Thursday, 18 November 2021

முடிசூடிய தலைவர்

முடிசூடிய தலைவர்

 ஆண்டு: கி.பி. 2122.

 உலகம் முழுவதிலிருந்தும் தமிழர்நாட்டுத் தலைவரை போர்க்குற்றவாளியாக அறிவிக்கவும் தண்டிக்கவும் அழுத்தங்கள் தொடர்ந்தபடி இருந்தன.
 தலைவர் மீட்கப்பட்ட தமிழர்நாட்டின் முப்படைத் தலைவராக இருந்தார்.
 மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் மேற்கண்ட அழுத்தங்களுக்குப் பணிய மறுத்துவிட்டார்.
 தலைவரை ஒரு மணிநேரம் வீட்டுச்சிறையில் கூட வைக்கமுடியாதென அழுத்தம் திருத்தமாகக் கூறிவிட்டார்.

 மேலும் அவர் விடுத்த விளக்க அறிக்கையில் "எங்கள் தலைவர் கொலைசெய்தார், கொள்ளையடித்தார், வழிபாட்டுத் தலங்களை இடித்தார், அப்பாவிகளைக் கொன்றார், பலரை அகதிகளாக வெளியேற்றினார், போதைப்பொருள் கடத்தினார், ஆயுத உற்பத்தி மற்றும் வியாபாரம் செய்தார், உலக அளவில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடத்தினார், இனரீதியான மோதல்களை பல்வேறு நாடுகளில் தூண்டினார், பிரிவினைவாதம் பேசினார், பிறநாட்டு தீவிரவாதிகளுக்கு பணம் பெற்றுக்கொண்டு புகலிடம் கொடுத்தார், தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தினார், இனப்படுகொலை செய்தார், ஒப்பந்தங்களை மீறினார் என்று எத்தனையோ குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. 
இவை எதையும் எம் தலைவர் மறுக்கவில்லை.
 எங்கள் தலைவர் தன் இனத்தையும் தனது தாய் நிலத்தையும் காப்பதற்காக இதையெல்லாம் செய்தார். 
அழியும் நிலையில் இருந்த எங்களது இனத்தையும் தாய் மண்ணையும் எந்த நியாய அநியாயங்களையும் யோசிக்காமல் அவர் காப்பாற்றினார். 
அவர் அப்படி செய்தால்தான் எங்கள் ராணுவம் எழுந்தது. 
எங்கள் தாய் நிலத்தை எங்களால் மீட்க முடிந்தது. எமது தலைவரை தண்டிக்க நினைக்கும் உலக நியாயவான்கள் எங்கள் நிலத்தை அண்டை இனங்கள் ஆக்கிரமித்த போதும், எங்கள் வளங்கள் இந்திய ஏகாதிபத்தியத்தாலும் உலக பெருமுதலாளிகளாலும் சுரண்டப்பட்ட போதும், எங்கள் இனம் அண்டை இனங்களால் இனப்படுகொலை செய்யப்பட்டபோதும், அதற்கான சான்றுகளைத் திரட்டி நாங்கள் பல ஆண்டுகள் உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்த போதும் நியாயம் வழங்க முன் வராதது ஏன் என்று கேட்கிறோம். 
எம்மை விட பல மடங்கு பலம் வாய்ந்த எதிரிகளை முறியடிக்க எமக்கு தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் தவிர வேறு வழியில்லை. நாங்கள் ஜனநாயக ரீதியான அத்தனை முயற்சிகளையும் செய்து தோற்று எங்கள் இனம் அழியும் தருவாய்க்கு வந்தபிறகுதான் ஆயுதத்தை தூக்கினோம். எங்கள் விடுதலைக்காக நாங்கள் எந்த எல்லைக்கும் சென்றோம். நான் தலைவருக்கு அஞ்சுவதாக யாரும் எண்ணவேண்டாம். 
என் தலைவருக்கு தண்டனை ஏற்பதெல்லாம் பெரிய விடயம் இல்லை. எங்கள் தலைவர் தான் செய்த குற்றத்திற்காக உலகத்தின் முன் பொதுமேடையில் மரணதண்டனையை ஏற்கவும் தயாராக இருக்கிறார். ஆனால் நாங்கள் அதற்கு விடமாட்டோம். 
எங்கள் தலைவருக்கு சிறிய தண்டனை வழங்கினால் கூட இனி வரும்காலங்களில் எங்கள் இனத்தில் வேறு ஒருவர் தலைவராக உருவாக யோசிப்பார். 
ஆகவே எத்தனை பெரிய அழுத்தம் வந்தாலும் சரி நாங்கள் எங்கள் தலைவரை விட்டுக்கொடுக்கப் போவதில்லை. நாங்கள் உலகில் எவருக்கும் அஞ்சாத இனம் என்பதோடு உலகிற்கே அஞ்சாத இனம் என்பதையும் உறுதியாக கூறிகிறோம். எங்கள் தலைவர் போலவே ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு தலைவர் உருவாக வேண்டும் என்பது எங்கள் நோக்கம். உலகில் இனி எங்கும் இனத்தின் பெயரால் படுகொலை நடக்கக் கூடாது என்பது எஙகள் லட்சியம். எங்கே மக்கள் இன ரீதியாக ஒடுக்கப்பட்டாலும் அங்கே தமிழர்நாட்டு வேட்டொலி ஒலிக்கும்.  இதுதான் தீவிரவாதம் என்றால் நாங்கள் முழுமையான தீவிரவாதி என்பதை ஒப்புக் கொள்கிறோம். இன்று இப்பரந்த உலகில் இருக்கும் இனங்களில் பழமையான இனம் என்கிற அடிப்படையில் நாங்கள் ஒவ்வொரு இனத்திற்கும் தனிநாடு கிடைக்கும் வரை ஓயமாட்டோம். எங்கள் தலைவரை நீங்கள் தண்டிக்க நினைத்தால் 10 கோடி தமிழர்களைத் தாண்டி 20 லட்சம் தமிழர் சேனைகளைத் தாண்டி மட்டுமே அவரைத் தொடமுடியும். இதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் விரைவில் எங்கள் தலைவருக்கு நாங்கள் எங்கள் நாட்டின் மன்னராக முடிசூட்ட உள்ளோம். இது பழமைவாதமா என்றால் ஆம் இது 'நவீன பழமைவாதம்' நாட்டையே காடாக்கி நவீன வசதிகளுடன் ஒட்டுமொத்தமாகப் பழங்குடி வாழ்க்கை முறைக்குத் திரும்பவுள்ள எம்மினத்தின் பெருந்திட்டத்தின் ஒரு பகுதியே இது."
என்று வெளிப்படையாகக் கூறினார்.

