பள்ளருக்கு ஏன் வெள்ளாளர் மீது ஆசை?!
இடையர் (கோனார்) தம்மை "யாதவர்" என்றாக்கக் கோரினால்...
கம்மாளர் (ஆசாரி) தம்மை "விஸ்வகர்மா" என்றாக்க க் கோரினால்...
எவ்வளவு அபத்தமாக இருக்குமோ அத்தகையது பள்ளர் தம்மை "தேவேந்திரகுல வெள்ளாளர்" என்றாக்கக் கோருவது...
இது புதிதல்ல.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு தலைதூக்கிய சாதிய உணர்ச்சியின் விளைவாக உருவான சங்கங்கள் தமது இயல்பான சாதிப் பெயரை மறைத்து அதைத் தழுவிய சமஸ்கிருதப் பெயர்களையே வைத்துக் கொண்டன.
(சமஸ்கிருதப் பெயர்கள் 1500 களிலேயே வேற்றின ஆட்சியால் அறிமுகப் படுத்தப் ப்பட்டன)
பல்வேறு சாதிகள் ஒரு பட்டத்தை பயன்படுத்திய காலத்தில் அப்பட்டத்தை அடிப்படையாக வைத்து அந்த அனைத்து சாதியினரையும் ஒரு குடையின் கீழ் திரட்டுவது 150 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அரசியல் ஆகும்.
இதை முதலில் வெற்றிகரமாகச் செய்துகாட்டியது நாடார் பட்டத்தைப் பயன்படுத்திய சாதிகள்.
(இன்று நாடன் என்கிற பட்டத்தை நாடார் ஆக்கிவிட்டனர்.
அதற்குள் எத்தனை சாதிகள் சமாதியாகி உள்ளன என்று கண்டுபிடிக்கவே முடியாது)
இவர்களே முதலில் தம்மை சத்திரியர் என்று அறிவித்து பூணூல் போட்டு
சத்திரிய மடங்களை நிறுவியவர்கள்.
இவர்களே பாண்டியன் என்று பெயர்வைத்துக் கொள்ள ஆரம்பித்தவர்கள்.
பட்டத்தை அடிப்படையாக வைத்து சாதியைத் திரட்டுவது,
தாங்கள் போர்க்குடி (சத்திரியர்) என்று அறிவிப்பது,
அப்படியே ஏதாவது ஒரு மன்னர் பரம்பரைக்கு உரிமை கோருவது.
இது அன்றைய நாடார்கள் காட்டிய வழி.
இதுதான் நூறு ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பாக நடந்த அரசியல்.
அதாவது ஆங்கிலேயர் வெளியேறும் சூழல் வந்தபோது அதுவரை இருந்த தேசிய உணர்வு மங்கி மொழியுணர்வு தலைதூக்கியபோல
மொழி அடிப்படையில் மாநிலம் அமையப் போவதை அறிந்த மக்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற ஏதாவது ஒரு அடையாளத்தின் கீழ் ஒன்றிணையத் தொடங்கினர்.
சாதியாக இணைவதை விட பட்டத்தின் அடிப்படையில் இணைவது அதிக எண்ணிக்கையை தருவதால் அதிக பலனைத் தந்தது.
இப்படி போலியாக உருவாக்கப்பட்ட சாதிகள்தான் கவுண்டர், தேவர், வன்னியர், நாடார், பிள்ளைமார், பார்கவர் போன்றவை.
(இதில் நேர்மையாக நின்றவர்கள் பறையர் மட்டுமே!
பிற்பாடு அவர்களையும் ஆதிதிராவிடர் ஆக்கிவிட்டனர்.
தற்போது அதை பரையர் ஆக்க முயற்சி நடக்கிறது)
அதாவது இந்த அரசியலின் படிநிலைகள்,
1) ஒரு சாதியின் இயல்பான பெயரை சமஸ்க்கிருதமாக குழப்புவது
2) பட்டத்தைப் பொதுவாக வைத்து வேறொரு சாதியுடன் குழப்புவது
3) சாதி வரலாற்றை புராணங்களில் வரும் கதாபாத்திரத்துடன் அல்லது இலக்கியங்களில் வரும் குறிப்பிட்ட மக்களுடன் குழப்புவது
4) சான்றிதழில் உள்ள பெயரை மாற்றிக் கொள்வது
5) ஏதேனுமொரு கடவுளுடன் தொடர்புபடுத்திக் கொள்வது.
