Thursday, 6 November 2025

வானொலி யில் நிலவிய தெலுங்கு ஆதிக்கம்

வானொலி யில் நிலவிய தெலுங்கு ஆதிக்கம்

ஆந்திரம் பிரிந்து ஒரு மாதம் கடந்து விட்டது.
ஆனால் மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பது போல் தெலுங்கு மொழி இன்னும் நமது ராஜ்ய ரேடியோ நிலையத்திலிருந்து ஒழியவில்லை.
காலையில் எழுந்து ரேடியோவை திருகினால் நாம் கேட்கும் மொழி தெலுங்காகத்தான் இருக்கிறது.
தமிழில் பாடகர் பாடினாலும் இன்னார் இன்ன ராகம் இன்ன தாளத்தில் பாடுகிறார் என்பதை தெலுங்கில் தான் சொல்லுகிறார்கள்!
பாடகர்களிலும் பெரும்பாலோர் இன்னமும் தெலுங்கில் பாடுவதை விட்டதாக தெரியவில்லை.
ரேடியோ நிலைய அதிகாரிகள் வெறும் தமிழ் மட்டும் பாடுபவர்களை தரக்குறைவாக நடத்துகிறார்களாம்!
தெலுங்கிலும் பாடாவிட்டால் பாட அனுமதிக்க முடியாது என்று மிரட்டுகிறார்களாம்!
ஆந்திரம் பிரியும் முன்னர்  இந்த நிலையில் இருந்த்தை நாம் ஓரளவு சகித்துக் கொள்ள முடிந்தது.
ஆனால் ஆந்திரம் பிரிந்த பின்பும் அதே நிலை தான் என்றால் இப்படி ஒரு ரேடியோ நிலையம் அவசியம் தானா என்ற கேள்வி ஒவ்வொரு தமிழனுடைய உள்ளத்திலும் வேதனையுடன் தலைத் தூக்கி நிற்பது நியாயமே.
ஆந்திரர்களுக்கு விஜயவாடா ரேடியோ நிலையம் தனியாக இருக்கிறது.
செகந்திராபாத் ரேடியோ நிலையமும் முழுக்க ஆந்திர மயமே. அப்படி இருக்க தமிழ் ராஜ்ய ரேடியோ நிலையமும் தெலுங்கு மயமாகத்தான் இருக்க வேண்டுமா?!
விஜயவாடா ரேடியோ நிலையத்தில் தெலுங்கு பாடகர்கள் தமிழ் பாட்டுகளாக பாடிக் கொண்டிருந்தால் ஆந்திரர்கள் சும்மா இருப்பார்களா?!
தமிழர்கள் ஆந்திரர்களைப் போன்று வெறி பிடித்தவர்களாக இருக்க வேண்டாம் ஆனால் தங்கள் தாய்மொழி பற்றை கூடவா விட்டு விட வேண்டும்?!  சென்னை ரேடியோ நிலையத்தில் சினிமா ரிக்கார்டுகள் ஒளிபரப்பும் நேரத்தில் இந்தி ரெக்கார்டு போடுவதைப் போன்று தெலுங்கு ரெக்கார்டுகளையும் போட்டு தொலைத்து விட்டு போகட்டும்!
நாம் அக்கறைப்படவில்லை!
ஆனால் ஒவ்வொரு நிகழ்ச்சியும் முக்கால்வாசிக்கு மேல் தெலுங்கு மயமாக இருப்பதை உணர்ச்சி உள்ள தமிழர்களால் சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை!
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனிக்க வேண்டும் இல்லை என்றால் 'தெலுங்கு ஒளிபரப்பு எதிர்ப்பு இயக்கம்' தமிழர்களால் தொடங்கப்பட நேரும்.
இதற்கு அறிகுறியாக இப்பொழுது தமிழ் ராஜ்யத்தில் ரேடியோ பெட்டி வைத்திருப்போர் தங்கள் தங்களின் அதிருப்தியை ரேடியோ நிலைய அதிகாரிகளுக்கும் மத்திய அரசாங்க மந்திரி அகர்வாலுக்கும் நமது ராஜ்ய மந்திரி சபை பிரச்சார இலக்காவிற்கும் மகஜர் மூலம் தெரியப்படுத்த கேட்டுக்கொள்கிறோம்.
கட்சி பாகுபடற்ற முறையில் தமிழர்கள் ஒன்று கூடி தங்கள் எதிர்ப்பை நேரிய முறையில் ஆட்சியாளருக்கு தெரிவிக்க வேண்டுகிறோம்!
தமிழகத்தில் எந்த கட்சி கூட்டம் நடத்தினாலும் இது பற்றி தீர்மானம் நிறைவேற்றி ஆட்சி பீடத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம்!
தமிழ் ராஜ்யத்திலேயே தமிழர்களின் உரிமை பறிக்கப்படுவதை தமிழர்கள் ஒன்றுபட்டு எதிர்க்க முற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கூற கடமைப்பட்டு உள்ளோம்.
இசைத்தமிழ் தழைக்க, தமிழர்களின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தமிழகத் தலைவர்கள் பாதங்களில் இதை சமர்ப்பிக்கிறோம்.

கா.மு.ஷெரீப்
தமிழ் முழக்கம்
01.11.1953

Wednesday, 5 November 2025

ஊர்திரும்ப சொல்லும் இட்லி கடை

ஊர்திரும்ப சொல்லும் இட்லி கடை

 பலரும் இட்லி கடை படத்தை தரக்குறைவாக விமர்சித்துக் கொண்டிருந்தனர்.
 அதாவது "கையால் மாவரைப்பது அசுத்தம்"
"பிற்போக்காக இருக்கிறது"
 "உண்மையான கிராம வாழ்க்கை இப்படி இல்லை"
 "தனுஷ் சம்பாதித்த பணத்தை என்ன செய்தார்"
 "நித்யா மெனன்  (மேனன் இல்லை) செட்டாகவில்லை" என்றவாறு.

 சரி ஆசியாவிலேயே பெரிய கொள்ளைக்கும்பல் எடுத்த படம்தானே என்று விட்டுவிட்டேன்.

 அண்ணன் சீமான் இந்த படத்தை பார்த்து நல்லபடியான விமர்சனம் கொடுத்திருந்தார். 
 அப்போதும் இது தனுஷ் நாயுடுவின் படம்தானே என்று கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன்.

 அப்போதுதான் இந்த படத்தை திராவிடியாத் தனமாக விமர்சித்து சில பதிவுகள் வந்தன.
அதாவது  "குலக் கல்வி, குலத் தொழிலை ஊக்குவிக்குறது"
"சாதியே இல்லாத கிராமமா?"
"பணக்காரன் சாதி பார்க்காமல் பெண்கொடுக்கிறான்" போன்ற வரிகள்.
 எனக்கு ஒரே ஆச்சரியம் "என்ன இது அடிமை திராவிடியாக்கள் தன் ஆண்டை இன்பாவை எதிர்த்து ஒரு வரி எழுதும் தைரியம் எப்படி வந்தது?" என்று.
 அண்ணனின் பாராட்டும் எனக்கு நினைவுக்கு வந்தது. அவர் காரணமில்லாமல் பாராட்டியிருக்க மாட்டாரே?!
சரி என்று நேற்று அந்த படத்தை குடும்பத்துடன் பார்த்தேன்.
  இதை வெறும் படமாக மட்டும் பார்த்தால் நல்ல படம்தான்!
 கிராமத்தில் பிறத்து வளர்ந்த ஒரு சாதாரண பையன் படித்து முடித்து அந்த கிராமத்தையே சொர்க்கமாக நினைக்கும் அவனது தந்தையுடன் முரண்பட்டு  வெளிநாட்டுக்கு போய் ஒரு கார்ப்பரேட் வேலையில் தன் திறமையைக் காட்டி முதலாளிக்கே மருமகனாகும் அளவு முன்னேறுகிறான்.
 ஆனாலும் ஏதோ ஒரு குறையை உணர்கிறான்.
 திருமணம் நெருங்கிய நிலையில் அவனது தந்தை இறந்துவிடுகிறார். கார்ப்பரேட் குடும்பம் கல்யாணத்தை நிறுத்த மறுக்கிறது.
 தந்தைக்கு இறுதி மரியாதை செய்ய வருபவன் பல ஆண்டுகள் கழித்து தாயையும் சொந்தங்களையும் பார்க்கிறான்.
 ஒரே மகனாக இருந்தும் பல ஆண்டுகள் தாய் தந்தையை தனியாக தவிக்கவிட்டதை எண்ணி வருந்துகிறான் (இந்த இடத்தில் இவ்வளவு நாள் அவன் சம்பாதித்த பணத்தை என்ன செய்தான் என்று லாஜிக் இடிக்கிறதுதான்).
 கணவன் பிரிந்த துக்கம் தாளாமல் அவன் அம்மாவும் இறந்துவிடுகிறாள் (இதுவும் கூட கொஞ்சம் ஓவர்தான்).
  இந்த நேரத்தில் தான் வாழ்ந்த வாழ்க்கையையும் தன் தந்தை வாழ்ந்த வாழ்க்கையையும் ஒப்பிட்டு பார்க்கிறான்.
 தன் தந்தை கிராமத்தில் நிறைவாக வாழ்ந்து மறைந்துவிட்டதாக உணர்கிறான்.
 தன் தந்தை போலவே தானும் வாழ முடிவெடுக்கிறான்.
 அவன் அப்பா நடத்திய இட்லிகடைதான் அவரது அடையாளம் என்றும் அவர் இடத்தில் இருந்து தான் அதை தொடர்ந்து நடத்துவதுதான் அப்பாவின் கடைசி ஆசையாக இருக்கும் என்றும் நினைக்கிறான். 
 இந்த எண்ணத்தைப் புரிந்துகொள்ள வெளிநாடுகளில் பணத்துக்காக மனதுக்கு ஒட்டாத வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு புரியும்.
 பிளைட்டில் வந்து இறங்கி ஓடிப்போய் தெருமுனை டீ கடையில் நம்ம ஊர் டீயும் வடையும் வாங்கி வாயில் வைத்தவுடன் குபுக்கென்று கண்ணீர் கொட்டும்.
 அதேபோல கடை நடத்தும் கிராமத்து அண்ணாச்சிகள் அந்த கடையையே வாழ்க்கையாக வாழ்வதை உடனிருந்து பார்த்தவர்களுக்கும் புரியும்.
  அவர்களுக்கு தொழில் மீது பற்று என்று கூற முடியாது. கடை மீது பற்று. தன் வாழ்விடம் என்ற உணர்வு.
 இதனால்தான் தனுஷ் அந்த கடை பெயரில் கிளைகள் திறக்க ஐடியா கொடுக்கும்போது அதை மறுக்கிறார் ராஜ்கிரண்.
 என் கையால் சமைத்து கொடுத்தால்தான் என் பெயர் போடவேண்டும் இல்லையென்றால் அது என் கடை ஆகாது என்கிறார்.
 நல்ல உணவகங்கள் பல கிளைகள் பரப்பி கார்ப்பரேட் ஆன பிறகு சுவை குறைந்தும் விலை மிகுந்தும் காணப்படுவதை நாம் பார்க்கவில்லையா?! 
 இந்த படம் ஏன் 'ஒஸ்தாத் ஓட்டல்' மலையாள படம் மாதிரி பல கிளை பரப்பி முன்னேறியது போல் காட்டி முடிவடையவில்லை என்ற கேள்விக்கு இதுவே விடை
 (இத்தனைக்கும் தனுஷ் கடை நடத்த தொடங்கி ஆறுமாதம் ஆவதற்குள் படமே முடிந்துவிடும்).
 இது புரியாமல் 'ஒன்று கார்ப்பரேட்டுக்கு அடிமையாக வெளிநாட்டில் இரு அல்லது நீ ஒரு கார்ப்பரேட் ஆகு' என்று கூறவருகிறார்கள் அதிமேதாவிகள்.
 தனுஷ் எடுத்த முடிவு பிற்போக்கு என்கின்றனர்.
 பட்டதிலேயே அதற்கு விடை உள்ளது.
 எது முன்னேற்றம்?! 
கார் பங்களா ஏசி என்று வாழ்வதா அல்லது இயற்கை, சொந்தபந்தம், கால்நடைகள் என்று வாழ்வதா 
எது என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.
 படத்தில் அப்பாவின் ஆவி வரும் காட்சிகள் கூட மிகையாக இல்லை!
 இறப்பு நடந்த வீட்டில் தனியாக படுத்திருக்கும் ஒருவனுக்கு அப்படியான எண்ணங்கள் வரத்தான் செய்யும்!
 அப்பாவின் மறுபிறப்பாக காட்டப்படும் கன்றுக்குட்டி, தனுஷைக் காப்பாற்ற வருபவர்க்கு இடம் காட்டும் பருந்து என்று பிற உயிர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.
 குலதெய்வ கோவிலில் தனுஷுக்கு வரும் தெளிவு, சண்டைக் காட்சிகளில் ஆவேசமாக அடிக்கும்போது குலதெய்வ பாடல் என்று குலதெய்வ வழிபாட்டையும் முன்னிலைப் படுத்தியுள்ளனர். 
 எந்த விதத்தில் படத்தில் காட்டப்படும் கிராமம் உயிரோட்டமாக இல்லை என்று சொல்கிறார்களோ தெரியவில்லை.
 