 ஏற்கனவே பிரம்மாண்டமான கோட்டை ஒன்று கட்டப்பட்டு வருவதையும் தமிழர்நாடு இயற்றிய சட்டவரைவில் தமிழர் நாட்டு அரசர் எந்த குற்றம் செய்தாலும் மரண தண்டனை கிடையாது என்று சட்டம் இருந்ததையும் ஊகித்து இப்படி நடக்கும் என்று ஓரிரு பத்திரிகைகள் எழுதியிருந்தன.

 அதிபர் அறிவிப்பை தொடர்ந்து முடிசூட்டுவதற்கான குழு அமைக்கப்பட்டு தலைவர் முன்னிலையில் விவாதங்கள் நடந்தன. மன்னராட்சிக்கும் மக்களாட்சிக்கும் உள்ள வேறுபாடுகள் முதலில் வகைப்படுப்பட்டன. அதாவது இரண்டுமே ஏறத்தாழ ஒன்றுதான். மன்னராட்சியில் மன்னரின் வாரிசுகள் ஆள்வார்கள் பிற மக்களுக்கு ஆளும் வாய்ப்பு கிடைக்காது. மற்றபடி ஆட்சிமுறை ஒன்றுதான்.
 நடைமுறையில் மன்னர் எப்படியும் ஆளப்போவதில்லை. மன்னருக்கு அரசியல் ரீதியாக யாருக்கும் மிகப்பெரிய விருந்தளிப்பது மற்றும் அதிபரை எந்நேரமும் சந்திப்பது தவிர பெரிதாக எந்த சலுகையும் இல்லை.
 கோட்டையில் மன்னர் வாரிசுகளில் மூத்தவர் தவிரபிற வாரிசுகள் திருமணம் ஆகும்வரை மட்டுமே இருக்க அனுமதி.
 மன்னர் பிற இனத்தில் திருமணம் செய்யவும் தமிழர்நாட்டு எல்லைக்கு அப்பால் குடியேறவும் தடை.  மன்னர் நெருக்கடிக் காலத்தில் மட்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்பார் அவ்வளவுதான்.  