6) ஏதாவதொரு கல்வெட்டின் சொற்களைத் திரித்து பயன்படுத்துக் கொள்வது.
7) ஏதேனுமொரு மன்னர் பரம்பரை வாரிசுகளாக அறிவித்துக் கொள்வது
8) மொழிதாண்டி வேறொரு சாதியையும் துணைக்கு அழைத்துக் கொள்வது
செந்தில் மள்ளர் செய்வது இந்த அருதப்பழைய அரசியலைத்தான்.
சரி!
இதை தனித்தனியாக பகுத்து ஆராய்வோம்.
---------
தேவேந்திரன் :-
இந்திரன் தமிழ்க் கடவுள் இல்லை என்பது பாவாணர் கூறிய கருத்து.
அவரது பார்வையில் இந்திரன் பர்மாவை ஆண்ட அரசன்.
ஐராவதி ஆறும் வெள்ளை யானையும் அங்கேதான் காணப்படுகிறது.
திருக்குறளில் உள்ள வேற்றுமொழி சொற்களைப் பட்டியலிட்ட அவர் இந்திரன் என்பதை முதலில் வைத்துள்ளார்.
தெய்வம் + இந்திரன் = தெய்வயிந்திரன் என்றுதான் வரவேண்டும்.
தேவ + இந்திர = தேவேந்திர என்றால் இது சமஸ்கிருதம்.
அதாவது சமக்கிருதத்தில் இரண்டு உயிர் எழுத்துக்கள் புணர்ந்து ஒரு உயிரெழுத்தையே தரும்
(எ.கா: சூர்ய + உதயம் = சூர்யோதயம்).
-------
வேளாளர்:-
வேளாளர் - வெள்ளாளர் வேறுபாடு பற்றி பலருக்கு குழப்பம் இருக்கலாம்.
வேள் என்றால் விருப்பம் (வேட்கை).
வேளாளர் என்பவர் விருப்பத்தை அடிப்படையாக் கொண்டவர்.
இது போர்த் தொழிலை விரும்பி ஏற்றவரைக் குறிக்கப் பயன்பட்டது.
அதாவது வேட்டையாடுதலை அடிப்படையாக் கொண்டவர்கள்.
வேளிர், வேளாளர், வேணாட்டினர், வேட்டுவர் போன்ற சொற்கள் மன்னருக்கு அடங்கிய (அல்லது அடங்காத) சிற்றரசர்களைக் குறிக்கும்.
---------
வெள்ளாளர்:-
வெள் என்பது வெள்ளை நிறத்தைக் குறிக்கும்.
வெள்ளாளர் என்பவர் வெள்ளையாக இருக்கும் (அரிசி மற்றும் பருத்தி) வெள்ளாமையை அடிப்படையாக் கொண்டு வாழ்ந்தவர்கள்.
இவர்கள் உழவர்கள் கிடையாது.
------
மள்ளர்:-
இந்த சொல்லுக்கு வீரன் என்றே பொருள். செந்தில் மள்ளர் பேசும் திணை அரசியல் இந்த சொல்லாலேயே தகர்ந்து போகிறது.
ஆம்! மள்ளர் மருத நிலத்தில் மட்டுமல்லாமல் வேறு திணைகளிலும் வாழ்ந்துள்ளனர்.
"மள்ளர் மள்ள" என்று போற்றப்படுபவன் தொண்டைநாட்டு இளந்திரையன்.
மேலும் மள்ளர் எனும் சொல் வீரத்தைக் குறிப்பதாக கீழ்க்காணும் இலக்கியச் சான்றுகள் உள்ளன,
"மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும் "
[ஐங்குறுநூறு 371]
“ஆயிரம் விரித்த மைம்மாய மள்ள”
[பரிபாடல் 3 – 41]
“திருவின் கணவ! பெருவிநல் மள்ள"
[பரிபாடல் 3 - 90]
"மாலை மார்ப! நூலறி புலவி!
செருவில் ஒருவ! பொருவிறல் மள்ள"
[திருமுருகாற்றுப்படை]
பள்ளர் என்பதை மள்ளர் என்பதுடன் திரிக்க இவர்கள் காட்டும் சான்று மிகவும் பிற்காலத்தில் அதாவது நாயக்கர் காலத்தில் தோன்றிய பள்ளு சிற்றிலக்கியச் சான்றுகள்.
