Saturday, 25 December 2021

இயேசு மற்றும் கிறிஸ்தவம் பற்றி ஒரு மீள்பார்வை

இயேசு மற்றும் கிறிஸ்தவம் பற்றி ஒரு மீள்பார்வை 

1 ) இயேசு ஒரு கன்னிக்குப் பிறந்தார்.

 தவறு, ஹீப்ரு மொழியில் இளம்பெண் (almah) என்கிற சொல் கிரேக்க மொழியில் கன்னிப்பெண் என தவறாக மொழிபெயர்க்கப் பட்டது. இதிலிருந்தே அனைத்து மொழிகளிலும் இப்பிழையான கருத்து மொழிபெயர்க்கப் பட்டது. இயேசு அதிசயப் பிறவி என்று காட்ட பிற்கால கிறித்துவ அறிஞர்கள் தேவதூதன் கனவில் தோன்றி 'கன்னி கர்ப்பம் தரிப்பாள்' என்று கூறியதாக எழுதினர்.
 
2) ஏசு ஆடு மேய்த்தார்.

 தவறு, ஏசு ஒரு தச்சு ஆசாரி குலத்தில் பிறந்தவர். (யூதர்களின்) வழிகாட்டி என்கிற பொருளில் (மனிதர்களை) மேய்ப்பவர் என்று கூறப்பட்டது பிறகு தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டது

3) இயேசுதான் கடவுள்.

 தவறு, அவர் கடவுளின் மகன் அல்லது தூதன் என்று அழைக்கப்பட்டார். கிறிஸ்து (கர்த்தர்) என்பது கடவுளைக் குறிக்கும் சொல். இயேசு வேறு கிறிஸ்து வேறு. இரண்டும் ஒன்றல்ல. இறக்கும் தருவாயில் ஏசு இறைவனை நோக்கி கேள்வியும் கேட்கிறார்.

4) இயேசு மனிதர் அனைவருக்கும் பொதுவானவர்.

தவறு, ஏசு யூதர்களை நல்வழிப்படுத்தவே விரும்பினார். தான் யூதர்களுக்கு மட்டுமானவன் என்று கூறியுள்ளார். அவர் யூதர் தவிர்த்த பிறரிடம் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று சீடர்களுக்கு கட்டளையும் இட்டிருந்தார். பிற்காலத்தில் பால் என்பவரே அந்த கட்டளையை மீறி இயேசு அனைவருக்குமான கடவுள் என்று பிரச்சாரம் செய்யத் தொடங்கினார்.

5) இயேசு உயிர்த்தெழுந்தார்.

தவறு, பிற்கால நூல்கள் அவ்வாறு எழுதியுள்ளன. அவை நற்செய்தி நூல்கள் என்று அறியப்படுகின்றன. இவை உயிர்த்தெழுந்த நிகழ்வு பற்றி ஒன்றுக்கொன்று முரண்பாடாக கூறுகின்றன. இதை மக்களும் நம்பவில்லை. இன்றும் கூட 'ஏசு திரும்ப வருவார்' என்றுதான் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

6) சிலுவை இயேசுவின் சின்னம்.

தவறு, ஏசு இறந்து பல நூற்றாண்டுக்குப் பிறகே அது கிறித்துவ சின்னம் ஆனது. மற்றபடி அது கொடுமைப்படுத்திக் கொலைசெய்யும் கருவியாகவே அறியப்பட்டது. அதற்கு முன் கிறிஸ்துவத்தின் சின்னம் மீன் ஆகும்.

7) ஏசு பிறந்தபொழுது நட்சத்திரம் தோன்றி வானியல் அறிஞர்களை (சாஸ்திரிகள்) அழைத்து வந்தது.

 இயேசுவின் பிறப்பு நிகழ்வுகள் பிற்காலத்தில் எழுதப்பட்ட நாடக வடிவிலான நூல்களில் (மத்தேயு மற்றும் லூக்கா) மட்டுமே உள்ளது. இயேசு அதிசயப் பிறவி என்று நிறுவும் நோக்கில் எழுதப்பட்ட கதையே அது. 

8 ) ஏசு கிறித்துவ மதத்தை நிறுவினார்.