 தமிழ் புத்தாண்டான சித்திரை முதல் நாள் முடி சூட்டலாமா அல்லது தமிழர்நாடு விடுதலை நாளன்று முடிசூட்டலாமா என்று விவாதிக்கப்பட்டு கடைசியில் தமிழ் நாட்காட்டியில் நட்சத்திரப்படி தலைவரின் பிறந்தநாள் அன்று விழா தேதி குறிக்கப்பட்டது.

 தலைவர் முடிந்த அளவுக்கு எளிமையாக இயற்கையாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். 
 எனவே எந்த ஆடம்பரமும் இல்லாமல் விழா நடத்த முடிவுசெய்யப்பட்டது.

 அரசர், மன்னர், பேரரசர், வேந்தர், கோ போன்ற பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதியில் 'மன்னர்' என்பது பதவியையும் மன்னர் வாரிசுகள் பட்டமாக 'கோ' என்று இட்டுக்கொள்ளவும் முடிவுசெய்யப்பட்டது.

மன்னரின் ரத்தவழி வாரிசுகளில் மூத்தவர் 'இளவரசு' பட்டம் கட்டப்பட்டு (ஆணோ பெண்ணோ) மன்னர் மிக வயோதிகம் அடைந்தபிறகு அடுத்த 'மன்னர்'  ஆவார். 
பிறகு குழுவினர் முடிசூட்டு விழா எப்படி நடந்தது என்பது பற்றி ஆராய கோவில்களுக்குச் சென்று சிலைகளையும் ஓவியங்களையும் பார்வையிட்டனர்.  இலக்கியங்களிலும் பிற நாட்டு மன்னர் குடும்ப சடங்குகளையும் ஆராய்ந்து குறித்துக் கொண்டனர்.
 அதன்படி எல்லா சடங்குகளும் வரிசைப்படுத்தப்பட்டு அழைப்பிதழ் உலக தமிழர்களுக்கு வழங்கப்பட்டது.

 திட்டமிட்ட அந்த நாளும் வந்தது....

 காலையில் கதிரவன் எழுந்ததும் தலைவர் ஆற்றில் நீராடி வெள்ளை சட்டையும் வெள்ளை வேட்டியும் அணிந்து கொண்டார் காலில் தோல் செருப்பும் இடுப்பில் தோல் கச்சையும் அணிந்துகொண்டார் (தமிழ் மதத்தின் கொள்கைப்படி உடலில் உடை செருப்பு இடுப்புக் கச்சை தவிர எதுவும் அணியக்கூடாது. அவசியமான உபகரணங்கள் தேவைப்படும்போது அணியலாம். உடையும் சாயம் தோய்க்காத துணிதான் உடுத்தவேண்டும்).

 நிகழ்ச்சி நடக்கும் இடம் தலைவருக்காக கட்டப்பட்ட கோட்டைக்கு முன்பாக இருந்த அறுவடை முடிந்த வயல்வெளிகளில் சுத்தம் செய்யப்பட்டு நடுவில் ஒரு மேடை அமைக்கப்பட்ட இடமே.
 தலைவர் மங்கல இசையுடன் கோட்டையிலிருந்து தமது பாதுகாப்புப் படை புடைசூழ நடந்து மேடைக்கு வந்து அவருக்காக செய்யப்பட்டிருந்த வேலைப்பாடுகள் கொண்ட (இருவர் அமரக்கூடிய) மர நாற்காலியில் அமர்ந்தார் (தலைவருக்கு மனைவி இல்லை) அந்தனர்கள் தமிழ் மந்திரங்களை ஓதத் தொடங்கினர்.

