Saturday, 25 December 2021

பாவாணர் திருத்தம் செய்த தமிழ்த்தாய் வாழ்த்து

பாவாணர் திருத்தம் செய்த தமிழ்த்தாய் வாழ்த்து

 நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் முகமெனவே திகழ் நாவற் கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலும் தாங்குநறும் பொட்டணியும்
தெக்கணமும் அதிற்சிறந்த தென்மொழிநற் றிருநாடும்
அத்தகும் பொட் டருமணம்போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமுந் துளுவும்
உன்வயிற்றிற் பிறந்தெழுந்தே ஒன்றுபல வாயிடினும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!

நூல்: தமிழ்வளம்
ஆசிரியர்: தேவநேயப் பாவாணர்

தகவலுக்கு நன்றி: ஐ வலையொளி 

இயேசு மற்றும் கிறிஸ்தவம் பற்றி ஒரு மீள்பார்வை

இயேசு மற்றும் கிறிஸ்தவம் பற்றி ஒரு மீள்பார்வை 

1 ) இயேசு ஒரு கன்னிக்குப் பிறந்தார்.

 தவறு, ஹீப்ரு மொழியில் இளம்பெண் (almah) என்கிற சொல் கிரேக்க மொழியில் கன்னிப்பெண் என தவறாக மொழிபெயர்க்கப் பட்டது. இதிலிருந்தே அனைத்து மொழிகளிலும் இப்பிழையான கருத்து மொழிபெயர்க்கப் பட்டது. இயேசு அதிசயப் பிறவி என்று காட்ட பிற்கால கிறித்துவ அறிஞர்கள் தேவதூதன் கனவில் தோன்றி 'கன்னி கர்ப்பம் தரிப்பாள்' என்று கூறியதாக எழுதினர்.
 
2) ஏசு ஆடு மேய்த்தார்.

 தவறு, ஏசு ஒரு தச்சு ஆசாரி குலத்தில் பிறந்தவர். (யூதர்களின்) வழிகாட்டி என்கிற பொருளில் (மனிதர்களை) மேய்ப்பவர் என்று கூறப்பட்டது பிறகு தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டது

3) இயேசுதான் கடவுள்.

 தவறு, அவர் கடவுளின் மகன் அல்லது தூதன் என்று அழைக்கப்பட்டார். கிறிஸ்து (கர்த்தர்) என்பது கடவுளைக் குறிக்கும் சொல். இயேசு வேறு கிறிஸ்து வேறு. இரண்டும் ஒன்றல்ல. இறக்கும் தருவாயில் ஏசு இறைவனை நோக்கி கேள்வியும் கேட்கிறார்.

4) இயேசு மனிதர் அனைவருக்கும் பொதுவானவர்.

தவறு, ஏசு யூதர்களை நல்வழிப்படுத்தவே விரும்பினார். தான் யூதர்களுக்கு மட்டுமானவன் என்று கூறியுள்ளார். அவர் யூதர் தவிர்த்த பிறரிடம் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று சீடர்களுக்கு கட்டளையும் இட்டிருந்தார். பிற்காலத்தில் பால் என்பவரே அந்த கட்டளையை மீறி இயேசு அனைவருக்குமான கடவுள் என்று பிரச்சாரம் செய்யத் தொடங்கினார்.

5) இயேசு உயிர்த்தெழுந்தார்.

தவறு, பிற்கால நூல்கள் அவ்வாறு எழுதியுள்ளன. அவை நற்செய்தி நூல்கள் என்று அறியப்படுகின்றன. இவை உயிர்த்தெழுந்த நிகழ்வு பற்றி ஒன்றுக்கொன்று முரண்பாடாக கூறுகின்றன. இதை மக்களும் நம்பவில்லை. இன்றும் கூட 'ஏசு திரும்ப வருவார்' என்றுதான் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

6) சிலுவை இயேசுவின் சின்னம்.

தவறு, ஏசு இறந்து பல நூற்றாண்டுக்குப் பிறகே அது கிறித்துவ சின்னம் ஆனது. மற்றபடி அது கொடுமைப்படுத்திக் கொலைசெய்யும் கருவியாகவே அறியப்பட்டது. அதற்கு முன் கிறிஸ்துவத்தின் சின்னம் மீன் ஆகும்.

7) ஏசு பிறந்தபொழுது நட்சத்திரம் தோன்றி வானியல் அறிஞர்களை (சாஸ்திரிகள்) அழைத்து வந்தது.