-------
பள்ளர்:-
பள்ளத்தை அடிப்படையாக் கொண்டு வாழ்வோர் பள்ளர்.
அதாவது நிலத்தை உழுது பள்ளமாக்கி தண்ணீர் தேக்கி செயற்கையான சேற்றினை உருவாக்கி அதில் உணவுப் பொருளை விளைவிப்பவர்கள்.
இவர்களே உண்மையான உழவர்கள்.
(பள்ளர் என்பதே சரியான பெயர்!
பள்ளி என்பாரும் பள்ளரே!)
அதாவது பள்ளர் விவசாயம் செய்து தருவார் வெள்ளாளர் அதை அறுவடை செய்து விற்று தமக்கொரு பங்கை எடுத்துக்கொண்டு மீதியை பள்ளருக்குத் தருவார்.
(காராளர் என்ற பிரிவு பிற்காலத்தில் தோன்றியது.
இவர்கள் மழைப்பொழிவை நம்பி விவசாயம் செய்பவர்கள்.
இவர்கள் பள்ளர் - வெள்ளாளர் களுக்கு இடைப்பட்டவர்கள்.
அதாவது சிறிய அளவிலான நிலம் வைத்திருப்பவர்.
தானே உழுது பயிரிட்டு தானே உண்டு மீதியை விற்பனை செய்து வாழ்பவர்)
நிலவுடைமை தோன்றும் முன் வரை நிலம் பள்ளர்களுக்குச் சொந்தமாகவே இருந்தது.
இதை மாற்றி நிலத்தை கோயில் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்து வெள்ளாளருக்குக் குத்தகைக்குக் கொடுத்தது சோழர் ஆட்சி.
இந்த காலகட்டத்தில்தான் பல சாதியினரும் வெள்ளாளர்களாக மாறினர்.
அதாவது அக்காலகட்டத்தில் சாதி என்பது தொழிலின் அடிப்படையில் இருந்து பிறப்பின் அடிப்படையில் மாறத்தொடங்கிய காலகட்டம்.
சோழர் காலத்தில் இதனாலேயே அகம்படி மறவர், செட்டிச்சி பாப்பாத்தி, உழுப் பறையர் போன்ற இரட்டை சாதிப்பெயர்கள் இருந்தன.
சோழர் ஆட்சி பார்ப்பனர்களுக்கு ஆதரவானது என்று பலரும் கூறுவர் ஆனால் அது உண்மையில்லை.
சோழர் ஆட்சியில் செழிப்புடன் இருந்தவர்கள் வெள்ளாளர்கள்தான் என்று சோழர்கால நிலவுடைமை பற்றி ஆராய்ந்து எழுதி பட்டம்பெற்ற ஆய்வாளர் மே.து.ராசுகுமார் கூறுகிறார்.
பிற்பாடு நாயக்கர் ஆட்சியில் சாதி என்பது தனது முழுமையான கட்டமைப்பை அடைந்தது.
அதுவரை ஏதோ பெயருக்கு இருந்த சாதிய ஏற்றத்தாழ்வு நாயக்கர் ஆட்சியில் விஸ்வரூபம் எடுத்தது.
தீண்டாமையும் நடைமுறைக்கு வந்தது.
நாயக்கர்களால் பள்ளர்கள் குறிவைத்து சுரண்டப்பட்டு ஒடுக்கப்பட்டனர்.
[மேலும் அறிய தேடுக "நாயக்கர் ஆட்சியில் தமிழகம் வேட்டொலி" ]
இதற்கு அக்கால சிற்றிலக்கியங்களான பள்ளு மற்றும் சதகம் நூல்களில் பல சான்றுகள் உள்ளன.
பள்ளர் மட்டுமல்லாமல் எல்லா தமிழ்ச்சாதிகளும் ஒடுக்கப்பட்டன.
வந்தேறிகள் கைக்கு நிலவுடைமை மாறியது.
[தேடுக "நிலவுடைமை வரைபடம் வேட்டொலி" ]
பள்ளர்கள் தாழ்ந்துபோக தெலுங்கர்களான நாயக்கர்களின் ராணுவ ரீதியான ஆட்சியில் உற்பத்தியும் அதைச் செய்யும் தொழிலாளர்களும் அளவுக்கதிமாகச் சுரண்டபட்டதே காரணம்.