 மூத்த நெசவாளர் ஒருவர் தன் மனைவியுடன் புதிதாக நெய்த  நீண்ட வெள்ளையான தடிமானான பருத்தித் துணியை தட்டில் வைத்துக்கொண்டு மேடைக்குச் சென்று அதன் ஒரு விளிம்பின் இரு முனைகள் தலைவரின் தோள்கள் மீதும் வரும்படி சுற்றி போர்த்தி முள் மரத்தின் இரண்டு முட்களைக் குத்தி முனைகளைப் பொருத்தி  பொன்னாடை போலப் போர்த்தினார். 
பிறகு பல தரப்பட்ட விவசாயிகள் நாடு முழுவதும் ஓடும் முக்கிய ஆறுகளின் தண்ணீரைக் கொண்டுவந்து ஒரு பெரிய கொப்பரையில் ஊற்றி அதில் இருந்து ஒரு குவளை மொண்டு தலைவருக்கு கொடுக்க தலைவர் அதைக் குடித்தார். 
 பிறகு தமிழ்நாட்டின் எட்டு திசையிலும் எல்லையில் இருந்து மண் எடுத்து வரப்பட்டு முப்படைத் தலைவர்களால் அது ஒரு பூந்தொட்டியில் போடப்பட்டு விரவப்பட்டு தலைவர் கையில் கொடுத்து ஒரு மூத்த பெண் விவசாயி  அதில் காவிரி உற்பத்தி ஆகும் இடத்தில் இருந்து கொணரப்பட்ட நீரை ஊற்றி பாரம்பரிய நெல் விதையை ஊன்றினார்.  

 பாதுகாப்புத்துறை அமைச்சர் (சோழர் வாள்போல செய்யப்பட்ட) மூவேந்தர் சின்னம் பொறிக்கப்பட்ட வாள் ஒன்றை அதை வைத்துக்கொள்ளும் உரிமத்துடன் தலைவருக்கு அளிக்க தலைவர் எழுந்து அதைப் பெற்றுக்கொண்டு வாளை உறையுடன் தமது கச்சையில் செருகிக்கொண்டார். 
 தலைவர் நியமித்த புதிய ராணுவத் தலைவர் ஒரு நவீன கைத்துப்பாக்கியை உறையுடனும் பட்டையுடனும் உரிமத்துடனும் தலைவருக்கு கொடுக்க தலைவர் மார்பின் குறுக்காக அணிந்துகொண்டார். 

(ஆவணங்கள் அனைத்தும் சுருக்கமாக மேடையில் வாசிக்கப்படன)
பிறகு அதிபர் மேடையேறி மன்னருக்கான பாதுகாப்புப் படை, அவர்களுக்கான ஆயுதங்கள், கோட்டைப் பாதுகாப்பு பீரங்கிகள் போன்றவற்றிற்கான உரிமங்களை வழங்கினார்.

 ஒரு தூதரும் பதவியேற்றுக் கொண்டார். மன்னர் மற்றும் அதிபர்  இடையே இவர் பாலமாகவும் மன்னருக்கு அரசியல் ஆலோசகராகவும் இருப்பார்.

 பிறகு சபாநாயகர் தலைவரை மன்னராக ஏற்றுக்கொண்ட அனைத்துக்கட்சி தீர்மானத்தை வழங்கினார். 
பதிவுத்துறை அமைச்சர் கோட்டை நிலத்திற்கான பத்திரத்தை வழங்கினார். மன்னர் குடும்ப செலவுகளுக்கு அருகிலிருந்த ஐந்து கிராமங்கள் நிவந்தம் கொடுக்கப்பட்ட பத்திரத்தையும் வழங்கினார். 
இந்த ஐந்து கிராமத்தின் வருமானம் அரசுக்கு சென்று சரிபார்க்கப்பட்டு மன்னர் குடும்பத்திற்கு வழங்கப்படும். மன்னர் குடும்பம் இக்கிராமங்களில் குடியேற முன்னுரிமை அளிக்கப்படும் (மற்றபடி எந்த அதிகாரமும் அக்கிராமங்கள் மேல் மன்னருக்குக் கிடையாது).