 இயேசுவின் பிறப்பு நிகழ்வுகள் பிற்காலத்தில் எழுதப்பட்ட நாடக வடிவிலான நூல்களில் (மத்தேயு மற்றும் லூக்கா) மட்டுமே உள்ளது. இயேசு அதிசயப் பிறவி என்று நிறுவும் நோக்கில் எழுதப்பட்ட கதையே அது. 

8 ) ஏசு கிறித்துவ மதத்தை நிறுவினார்.

தவறு, ஏசு எந்த மதத்தையும் நிறுவவில்லை. அவர் யூதராகப் பிறந்து யூதராகவே இறந்தார்.

9) கிறிஸ்துமஸ் ஏசு பிறந்த தினம்
தவறு, ஏற்கனவே கொண்டாடப்பட்டு வந்த யூல் எனும் விழாதான் கிறிஸ்துமஸ் என்றானது. இயேசு பிறந்த மாதம் தெளிவாக தெரியவில்லை. அதை சந்தேகத்துடன் x-mas என்றும் குறிப்பிடுவர்.

10) கிறிஸ்துமஸ் தாத்தா கிறிஸ்தவம் சார்ந்த ஒரு கதாபாத்திரம்.

தவறு, கிறிஸ்துமஸ் தாத்தா போன்ற கற்பனை கதாபாத்திரம் வணிக நோக்கில் வெறும் இரண்டு நூற்றாண்டுகள் முன்பு தோன்றியது. கிறிஸ்துமஸ் தாத்தாவை உலகம் முழுவதிலும் சிவப்பு மற்றும் வெள்ளை உடையில் விளம்பரம் செய்தது கொக்ககோலா நிறுவனம் ஆகும். 

11) இயேசு வெள்ளைத் தோல், பொன்னிற முடி, பூனைக் கண்கள் கொண்ட ஐரோப்பியர் போலிருந்தார்.

தவறு, இயேசு அங்கு வாழ்ந்த மக்கள் போலவே இருந்தார். அதனால் அவரை அடையாளம் காட்ட யூதாஸ் முத்தமிட்டான்.

12) சாத்தான் என்று ஒரு கெட்ட கடவுள் இருக்கிறான்.

 தவறு, பழைய ஏற்பாட்டில் சாத்தான் என்று யாருமில்லை. ஆதாம் ஏவாள் கதையில் பாம்பு கூறியதாக உள்ளது. புதிய ஏற்பாட்டில் எதிரி என்கிற பொருளில் சாத்தான் என்கிற சொல் பல இடங்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது. அவ்வாறு கடவுளுக்குப் பணியாத தேவதூதன் ஒருவனும் குறிக்கப்பட்டுள்ளதால் அவனே சாத்தான் என்றும் மக்களை தீயவழிக்கு ஊக்கப்படுத்துபவன் என்றும் நரகத்தின் தலைவன் எனுமாறும் புனைவுகள் பிற்காலத்தில் உருவானது. 

13) கிறிஸ்துவம் அறிவியலில் நாட்டம் கொண்ட மதம்

தவறு, ஐரோப்பாவின் இருண்ட காலம் கிறிஸ்துவ மதம் ஆதிக்கம் செலுத்திவந்த காலமே ஆகும். மற்ற எந்த மதத்தையும் விட அதிகமான கட்டுப்பாடுகள் கிறிஸ்துவ மதத்தில் கடைபிடிக்கப்பட்டன. மன்னரை விட ஆதிக்கம் பெற்று விளங்கிய மதகுருக்கள் பலவாறு மக்களைக் கொடுமைப்படுத்தினர். பெண்கள் உள்ளாடையை இரும்பில் செய்து பூட்டு போட்டுவிட்டனர். பாலுறுப்பு வடிவில் இருந்த பூக்களைக் கொண்ட  செடிகளைக் கூட கண்டதும் அழிக்க உத்தரவிட்டனர். மனைவியுடன் இவ்வாறுதான் உடலுறவு கொள்ளவேண்டும் என்றெல்லாம் கூட கட்டுப்பாடுகள் விதித்தனர் 

14) கிறிஸ்துவம் அமைதியையும் மன்னிப்பதையும் வலியுறுத்துவது
சரிதான், ஆனால் நடைமுறையில் தன் மதத்து மக்களை கடவுளின் பெயரால் அதிகம் காவு வாங்கியது கிறித்தவ மதமே! பல்வேறு நாடுகளில் இருந்து மதத்தின் பெயரால் மக்களை ஒன்றுதிரட்டி கிறித்துவ மதகுருக்கள் நடத்திய சிலுவைப் போர்கள்தான் முழுமையான மதப் போர் எனலாம்.