 வில்லன் பக்கம் பார்த்தால் ஒரு கார்ப்பரேட் குடும்பம் தன் நிறுவன நலனுக்காக வேலை செய்யும் ஒருவனை தன் குடும்பத்தில் ஒருவனாக ஆக்கிக்கொள்ள நினைக்கிறது.
 அவனது உணர்வுகளுக்கு மதிப்பளிக்க மறுக்கிறது.
 இதனால் அவனது அடிமை மனநிலை மாறிவிடுகிறது.
இதனால் திருமணம் நின்று அவமானத்தை சந்தித்த அந்த பணக்கார குடும்பம் கிராமத்துக்கு வந்து அவனை பழிவாங்க நினைக்கிறது.
 அந்த ஊரிலேயே ஒரு போலீஸ்காரனையும் போட்டியாக ஓட்டல் நடத்தும் ஒரு முதலாளியையும் கூட்டு சேர்த்துக் கொள்கிறது.
 இவற்றை தனது தந்தை சம்பாதித்த நல்ல பெயராலும் ஊர்மக்களின் ஆதரவுடனும் எதிர்கொள்கிறான் அவன்.
 இதில் என்ன குறையைக் கண்டீர்கள்?!
 'வாழ்க்கை பிச்சை போட்டவர்களின் காலை வாரிவிட்ட துரோகி' என்று பட்டம் கட்டுகிறார்கள்.
 இதுதான் கார்ப்பரேட் ஆதரவு!
 பெரிய இடத்து மருமகனாக வாழ்வதை விட தன்மானத்துடன் வாழ்வதுதான் முக்கியம்!
 சில புதியபூமர்கள் 'தனுஷ் கடை நடத்தட்டும் அதை ராஜ்கிரண் போலவேதான் நடத்த வேண்டுமா?' என்று கேட்கின்றனர்.
 கிராமத்தில் அந்த ஊர் ஆள் மாதிரி இல்லாமல் கோட்சூட் போட்டுக்கொண்டா திரியமுடியும்?! 
 இவர்கள்தானே ஒரு இசுலாமியத் தாய் செய்யும் அற்புதமான சுவையில் பிரியாணி செய்ய ஒரு பிராமண பெண் தொழுதுவிட்டு பிரியாணி செய்வது போல காட்டிய போது கைதட்டியவர்கள்?!
 கையால் மாவு அரைப்பது என்ன கேவலமா?! 
அதில் என்ன அசுத்தம் என்று புரியவில்லை?!
கொரோனா விற்கு பிறகு இந்த மனநிலை அதிகரித்துவிட்டது.
 சக மனிதன் தொட்டாலே செத்துவிடுவோமோ என்று பயத்துடன் வாழ்கின்றனர்.
 கைக்குத்தல் அரிசி, செக்கு எண்ணெய், கைத்தறி புடவை, நாட்டு சர்க்கரை, பனங்கள் போன்றவை பாதுகாக்கப் பட நாம் நினைப்பது இல்லையா?!
 கையால் மாவரைத்து இட்லி சுட்டால் தனி சுவை இருக்கத்தானே செய்யும்!
 எல்லா ஓட்டல்களும் இதைச் செய்ய வேண்டும் என்று கூறவில்லை.
 இப்படியும் சில ஓட்டல்கள் இருக்கட்டுமே என்றுதான் சொல்கிறேன்.
 கிராமத்தில் அவர்களுக்குத் தகுந்தது போல ஒரு உணவகம் செயல்படுகிறது.
 இப்படி ஒவ்வொரு கிராமத்திலும் அந்த அந்த கிராமத்திற்கு ஏற்ற கடைகள், கட்டமைப்பு, வழிபாடு, உடை, கலாச்சாரம் என்று இருப்பதுதானே தன்னிறைவு?!
 திருநெல்வேலி நகரத்தில் மையமாக இருக்கும் நெல்லையப்பர் கோவில் வீதியில் இருக்கிறது இருட்டு கடை.
 பெயர்பலகை கூட இருக்காது. ஒரு குண்டு பல்ப் தவிர விளக்குகூட கிடையாது (அதனால்தான் அந்த பெயர்).
 ஆனால் உலக பிரபலம்!
 அல்வா வாங்க வருபவர்கள் மதியமே பூட்டியிருக்கும் கடை முன் வரிசையில் நிற்கவேண்டும்.
 சாயங்காலம் திறப்பார்கள். கிலோ கிலோவாக கட்டி வைத்திருப்பார்கள்.
 இருட்டும் முன் விற்று தீர்த்துவிட்டு இன்னமும் நிற்கும் கூட்டத்திடம் நாளை வாருங்கள் என்று கூறிவிட்டு மூடிவிடுவார்கள்.
 அவ்வளவுதான்!
அவர்கள் கிளை பரப்பவும் இல்லை! விளம்பரம் செய்யவும் இல்லை! உற்பத்தியை அதிகரிக்கவோ கடையை மேம்படுத்தவோ கூட இல்லை!
 அவர்களின் நோக்கம் தரம் குறையாமல் இருப்பது மட்டுமே! 
 திருநெல்வேலி அல்வா என்று பலரும் உலகம் முழுக்க விற்கிறார்கள் ஆனாலும் அந்த கடை அல்வா போல வராது! இதை இப்போதும் பெரிய பெரிய கார்களில் வந்து வரிசையில் நிற்கும் கூட்டம் சொல்லும்! 
 ஒரு கடை முதலாளி தன் கைகளால் உணவு தயாரித்து லாப நோக்கம் இல்லாமல் வருபவர்களுக்கு தரமான உணவு வழங்கி மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கி எந்த பேராசையும் இல்லாமல் பழைய ஓட்டு வீடு மனைவி மாடு என்று திருப்தியுடன் ஒரு கிராமத்து வாழ்க்கை வாழ்கிறார்.
 இதில் என்ன தவறு?! 
 'அப்பா தொழிலையே பிள்ளையை செய்யச் சொல்கிறது! இதற்கா குலக் கல்வியை ஒழித்தோம்?'  என்று சில திராவிடியாக்கள் தங்கள் தீராத அரிப்பை இங்கே கொண்டுவந்து தேய்க்கிறார்கள்.
 முதலில் குலக் கல்வி என்று ஒன்று கொண்டுவரப்படவே இல்லை.
ராஜாஜி அன்று ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக 'மாணவர்கள் படித்த நேரம் போக மீதி நேரம் தந்தைக்கு உதவியாக இருக்கலாம்' என்று கூறியதை தவறாக அர்த்தமாக்கி அவதூறு பரப்பியது திராவிடம்.
 இந்த படத்திலும் மகன் அவனே விருப்பப்பட்டு தான் கேட்டரிங் படிக்கிறான்.
அப்படியே அவனது அப்பாவின் தொழிலை அவன் செய்தால் என்ன தவறு?!
 அப்பாவின் தொழிலையே மகன் செய்ய வேண்டும் என்று கட்டாயப் படுத்தினால் தான் அது தவறு!
 விருப்பப்பட்டு செய்தால் என்ன தவறு?! 
 இவர்கள் மட்டும் நான்கு தலைமுறையாக படம் எடுக்கலாம். 
 ஆனால் கார்ப்பரேட்டுகளில் மாத சம்பளத்துக்கு வேலை பார்க்கும் ஒருவன் அப்பாவிடம் திரும்பி சென்று தன் காலில் நின்றுவிடக் கூடாது இல்லையா?!
 எல்லா தமிழனும் தன் கிராமத்திலேயே தன்னிறைவு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டால் cheap labour ஐ நம்பி இங்கே இருக்கும் நிறுவனங்கள் திவாலாகிவிடும் இல்லையா?! 
 சில கழிசடைகள் 'நிச்சயம் செய்த பெண்ணை விட்டுவிட்டு அதாவது ஏமாற்றிவிட்டு எடுபிடி வேலைக்கு வந்த பெண்ணை காதலிக்கிறாயே பிறகு வேறொருத்தி வந்தால் இவளை விட்டுவிடுவாயா?' என்று மகா கிரிஞ்ச் தனமாக விமர்சித்துள்ளனர்.
 தாய் தந்தை இல்லாத நிலையில் ஊராரும் ஒட்டாதபோது தனக்கு துணை நிற்கும் ஒரு பெண் மீது காதல் வருமா அல்லது தன் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத ஒரு பணக்கார பெண் மீது காதல் வருமா?!
 தனுஷ் அந்த பணக்கார பெண்ணை காதலிப்பதாக காட்டவே இல்லை! திருமணத்திற்கு அரைகுறையான சம்மதித்து குழப்பமாக இருப்பதாகவே காட்டப்பட்டுள்ளது.
 இட்லிகடை சினிமாவாக மட்டும் பார்த்தால் கிராமத்திலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் வெறும் பணத்திற்காக மட்டுமே வாழும் பல லட்சம் தமிழர்களின் ஊர்திரும்பும் மனநிலையைப் பேசுகிறது. 
 அவர்களை தைரியமாக ஊர் திரும்பச் சொல்கிறது.
தாய் மண்ணும் மக்களும் உங்களை சோதித்தாலும் கைவிட மாட்டார்கள் என்ற உண்மைச் சொல்கிறது.
 பணம்தான் வாழ்க்கை அதுதான் முன்னேற்றம் என்று நினைப்பவர்களுக்கு இது புரியாது! 
 நான் இங்கே கேட்க இன்னொரு கேள்வி இருக்கிறது!
 ஏன் ஒருவன் இங்கே தன் கிராமத்தில் இருந்து பணக்காரன் ஆக முடிவதில்லை! 
 அரசாங்கம் என்ன கிழித்துக் கொண்டு இருக்கிறது?!
கிராமத்தில் ஒரு இட்லி கடை நடத்துபவனின் மகனுக்கும் நகரத்தில் பீசா கடை நடத்துபவன் மகனுக்கும் ஒரே கல்வி ஒரே வாய்ப்புகள் ஏன் கிடைப்பதில்லை?! 
 எல்லாரும் கிராமத்தை விட்டு சென்றுவிட்டால் யார்தான் கிராமத்தில் இருப்பது?!
 யார் விவசாயம் பார்ப்பது?! 
கிராமங்கள் காலியாகிவிட்டால் விவசாயத்தை கைவிட்டுவிட்டால் ஒரு நாடு தாக்குப்பிடிக்குமா?! 
"படிங்க! படிச்சு வேலைக்கு போங்க! வசதியான வேலைக்காரனா இருங்க!" என்று ஒவ்வொருவனையும் ஊரிலிருந்து துரத்தி நிரந்தமில்லாத ஒரு கார்ப்பரேட் வேலைக்கு அனுப்புவதிலேயே ஏன் குறியாக இருக்கிறீர்கள்?! 
 ஏன் அவன் படித்து ஒரு முதலாளி ஆக்ககூடாதா?! படித்து அரசியல்வாதி ஆகக்கூடாதா?! படித்து சேவை, கலை, தொண்டு என்று போக்ககூடாதா?! 
"படி! வேலைக்கு போ" "படி! வேலைக்கு போ" என்று படிப்பது வேலைக்கு போகத்தான் என்று ஏன் மூளைச்சலவை செய்யப் படுகிறது?!
'கிராமம் என்றாலே முட்டாள்கள்! அங்கே ஒரே சாதிவெறி!' என்று கட்டமைப்பதன் உள்நோக்கம் என்ன?!
 பிறந்த ஊர்ப்பாசம் என்பது சாதி, மதம், இனம், வர்க்கம் எல்லாவற்றையும் கடந்த ஒரு உணர்வு என்பது தெரியாதா?! 
 அல்லது எங்கிருந்தோ வந்து பல தலைமுறை இங்கே வாழ்ந்தும் இந்த மண்ணின் உப்பைத் தின்றும் இதன் மீது பாசம் வராத ஒரு கூட்டத்தின் கூச்சலா?!
 திராவிட கும்பல் எடுத்த படமே ஆனாலும் அது கார்ப்பரேட்டுக்கு எதிராக தற்சார்பு வாழ்க்கைக்கு ஆதரவாக இருந்தால் அதை எதிர்ப்பீர்களா?! 
 உங்களது உண்மையான முதலாளிகள் திராவிடம் நடத்தும் திரைத்துறையா அல்லது திராவிடம் நடத்தும் தொழில்துறையா?! 
 தனுஷ் தன்னுடைய சிந்தனையைப் படமாக்கியதாக நான் கருதவில்லை.
மக்களின் மனநிலைக்கு ஏற்ப ஒரு படத்தை எடுத்துள்ளார்.
 மக்கள் இதை ஆதரிக்க வேண்டும்!
 வேறு வழியும் இல்லை!
இப்படி ஒரு படத்தை ஒரு தமிழன் எடுத்து வெளிவிடுவது என்பது திராவிட ஆதிக்க சூழலில் நடக்காத ஒன்று! 
 அதேபோல திராவிட ஆதிக்கம் தலைவிரித்தாடும் இன்றைய சூழலில் இனி ஒரு தமிழன் சரவண பவன் அண்ணாச்சி போல வரவே முடியாது! வந்தாலும் அவர் கதிதான்! 
 படங்களிலாவது மக்களின் கனவுகள் நிறைவேறட்டும்! 
 