 நிதித்துறை அமைச்சர் மன்னர் வங்கிக் கணக்கைத் தொடங்கி அதற்கான காசோலைப் புத்தகத்தை வழங்கினார்.  

 துணை அதிபர் தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் இடைப்பட்ட நிலப்பரப்பு மண் போட்டு நிரப்பப்பட்டு அதில் மன்னருக்கு பிரம்மாண்டமான அரண்மனை கட்டப்படும் என்கிற வாக்குறுதிப் படிவத்தையும் அதற்கான பத்திரத்தையும் கையளித்தார்.

 ஊடகத்துறை அமைச்சர் மன்னரின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஊடகங்கள் வெளியிடும் என்கிற வாக்குறுதிப் படிவத்தையும் கோட்டையின் தொலைதொடர்பு சாதனங்களுக்கான உரிமத்தையும் அளித்தார்.

 போக்குவரத்துத் துறை அமைச்சர் சில வாகனங்களையும், ஒரு குதிரை வண்டியையும் கோட்டைக்கு அளிக்கும் ஆவணத்தைக் கையளித்தார்.

 வனத்துறை அமைச்சர் ஒரு யானை வைத்துக் கொள்ளும் உரிமத்தை அளித்தார்.

 பல மதங்களைச் சேர்ந்த குருமார்கள் வாழ்த்துப் படிவங்களை அளித்தனர். 

 இந்நிகழ்வுகள் அத்தனையும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆவணப்படுத்தி சேமிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. உலக அளவில் பத்திரிக்கையாளர்கள் வந்திருந்தனர். தமிழர்நாட்டின் மூலைமுடுக்குகளில் இருந்தும் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் குவிந்திருந்தனர்.
 
 தலைவருக்கு நேரடி வாரிசு இல்லை. தந்தை வழி உறவில் ஒரு பெண் இருந்தார். அவர் அழைத்து வரப்பட்டிருந்தார். அருகில் இருந்த சிறிய வேலைப்பாடுகள் அமைந்த மர நாற்காலியில் அவரை அமர்த்தி அவரை இளவரசியாக பட்டம் சூட்டும் நிகழ்வு முதலில் நடந்தது.

 பிறகு தலைவர் வணங்கியபடி சற்று குனிந்துகொள்ள சைவ அடியார்கள் பருத்தி துணியை சுருட்டி அதனை சிவனின் சடை போல தலைவரின் தலையில் சுற்றி முடிசூட்டினர். வைணவ அடியார்கள் மயிலிறகை அந்த தலைப்பாகையில் சூடினர். (புதிதாக தோற்றுவிக்கப்பட்ட அரச மதமான) தமிழ்மதம் தழுவிய ஒரு பெரியவர் திருநீற்றை கட்டைவிரலில் எடுத்து தலைவர் நெற்றியில் நாமம் வைத்துவிட்டார். கெட்டி மேளமும் பறையிசையும் எக்காளமும் சங்கும் போர் முரசும் விண்ணதிர முழக்கப்பட்டன. புகைப்படம் எடுக்கும் வெளிச்சம் பல மின்னல்கள் போல அவ்விடம் முழுக்க விழுந்தன.

 பிறகு மன்னர் மேடையிலிருந்து இறங்கி பட்டத்து யானை மீது ஏறி மக்கள் மத்தியில் வலம் வந்து மக்களின் வாழ்த்தினைப் பெற்றார். பூக்கள் தூவ அனுமதி இல்லையாதலால் மக்கள் மஞ்சள் நீரை மன்னர் மீது தெளித்து வாழ்த்துக் கூறினர். சுற்றிவிட்டு மேடைக்கு வரும் பொழுது மக்களின் அன்பு மழையால் மன்னரின் வெள்ளுடை மஞ்சளாக மாறி இருந்தது.

  ஆம்! இனி அன்றாட வாழ்க்கையைப் பற்றி கவலைப்படாமல் வசதியாக அமர்ந்து கொண்டு நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் சிந்திக்க ஒருவர் இருப்பார்.
 உலகை தமிழர்நாடு வழிநடத்தும். தமிழ்நாட்டு அரசாங்கத்தை அவர் வழிநடத்துவார். 
ஒரு மாற்றுத் தலைமையாக இப்போதும் வீற்றிருப்பார்.