பெரும்பாலான தகவல்களுக்கு நன்றி: இரா.இருதயராஜ்

Wednesday, 8 December 2021

ஒரு ஊரில் ஒரு தலைவர் இருந்தாராம்

ஒரு ஊரில் ஒரு தலைவர் இருந்தாராம் 

காலம் கி.பி. 2135

 தலைவர்கள் பெரும்பாலும் எப்படி இருப்பார்கள்?
 இளைஞர்களாக, மக்களுக்காக தியாகம் செய்பவர்களாக, குடும்பத்தை இழந்தவர்களாக, உயிரை பணயம் வைப்பவராக, மனிதநேயத்துடன்,  நேர்மையாக, அதிகம் புகழ் பெறாதவர்களாக, தலைமறைவாக இருப்பவராக, அநீதிக்கு எதிராக குரல்கொடுப்பவராக, சிறை சென்றவராக, எளிமையானவராக இருப்பார்கள் அல்லவா?!

 ஆனால் தமிழர்நாட்டுத் தலைவர் மட்டும் அப்படி இல்லை.
 அவர் பணக்காரனாக, கொள்ளைக்காரனாக,  கொலைகாரனாக, கடத்தல்காரனாக, இனத்திற்காக எந்த தியாகத்தையும் செய்யாதவராக, மக்களை நேசிக்காதவராக, நேர்மையற்றவராக இருந்தார்.

 அப்படியிருந்தும் அவர் எப்படி இனத் தலைவராக உருவெடுத்தார்?

 இதற்கு அன்றைய தாய் நிலத்தின் நிலைமையை புரிந்து கொள்வது அவசியம். தமிழ் இனம் முழுக்க ஒடுக்கப்பட்டு இந்திய ஏகாதிபத்திய அரசாங்கமும் அதன் கண்காணி மாநில அரசாங்கமும் இலங்கைப் பேரினவாத அரசாங்கமும் தமிழர்களைச் சுரண்டி அதன் தலைவர்களை அழித்து வந்தேறிகளை தாய்நிலம் முழுவதும் நிரப்பி அவர்களை அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் பெறச் செய்து தொடர் பிரச்சாரங்களால் இன உணர்வு மழுங்கடிக்கப்பட்டு இனத்தின் நல்லவர்கள் ஒழிக்கப்பட்டு தீயவர்கள் தலையெடுத்து இருந்த காலம்.

 தலைவர் தனது நாற்பது வயது வரை ஒரு கடத்தல்காரனாகவும் கொலைகாரனாகவும் இருந்தார்.  ஓரளவு செல்வம் சேர்த்திருந்தார். இதில் ஆச்சரியம் இல்லை. ஏகாதிப்பதிய சுரண்டல் அரசு இத்தகையவர்களையே ஊக்குவித்து கொண்டிருந்தது. பொது மக்களும் அல்லது பொதுமக்களை நேசிப்பவர்களும் ஒடுக்கப்பட்டு குரல்வளைகள் நசுக்கப்பட்டு இருந்தனர்.

 தலைவரிடம் பிற தலைவர்களைப் போல பொதுவான ஒரே ஒரு குணம் இருந்தது. அது படிக்கும் பழக்கம் மட்டுமே. அதன்மூலம் தடைசெய்யப்பட்ட ஒரு புத்தகத்தை எழுதிய முன்னாள் தமிழ் தேசியவாதி பற்றி அவருக்கு தெரியவந்தது. அவர் எழுத்துக்களைத் தேடிப் படிக்க ஆரம்பித்தவர் அவர் எழுதிய ஒரு சிறுகதையை படிக்க நேர்ந்தபோது அதில் 'இனத்தின் தலைவன் இனத்திற்காக ஒருவேளை உணவைக் கூடத் தியாகம் செய்யாதவனாகவும் இருக்கலாம்' என்று கூறப்பட்டிருந்தது. இது அவரை மிகவும் பாதித்தது. தன்னுடைய வலிமையை பயன்படுத்தி அந்த இடத்தை அடைய அவருக்கு விருப்பம் வந்தது. ஆம்! 40வயதிற்கு மேல்தான் அவருக்கு தன் இனத்தை அழிவிலிருந்து தடுப்பதன் மூலம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும் என்கிற சிந்தனை உதித்தது. அதற்கு பணம் என்கிற ஆற்றல் வேண்டும் அத்துடன் ஆயுதம் என்கிற பேராற்றல் வேண்டும் என்று முடிவு செய்கிறார்.