Tuesday, 4 November 2025

சென்னையை காத்த மபொசி பற்றி கா மு ஷெரீப்

சென்னையை காத்த மபொசி பற்றி கா.மு.ஷெரீப்

 'இழைத்தவன் பொண்டாட்டி எல்லாருக்கும் மச்சினி' என்பது கிராமிய பழமொழி.
 ஆந்திரர்கள் சென்னையை இந்த பழமொழிக்கு இலக்காக பார்க்கின்றனர்.
 சென்னையை என்ன, திருமலை நாயக்கர் ஆண்ட மதுரையை கூட தனதாக்கிக் கொள்ளலாம் என்று எண்ணினர் ஆந்திர வெறியர்கள்.
 அதற்கான திட்டத்தையும் நடத்த அவர்கள் தயங்கவில்லை.
பிரகாசம் முதல்மந்திரியாக வந்ததும் ஆந்திராவில் இருந்து ஆட்களை அழைத்து வந்து சென்னையில் பவனி வரச் செய்தார்.
 சும்மா அல்ல 'மதராஸ் மனதே!' என்று கூப்பாடுடன்!
 தட்டி கேட்க ஆளில்லை!
 சென்னை நகரில் ஓடும் பஸ்களில் எல்லாம் கூட தெலுங்கிலும் பெயர் போடச் செய்தார்கள்!
 இத்தனையும் கண்டு பாரா கண்கள் படைத்தவர்களாக தமிழக தலைவர்கள் இருந்தபோதுதான் 'தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்' என்று குரல் கொடுத்தது தமிழரசு கழகம்! 
வெறிபிடித்த ஆந்திரப்படை பின்வாங்கியது!
 அவர்களை துரத்திச் செல்வது போல பின் தொடர்ந்து சென்ற தமிழரசு கழகத்தினர் சித்தூர் பகுதிகளில் முகாமிட்டு திருப்பதி வரை தமிழர்களுடைய நிலம் என்பதை நிலைநாட்டி திரும்பினர்!
 இதன் பிறகு தார் கமிஷன்,  J.V.P ரிப்போர்ட் ஆகிய தீர்ப்புகளின் மூலம் 'சென்னை தமிழருடைய நகரம்',  'எல்லைப் பகுதிகள் ஆராயப்பட வேண்டியது' என்று முடிவு கட்டப்பட்டது.
 இதை அன்று 'அகில இந்திய காங்கிரஸ்' முதல் 'ஆந்திர காங்கிரஸ்' வரையிலும் நேரு முதல் சஞ்சீவ ரெட்டி வரையிலும் ஒப்புக்கொள்ளாதார் இல்லை!
 ஆனால் முன்பு அமைச்சராக இருந்த காலத்தில் தான் ஒப்புக்கொண்டதை மாற்றி 'ஆலோசிக்காமல் அவசரப்பட்டு தமிழர்களுக்கு அதிக சலுகை வழங்கி விட்டோம்! இப்பொழுது ஆலோசித்து சொல்கிறோம்! சென்னையை தமிழர்களுக்கு தர முடியாது!' என்று சஞ்சீவ ரெட்டி கூறுகிறார்.
 இந்த சஞ்சீவி ரெட்டியையும் மிஞ்சிப் போகிறார் பிரகாசம் 'சென்னையில் மட்டுமல்ல திருநெல்வேலி வரையும் கூட ஆந்திரா கேட்டால் அதில் நியாயம் இல்லாமல் இல்லை' என்கிறார்!
 ஆனால் 1947, 48 இல் இருந்தது போல் இன்று தமிழர்கள் அலட்சியமாக இல்லை!
 ஆந்திர படையெடுப்பை முறியடிக்க துணிந்து நிற்கிறார்கள்!
 சண்டித்தனம் பிடிக்கும் சாமியார், சஞ்சீவ ரெட்டி, பிரகாசம் போன்றோரை சென்னை நகரத்தில் அல்ல அவர் வாழும் ஆந்திர பகுதிக்கு சென்று அதட்டி கேட்கும் அளவிற்கு உணர்ச்சி பற்றி நிற்கிறார்கள்!
 1948 இல் நம்மை எதிர்த்த கட்சிகள் எல்லாம் இன்று நாம் சொல்வதை முன்னிறுத்தி தம்மை வளர்க்கப் பார்க்கின்றன.
 தார் கமிஷனிடம் 'தலைநகரம் தமிழனுக்கு போனாள் என்ன ஆந்திரனுக்கு போனால் என்ன இருவரும் திராவிடர்களே' என்று கூறிக் கொண்டிருந்த ஈ.வே.ரா இன்று விடுதலை மூலம் ஆந்திரரின் மண்வெளியை கண்டிக்கின்றார்.
 தமிழரசு கழக கோரிக்கையை புரிந்து கொள்ளாமல் அலட்சியப்படுத்தி வந்த பத்திரிகைகள் எல்லாம் சஞ்சீவ ரெட்டியையும் பிரகாசத்தையும் கண்டித்து தலையங்கம் தீட்டுகின்றன.
 சென்னை ராஜ்ய முதல்மந்திரியே தீர்ப்பு கூறுகிறார் 'சென்னை ஆந்திரர்கள் நினைக்கக் கூடாது' என்பதாக!
இத்தனை தமிழரசு கழகத்தாரின் அரிய சாதனை என்றால் அது மிகையாகாது!
 'மொழிவாரி பைத்தியங்கள்' என்று பழித்துக் கூறிய கம்யூனிஸ்ட் சோசியலிஸ்டுகளை மொழிவாரி மாநில பிரிவினையை ஒப்புக்கொள்ள வைத்தது!
 'ஆந்திரமும் தமிழகமும் ஒன்றே தலைநகரச் சண்டை எங்களுக்கில்லை' என்ற தி.க கூட்டத்தினரின் ஏடான விடுதலையை ஆந்திரர்களைக் கண்டித்து எழுதும்படி திருத்தியது!
 'இது என்ன தமிழ் பாகிஸ்தான்?' என்று கேட்ட தேசிய வட்டாரங்களின் மத்தியில் 'தமிழகம் தனி ராஜ்யம்' என்ற எண்ணத்தை வளர்த்து விட்டது!
  இத்தனை பணிகளையும் ஐந்தே ஆண்டுகளில் தமிழரசு கழகத்தினரால் சாதிக்க முடிந்திருக்கிறது என்றால் ஆந்திரர்கள் யோசிக்க வேண்டும்.
 இனியும் 'சென்னை ஆந்திரர்களுடையது!' என்று கூறினால் தமிழரசு கழகம் அளிக்கும் பதில் "சென்னை என்று நீங்கள் ஜெபித்துக் கொண்டே இருங்கள். சென்னையை நீங்கள் அடைகிறீர்களா?! நாங்கள் பெறுகிறோமா?! என்பதை பிறகு கண்ணால் காணலாம்".
 ஆந்திரர்களே! ஆத்திரப்படாதீர்கள்!
 உங்கள் ஆசைக்கு சாவு மணி அடிக்கும் காலம் நெருங்கி விட்டது!
அதன் ஓசையை நீங்கள் 1953 ஜனவரி 24, 25 சென்னையில் நடைபெறவிருக்கும் தமிழரசு கழக இரண்டாவது மாநில மாநாட்டில் கேட்கலாம்!