 ஈரம் சொட்டச்சொட்ட அரியணையில் அமர்ந்திருந்த மன்னர் எழுந்து சற்று முன்னே வந்து நின்று பணிவாக மக்களை வணங்கினார்.
 வாத்தியங்கள் நின்றன.
ஒரு நொடி எங்கும் அமைதி.
 மன்னர் சட்டென்று நிமிர்ந்து கைத்துப்பாக்கியை விருட்டென்று எடுத்து வானை நோக்கி இருமுறை சுட்டார்.
 அடுத்த நொடி மன்னரின் பாதுகாப்புப் படையும் தமிழர்நாட்டு சேனையும் சேனைத்தலைவர்களும் தளபதிகளும் வான்நோக்கிச் சுட்டனர்.
 கோட்டை பீரங்கிகளும் அரச பீரங்கிகளும் வெடித்து முழங்கின. மக்களின் பலத்த கரகோசமும் ஆரவாரமும் கூச்சலும் விண்ணைப் பிளந்தது. "மன்னர் வாழ்க!", "மன்னர் வாழ்க!" என்று லட்சக்கணக்கான மக்கள் கத்தி இரைந்தனர். அதேநேரத்தில் திட்டமிட்டபடி உலகத் தமிழர்கள் வாழ்த்துக்களை வெளியிட்டனர். 
தலைவரின் 'இனவழி நாடுகள்' கோட்பாட்டை ஏற்றுக்கொண்ட நாடுகளும் உலகத் தலைவர்களும் வாழ்த்துக்களை அடுத்தடுத்து வெளியிட்டனர். 
இணையமே ஸ்தம்பித்தது. உலகம் முழுவதும் அதிர்வலை பரவியது. ஊடகங்கள் கதறி ஓய்ந்தன.

ஆம்! "முடிசூடா மன்னன்" இனி.....

" முடிசூடிய மன்னர் "

தமிழர்நாட்டு மன்னர் வாழிய வாழியவே...!

Thursday, 11 November 2021

மொழி வரைபடம் 1822


மொழி வரைபடம் 1822 

கி.பி. 1822 இல் Serampore missionary வெளியிட்ட இந்திய மொழிவரைபடத்தில் ஒரு பகுதி இங்கே தரப்பட்டுள்ளது.

 வரைபடத்தில் தெளிவாக இருப்பது ஆறுகள் மட்டுமே!

அவற்றைக் கணக்கில் கொண்டு முடிந்தவரை சரியாக கணித்து வரைந்துள்ளேன்.

இக்கோடு செல்லும் வழியில் வடக்கில் உள்ள தற்போதைய பெயர்களையே தருகிறேன்.

 இந்த எல்லைக்கோடு pulikat ல் தொடங்கி வட மேற்காக swrnamuki ஆறு தொடங்கி வளையும் இடத்தில் உள்ள naidupet வழியாக cheyyaru தொடங்கும் இடமான rayachoty வரை செல்கிறது.

[இதன்படி காளத்தி, திருப்பதி தமிழ்ப் பகுதிகள் என்றாகிறது.
 சித்தூர் தெளிவாகவே தமிழ்ப் பகுதி என்று குறிக்கப்பட்டுள்ளது.]

பிறகு இக்கோடு தெற்காக திரும்பி சிறிது உள்வாங்கி தர்மபுரி அருகே சிறிது வெளிநோக்கிச் சென்று சரியாக (காவிரி ஆறு தெற்கு நோக்கி வளையும்) ஒகேனக்கல் வரை வருகிறது.

[இதன்படி கிருஷ்ணகிரி நமது கொள்ளேகால் நமது இல்லை]

பிறகு மேற்கு நோக்கி வளைந்து (கபினி மற்றும் காவரி) ஆறுகள் சேருமிடமான மேகதாது க்கு சற்று முன்னே ஆறு வளையும் இடம் வரை செல்கிறது
(அதாவது தற்போதைய எல்லை).