நாயக்கர் ஆட்சி நிலைபெறும் முன்பு கி.பி.1528-ம் ஆண்டில் கிருஷ்ணதேவராயர் காலத்தைச் சேர்ந்த செப்பேடு பள்ளர் சமூகத்தினருக்கு பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தினசரி ஆறுகால பூஜைகள் செய்வது, விழாக்காலங்களில் கோயிலில் கொடி ஏற்றுவது, பிராமணர்கள் நடத்தும் யாகசாலை பூஜை களுக்கு ஏற்பாடு செய்து தருவது, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர் தருவது ஆகிய கடமைகள் வழங்கப்பட்டிருந்த செய்தியைக் கூறுகிறது.
(இன்றும் பள்ளர்களுக்கு பழநி முருகன் கோவில், நெல்லையப்பர் கோவில், மீனாட்சியம்மன் கோவில் போன்ற பெரிய கோவில்களில் பரிவட்டம் கட்டி முதல்மரியாதை செய்யப்படுகிறது)
நாயக்கர் காலத்தில் அவர்களுக்கு முழுமையாக அடங்காத மறவர் பாளையங்களில் பள்ளர்கள் அதிகம் தாழ்ந்துபோகவில்லை (இன்றும் கூட).
இதனாலேயே மறவர் - பள்ளர் ஒற்றுமையைக் குலைக்கும் அரசியல் திட்டமிட்டு திராவிட வாதிகளால் செய்யப்பட்டு வருகிறது
பள்ளர்கள் முதலில் செய்யவேண்டியது பட்டியல் வெளியேற்றம்.
அதாவது பட்டியல் சாதி (எஸ்.சி) முத்திரையை அழித்துவிட்டு பள்ளர் என்கிற பெயரிலேயே தமது மக்கட்தொகை சதவீதத்திற்கு ஏற்ப (அதாவது மக்கட்தொகையில் 4%) இடவொதுக்கீடு பெறுவது.
ஆனால் சமைத்தமொழியில் அல்லது வேற்றுசாதியினரின் ஒரு பெயரை தமது அடையாளமாக ஆக்க முயல்வது தவறு.
இதன்மூலம் சக தமிழ்ச்சாதியின் வெறுப்பை பெறுவது மொத்த தமிழினத்திற்கு கேடு தரும்.
ஆகையினால் "பள் எனும் வேர்ச்சொல்தான் பாண்டியர் என்று ஆயிற்று" என்று பாவாணர் கூறுவதாக பொய் கூறும் மள்ளரிய மடயர்களை (மடையர் அல்ல) புறந்தள்ளுங்கள் பள்ளர்களே!
பள்ளர் என்கிற பெயரில் அப்படி என்ன குறையிருக்கிறது என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
நீங்கள் யாரென்று கேட்டால் "பள்ளர்" என்று நெஞ்சை நிமிர்த்திக் கூறுங்கள்.
நீங்கள்தான் ஆதி உழவர்.
நீங்கள் மருத நில நாகரீகத்தைத் தோற்றுவித்தவர்கள்.
தமிழர் அனைவரையும் போல நீங்களும் பாண்டியர்கள்தான்.
தேவேந்திரன், மள்ளர் போன்ற திரிபுகளை ஆதரிக்காதீர்கள்.
நாங்கள் மட்டும்தான் பாண்டியர் என்று எண்ணாதீர்கள்.
மற்றபடி....
வந்தேறி தெலுங்கன் கருணாநிதி தனது சின்னமேளம் சாதியை இசைவேளாளர் என்று மாற்றியபோதும்
அவர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்.பி.சி) சலுகை கொடுத்தபோதும்
அவர்களுக்கு சாதி சங்கம் (முத்தமிழ் மன்றம்) அமைத்து பெரிய அளவு நிலத்தையும் கட்டிடத்தையும் நன்கொடையையும் வாரி வழங்கியபோதும்
அவர்களுக்கே முதன்முதலாக திருமண நிதி (மூவலூர் ராமாமிர்தம் திட்டம்) வழங்கிய போதும்
எதிர்க்காமல் விட்டது தமிழர் அனைவரின் மாபெரும் தவறுதான்!