கா.மு.ஷெரீப்
தமிழ் முழக்கம் 
01.11.1952

Sunday, 2 November 2025

ஆகமத்தை விட தமிழ் உயர்ந்தது என்ற தமிழ்த் தாத்தா

ஆகமத்தை விட தமிழ் உயர்ந்தது என்ற தமிழ்த் தாத்தா

 உ.வே.சாமிநாத ஐயர் தம் சுயசரிதையில் 
“குழி வெட்டி அக்கினி வளர்த்து நெய்யில் தோய்த்து அந்தப் பழைய சுவடிகள் அவ்வளவையும் ஆகுதி செய்து விட்டார்கள்” என்று ஒருவர் கூற...
"இப்படி எங்காவது ஆகமம் சொல்லுமா? ‘அப்படிச் சொல்லியிருந்தால் அந்த ஆகமத்தையல்லவா முதலில் ஆகுதி செய்ய வேண்டும்!" கோபமாக கூறியுள்ளார்.

 மேலும் "பழங்காலத்திற் பழைய சுவடிகள் சிதிலமான நிலையில் இருந்தாற் புதிய பிரதி பண்ணிக்கொண்டு பழம் பிரதிகளை ஆகுதி செய்வது வழக்கம். புதுப்பிரதி இருத்தலினால் பழம் பிரதி போவதில் நஷ்டம் ஒன்றும் இராது. பிற்காலத்து மேதாவிகள் பிரதி செய்வதை மறந்துவிட்டுச் சுவடிகளைத் தீக்கு இரையாக்கும் பாதகச் செயலைச் செய்தார்கள். என்ன பேதைமை! இத்தகைய எண்ணத்தால் எவ்வளவு அருமையான சுவடிகள் இந்த உலகிலிருந்து மறைந்தன!
 வரகுண பாண்டியர் ஏடுகள் அக்கினி பகவானுக்கு உணவாயிற்றென்ற செய்தியைக் கேட்டது முதல் என் உள்ளத்தில் அமைதி இல்லாமல் போயிற்று. ‘இனி இந்த நாட்டிற்கு விடிவு உண்டா!’ என்றெல்லாம் மனம் நொந்தேன்." என்றும் எழுதியுள்ளார்.
 

Monday, 20 October 2025

தமிழருக்குத் தனிநாடு தேவையென்ற ஆதித்தனார்

தமிழருக்குத் தனிநாடு தேவையென்ற ஆதித்தனார்

 1965 இல் ஆதித்தனார் தமிழ்நாடு தனிநாடு ஆவதன் அவசியம் பற்றி எழுதும் போது டெல்லி அதுவரை அதாவது 1947 லிருந்து 18 ஆண்டுகளாக தமிழகத்தைச் சுரண்டிய தொகை ரூ.2460 கோடி என்று கணக்கிட்டுக் கூறியுள்ளார்.
 மத்திய அரசு வாங்கும் வரி வடக்கே போய் அதன் பங்கு வடக்கிலேயே பெரும்பகுதி செலவாகிவிடுகிறது.
 எனவே இது அல்ல பேரரசர்களுக்கு பயந்து குறுநில மன்னர்கள் கட்டும் கப்பம் போன்றது என்றும் கூறியுள்ளார்.
 இதில் ஆச்சரியமான விடயம் ரூபாய்த் தாள்கள் பற்றி அவர் கூறிய கருத்து.
 அதாவது தமிழ்நாட்டில் எவ்வளவு காகித ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளனவோ அதே அளவு மதிப்புள்ள பொருட்களை டெல்லி சுரண்டி விட்டு அதற்குப் பதில் வெறும் காகிதத்தை ரூபாய் நோட்டாக தந்து ஏமாற்றிவிட்டதாக கூறுகிறார். 
 1965 இல் 2460 கோடி மிகப்பெரிய தொகை!
இதற்குப் பிறகு இதே நிலை நீடித்தால் ஆண்டுக்கு 120 கோடி நாம் நஷ்டக் கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். 
 அப்போதே ஆண்டுக்கு 2500 பேர் தற்கொலை செய்துகொள்வதைக் கவலையோடு குறிப்பிட்டு அதற்கு காரணம் வறுமை என்கிறார்.  
 மத்திய அரசு திட்டமிட்டு மக்கட்தொகை குறைப்பு நடவடிக்கைகளை தமிழகத்தில் புகுத்தி தமிழர் எண்ணிக்கையை இன்று பெருமளவு குறைத்துவிட்டது.
 ஆனால் வடவர்களோ பல மடங்கு பெருகிவிட்டனர். 
 இதை அன்றே எதிர்த்த ஆதித்தனார் மக்கட்தொகை குறைப்பு என்பது செருப்பு அளவுக்கு காலை வெட்டுவது என்றாகும் என கூறியுள்ளார்.
 அன்று தமிழ்நாட்டை விட சிறிய 106 நாடுகள் உலகத்தில் உள்ள போது தமிழ்நாடு ஏன் தனிநாடு ஆக முடியாது என்று கேட்கிறார். அந்த 105 நாடுகளின் பட்டியலையும் மக்கட்தொகையையும் கூட பட்டியலிட்டார்.
 தமிழருக்கு தனி அரசு இருந்திருந்தால் 5கோடி தமிழர்களை 35 லட்சம் சிங்களவர்கள் ஏளனமாக நினைப்பார்களா?! கள்ளத்தோணி என்று கூறி விரட்டி அடிப்பார்களா என்று கேட்கிறார்.
 தமிழகமும் ஈழமும் ஒன்றாக இணைய வேண்டும் என்று 1942 இலேயே 'தமிழ் ராஜ்யம்' எனும் நூல் எழுதி அதில் தமிழர் வாழும் பகுதிகளை குறித்து வரைபடம் வெளியிட்டார் ஆதித்தனார்.
 அவரது வார்த்தைகளில் கூறினால்...
"தமிழ் மக்கள் சிதறுண்டு கிடக்கும் நிலை நீங்கி ஒரே நாடாக ஒரே கொடையின் கீழ் தமிழ் இனம் வாழ வேண்டும்!
 பாண்டிச்சேரியிலும் ஈழத்திலும் சென்னை ராஜ்யத்திலும் சிதறுண்டு தனித்தனியாக வாழ்வதால் தமிழ் இனம் வலுவற்று கிடக்கிறது!
 இந்தப் பகுதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து சுதந்திர தமிழ்நாடு அமைத்துக் கொண்டு வல்லரசாக திகழ வேண்டும் என்பது தமிழ் இனத்தின் நியாயமான ஆசை!
 தமிழகத்தில் இருக்கிற 500 லட்சம் தமிழர்களும் இலங்கையில் இருக்கின்ற 35 இலட்சம் தமிழர்களும் ஒன்று சேர வேண்டும்!
 இந்திய தேசத்தை துண்டு போடுவது துரோகம் என்பதாக சொல்பவர்கள் தமிழ்நாடு துண்டுபட்டு கிடக்கிறதே அது தமிழர்களுக்கு செய்த துரோகம் இல்லையா?! 
  பீர்மேடு, தேவிகுளம், நெய்யாற்றின் கரை ஆகிய பகுதிகள் தமிழ்நாட்டில் இருந்து பிரிக்கப்பட்டு மலையாளிகள் கையில் சிக்கி கிடக்கின்றனவே!?
  வட எல்லையில் வேங்கடம் வரையில் உள்ள தமிழ் பகுதிகள் ஆந்திராவில் ஆட்சியில் கிடைக்கின்றனவே?!
 பாண்டிச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்கள் டெல்லியின் கண்காணிப்பில் இருக்கின்றனவே?!
 18 மைல் அகலம் உள்ள ஒரு சிறிய நீர்ப்பகுதிக்கு அப்பால் வட இலங்கையில் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். 
அதுவும் தமிழ்நாட்டின் ஒரு பகுதிதான்!
 அது தாயகத்தில் இருந்து பிரித்து கிடக்கிறதே?!
 இந்தப் பகுதிகள் எல்லாம் தமிழ்நாட்டுடன் சேர வேண்டாமா?!
 ஆகையால் தமிழ்நாடு ஒன்று சேர வேண்டும் என்று சொல்வது துரோகம் ஆகாது! " என்று தெளிவாகவே எழுதியிருக்கிறார்.

 "தமிழ்நாடு வறண்ட நாடு ஆகையால் அது சுதந்திர நாடாக இருக்க தகுதியற்றது" என்று சட்டமன்ற உறுப்பினர் குழந்தை அம்மாள் ஒரு முறை பேசினார்.
 "தமிழ்நாட்டில் நீர் வளம் நிலவலம் இல்லை" என்று தினமணி பத்திரிக்கை தலையங்கம் எழுதியது.
 இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆதித்தனார் "தமிழ்நாட்டில் பாலாறு போன்ற ஆறுகளில் தண்ணீர் ஓடாமல் இருப்பதற்கு காரணம் மைசூர் நாட்டில் அணை கட்டி தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்வதே.
 இப்போது தமிழ்நாடு டெல்லியின் கீழ் இருப்பதால் நடவடிக்கை எடுக்க முடியாமல் இருக்கிறது.
 தமிழ்நாடு டெல்லியின் படியில் இருந்து விடுபட்டு சுதந்திர நாடு ஆனால் தண்ணீர் விடும்படி உரிமையுடன் கேட்க முடியும்.
ஏனென்றால் சுதந்திர நாடுகளுக்கு தண்ணீர் உரிமை உண்டு. 
மேலும் மலையாளத்தில் ஓடுகின்ற சோலை ஆறு பரம்பிக்குளம் ஆகிய ஆறுகளின் தண்ணீரை தமிழ்நாட்டுக்கு பயன்படுத்த செய்யும் பணியை சுதந்திர தமிழர்கள் செய்ய முடியும்.
மேலும் ஆறு மட்டுமே ஒரு நாட்டின் வளத்தை நிச்சயிப்பதாக சொல்ல முடியாது!" என்று எழுதியிருக்கிறார்.
 மேலும் காவிரி ஆறு பற்றி அவர் எழுதும்போது "காவிரி ஆற்றின் ஒரு கிளை கன்னடர் நாடு வழியாக அதாவது மைசூர் மாநிலத்தின் வழியாக ஓடி வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும்.
 காவிரி ஆற்றுத் தண்ணீர் முழுவதும் மைசூரில் இருந்து வருகிறது என்று சிலர் சொல்வது மிகைப்படுத்தி கூறுவது ஆகும்.
இதை காட்டி தமிழ்நாடு தனிநாடாக இயங்க முடியாது என்று சொல்வது நியாயமான காரணம் ஆகாது. பிரம்மபுத்திரா என்ற ஆறு இந்தியா, சீனா வழியாக 5000 மைல் ஓடி பின்னர் பாகிஸ்தானில் ஓடுகிறது. இதைப் போலவே ஐரோப்பாவில் டானியூப் என்ற நதி 6 நாடுகளை தொடுகிறது.
 பொதுவாக பார்த்தால் உலகில் ஆறுகளின் காரணமாக நாடுகளிடையே சண்டை சச்சரவு ஏற்படுவதில்லை.
 அதற்கு விதிகள் இருக்கின்றன.
 விதிகளை மீறினால் ஐக்கிய நாடுகள் அவையிலும் உலக நாடுகளின் நீதிமன்றத்திலும் தீர்த்துக் கொள்ளலாம்.
 ஆகவே தமிழ்நாடு தனி நாடாக இயங்கினால் காவிரி ஆற்று தண்ணீரை இழந்து விடுவோம் என்பது வீண் புரளி. தண்ணீரை இழக்க மாட்டோம் என்பதோடு இழந்திருக்கும் தண்ணீர் உரிமைகளை மீண்டும் பெறுவோம்".