[இதன்படி மேகதாட்டு அணைப்பகுதி நமது இல்லை]

 இதன் பிறகு எல்லைக்கோடு காவிரி ஆற்றின் மறுபுறம் செல்கிறது ( ஆனால் தற்போதைய தமிழக எல்லை ஆற்றை ஒட்டி அதிகம் உள்வாங்குகிறது).

 எல்லைகோடு பவானி ஆறு தொடங்கும் கொடநாடு பகுதியை கேரள, கன்னட, தமிழக எல்லைப் புள்ளியாக குறிக்கிறது.

 தொடர்ந்து இக்கோடு தெற்காக நொய்யல் ஆறு தொடங்கும் இடத்தைக் கடக்கிறது.

[இதன்படி பாலக்காடு நகரம் வழியாக எல்லைக் கோடு செல்கிறது. இங்கே சிறிது வெளிநோக்கி வளைந்திருப்பதால் பாலக்காடு நகரம் நமது எனலாம்.]

பிறகு பெரியாறு மற்றும் அமராவதி ஆறு எதிர் எதிர் திசையில் தொடங்கும் இடத்தைக் கடக்கிறது. 
இது தற்போதைய வால்பாறை க்கு சற்று மேற்கே உள்ள எல்லை வளைவு எனலாம்.

இங்கிருந்து மலைகள் உள்நோக்கி வளைய எல்லைக் கோடு வெளிநோக்கி வளைந்து கொச்சி அருகே செல்கிறது 

[இதன்படி கோட்டயம் வரை நமது]

இதன்பின் கொல்லம் பகுதி வரை கடற்கரை விடுபடுகிறது.
[அதாவது காயம்குளம் மற்றும் கொல்லம் ஆகியன நமது. திருவனந்தபுரம் திட்டவட்டமாக நமது என்றாகிறது]

ஆனால் இவ்வரைடபத்தில் ஈழம் விடுபடுகிறது.

 கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்றவற்றின் வடக்கு முழுவதும் மராத்தி என்று குறிக்கப்பட்டுள்ளது. 

 அதாவது தமிழகப் பகுதிகளை சரியாக குறித்துள்ளனர் மற்ற பகுதிகள் தோராயமாக வரைந்துள்ளனர் எனலாம்.

Friday, 5 November 2021

தேசிய தனியரசும் பழங்குடி துணையரசும்

தேசிய தனியரசும் பழங்குடி துணையரசும்

 பழங்குடிகளுக்கு தமிழ் தேசியம் முன்வைக்கும் தீர்வு தான் என்ன?

 இன்று இந்திய ஒன்றியத்தில் இருக்கும் மாநிலங்களுக்கு 1947 இல் வழங்கப்பட்ட சுய ஆட்சி உரிமைகள் போல பழங்குடிகளுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.
 அதாவது ஒரு இனம் தன்னுடைய தாய் நிலத்தை தாமே ஆள்வது தேசியம் .
அவர்களுக்கான அரசு தேசிய தனியரசு.
இது எந்த அரசுக்கும் கட்டுப்படாமல் தனித்து இயங்கும்.

 இந்த தனியரசில் பூர்வீகமாக மிகவும் சிறுபான்மையாக வாழும் மக்கள் குறிப்பாக காடுகளுக்குள் திரிந்த மொழி பேசும் பழங்குடிகள் தனிநாடாக இயங்குவது கடினம்.
 எனவே அவர்கள் நிலம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் சிதறி இருந்தாலும் அதனை தனி மாநிலமாக அறிவித்து அதற்கு நிலத்தின் மீதான உரிமையையும் காவல் காக்கும் உரிமையும் அவர்களுக்கே வழங்க வேண்டும்.
 அம்மாநிலத்தில் அவர்களுக்கு என்று ஒரு துணையரசு இயங்கும்.
 இந்த துணை அரசாங்கத்தை ஒரு முதலமைச்சரின் தலைமையில் சுதந்திரமாக இயங்க அனுமதிப்பது தேசியத்தின் கடமையாகும்.
 பழங்குடி மக்களின் தம் நிலத்தை யாரிடமும் இழக்காமல் வேற்றின குடியேற்றம் தடுக்கப்பட்டு தமக்கான தனிச் சட்டத்தை இயற்றிக்கொண்டு தம்முடைய அடையாளத்துடன் தற்சார்பு பொருளாதாரத்துடன் வாழ்வது இதன்மூலம் உறுதி செய்யப்படும்.
 தேசிய அரசாங்கத்துடன் அவர்களுக்கு பெரிதாக எந்த கொடுக்கல் வாங்கலும் இருக்கக்கூடாது.