தமிழர்கள் அனைவரும் பள்ளர்களை ஆதி உழவர் என்று ஒத்துக்கொள்ள வேண்டும்.
நெல் நாகரீக முன்னோடிகள் பள்ளர்களே என்றும் ஒத்துக் கொள்ளவேண்டும்.
அவர்களின் பட்டியல் வெளியேற்றத்திற்கு முழு ஆதரவு தந்து தாமும் அதே வழியில் நடக்கவேண்டும்.
இனியாவது தமிழ்ச் சாதியினர் அனைவரும் விழித்துக்கொண்டு ஒற்றுமையாக தத்தமது மக்கட்தொகை சதவீதத்திற்கு ஏற்ப தத்தமது இயல்பான பெயரிலேயே இடவொதுக்கீடு பெற உறுதியேற்க வேண்டும்!
Thursday, 23 July 2020
பள்ளருக்கு ஏன் வெள்ளாளர் மீது ஆசை
Subscribe to:
Post Comments (Atom)
கீழே உள்ள மத்திய அரசு 1951 அவணத்தில் தனிப்பட்ட வேளாளர் என்ற சாதி பெயர் எங்குமே இல்லை.
ReplyDeleteஆதி உழவர் வேளாளர் இல்லை தமிழகத்தில் எவரும் வேளாளர் கிடையாது.
இப்போது வேளாளர் என்று சொல்பவர்கள் பெயர் வெள்ளாளர் என்று உள்ளது.
நான் சொன்ன நம்ப மாட்டீங்க. கீழே உள்ள மத்திய அரசு இணையத்தில் பார்த்துக்குங்க...
http://lsi.gov.in:8081/jspui/handle/123456789/6416
http://lsi.gov.in:8081/jspui/handle/123456789/6441
http://lsi.gov.in:8081/jspui/handle/123456789/6440
http://lsi.gov.in:8081/jspui/handle/123456789/6444
பள்ளர்கள் வெள்ளாளர் பெயர் கேட்க வில்லை.
ReplyDeleteஅவர்கள் தொழில் பெயரான வேளாளர் இணைத்து தான் கேட்கிறார்கள்.
1951 மத்திய அரசு ஆவணத்தில் தேவேந்திர குல வேளாளர் என்ற பெயர் ஏற்கனவே உள்ளது...
This comment has been removed by the author.
ReplyDeleteஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதியில் பெய்யும் மழை நீர், தங்கள் பகுதிக்கு வந்துவிடக்கூடாது, வந்தால் அது தீட்டு என்று கருதியே, ஆதிக்க சாதிகள் அம்மக்களை பள்ளமான நிலத்தில் தங்க வைத்தனர். பள்ளமான இடத்தில் வாழ்வதாலேயே , அந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பள்ளர் என்று பெயர் வந்ததாகப் படித்துள்ளேன். ஆனால் உங்கள் கருத்து வேறுவிதமாக உள்ளதே?
ReplyDeleteஇந்த கட்டுரையாளர் முன்னுக்குப்பின்னாக பெரும் முரணாக தகவலை பதிவுசெய்திருக்கிறார். அவரது பதிவிலேயே இருக்கும் முரண் இது!!
ReplyDeleteஒரு இடத்தில்
"நெல்நாகரீக முன்னோடிகள் பள்ளர் என்கிறார்?!
அடுத்த பத்தியில்
*வெள்ளாளர்* என்போர் பள்ளர் அல்ல அவர்கள்(வெள்ளாளர்)அதாவது *வெள்ளையாக உள்ள அரிசி!* *உற்பத்தியாளர்கள்* *என்கிறார்.அரிசி வெள்ளை நிறம்.அதனால் அதை விளைவிப்பவர் வெள்ளாளராம்?!��*
*நெல்வேறு* ! *அரிசி* *வேறு* என்ற கண்டுபிடிப்பை செய்த இந்த கட்டுரையாளருக்கு *நோபல் பரிசே*' வழங்கலாம்!!
மள்ளர் என்பது வெறும் வீரரை மட்டுமே குறிக்கும் என்கிறார் இக் கட்டுரையாளர்.
இது முற்றிலும் தவறான தகவல் சங்க இலக்கியம் பற்றியோ?!நிகண்டுகள் பற்றியோ எந்த அறிவும் இல்லாதவர் எழுதியுள்ள தகவல்தான் இவை.
