Friday 5 November 2021

தேசிய தனியரசும் பழங்குடி துணையரசும்

தேசிய தனியரசும் பழங்குடி துணையரசும்

 பழங்குடிகளுக்கு தமிழ் தேசியம் முன்வைக்கும் தீர்வு தான் என்ன?

 இன்று இந்திய ஒன்றியத்தில் இருக்கும் மாநிலங்களுக்கு 1947 இல் வழங்கப்பட்ட சுய ஆட்சி உரிமைகள் போல பழங்குடிகளுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.
 அதாவது ஒரு இனம் தன்னுடைய தாய் நிலத்தை தாமே ஆள்வது தேசியம் .
அவர்களுக்கான அரசு தேசிய தனியரசு.
இது எந்த அரசுக்கும் கட்டுப்படாமல் தனித்து இயங்கும்.

 இந்த தனியரசில் பூர்வீகமாக மிகவும் சிறுபான்மையாக வாழும் மக்கள் குறிப்பாக காடுகளுக்குள் திரிந்த மொழி பேசும் பழங்குடிகள் தனிநாடாக இயங்குவது கடினம்.
 எனவே அவர்கள் நிலம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் சிதறி இருந்தாலும் அதனை தனி மாநிலமாக அறிவித்து அதற்கு நிலத்தின் மீதான உரிமையையும் காவல் காக்கும் உரிமையும் அவர்களுக்கே வழங்க வேண்டும்.
 அம்மாநிலத்தில் அவர்களுக்கு என்று ஒரு துணையரசு இயங்கும்.
 இந்த துணை அரசாங்கத்தை ஒரு முதலமைச்சரின் தலைமையில் சுதந்திரமாக இயங்க அனுமதிப்பது தேசியத்தின் கடமையாகும்.
 பழங்குடி மக்களின் தம் நிலத்தை யாரிடமும் இழக்காமல் வேற்றின குடியேற்றம் தடுக்கப்பட்டு தமக்கான தனிச் சட்டத்தை இயற்றிக்கொண்டு தம்முடைய அடையாளத்துடன் தற்சார்பு பொருளாதாரத்துடன் வாழ்வது இதன்மூலம் உறுதி செய்யப்படும்.
 தேசிய அரசாங்கத்துடன் அவர்களுக்கு பெரிதாக எந்த கொடுக்கல் வாங்கலும் இருக்கக்கூடாது.

  தேசிய அரசு ராணுவ பாதுகாப்பு அளிப்பதற்காக மட்டும் ஒரு குறிப்பிட்ட வரியை வாங்கிக் கொள்ள வேண்டும். 
 அந்த பழங்குடி மக்கள் தேசிய அரசிடம் எதையாவது எதிர்பார்த்தால் அதை அவர்களது முதலமைச்சர் மூலம் கேட்டு வாங்கி பெற்றுக் கொள்ளவேண்டும்.
 அதற்கான வரியை செலுத்த வேண்டும். உதாரணமாக போக்குவரத்து, கல்வி, தொலைத்தொடர்பு, வியாபாரம், கட்டமைப்பு போன்ற விடயங்களில் தேசிய அரசிடம் நடக்கும் கொடுக்கல்-வாங்க ஒப்பந்தம் போடப்பட்டு அதற்கான வரிகள் விதிக்கப்பட்டு நடைபெற வேண்டும்.
 மற்றபடி மாநில தற்சார்பு விஷயங்களில் தேசிய அரசு அந்த மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் தலையிடக்கூடாது.
 மாநில அரசுக்கு பெரிய அளவில் நிதி தேவைப்பட்டால் அதை தேசிய அரசிடம் வட்டியில்லாத கடனாக பெற்றுக்கொண்டு பிறகு சிறிது சிறிதாக அடைத்துக்கொள்ளலாம்.
 மாநில அரசு நிதியோ, ஆட்களோ, ராணுவமோ அல்லது மற்ற வசதிகளோ தேவைப்படும் பட்சத்தில் தேசிய அரசிடம் கடனுக்கு அல்லது தொகை கொடுத்து வாங்கிக்கொள்ளலாம்.

 இதேபோல தேசிய அரசு (குறிப்பாக போர்க்காலங்களில்) நிதியோ ஆட்களோ அல்லது மற்ற விடயங்களோ திரட்டும்போது மாநில அரசுகள் உதவ வேண்டும்.

 இப்படி தேசிய தனியரசும் மாநில துணையரசும் ஒருவருக்கு ஒருவர் உதவியாக தமது தனித் தனி அடையாளத்துடன் ஒற்றுமையாக வாழவேண்டும்.

 இரண்டு பெரிய இனங்களுக்கு மத்தியில் அல்லது ஒரு இனத்தில் எல்லையோரம்தான் இத்தகைய பழங்குடிகள் அல்லது இனச் சிறுபான்மையினர் இருப்பார்கள்.

குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநில துணையரசு தேசிய அரசுக்குள் தொடர்ந்து இருக்க விரும்புகிறதா என்று பொது வாக்கெடுப்பும் நடத்தவேண்டும்.

 தொடர விரும்பாத பழங்குடிகள் வெளியேறலாம்!

அவர்கள் தனிநாடு ஆனாலோ அல்லது அண்டை இன தேசிய அரசுடன் இணைந்தாலோ துரோகிகளாக கருதப்படக்கூடாது.

 இதே போல ஒரு பெரிய தேசிய இனத்தின் தனியரசு அதைவிட சிறிய தேசிய தனியரசை தமது மாநிலமாக இருக்க அழைக்கலாம். 
 ஆனால் வலுக்கட்டாயமாக ஒரு சிறிய இனத்தை தேசிய அரசு ஆக்கிரமிக்கக் கூடாது.

 மாநில உரிமை பெற்ற இனம் சற்று பெரிய நிலப்பரப்பைக் கொண்டது என்றால் தேசிய அரசுடனான கொடுக்கல் வாங்கலில் வட்டி இருக்கும். 

 

No comments:

Post a Comment