அன்றும் சிறுபான்மை என்கிற சொல் அரசியலில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது இதை ஆதித்த நாள் வேறு பார்வையில் பார்க்கிறார்.
 "இலங்கையில் 65 லட்சம் சிங்களவர்களும் 35 லட்சம் தமிழர்களும் வாழ்கிறார்கள்.
 சிங்களவர் பெரும்பான்மையாக சட்டசபை க்கு வருகிறார்கள் அதனால் சிங்களவர் ஆதிக்கத்தில் ஆட்சி அமைய நேரிடுகிறது.
 தாய்த் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களும் நான்கரை கோடி பேர் இருக்கின்றனர். ஆனால் 38 கோடி பேர் தமிழர் அல்லாத பிறமொழியினர் பெரும்பான்மையாக ஆட்சியில் இருக்கின்றனர்.
டெல்லி பாராளுமன்றத்தில் 40 பேர் தமிழர்கள் என்றால் 460 பேர் தமிழர் அல்லாதவர்கள் இருக்கின்றனர்.
 தமிழர் சிறுபான்மை என்றாவதால் எல்லாத் தொல்லைகளும் உண்டாகின்றன.
  தமிழர்கள் தனியாக பிரிந்தால் மட்டுமே தமிழர்கள் பெரும்பான்மை என்ற நிலையை அடைய முடியும்!
 பலர் சொல்வது போல கன்னடர்கள் தெலுங்கர்கள் மலையாளிகள் உடன் தமிழர் சேர்ந்து திராவிடம் என்ற அமைப்பை ஏற்படுத்தினாலும் நான்கரை கோடி பேர் தமிழர்கள் இருப்பர் ஆனால் 10 கோடி பேர் தமிழர் அல்லாதவர்கள் இருப்பர்.
 அப்போதும் சிறுபான்மையாகத் தான் தமிழர்கள் இருப்பார்கள். தொல்லைகள் நீடிக்க தான் செய்யும்.
சிறுபான்மை நிலை ஒழிந்தால் இனம் வாழும் என்பதற்கு எடுத்துக்காட்டாக யூதர்களின் வரலாற்றை சொல்லலாம்.
 பல நாடுகளில் யூதர்கள் சிறுபான்மையாக இருந்தார்கள் எல்லா நாடுகளிலும் அவர்கள் அடைந்த துன்பங்களுக்கு அளவு கிடையாது எல்லா நாடுகளாலும் யூதர்கள் விரட்டப்பட்டு கடைசியில் சிதறிக்கிடந்த 8 லட்சம் யூதர்கள் 1948 ஆம் ஆண்டு அரேபிய பாலைவனத்தில் ஒன்று சேர்ந்து இஸ்ரேல் என்ற சுதந்திர தனி நாட்டை அமைத்தார்கள் அதன்பிறகு அவர்களுடைய தொல்லைகள் நீங்கின.
 தமிழ்நாடு அதை விட 30 மடங்கு பெரியது" 
 என்று எழுதும்போது ஈழத் தமிழர் துயரத்தையும் எழுதியுள்ளார்.
"1958 ஏப்ரல் மே மாதங்களில் தமிழர்களில் இலங்கையில் சிங்கள வெறியர்களின் கொலை கொள்ளை தீ வைத்தல் சூறையாடுதல் முதலிய கொடுமைகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள் 100 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் தமிழர்கள் வீடுகள் பொருட்கள் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சேதமாக்கப்பட்டன பஞ்சாப் படுகொலை விட இது 10 மடங்கு பயங்கரமானது என்று நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள். 1961 பிப்ரவரி முதல் இலங்கையில் தமிழர்கள் ராணுவ ஆட்சியின் கீழ் சிக்கி சொல்ல முடியாத கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர் அண்மை காலம் வரை தமிழ் தலைவர்கள் சிறையில் இருந்தனர் இன்று தமிழுக்கு அங்கு எவ்வித உரிமையும் இல்லை தமிழர் வாழ் பகுதிகளில் சிங்களவர்களை கொடியேற்றி தமிழர்களின் தனித்தன்மையை அளிக்க சிங்கள அரசு முனைகிறது" 
 மேலும் அவர் தமிழின விடுதலை பற்றி கூறுகையில்
 "5கோடி தமிழ் மக்கள் ஓர் இனம் என்பதை உணர்ந்து தமது அடிமை தளையை அறுத்து எறிவது என்று வீறிட்டு எழுந்தால் அதை எதிர்த்து உலகமே திரண்டாலும் தடுக்க முடியாது! டெல்லி அரசாங்கத்தாலும் முடியாது! அந்த அரசாங்கத்திற்கு உடந்தையாக இருக்கிற 38 கோடி வடவர்களாலும் முடியாது ! 30 லட்சம் அயர்லாந்து மக்களின் சுதந்திர போராட்டத்தை தடுப்பதற்கு அவர்களைப் போல் 15 மடங்கு அதிக எண்ணிக்கை உள்ள ஆங்கிலேயர்களால் முடியாமல் போய்விட்டது!" என்று கூறுகிறார்.
 ஆதித்தனார் தனிநாடு கொள்கையுடன் 'தமிழ் ராஜ்ய கூட்டணி' அமைத்து அண்ணாதுரைக்கு முன்பே காங்கிரசை தேர்தலில் வென்றார்.
 ஆனால் மத்திய அரசு ஆளுநரை வைத்து விளையாடி அவரை நியாயப்படி முதலமைச்சர் ஆவதைத் தடுத்தது என்பது வரலாறு! 
நன்றி: ஆதித்தனார் எழுதிய 'தமிழப் பேரரசு' நூல் 

Saturday, 18 October 2025

வீரப்பனியம்

வீரப்பனியம்

 வீரப்பன் மறைந்து போனாலும் அவர் காட்டிய வழிமுறை மக்கள் மனதில் இருந்து மறையாது!
 படிப்பறிவு, பணபலம் என எதுவும் இல்லாத ஒரு சாதாரண காட்டு கிராமத்து மனிதன் தன் சொந்த பலத்தைத் திரட்டி அரசாங்கத்தை திருப்பி அடிக்க முடியும் என்று காட்டியவர் வீரப்பனார்!
 எந்த இயக்கமும் கட்சியும் அரசியலும் சித்தாந்தமும் இல்லாமலே கூட தனிமனிதனாகவே ஒரு அரசை ஆட்டிப் படைக்க முடியும் என்று காட்டியவர்! 
  தன் உடல், அறிவு, திறமை மட்டும் கொண்டு தனது குடும்பம், ஊர், நண்பர்கள், உறவினர்கள், சாதி, இனம் என படிப்படியாக மக்களை தனக்கு ஆதரவாகத் திரட்டி அரசாங்கத்தின் அடக்குமுறையை எதிர்த்து அதிகார வர்க்கத்திற்கு வலிக்குமாறு திருப்பி அடித்த தனிமனித தத்துவம் தான் வீரப்பனியம்!
 தனியாள்ப் படை என மக்களையும் காட்டையும் காத்துநின்ற வீரப்பனாரை ஈன்ற இனம் என்பதில் பெருமை கொள்வோம்! 
 

Friday, 17 October 2025

சீமானை சோதிக்காதீர்கள்

 சீமானை சோதிக்காதீர்கள்

 சீமான் ஸ்டைல் அரசியலை புரிந்து கொள்ள முயல்வோம்!
சீமானிடம் இருப்பதெல்லாம் கொள்கைதான்! 
ஆனால் கொள்கையை வைத்தே பணபலமும் அதிகார வலுவும் கிளப்ப முடியாத சூறாவளியை அவரால் கிளப்ப முடியும்!
 அவருக்கு எப்போது தேவையோ அப்போது ஊடகத்தையும் மக்களின் கவனத்தையும் தன் மீது திருப்ப முடியும்!

 ஒரு தளபதி சூழ்நிலைக்கு தகுந்தபடி கனரக ஆயுதங்களை களத்தில் இறக்குவது போல அண்ணன் கொள்கைகளில் மாற்றம் அல்லது தீவிரம் என்று நிலைப்பாடு எடுப்பார்!
 இப்படித்தான் பாஜக வின் அடிப்படையைத் தகர்த்த 'முப்பாட்டன் முருகன்' நிலைப்பாடு!
 இப்படித்தான் புயலைக் கிளப்பிய 'ராஜீவ் காந்தியை கொன்றோம்' என்ற நிலைப்பாடு!
 இப்படித்தான் 'ஆடு மாடு மேய்த்தல் அரசுவேலை' நிலைப்பாடு!
 இப்படித்தான் 15 ஆண்டுகள் காத்திருந்து அடித்த 'ஈ.வே.ரா பிம்பம்' மீதான அடி!
இப்படித்தான் கள் இறக்கும் போராட்டம்! 
இப்படித்தான் மாடு, மலை, தண்ணீர் மாநாடு!

 கொள்கை மட்டுமல்ல சில வார்த்தைகளைப் போட்டு அதிர்வை கிளப்புவதும் உண்டு! 
இப்படித்தான் 'ஆமைக்கறி'...!
இப்படித்தான் 'ஏகே74'..!
இப்படித்தான் 'டேய் ஸ்டாலின்'..!
 இப்படித்தான் 'சாத்தானின் பிள்ளைகள்'..!
 இப்படித்தான் 'எம்ஜிஆர் சனியன்'...!
இப்படித்தான் 'டீவிக்க...! தலைவிதி'...!"
இப்படித்தான் 'அண்ணனை முறைச்சா அடிப்பேன்'..!

 இனி வரும் காலங்களிலும் அண்ணாயிசம், எம்ஜியாரிசம், திருமாயிசம், அம்பேத்கரிசம் என எல்லா இசங்களும் நொறுக்கப்படும்! 

 அண்ணனிடம் இருப்பதெல்லாம் உடலும் அறிவும் தான்!
அதாவது மக்களைப் பற்றிய ஆழமான புரிதலும் மணிக்கணக்காக பேசும் திறனும் சுற்றுப்பயணத்திலேயே இருக்கும் கடின உழைப்பும் கொள்கைகளின் பலம் பற்றிய புரிதலும்தான்!
 அதனால்தான் உயிர் போகும் அளவு ரிஸ்க் எடுக்கும் கதாநாயகன் போல 'தனித்து' என்கிற தற்கொலை முடிவில் உறுதியாக இருக்கிறார்!
 ஏனென்றால் அதுதான் அவரது அடையாளம்! 
அதுதான் அவர் அரசியலின் உயிர்நாடி!
 ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அதிமுக கவலைக்கிடமான நிலையில் இருந்தபோது யாராவது எடப்பாடி பழனிச்சாமியிடம் திமுகவுடன் கூட்டணி அமைக்க கோரினார்களா?!
இரு கட்சிகளும் இணைந்தால் தமிழகத்தை யாராலும் அசைக்க முடியாதே?! 
 ஏன் அது மட்டும் நடக்கவே நடக்காது?!
ஏனென்றால் அதுதான் அவர்களின் அடையாளம்! 
சீமானின் அடையாளமும் அத்தகையதே! 