 அதன்பிறகு தலைவர் தன்னுடைய கட்டப்பஞ்சாயத்து மற்றும் கடத்தல் தொழிலை ஆயுத மயமாக்கினார். தன்னுடைய கூட்டாளிகளுக்கு கைத்துப்பாக்கி வழங்கினார். நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்க ஆரம்பித்தார். அன்று பொதுமக்களுக்கு ஏகாதிபத்திய ராணுவத்தாலும் அதன் கீழ் செயல்படும் மாநில காவல் துறையாலும் ஏகப்பட்ட கொடுமைகள் தினந்தோறும் நடந்துகொண்டு இருந்தன.  தலைவரிடம் வந்து பொதுமக்கள் முறையிடுவார்கள் பணம் இருப்பவரிடம் பணத்தை பெற்றுக் கொள்வார் நகை வைத்திருப்போரிடம் நகையை பெற்றுக்கொள்வார். அப்படி எதுவுமில்லை என்றால் அவர்களது குடும்பத்தில் ஒருவர் அவர் ஆணோ பெண்ணோ முதியவரோ இளைஞரோ அவர்களை தனது படையில் சேர்த்துக் கொள்வார் அல்லது தனக்கு தேவையான நேரத்தில் உதவ வேண்டும் என்கிற வாக்குறுதியை வாங்கிக் கொள்வார். இப்படி வாக்குறுதி கொடுத்த குடும்பங்கள் அவருக்கு உதவி செய்ய தயாராக இருந்தனர். வாக்குறுதி கொடுத்து உதவத் தயங்கியவர்களைக் கொன்றுவிடுவார். அதாவது தலைவருக்காகக் கொள்ளையடிப்பது, கொலைசெய்வது, சொத்துக்களை ஆக்கிரமிப்பது, வன்முறை செய்வது, சிறை செல்வது என எதுவாக வேண்டுமானாலும் வாக்குறுதி கொடுத்தவர்கள் செய்யவேண்டும். அப்படி தனக்கு உதவி செய்பவருக்கு அவரது குடும்பத்தைப் பாதுகாக்கும் வாக்குறுதியை தலைவர் வழங்கியிருந்தார். அதை நிறைவேற்றியும் வந்தார். 

 அவரது அடுத்த நடவடிக்கை நகரங்களின் மையத்தில் பயன்படாமல் இருக்கும் நிலம், கட்டிடம், குடியிருப்பு போன்றவற்றை ஆக்கிரமிப்பது. இவை பெரும்பாலும் சொத்து தகராறில் இருக்கும் அல்லது பணம் கொழுத்தவர்களிடம் உபரியாக இருக்கும். இத்தகைய சொத்துக்களை தலைவர் ஆக்கிரமித்து தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். உரிமையாளர் பிரச்சனை செய்தால் நியாயமான விலை கொடுப்பார். அதற்கும் பணியவில்லை என்றால் கொன்றுவிடுவார். யாருக்கும் பயன்படாமல் இருப்பது யாருக்காவது பயன்படும் என்கிற நிலையில் அவர் இதைச் செய்துவந்தார். அதன்பிறகு அவரது கொள்ளைப்படையின் குடும்பங்கள் நகருக்கு அருகில் இருக்கும் பகுதிகளில் பத்து இருபது குடும்பங்களாக எந்த நில உரிமை சான்றுமின்றி குடியமர்த்தப்பட்டனர்.

 தலைவரை மீறி அவரது பணபலத்தை மீறி அவரது கொள்ளைப் படையின் அச்சத்தை மீறி சட்ட ஒழுங்கு அவரது ஆட்கள் மீது பாயவில்லை. 
 இப்படியாக படிப்படியாக பொதுமக்களை அவர் விலைக்குத்தான் வாங்கினார்.
 இப்படி அவரது கொள்ளை படை பொதுமக்களையும் திரட்டி கொண்டு வேகமாக வளர்ந்தது.