  தேசிய அரசு ராணுவ பாதுகாப்பு அளிப்பதற்காக மட்டும் ஒரு குறிப்பிட்ட வரியை வாங்கிக் கொள்ள வேண்டும். 
 அந்த பழங்குடி மக்கள் தேசிய அரசிடம் எதையாவது எதிர்பார்த்தால் அதை அவர்களது முதலமைச்சர் மூலம் கேட்டு வாங்கி பெற்றுக் கொள்ளவேண்டும்.
 அதற்கான வரியை செலுத்த வேண்டும். உதாரணமாக போக்குவரத்து, கல்வி, தொலைத்தொடர்பு, வியாபாரம், கட்டமைப்பு போன்ற விடயங்களில் தேசிய அரசிடம் நடக்கும் கொடுக்கல்-வாங்க ஒப்பந்தம் போடப்பட்டு அதற்கான வரிகள் விதிக்கப்பட்டு நடைபெற வேண்டும்.
 மற்றபடி மாநில தற்சார்பு விஷயங்களில் தேசிய அரசு அந்த மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் தலையிடக்கூடாது.
 மாநில அரசுக்கு பெரிய அளவில் நிதி தேவைப்பட்டால் அதை தேசிய அரசிடம் வட்டியில்லாத கடனாக பெற்றுக்கொண்டு பிறகு சிறிது சிறிதாக அடைத்துக்கொள்ளலாம்.
 மாநில அரசு நிதியோ, ஆட்களோ, ராணுவமோ அல்லது மற்ற வசதிகளோ தேவைப்படும் பட்சத்தில் தேசிய அரசிடம் கடனுக்கு அல்லது தொகை கொடுத்து வாங்கிக்கொள்ளலாம்.

 இதேபோல தேசிய அரசு (குறிப்பாக போர்க்காலங்களில்) நிதியோ ஆட்களோ அல்லது மற்ற விடயங்களோ திரட்டும்போது மாநில அரசுகள் உதவ வேண்டும்.

 இப்படி தேசிய தனியரசும் மாநில துணையரசும் ஒருவருக்கு ஒருவர் உதவியாக தமது தனித் தனி அடையாளத்துடன் ஒற்றுமையாக வாழவேண்டும்.

 இரண்டு பெரிய இனங்களுக்கு மத்தியில் அல்லது ஒரு இனத்தில் எல்லையோரம்தான் இத்தகைய பழங்குடிகள் அல்லது இனச் சிறுபான்மையினர் இருப்பார்கள்.

குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநில துணையரசு தேசிய அரசுக்குள் தொடர்ந்து இருக்க விரும்புகிறதா என்று பொது வாக்கெடுப்பும் நடத்தவேண்டும்.

 தொடர விரும்பாத பழங்குடிகள் வெளியேறலாம்!

அவர்கள் தனிநாடு ஆனாலோ அல்லது அண்டை இன தேசிய அரசுடன் இணைந்தாலோ துரோகிகளாக கருதப்படக்கூடாது.

 இதே போல ஒரு பெரிய தேசிய இனத்தின் தனியரசு அதைவிட சிறிய தேசிய தனியரசை தமது மாநிலமாக இருக்க அழைக்கலாம். 
 ஆனால் வலுக்கட்டாயமாக ஒரு சிறிய இனத்தை தேசிய அரசு ஆக்கிரமிக்கக் கூடாது.

 மாநில உரிமை பெற்ற இனம் சற்று பெரிய நிலப்பரப்பைக் கொண்டது என்றால் தேசிய அரசுடனான கொடுக்கல் வாங்கலில் வட்டி இருக்கும்.