 
 ஒரு நொடி ஆகாது...  'மக்களாவது மண்ணாவது' என்று தூக்கியெறிந்து விட்டு அதிமுக வுடன் கூட்டணி போட்டு பதவி பணம் அதிகாரம் என கைப்பற்றி தன் குடும்பத்தையும் கட்சியின் மேல்மட்டத்தையும் வளப்படுத்தி கொள்ள ஒரு நொடி ஆகாது!
 அதன்பிறகும் கூட 50 ஆண்டுகள் அரசியல் செய்ய முடியும்!
 விசிக போல மானங்கெட்டு போகாமல் பாமக போல கௌரவமாக அமர்ந்து மிதமான அரசியல் செய்ய முடியும்!
 தமிழர் அல்லாதோருக்கு எதிராக சிவசேனா பாணி கலவர அரசியலைச் செய்ய முடியும்! 
 அல்லது 'கன்னட ரக்சின வேதிகே' போல அரசியலுக்கு வெளியே இருந்தே கூட அரசியலை ஆட்டுவிக்க முடியும்! 
 ஆனால் அண்ணனோ 'தலைகீழாகத்தான் குதிப்பேன்' என்கிறார்!
 எங்கள் இலக்கு ஆழமானது!
  முத்து எடுக்க தலைகுப்புற விழுந்து மூச்சை அடக்கித்தான் ஆக வேண்டும்.

 அண்ணன் இந்த இறுமாப்பாலேயே எல்லா ஆதரவையும் இழந்துவிட்டார்!
இன்று அண்ணனுக்கு ஆதரவாக இருப்பது மாற்றத்தை விரும்பும் தம்பிகள்! அவர்கள் திரட்டும் சிறிய அளவு நிதி! அதைவிட அண்ணனின் சர்வாதிகாரத்தை சகித்துக் கொள்ளும் தம்பிகளின் அசாத்திய பொறுமை! 
 எதிர்கட்சி ஆட்களையும் பாராமுகம் காட்டும் மக்களையும் மண்ணையும் மரத்தையும் கூட மரியாதையாக பேசும் அண்ணன் தம்பிகளை மட்டும்தான் 'இருந்தா இருடா பிசிறு! இல்லாட்டி போய்ட்டே இரு!' என்று எடுத்தெறிந்து பேசுவார்!
 அண்ணன் தவறு செய்யும் போது கேள்வி கேட்கும் உரிமை இருந்தாலும் நாங்கள் பலமுறை மௌனமாகவே கடந்து செல்கிறோம்!
அண்ணனின் இந்த அலட்சிய போக்கு பல முறை எங்களை காயப்படுத்தி இருக்கிறது! 
 கரூர் சம்பவத்திற்கு பிறகு அவரது சர்வாதிகாரம் இல்லாவிட்டால் நாங்களும் அப்படியான ஒரு கும்பலாகத்தான் ஆகியிருப்போம் என்று மனதைத் தேற்றிக் கொள்கிறோம்!
 மாடுகளைத் திரட்டி மாநாடும் ஊர்வலமும் நடத்தியபோது கூட சிறு கீறல் இல்லை என்றால் அதுதான் சீமான் உருவாக்கிய கட்டுப்பாடு!

 என்ன செய்வது அண்ணனை எங்களால் கைவிட முடியாதே?!
 ஆம்! உங்கள் குருட்டு கண்களுக்கு தெரிகிறதா?!
சீமானுக்கும் 60 வயதாகிவிட்டது! 
தம்பிகளும் இளமைக் காலத்தை தொலைத்துவிட்டு 40களில் அதாவது முதுமைக்கு வந்துவிட்டனர்! 
 தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் நல்ல அரசியல்வாதிக்கு மரணவலி கொடுக்கின்றனர்.
இப்படித்தான் வ.உ.சி!
இப்படித்தான் பாரதியார்!
இப்படித்தான் ஜீவானந்தம்!
இப்படித்தான் மபொசி!
இப்படித்தான் பாரதிதாசன்!
இப்படித்தான் நல்லகண்ணு! 
இப்படித்தான் தமிழரசன்! 
இப்படித்தான் கலியபெருமாள்! 
இப்படித்தான் நம்மாழ்வார்!

 தமிழக வாக்காள பெருமக்களுக்கு ஏதோ தாம் பெரிய சிவபெருமான் என்றும் ஓட்டுக் கேட்டு நிற்பவன் தன் பக்தன் என்றும் எண்ணிக்கொண்டு உயிர் போகும் அளவு சோதிக்கின்றனர்.
 அவன் உங்களை காப்பாற்றத்தான் உங்களிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறான் மக்களே!
 இதுவே சீமான் ஒரு வந்தேறியாக இருந்திருக்க வேண்டுமே?! 
 அன்று வைகோவுக்கும் விஜயகாந்துக்கும் இன்று கமலஹாசனுக்கும் விஜய்க்கும் அளித்த ஆதரவைக் கூட சீமானுக்கு அளிக்கவில்லை இந்த கேடுகெட்ட தமிழினம்! 
 வடவரில் கொஞ்சம் அறிவுள்ள டெல்லி மக்கள் ஓரிரு ஆண்டுகளிலேயே பாஜக- காங்கிரஸ் இரண்டும் ஒன்றே என்று அறிந்து கேஜரிவால் கைகளில் ஆட்சியைக் கொடுத்து இன்று பஞ்சாபை அவர்கள் வென்று நல்லாட்சி நடத்தவில்லையா?!
 ஒன்றில்லை ரெண்டில்லை 16 ஆண்டுகள் சீமானை சோதித்துவிட்டீர்கள்! 
வேறொரு இனமென்றால் இந்நேரம் சீமானை வைத்து தனிநாடே வாங்கியிருக்கும்!
 1971 இல் ஒரு 16 வயது சிறுவனை 13 ஆண்டுகள் சோதித்த ஈழத் தமிழினம் 1983 இல் அவரை தலைவனாக ஏற்றுக்கொண்டது!
சீமானும் அப்படியானவரே!
அவர் பாதையில் சறுக்கி இருக்கலாம் ஆனால் தடம் மாறவில்லை! 
 ஆனால் தமிழகத்தில் ஆண்கள் குவாட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் பெண்கள் ஆயிரத்துக்கும் ரெண்டாயிரத்துக்கும் ஓட்டு விபச்சாரம் செய்வதே அரசியல் என்று நினைக்கின்றனர்!
 பலமுறை 'ஒருவேளை கருணாநிதியும் ஜெயலலிதாவும் கூட ஆரம்பத்தில் மக்களுக்கு நல்லது செய்ய வந்து இவர்களின் புத்தி தெரிந்து கெட்டவர்களாக மாறிவிட்டார்களோ!' என்று எண்ணத் தோன்றுகிறது!
 நான் சீமானாக இருந்திருந்தால் இந்நேரம் ஒரு கருணாநிதியாக மாறியிருப்பேன்!
  சீமான் சமரசம் செய்யாமல் இருப்பதால் தான் இங்கே தமிழ்தேசியம் உயிரோடு இருக்கிறது!
 இல்லையென்றால் அவர் இடத்தில் வைகோ இருந்திருப்பார்!
 அந்த பிழைப்பு பிழைக்க எங்களுக்கு மனம் வரவில்லை!
ஆனால் சமரசம் செய்து கொண்டவர்களை புத்திசாலிகள் என்று கருதும் சிலர் உண்டு
அந்த வகையில் 'இப்படி இருந்தால் வெல்ல முடியாது!
இது திமுகவுக்கே சாதகமாக முடியும்!'
என்றெல்லாம் 'நடைமுறை' யில் நின்று பேசும் அதிமேதாவிகள்  நிதானமாக சிந்திக்கவும்!
 முதலில் ஒரு சிந்தனை வலுவாக நிற்காமல் அது நடைமுறையை மாற்ற முடியாது!
 அசாத்திய கனவுகள்தான் சாத்தியக் கூறுகளை மாற்றி அமைத்து நடைமுறையாக மாறுகின்றன!
 மன்னராட்சி காலத்தில் மக்களாட்சியே பெரும் கனவுதான்! 
 சரி சித்தாந்தங்களை விடுவோம்! எளிமையாக புரியும்படி சொல்கிறேன்!
 நீங்கள் சொல்வது போல திமுக அத்தனை பெரிய அரக்கன் என்றால் ஏன் மேற்குவங்க கம்யூனிஸ்ட்கள் போல தொடர்ந்து 30 ஆண்டுகள் வெல்ல முடிவதில்லை! 
அடுத்த பெரிய கட்சி அதிமுக என்றால் ஏன் தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் கூட ஆட்சியில் இல்லை?! 
 ஒரு தேர்தலில் அமோக வெற்றி அடுத்த தேர்தலில் படுதோல்வி என்று மாறி மாறி சந்திக்கிறார்களே அது யாரால்?! 
 என்னதான் பெரிய கட்சி, என்னதான் தொண்டர் பலம், என்னதான் கட்டமைப்பு, என்னதான் பணபலம் இருந்தாலும் சூழ்நிலை பொறுத்து தன் வாக்கை மாற்றிப்போடும் மக்களை விலைக்கு வாங்க முடியாது!
 திமுக வின் வாக்கு வங்கி அப்படியே இருக்கும்!
அதிமுக வின் வாக்குவங்கியும் அப்படியே இருக்கும்!
இருபுறமும் சாராத மக்கள்தான் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கின்றனர்.
 இவர்கள் நாம் தமிழர் பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டு இருக்கின்றனர்.
 இவர்களே சீமான் வாங்கிய 35 லட்சம் வாக்கு!
இவர்கள் நினைத்தால் அடுத்த தேர்தலிலேயே நாம் தமிழர் கட்சி ஆட்சியைப் பிடிக்கும்!
 சீமானின் இலக்கு இவர்கள்தான்! 
சீமான் முன்வைக்கும் பெருங்கனவு மாநில ஆட்சி அதிகாரத்திற்கும் அப்பாற்பட்டது!
 அவர் 10 ஆண்டுகள் ஆட்சியில் அமர்ந்து முழு சர்வாதிகாரியாக நடந்தால்தான் அவர் விரும்பும் மாற்றத்தில் கால்வாசியையாவது கொண்டுவர முடியும்!
 அத்தகைய மனிதனை கேவலம் அதிமுக வுடன் கூட்டணி வைக்கவில்லை என்று கரித்து கொட்டுவது எத்தனை பெரிய மூடத்தனம்!
 கட்சியே பிழைக்காது சின்னமே கிடைக்காது என்ற நிலையில் கூட உறுதியாக இருந்து அங்கீகாரத்தையும் சின்னத்தையும் பெற்றுவிட்டோம்!
  தனித்து தன் கால்களில் தன்மானத்தோடு நிற்கும் எங்களை குறைசொல்லும் நீங்கள் யார்?!
கூட்டத்தோடு கோவிந்தா போடுவது போல எல்லாரும் எவனுக்கு வாக்களிக்கிறானோ அவனுக்கே வாக்களித்துவிட்டு ஏதோ முதலமைச்சரை தான் ஒருவனே கைப்பிடித்து அரியாசனத்தில் அமர்த்தியது போல ஒரு திமிரோடு திரிபவர்கள்!
  சிலர் ஒருமுறை நாதக வுக்கு வாக்கு போட்டு அவர்கள் தோற்றதும் ஏதோ தன் அப்பன் தந்த சொத்து வீணாகிவிட்டது போல புலம்பல்!
 நாதக சின்னத்தில் நோகாமல் ஒரு ஓட்டு குத்திய உங்களுக்கே அது வெல்லாத போது இவ்வளவு கோபம் வருகிறதே!
 உடல், பொருள், ஆவி என அனைத்தையும் இறைக்கும் நாதக தம்பிகளுக்கு எப்படி இருக்கும்?!
 குடும்ப மானம் வரை குதறப்பட்ட அண்ணனுக்கு எப்படி இருக்கும்?!  