 அதைத் தொடர்ந்து சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களை விலைக்கு வாங்கினார். திருடர்கள், வீடற்றவர்கள், முதியவர்கள், திருநங்கைகள், வேலையில்லாத இளைஞர் இளைஞிகள், கைதிகள், ஊனமுற்றவர்கள், காதல் தோல்வி அடைந்தவர்கள் என பலரையும் அவர் தனது கொள்ளைப் படையில் நிரப்பிக்கொண்டார். அதாவது சம்பளம் கொடுப்பதன் மூலமும் செய்த செயல்கள் அடிப்படையில் பணம் கொடுப்பதன் மூலமும் அவர் விலைக்கு வாங்கினார்.
 தலைவரின் படையில் சேர்ந்து அவருக்காக வன்முறையில் ஈடுபடுவதன் மூலம் தனக்கு பணமும் தனது குடும்பத்திற்கு பாதுகாக்கும் கிடைக்கும் என்கிற நிலையில் அவரது படையில் பலரும் சேர்ந்தனர். 

 அதே நேரத்தில் தமிழினத்திற்காக போராடிய வீரப்பன் அவர்களுக்கு ரசிகர் மன்றம் ஒன்றை தொடங்கினார். அதில் இணைந்த பல இளைஞர்கள் இனம், மொழி என்று வெளிப்படையாகப் பேசாமல் சினிமா நடிகரின் ரசிகர் மன்றங்கள் போல இயங்கி வருவதாக வெளியில் காட்டப்பட்டது. ஆனால் தன்னுடைய படையின் ஒருங்கிணைப்பை இந்த ரசிகர் மன்றத்தில் இருந்தவர்கள் மூலம் தான் தலைவர் செய்துகொண்டிருந்தார். அன்று அறிக்கை விடும் இயக்கங்கள் கூட தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்த காலத்தில் தலைவரின் இந்த மறைமுக இயக்கத்தையும் மக்கள் மத்தியில் அவரது அதிகார வளர்ச்சியையும் ஆதிக்க சக்திகள் கவனிக்கத் தவறிவிட்டனர்.

 பிறகு அவரது ஆதிக்கம் அவரது மாவட்டம் தாண்டி பரவத் தொடங்கியது. அவரைப்போல இருந்த நிழலுலக பெருந்தலைகளை அவர் எதிர்க்கத் தொடங்கினார்.
 அதற்குப் பொருள் திரட்ட தாய் நிலத்தில் வெவ்வேறு பகுதிகளில் பெரும் செல்வத்துடனும் அதிகாரத்துடனும் ஆதிக்கம் செலுத்தி வந்த வந்தேறிகள் தாக்கப்பட்டு கொல்லப்பட்டு அவர்களின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டு தலைவரின் கீழ் இருந்த குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

 பண வலிமையுடனும் படை வலிமையுடனும் பொதுமக்கள் ஆதரவுடனும் மற்ற நிழலுக பெருந்தலைகளை அடக்கி நிழல் உலகத்தில் அவர் மிகபெரிய தலையாக உருவெடுத்தார் .
 இந்த நேரத்தில் அவர் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு பண உதவி செய்தார். அக்கட்சி பெயருக்கு மட்டுமே இனநலம் பேசிக்கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் அதன் தலைவரை கொன்றுவிட்டு அடுத்தகட்ட தலைவரை அக்கட்சிக்குத் தலைவராக்கி அந்த கட்சியை அவர் கைப்பற்றினார்.

  நேர்மையான வழியில் சில இளைஞர்கள் ஒரு புரட்சி படையை நிறுவினார்கள். அவர்களுக்கும் தலைவர் மறைமுகமாக உதவி செய்து வந்தார். அந்த படையும் நாளடைவில் நேர்மையான ஒரு கொரில்லாப் படையாக உருவெடுத்தது. 
 அரசுகள் அவர்களையே எதிரியாக நினைத்தது. இந்த நிலையில் தலைவரின் கட்டுப்பாட்டில் இருந்த அந்த கட்சி தலைவரின் ஆசியால் மாநில ஆட்சியைப் பிடித்தது.  தனது ஆட்களைப் பதவியில் அமர்த்தி ஊழல் செய்து, வளங்களைச் சுரண்டி மேலும் பெரும் செல்வம் சேர்த்தார் தலைவர். அதன் மூலம் அவரது கடத்தல் வலையமைப்பு இந்திய அளவில் பரவியது. அத்தனையையும் அவர் ஆயுத பலமாக மாற்றினார். தனிமனித ஆயுதங்கள் அவரது கொள்ளைப்படைக்கும் ராணுவத் தளவாடங்கள் புரட்சிப் படைக்கும் வழங்கப்பட்டன.

