நற்செய்கை
37. சோபகிருது - மங்கலம்
38. குரோதி - பகைக்கேடு
39. விசுவாசுவ - உலகநிறைவு
40. பரபாவ - அருட்டோற்றம்
41. பிலவங்க - நச்சுப்புழை
42. கீலக - பிணைவிரகு
43. சௌமிய - அழகு
44. சாதாரண - பொதுநிலை
45. விரோதகிருது - இகல்வீறு
46. பரிதாபி கழிவிரக்கம்
47. பிரமாதீச - நற்றலைமை
48. ஆனந்த - பெருமகிழ்ச்சி
49. ராட்சச - பெருமறம்
50. நள - தாமரை
51. பிங்கள - பொன்மை
52. காளயுக்தி - கருமைவீச்சு
53. சித்தார்த்தி - முன்னியமுடிதல்
54. ரௌத்திரி - அழலி
55. துன்மதி - கொடுமதி
56. துந்துபி - பேரிகை
57. ருத்ரோத்காரி - ஒடுங்கி
58. ரக்தாட்சி - செம்மை
59. குரோதன - எதிரேற்றம்
60. அட்சய - வளங்கலன்
(நன்றி: மேகநாதன்)
மாதங்களின் பெயர்கள் பின்வருமாறு,
சித்திரை - மேழம்
வைகாசி - விடை
ஆனி - ஆடவை
ஆடி - கடகம்
ஆவணி - மடங்கல்
புரட்டாசி - கன்னி
ஐப்பசி - துலை
கார்த்திகை - நளி
மார்கழி - சிலை
தை - சுறவம்
மாசி - கும்பம்
பங்குனி - மீனம்
Showing posts with label தமிழ்ப் புத்தாண்டு. Show all posts
Showing posts with label தமிழ்ப் புத்தாண்டு. Show all posts
Friday, 14 April 2017
தமிழ்ப் புத்தாண்டு குழப்பத்திற்குத் தீர்வு
Subscribe to:
Posts (Atom)