“ "அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும்
வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்" ”
—- என்று திவாகர நிகண்டும்.
“ "செருமலை வீரரும் திண்ணியோரும்
மருத நில மக்களும் மள்ளர் என்ப" ”
—- என்று பிங்கல நிகண்டும் கூறுகின்றன.
கம்பராமாயணத்தில் மள்ளர் இனம்!மள்ளர் குலம் அதாவது பள்ளர் களை "குல மள்ளர் "என்ற சொல்லாலே கம்பர் குறித்துள்ளார்.
அதாவது மள்ளர் என்பதை இனமாகவும்,குலமாகவும் கம்பர் குறிப்பிடுகிறார்.
எனவே *மள்ளர்* என்ற சொல் வீரரை மட்டும் குறிக்கவில்லை! மள்ளர் என்றால் *வீரர்* / *உழவர்* என்ற இரண்டையுமே குறிக்கும் ,அது பள்ளரைத்தான் குறிக்கிறது என்பதற்கு இவையே போதுமான தக்கசான்றுகளாகும்.
இதைப்பற்றியெல்லாம் எதுவும் அறியாது அல்லது தெரிந்தே வேண்டுமென்று காழ்ப்புணர்வில் பள்ளர்/மள்ளர் வரலாற்றை மடைமாற்ற இந்த கட்டுரையாளர் முயன்றிருக்கிறார்.
மனதளவில் அவர் பள்ளர் வரலாற்று பெருமையை தாங்கிக்கொள்ளமுடியாமல் அதை திரித்துவிடுகிற காழ்ப்புணர்ச்சி உளவியல் அடிப்படையிலேயே சிந்தித்து இக்கட்டுரையை வடித்துள்ளார் என்றே எண்ணத்தோன்றுகிறது.
*எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு!!*
கிறுக்குத்தனமாக இருக்கிறது
ReplyDeleteஇந்த கருத்தை நீக்கப் போகிறேன்.
அரிசி வேறு நெல் வேறு என்று நான் எங்கே சொன்னேன்?!
நெல்நாகரீகம் என்பது ஒரு நெல்லை பல மடங்கு பெருக்கி உணவுத் தேவையை எளிதாக பூர்த்தி செய்தது.
இதற்கு விவசாயிகள் மட்டும் போதாது. கால்நடை வேண்டும். கருவிகள் வேண்டும். காவலாளி வேண்டும். உரம், களையெடுத்தல், தண்ணீர் பாய்ச்சுதல் என பல விதமாக வேலைகள் உண்டு. அதனால் பல தரப்பட்ட தொழில்களும் அதைச் செய்யும் குடும்பங்களும் உருவாயின.
இந்த உற்பத்தி முறையிலிருந்து அரிசியை எடுத்து அதை வைத்து தொழில் செய்த குடும்பங்கள் பின்னர் வெள்ளாளர் ஆயினர்.
பள்ளத்தை உருவாக்கி அதில் தண்ணீர் விட்டு சேற்றை உருவாக்கி நெல்லை நட்டு இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர்கள் இதற்கு முன்னோடி.
அவர்களே பள்ளர்கள்!
அதற்காக ஒட்டுமொத்த நெல்நாகரீகமும் அவர்களுடையது என்றாகாது!
என் பதிவினைப் படித்தாலே இதற்கான பதில் கிடைத்துவிடும்.
மள்ளர் பற்றிய இலக்கிய சான்றுகளை ஏற்கனவே பதிவில் கொடுத்துள்ளேன்.
திரும்பத் திரும்ப முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டாம்.
வேளாளர் என்கிற பெயர் பற்றியும் பதிவிலேயே இருக்கிறது.
வெள்ளாளர் பிரமணர்கள் போல் பல்லவர்காலத்தில் தெலுங்குப்பகுதியில் இருந்து வளமான காவிரி பகுதிக்கு குடியேற்றப்பட்டவர்கள் என்று நீலகண்ட சாஸ்திரியின் நேரிடை மாணவி மீனாட்சி தமது (1936) பல்வர்கால ஆட்சி மற்றும் நிர்வாகம் என்ற தனது முனைவர் பட்ட ஆய்வேட்டில் நிறுவியுள்ளார்..ஏற்கீர்களா??
ReplyDelete