 பிறகு ஆட்சிக்கு வந்த அந்த கட்சியினர் தலைவருக்கு எதிராக செயல்பட தொடங்கிவிட்டனர். மாநில காவல் துறை தலைவருக்கு எதிராக திருப்பி விடப்பட்டது. தலைவரைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் எதுவுமே நடக்கதில்லை. தலைவரின் கொள்ளை படைக்கு முன் காவல்துறை மண்ணை கவ்வியது. நேர்மையானவர்கள் கூட பெரும் பணம் கொடுத்து விலைக்கு வாங்கப்பட்டனர். தலைவர் படையின் செழிப்பையும் கம்பீரத்தையும் கண்டு காவலர்கள் பலர் வேலையை விட்டு தலைவரின் படையில் இணைந்தனர். 

 இந்த நிலையில்தான் இந்திய ஏகாதிபத்திய ராணுவம் தலைவரின் பலத்தை அடையாளம் கண்டுகொள்கிறது. ஆட்சி கலைக்கப்பட்டு மத்திய அரசின் நேரடி ஆட்சி ஏற்படுத்தப்பட்டு துணை ராணுவம் இறக்கப்பட்டது.
 அதுவும் தலைவரால் பொதுமக்கள் போராட்டங்களாலும் கொரில்லா தாக்குதல்களாலும் கொள்ளைப்படை வன்முறைகளாலும் முறியடிக்கப்பட்டது. அதன்பிறகு இந்திய ராணுவம் இறங்கியது. இலங்கையிலும் இதே போல நிலைதான் தொடர்ந்தது. 

 ஆனால் இதற்குள் தலைவர் தனது இன மக்கள் மூலமும் கடத்தல் வலைப்பின்னல் மூலமும் உலகம் முழுவதும் இருந்து பணத்தையும் ஆயுதங்களையும் குவித்து வைத்திருந்தார்.
  காவல்துறையும், துணை ராணுவமும், ராணுவமும் தலைவரின் வழிகாட்டுதல் படி புரட்சி படையின் ராணுவ ரீதியாக தாக்குதல்களினாலும் பொதுமக்களின் எதிர்பாராத தாக்குதல்களினாலும் நிலைகுலைந்து தோல்வியடைந்தது.

 எப்படியென்றால் சாலையை கடக்கும் ஒரு முதியவர் மனித வெடிகுண்டாக வெடிப்பார், தேநீர் கொடுக்கும் சிறுவன் அதில் விஷத்தை கலந்து இருப்பான், தாக்குதல் நடத்திவிட்டு எந்த வீட்டிற்குள் நுழைந்ததாலும் அடைக்கலம் கிடைக்கும்,  கோவில்களில் ஆயுதக் கிடங்கு இருக்கும், மிக நேர்மையானவர்கள் குடும்பம் அச்சுறுத்தப்படும்,  ராணுவத்திலேயே விலைபோன ஒற்றர்கள் இருப்பார்கள்.
 எப்படி வியட்நாம் ராணுவத்திற்கு விபச்சாரிகளின் உதவி பெறும் பலனை கொடுத்தது அப்படியாக ஒதுக்கப்பட்ட பொதுமக்கள் தலைவருக்கு பெரும் உதவிகள் செய்தனர்.
 இதன் எதிர்வினையாக ராணுவமும் காவல் துறையும் பொதுமக்களை துன்புறுத்தத் தொடங்கினார் அதன் எதிர்விளைவாக தலைவருக்கு மேலும் ஆட்கள் கிடைத்தனர்.

 எல்லைப் பகுதிகளில் இனத்திற்கு எதிரான கலவரங்கள் நடந்தன.  தலைவரின் உத்தரவுப்படி தாய்நிலத்தில் பதில் - கலவரங்கள் நடத்தப்பட்டன. 
 தமிழர்களைத் தாக்கிய அண்டை இனங்களின் தலைமை மீது தீவிரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
 தாய்நிலத்தில் இருந்த வந்தேறிகள் முழுமையாக விரட்டியடிக்கப்பட்டனர். அவர்களின் மலை மலையான அசையா சொத்துக்கள் தலைவர் வசம் வந்தன. எல்லைப் பகுதி தமிழர்கள் தாய்நிலத்திற்கு விரட்டப்பட்டு அகதிகளாகவந்தனர். அவர்களும் தலைவருடன் இணைந்தனர்.

 இந்நிலையில் அவர் இயற்கை வளங்களையும் கோயில்களையும் தனக்கு உதவாத பொதுமக்களையும் இனப்பற்று இல்லாத தன்னின அரசியல்வாதிகளையும் பணக்காரர்களையும் கொள்ளையடிக்க தயங்கவில்லை.

