உண்மையான KGF நாயகன்
1989 இல் கோலார் தங்க சுரங்கத்தில் தங்கம் காலியானதும் அதை நம்பி வாழ்ந்து வந்த தொழிலாளர்களை (95% தமிழர்கள்) காப்பாற்ற பெரும் முயற்சி செய்தவர் ஒரு பார்ப்பனர்.
ஆம்! அன்றைய சுரங்கத் தொழில்நுட்ப இயக்குநராக இருந்த நடராஜன் ஐயர் தான் அன்று கேள்விக்குறியாகி நின்ற பத்தாயிரம் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை காத்து நின்றவர்!
தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைத் தக்கவைக்க வெளிச் சந்தையில் தங்கம் விற்கும் விலையை விட அதிக செலவு செய்து தங்கம் வெட்டி எடுக்க வைத்தவர்!
இவரை பதவி நீக்கம் செய்தபோது கோலார் தங்க வயலே கொதித்து எழுந்து அவரை மீண்டும் பணியில் அமர்த்தியது!
இரவு பகலாக ஆய்வு செய்து அப்பகுதியில் மேலும் புதைந்திருக்கும் மூன்று தங்க மலைகளைக் கண்டுபிடித்தார்!
ஆனால் தொழில்நுட்பம் இல்லையென்று அவற்றைத் தோண்டியெடுக்க அரசு மறுத்துவிட்டது.
அவர் இருந்தவரை மாற்று ஏற்பாடுகள் செய்து தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புக்கு வழி செய்தார்!
அவர் காலத்துக்குப் பிறகுதான் கோலார் தொழிலாளர்கள் அனாதையாகிப் போனார்கள்!
No comments:
Post a Comment