 'நடைமுறை' நாயகர்களே! 
 அப்படியே யோசித்தாலும் எடப்பாடியார் என்ன பெரிய தமிழ்தேசிய நடவடிக்கை செய்தார்?!
 ஜெயலலிதா வை சீமான் ஆதரித்த போது அதிமுக தலைமை எத்தனை உறுதியான நிலைப்பாட்டுடன் இருந்தது?!
 மத்திய அரசு நடுநடுங்கும் படி செயல்பட்டாரே?!
 எடப்பாடியின் நான்காண்டு ஆட்சி அத்தகையதா?!
 சீமான் ஏன் அவருடன் சேரவேண்டும்?! 
 மராத்தான் ஓட தகுதியும் வலுவும் பொறுமையும் உள்ள ஒருவன் ஏன் ஸ்லோசைக்கிள் ஓட்டுபவனுடன் இணைய வேண்டும்?!
 உங்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி பிடிக்கும் என்றால் ஆதரியுங்கள் ஆனால் அதுதான் தமிழ்தேசியம் என்றும் அதுதான் நடைமுறைச் சாத்தியம் என்றும் நாம் தமிழர் தம்பிகளுக்கு வகுப்பு எடுக்க வேண்டாம்!
 டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், நீட் 7.5% இடவொதுக்கீடு, தமிழ்நாடு நாள் அறிவிப்பு என எடப்பாடியாரின் தமிழ்தேசிய நடவடிக்கைகள் என்று நீங்கள் தரும் பட்டியலை விட கொஞ்சம் பெரிய பட்டியல் திமுக விடமும் உள்ளது!
 முதன்மைக் கொள்கை என்ன?!
தமிழினத்தின் தலையாய பிரச்சனைகளான காவிரி நதிநீர் மற்றும் முல்லைப் பெரியாறு நீர் பங்கீடு, மீனவர் தாக்குதல், கல்வி மத்திய அரசு பட்டியலில் இருப்பது அதனால் நீட் ,வரிக்கொள்ளை, சாராய விற்பனை, மலைகள் அழிப்பு என ஒவ்வொரு தமிழனின் மூச்சையும் ரத்தத்தையும் பாதிக்கும் பிரச்சனைகளுக்கு அதிமுக முன்வைக்கும் தீர்வு என்ன?
 மாநிலம் அதிகாரம் தாண்டிய நடவடிக்கை என்ன?! 
 'திமுக வை விட பரவாயில்லை' என்பதைத் தவிர அதிமுக வின் தகுதி என்ன?!
 அப்படியே பார்த்தாலும் திமுக, அதிமுக வை விட நாதக பரவாயில்லை என்று எங்கள் பக்கம்தானே வரவேண்டும்! 
 நீங்கள் ஏற்காவிட்டாலும் எங்கள் தகுதி தமிழ்நாட்டை ஆள்வதற்கும் மேலானது! இந்திய இனங்களுக்கே முன்மாதிரி கட்சி நாங்கள்!
 எங்கள் இலக்கு மிகப் பெரியது!
'வெற்றி அல்லது வீர மரணம்' என்று கூட இல்லை 'வீர மரணம் அல்லது வெற்றி' என்கிற நிலைப்பாடு தான் தம்பிகளின் நிலைப்பாடு!
 சீமான் இதிலிருந்து பின்வாங்கினாலும் தம்பிகள் பின்வாங்க விடமாட்டார்கள்! 
 அத்தனை உறுதியும் பொறுமையும் இல்லாதவர்கள் கட்சியிலிருந்து வெளியேறி எதிரிக் கட்சிகளிடமே தஞ்சம் புகுந்துவிட்டனர்.
 இதில் அதிமுக விடம் தஞ்சமடைந்தவர்கள் மட்டும் புனிதமாகி விடுவார்களா?! 
 திராவிடம் இரட்டைத் தலை பாம்பு ! திமுக அதிமுக இரண்டிற்கும் தலைகள் வேறு வேறாக தெரியலாம் ஆனால் உடல் ஒன்றுதான்!
 இங்கே இருப்பவன் அங்கே போவான்! 
அங்கே இருப்பவன் இங்கே வருவான்! 
அங்கிருந்து பணம் இங்கு வரும்!
 இங்கிருந்து ஒப்பந்தங்கள் அங்கு போகும்! 
 இவன் துப்பாக்கிச்சூடு நடத்துவான் அவன் தண்டனை வழங்காமல் பதவியுயர்வு வழங்குவான்! 
 இவன் நீட் கொண்டுவர கையெழுத்து போடுவான்!  அவன் அதை நடைமுறைப் படுத்துவான்! 
 இவன் சாராயம் தயாரிப்பான் அவன் அதை விற்பான்! 
 தமிழகத்தின் அத்தனை பிரச்சனைகளிலும் இருவரும் பங்காளிகள்! 
 இவர்களிடமா நாங்கள் மண்டியிட வேண்டும்?! 

 ஆதித்தனார் முதல் தவாக வேல்முருகன் வரை செய்து தோற்ற ஒரு அரசியல் நகர்வையே சீமானையும் செய்யச் சொன்னால் எப்படி செய்வார்?!
 திருந்த வேண்டியது மக்கள் தான்!
நாம் தமிழர் ஆட்சியில் அமராத ஒவ்வொரு நாளும் தமிழினத்துக்கு இழப்புதான்! 

 ஒன்று சீமானின் நல்லாட்சி அல்லது பீகார் போலக் கூட இல்லை சோமாலியா போல ஆகும் தமிழ்நாடு!
 
 இனத்தின் கடைசி வாய்ப்பு சீமான்! 
மங்குனி மக்களே! சீக்கிரமாகத் திருந்தித் தொலையுங்கள்! 
 ஒரு முதலாளி, பரம்பரைத் திருடன் என்று தெரிந்த ஒருவனை வேலைக்கு வைப்பாரா அல்லது நல்லவனா கெட்டவனா என்று தெரியாத ஒரு புது ஆளை வேலைக்கு வைப்பாரா?! 
 அப்படி திமுக அதிமுக ஊழல் கட்சிகள் என்று தெரிந்த பின்னும் அவர்களுக்கே வாக்களிக்காமல் சீமான் திருடனா இல்லையா என்று வாய்ப்பு வழங்கி முடிவு செய்யலாமே?! 
 பிற இனங்கள் நல்லாட்சியே கொடுத்தாலும் தொடர்ந்து ஒருவனை அதிகாரத்தில் நீடிக்கவிடுவதில்லை இதைவிட நல்லவன் ஒருவன் இருப்பானோ என்று புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்குவர்.
 காட்டாட்சி வழங்கி அதிமுக கேடுகெட்ட ஆட்சி வழங்கிய திமுக இவர்களையே மாறி மாறி தேர்ந்தெடுப்பது ஏன்?!
 தமிழர்கள் என்ன இவர்களுக்கு அடிமை சாசனம் கையெழுத்திட்டு வழங்கியுள்ளோமா?!

 இந்த தேர்தலில் தோல்வி என்றால் சீமான் தாங்கிக்கொள்வாரா தெரியாது ஆனால் அடுத்த தேர்தலிலும் தோல்வி என்றால் சீமானால் சத்தியமாகத் தாங்க முடியாது! 

 ஒரு தலைவன் உயிரோடு இருக்கும்போது ஏறெடுத்து கூட பார்க்காமல் அவன் செத்த பிறகு சாமியாக்கி கும்பிடுவது தான் நமக்கு வழக்கம்!
 இந்த முறையும் அதுதான் உங்கள் முடிவா?! 

 சீமான் ஸ்டைலில் சொல்கிறேன்!
மக்களே! காதல் வந்தால் சொல்லி அனுப்புங்கள்!
உயிரோடு இருந்தால் சீமான் வருவான்! 
 
 
 
 