  இப்படி எல்லாவற்றையும் அவர் ஆயுதபலமாக மாற்றி தன்னுடைய பலத்தை பெருக்கிக் கொண்டார்.
 ஒரு கட்டத்தில் அவருடைய ராணுவப்படை கூட தலைவருக்கு எதிராகத் திரும்பியது .
 அப்பொழுது இரண்டு படைகளும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மோதி அதிலும் தலைவரே வெற்றிபெற்றார்.
 அதன்பிறகு ராணுவ படையின் தலைமையையும் தானே ஏற்றுக்கொண்டார்.

 அதன்பிறகு கொள்ளைப்படை கருப்பு என்றும் புரட்சிப்படை சிவப்பு என்றும் அழைக்கப்பட்டன.
 இவர்கள் எதிர் எதிர் சிந்தனைகொண்டவர்களாக ஒரே தலைமையின் கீழ் இருந்தனர்.

 ஒரு குறிப்பிட்ட மொழி பேசும் மக்களின் தாய் நிலத்தில் ஒரு கொள்ளைப் படை, ஒரு புரட்சிப் படை, ரசிகர் மன்றம் என்கிற பெயரில் ஒரு இயக்கம், தன் கட்டுப்பாட்டில் ஒரு கட்சி என்கிற வகையில் தனது முழு ஆதிக்கத்தை நிலைநாட்டினார் தலைவர்.

 10 ஆண்டுகள் போராடி இந்திய ராணுவத்தை தோற்கடித்த பின் அவரது புகழும் கொள்கையும் உலகம் முழுவதும் பரவியது. உலகம் முழுவதும் இருக்கும் பெருந்தலைகளுக்கும் செல்வந்தர்களுக்கும் தன் இனத்திற்கு தலைவராக வேண்டும் என்கிற ஆசை வந்தது. இப்படி உலகம் முழுவதும் அவருக்கு தோழமைச் சக்திகள் உருவாகின. இதன்பிறகு அனைத்துலக பார்வை தலைவர் மீது விழுந்தது.

  அனைத்து நாடுகளும் இந்திய ஏகாதிபத்தியத்திற்கும் இலங்கை பேரின வாதத்திற்கும் உதவி செய்து நாற்புறமும் சூழ மீண்டும் ஒரு பெரும் போர் தொடங்கியது.
 ஆனால் அதற்குள் தலைவரின் படையில் ஆயுதம் தாங்கிய நபர்கள் எண்ணிக்கை பத்து லட்சத்தை தாண்டி விட்டது. இந்த மிகப்பெரிய போர் தலைவரின் அத்தனை சக்திகளும் திரட்டப்பட்டு உலகம் முழுவதும் பரவியிருந்த தனது இன மக்களின் ஆதரவினாலும் பிற இன தேசியவாத சக்திகளின் ஆதரவினாலும் ஒரு இனத்தின் போராக மாறியது. ஆம் தமிழினம் உலகத்தை மிகவும் போராடி முறியடித்தது. இதற்கு பிற இனத்து கூலிப்படைகளையும் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களையும் கூட பயன்படுத்தினர். உலகளாவிய வல்லாதிக்க அரசுகளின் தலைமைப் பீடங்கள் தீவிரவாத நடவடிக்கைகள் மூலம் தாக்கப்பட்டன.
 15 ஆண்டுகள் பெரும் இழப்புகள் இருந்தாலும் விடாமல் போராடி தமிழினமே மாபெரும் வெற்றியை ஈட்டியது. 

 அதன்பிறகு தலைவர் சுதந்திரப் பிரகடனம் செய்தார். தேர்தல் நடத்தப்பட்டு தனது நம்பிக்கைக்குரிய ஒரு ஜனநாயகவாதியை அதிபர் ஆக்கினார். தான் மன்னராக முடிசூட்டிக் கொண்டார். தலைவரின் புரட்சிப்படை தமிழர்நாட்டு ராணுவமாகவும் ரசிகர் மன்றம் ஆளுங்கட்சியாவும் பொறுப்பேற்றுக் கொண்டது.
 தலைவரின் கொள்ளைப்படை  காவல்துறையாக பொறுப்பேற்றது. கொள்ளைப்படை பொதுமக்கள் மற்றும் குடும்பங்கள் ஆங்காங்கே அடுத்தகட்ட பதவிகளையும் அதிகாரங்களையும் வேலைவாய்ப்பையும் கைப்பற்றிக்கொண்டன.  பிறரை விட நிலவுடைமையும் அவர்களிடமே இருந்தது.
 எதிர்க்கட்சி ஒன்றை அவர்கள் உருவாக்கிக் கொண்டனர். உளவுத்துறையும் இவர்களே!