தவறு, ஏசு எந்த மதத்தையும் நிறுவவில்லை. அவர் யூதராகப் பிறந்து யூதராகவே இறந்தார்.

9) கிறிஸ்துமஸ் ஏசு பிறந்த தினம்
தவறு, ஏற்கனவே கொண்டாடப்பட்டு வந்த யூல் எனும் விழாதான் கிறிஸ்துமஸ் என்றானது. இயேசு பிறந்த மாதம் தெளிவாக தெரியவில்லை. அதை சந்தேகத்துடன் x-mas என்றும் குறிப்பிடுவர்.

10) கிறிஸ்துமஸ் தாத்தா கிறிஸ்தவம் சார்ந்த ஒரு கதாபாத்திரம்.

தவறு, கிறிஸ்துமஸ் தாத்தா போன்ற கற்பனை கதாபாத்திரம் வணிக நோக்கில் வெறும் இரண்டு நூற்றாண்டுகள் முன்பு தோன்றியது. கிறிஸ்துமஸ் தாத்தாவை உலகம் முழுவதிலும் சிவப்பு மற்றும் வெள்ளை உடையில் விளம்பரம் செய்தது கொக்ககோலா நிறுவனம் ஆகும். 

11) இயேசு வெள்ளைத் தோல், பொன்னிற முடி, பூனைக் கண்கள் கொண்ட ஐரோப்பியர் போலிருந்தார்.

தவறு, இயேசு அங்கு வாழ்ந்த மக்கள் போலவே இருந்தார். அதனால் அவரை அடையாளம் காட்ட யூதாஸ் முத்தமிட்டான்.

12) சாத்தான் என்று ஒரு கெட்ட கடவுள் இருக்கிறான்.

 தவறு, பழைய ஏற்பாட்டில் சாத்தான் என்று யாருமில்லை. ஆதாம் ஏவாள் கதையில் பாம்பு கூறியதாக உள்ளது. புதிய ஏற்பாட்டில் எதிரி என்கிற பொருளில் சாத்தான் என்கிற சொல் பல இடங்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது. அவ்வாறு கடவுளுக்குப் பணியாத தேவதூதன் ஒருவனும் குறிக்கப்பட்டுள்ளதால் அவனே சாத்தான் என்றும் மக்களை தீயவழிக்கு ஊக்கப்படுத்துபவன் என்றும் நரகத்தின் தலைவன் எனுமாறும் புனைவுகள் பிற்காலத்தில் உருவானது. 

13) கிறிஸ்துவம் அறிவியலில் நாட்டம் கொண்ட மதம்

தவறு, ஐரோப்பாவின் இருண்ட காலம் கிறிஸ்துவ மதம் ஆதிக்கம் செலுத்திவந்த காலமே ஆகும். மற்ற எந்த மதத்தையும் விட அதிகமான கட்டுப்பாடுகள் கிறிஸ்துவ மதத்தில் கடைபிடிக்கப்பட்டன. மன்னரை விட ஆதிக்கம் பெற்று விளங்கிய மதகுருக்கள் பலவாறு மக்களைக் கொடுமைப்படுத்தினர். பெண்கள் உள்ளாடையை இரும்பில் செய்து பூட்டு போட்டுவிட்டனர். பாலுறுப்பு வடிவில் இருந்த பூக்களைக் கொண்ட  செடிகளைக் கூட கண்டதும் அழிக்க உத்தரவிட்டனர். மனைவியுடன் இவ்வாறுதான் உடலுறவு கொள்ளவேண்டும் என்றெல்லாம் கூட கட்டுப்பாடுகள் விதித்தனர் 

14) கிறிஸ்துவம் அமைதியையும் மன்னிப்பதையும் வலியுறுத்துவது
சரிதான், ஆனால் நடைமுறையில் தன் மதத்து மக்களை கடவுளின் பெயரால் அதிகம் காவு வாங்கியது கிறித்தவ மதமே! பல்வேறு நாடுகளில் இருந்து மதத்தின் பெயரால் மக்களை ஒன்றுதிரட்டி கிறித்துவ மதகுருக்கள் நடத்திய சிலுவைப் போர்கள்தான் முழுமையான மதப் போர் எனலாம்.

பெரும்பாலான தகவல்களுக்கு நன்றி: இரா.இருதயராஜ்

No comments:

Post a Comment