 அதாவது தலைவருடன் இருந்தவர்கள் அனைவருமே நாட்டின் அனைத்து துறையிலும் ஆதிக்கநிலைக்கு சென்றுவிட்டனர்.

  தலைவரை ஆதரிக்க தயங்கிய அத்தனை பேருமே பின்னுக்கு தள்ளப்பட்டு கீழ்மக்கள் ஆகிவிட்டனர்.
 இவர்கள் மனிதநேயம் பேசும் ஒரு கட்சியை மட்டுமே உருவாக்க முடிந்தது. இவர்கள் வெள்ளை என்று அடையாளப் படுத்தப் பட்டனர்.

 அதன்பிறகு தன் இனத்தின் பண்பாட்டை தனி மதம் என்றாக்கி  அதை அரச மதமாக அறிவிக்கச் செய்தார் தலைவர். தானும் அதற்கு மாறிக்கொண்டார்.
 பெரும்பான்மையான இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் அதற்கு மாறிக் கொண்டனர். சிறுபான்மையான கிறித்துவ முஸ்லிம்கள் அதற்கு மாறாமல் தயங்கியபடி இருந்தனர். மதப் பிரச்சாரம் தடை செய்யப்பட்ட பிறகு அவர்கள் தமிழ் மதத்துக்கு மாறுவது தொடங்கியது.

 இப்படியாக தன் இனத்திற்கு தனி மதம், ராணுவம், அரசாங்க கட்டமைப்பு, மன்னர் எனும் மாற்றுத் தலைமை என அத்தனையையும் தலைவர் உருவாக்கித் தந்தார்.

 அவரை பார்த்து உலகம் முழுவதும் இருக்கும் இனங்களில் நல்லவர்கள் கெட்டவர்கள் அனைவருமே தமக்கான தேசத்தை மீட்டெடுக்க சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். 

  ஏனென்றால் ஒவ்வொரு பெரிய நாடும் ஒரு பெரிய இனத்தின் கீழ் அடக்கப்பட்ட சிறு இனங்களைக் கொண்டுள்ளது.

 இனி தலைவரின் வழிகாட்டுதலில் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு போர் ஒலை அனுப்பப்படலாம்!

 அடக்கப்பட்ட இனங்களுக்கு தனிநாடு வழங்க வேண்டும் அப்படி இல்லை என்றால் அந்த இனங்களுக்கு தமிழர்நாடு உதவி செய்து தனிநாடு அடையச் செய்யும் என்று எச்சரிக்கை செய்யலாம்!

 பெரிய பெரிய நாடுகள் எல்லாம் துண்டாடப் படலாம்!
உடைந்த துண்டுகள் இணையலாம்!

 உலக வரைபடமே மாற்றப்படலாம்!

சர்வதேச அரங்கில் தமிழர்நாடும், தலைவரின் இனவழி தேசிய நாடுகள் கோட்பாட்டினை ஏற்றுக் கொண்ட நாடுகளும் இனவழி நாடுகள் அமைய குரல் கொடுக்கலாம்!

 தலைவர் இறந்த பின்பும் இது தொடரலாம்!

 உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தலைவர்கள் பட்டியலில் தமிழனத் தலைவரும் இடம்பெறலாம்!

 தமிழர்நாடு அதன் துணைநாடுகளுடன் உலகையே தலைமையேற்று வழிநடத்தலாம்!

யார் கண்டது.....?!

Wednesday, 1 December 2021

இசுலாமியரும் திமுகவும்

இசுலாமியரும் திமுக வும்

 இதில் இசுலாமியர் 15% க்கு மேல் வாழும் பகுதிகளில் வென்ற கட்சிகள் குறிக்கப்பட்டுள்ளன

 இதன்படி 'திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு இசுலாமியர் ஏகபோக ஆதரவை வழங்கினர்' என்பது தவறு என்று கூறலாம்.

அதாவது மேற்கண்ட தொகுதிகள் அடிப்படையில் இசுலாமியரின் திமுக ஆதரவு 2/3 என்று கூறலாம்.

 இது பிற தமிழர்களின் மனநிலை தான்.