Tuesday, 14 October 2025

உதயநிதி செய்யும் கருணாநிதித்தனம்

உதயநிதி செய்யும் கருணாநிதித்தனம்

 உதயநிதியின் நெருக்கம் கிடைத்த பிறகு வாழை படம் வெளியாகிறது! 
 மறுநாளே தேவேந்திரர் அதிகம் வாழும் பகுதிகளில் மாரி செல்வராஜ் படம் போட்டு அவரது ரசிகர் மன்றம் என்கிற பெயரில் ப்ளக்ஸ் வைக்கப்பட்டது! 
 அந்த பதாகையில் அப்பகுதியின் பெயர் இல்லை! அந்த ஊரைச் சேர்ந்த யாருடைய புகைப்படமும் இல்லை !
 அதாவது தமிழகம் முழுக்க பொத்தாம்பொதுவாக ஒரு பதாகை அடித்து வைக்கப்பட்டது!
 இதை வைத்தவர்கள் திமுக தொண்டர்கள் என்பதைச் சொல்லவேண்டியது இல்லை!
 அதாவது "இவர்தான் உங்கள் அடையாளம்! பிதுக்கப்பட்ட இவரை எப்படி தூக்கிவிட்டோம் பார்" என்று சொல்லாமல் சொல்கிறார்களாம்!
 ஆனால் வாழை படத்தில் சோ.தர்மன் படைப்பை ஆட்டையைப் போட்டு வழக்கம்போல தாழ்வு மனப்பான்மையை புகுத்தி கதறியிருந்தார் மா.செ!
 படமும் வெற்றியடைய வில்லை! 
 நொடிக்கு ரூ.9000 வருமானம் வரும் உதயநிதிக்கு  இது ஒரு பொருட்டா?!
 இப்போது தேவேந்திர குலத்தைச் சேர்ந்த கதாநாயகனை வைத்து அடுத்த படம் வருகிறது! 
 ஒருபக்கம் திராவிடத்தை தாங்கி நிற்கும் திமுக அதாவது கருணாநிதி குடும்பம்! 
 மறுபக்கம் அதை எதிர்த்து நிற்கும் தமிழ்தேசியத்தை தாங்கி நிற்கும் தேவேந்திர சமூகம்! 
 ரஞ்சித்தை வைத்து ஏவிய தலித்திய பாச்சா இவர்களிடம் பலிக்கவில்லை! 
 தற்போது நெல்லை கவின் ஆணவக் கொலை நடந்த போது அதை சாதி மோதலாக மாற்ற ஏவப்பட்ட கிருஷ்ணசாமி ரெட்டியார் மகனையும் இச்சமூகம் இனம் கண்டுகொண்டனர்!
 அத்தனை சமூகங்களையும் ஏதோ ஒரு வகையில் விலைக்கு வாங்கிவிட்ட திமுக தேவேந்திரரை பணிய வைக்க முடியாமல் திணறுகிறது!
 திமுக நடத்திய தாமிரபரணி படுகொலையில் பாதிக்கப்பட்ட பின்னணி கொண்ட மாரி செல்வராஜை விலைக்கு வாங்கியது! 
 திருநெல்வேலி வெள்ளம் வந்தபோது உதயநிதி சூட்டிங்குக்கு உதவியாக இருந்த மாரி செல்வராஜ் டீம் போனது!
 மாரி என்னவோ தேவேந்திரர் களுக்கெல்லாம் பிரதிநிதி போலவும் அவர் வந்து வெள்ளத்தையே வற்றவைத்து விட்டது போலவும் ஊடகங்கள் ஊதின! 
  இதில் எதுவுமே தேவேந்திர சமூகத்திடம் எடுபடவில்லை!  
 இம்முறை மீண்டும் மா.செ தேவேந்திரர் நாடார் மோதலை மையமாக வைத்து படம் எடுப்பதாக சொல்கிறார்கள்.
 ஒரு தேவேந்திர குடும்பத்துக்கும் ஒரு நாடார் குடும்பத்துக்கும் வயல்வெளியில் வந்த வரப்பு தகராறு இரு சமூக மோதலாக மாறி பல்வேறு பரிணாமங்களை அடைந்து பல உயிர்கள் பலியாயின.
 இதில் முதல் கொலையும் இரண்டாவது கொலையும் தேவேந்திர சமூகம் தான் செய்தது! 
 இதைச் செய்த பசுபதி பாண்டியன் கொல்லப்பட்ட பிறகு இது முடிவுக்கு வந்தது!
 இறுதி கொலை பசுபதி பாண்டியன் வீட்டில் ஸ்லீப்பர் செல்லாக இருந்த ஒரு தேவேந்திர பெண் பசுபதி விசுவாசிகளால் கொல்லப்பட்டது! 
 ஸ்டெர்லைட் பிரச்சனையை மடைமாற்ற உருவாக்கப்பட்ட மோதல்தான் இது என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் தொடர்ந்து கூறிவருகின்றனர்.
 கிட்டத்தட்ட நடந்து முடிந்துவிட்ட ஒரு பிரச்சனையை மறுபடி கிளறவுள்ளனர்.
 தேவேந்திரருக்கு ஒரு தலைமை உருவாகாமல் தடுத்துவிட்ட திராவிடம் தன் முயற்சியில் சற்றும் சளைக்காமல் வடக்கு போல தெற்கையும் இரண்டாக பிளந்து நடுவில் அமர முயன்றுகொண்டே இருக்கிறது!
 தேவேந்திர மக்கள் தெளிவாக இருக்கின்றனர்.
 மற்ற அனைத்து சமூகங்களும் கவனமாக இருக்க வேண்டும்! 
 
 

Monday, 6 October 2025

நெரிசல் மரணங்கள் நெஞ்சில் எழும் கேள்விகள்

நெரிசல் மரணங்கள் நெஞ்சில் எழும் கேள்விகள்

 சென்றமுறை விஜய் வேண்டுமென்றே போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் வகையில் பீக் அவரில் மெதுவாக ரோட் ஷோ நடத்தியது அவரது கூட்டத்தை அதிகமாக்கும் நோக்கம் இருப்பதை காட்டுகிறதே?! 

 மனசாட்சி இல்லாமல் 7 மணிநேரம் தாமதமாக வந்துள்ளாரே?! 
தனக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு போதுமான உணவு தண்ணீர் இருக்கைகள் போன்றவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரியவில்லையே?! 

 தன்னைப் பார்த்துவிட்டால் மக்கள் கலைந்து சென்றுவிடுவார்கள் என்று வாகன ஜன்னல்களை மூடிய படி பயணித்து ரசிகர்களை தொடர்ந்து வரும்படி செய்ததாகச் சொல்கிறார்களே?!

 கூட்டத்தில் 30 பேர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பது கூட தெரியாமல் அல்லது கவலைப்படாமல் உடனடியாக பிளைட் ஏறியது எப்படி?! அப்போது களத்தில் ஒரு நிர்வாகி கூடவா இல்லை?! 

 இந்தமுறை பேசும்போது நிறைய உளறல் மற்றும் பதற்றம்.  இப்படி நடக்கவுள்ளதை விஜய் ஏற்கனவே அறிந்திருந்தாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறதே?!

 சம்பவம் தெரிந்த பிறகும் களத்திற்கு கிளம்பி வராதது மற்றும் நிர்வாகிகளை அனுப்பாதது சந்தேகம் வரவைக்கிறதே?!

 நாளை காலையாவது நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து களத்துக்கு வந்து தனது தரப்பு நியாயத்தை சொல்வாரா? அப்படி சொல்லவில்லை என்றால் சந்தேகம் அதிகமாகுமே?!
 
  சென்ற கூட்டங்களில் கூடிய ரசிகர்களின் எண்ணிக்கை தெரிந்திருந்தும் ஏன் குறுகலான இடத்தை ஒதுக்கியது அரசு?! 

 சவுக்கு சங்கர் 'வீபரீதம் நடக்க வேண்டும் என்று அரசு எதிர்பார்க்கிறது' என்று முன்பே கூறியிருந்ததை இங்கே பொருத்திப் பார்க்கலாமா?!

 டேக் டைவர்ஸன் திட்டம் என ஏற்கனவே விஜய் கூட்டத்தை அலைக்களிக்கும் ப்ளானை செந்தில் பாலாஜி வைத்திருந்ததாக முன்பே கூறிய பத்திரிக்கை செய்தியும் இங்கே கவனத்தில் வருகிறதே?! 

 ஏற்கனவே எடப்பாடியார் கூட்டங்களில் பலமுறை ஆம்புலன்சை விட்டு நெருக்கடி ஏற்படுத்த முயற்சி நடந்துள்ளது. அது இம்மாதிரி மரணங்களை ஏற்படுத்தவா எனும் சத்தேகம் எழுகிறதே?!

 சரியாக நெரிசல் ஏற்பட்ட நேரம் மின்தடை ஏற்பட்டதும் சந்தேகம் வரச் செய்கிறதே?!

 கும்பமேளா நெரிசல் மரணங்களுக்கு பாஜக அரசு பொறுப்பு என்று கூறிய உதயநிதி இப்போது அதுபோலக் கூறுவாரா?!
 மக்கட்பணி செய்யாமல் துணை முதலமைச்சர் துபாயில் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?! 

 மக்கள் பணத்தில் இருந்து 10 லட்சம் வாரிக் கொடுப்பது சரியா?! 
 கள்ளச் சாராயத்திற்கும் சினிமா மோகத்திற்கும் என்ன பெரிய வித்தியாசம்?!

 ஏற்கனவே பதாகை வைக்கையில் ஒரு ரசிகர் இறந்த போது விஜய் ஆறுதலோ நிவாரணமோ வழங்கவில்லை! இப்போதாவது ஏதாவது வழங்குவாரா?!

 சினிமா மோகத்தில் நடிகரை நேரில் பார்க்க காட்டும் அளவுக்கதிகமான ஆர்வம் இன்று 40 உயிர்களை காவு வாங்கும் அளவுக்கு போய்விட்டதே?! இனியாவது மக்கள் திருந்துவார்களா?!
 
 நெரிசல் ஏற்படும் என்று தெரிந்தும் அல்லது கணிக்கத் தவறியும் குழந்தைகளை அழைத்துச் சென்ற பெற்றோர்களை என்னவென்று சொல்வது?!

  காத்திருந்து தரிசனம் செய்யும் பக்தர்கள் போல 8 மணிநேரம் அங்கேயே தவம் கிடந்தது என்ன மாதிரியான மனநிலை?!
 
 விஜயை பார்க்க வேண்டும் என்று மரங்களிலும் மொட்டை மாடிகளிலும் குரங்குகள் போல ஏறி நிற்பது. விஜய் மீது பாய்ந்து குதற தயாராக இருப்பது போன்ற செயல்களும் உயிருக்கு ஆபத்து விளைவிக்குமே?! 
 
 சில உயிர்கள் போனால்தான் நாம் ஒரு விடயத்தைப் பற்றி பேசவே செய்வோமா?!

28.09.2025

Sunday, 5 October 2025

ரசிகர்களைப் புறந்தள்ளுவோம்

ரசிகர்களைப் புறந்தள்ளுவோம்

 உங்களுக்கு இது வினோதமாக இருக்கலாம்!
 ஆனாலும் ரசிக கூட்டத்தை மேய்க்க விஜய் போல நடந்தால்தான் முடியும்! 
 விஜய்க்கு உண்மையிலேயே இறந்தவர்கள் மீது இரக்கம் இருக்கலாம்!  
 அவர் மனசாட்சி உறுத்திக் கொண்டிருக்கலாம்!  உடனடியாக கிளம்பி இறந்த உடல்களைப் பார்க்க கால்கள் துடிக்கலாம்!
 இறந்தவர்களின் உறவினர்களை சந்தித்து கண்ணீரைத் துடைக்க அவர் கைகள் துடிக்கலாம்! 
 ஆனாலும் அனைத்து உணர்ச்சிகளையும் அடக்கிக்கொண்டு மனசாட்சி இல்லாதது போல அவர் காட்டிக் கொள்ள வேண்டும்!
 அப்போது தான் தீவிர ரசிகர்களைத் தக்கவைக்க முடியும்!
 ரசிக கூட்டம் என்று வந்துவிட்டாலே இங்கே தலைவனுக்கான வரையறை தலைகீழ்!
 அதாவது இங்கே தலைவன் என்பவன் தொண்டனுக்காக துரும்பைக்கூட அசைக்கக் கூடாது!
 தப்பித் தவறி கூட நல்லது செய்யக்கூடாது!
 ரசிகனிடமிருந்து எல்லாவற்றையும் உருவி எடுப்பவனாக மட்டுமே இருக்க வேண்டும்!
 அப்படி ஒருவனைத்தான் இந்த ரசிக கூட்டம் விரும்பும்!

 இதுவே விஜய் இறந்தவர்களுக்காக ஒரு துளி கண்ணீர் சிந்தியிருந்தாலும் இந்த கூட்டம் அவரை விட்டுவிட்டு வேறு ஒருவனை தேடும்!

 இந்த கொடூரமான தற்கொலை மனநிலைதான் அன்று அந்த கூட்டத்தில் அனைவருக்கும் இருந்திருக்கும்!
 இவர்களுக்கு நல்லவர்கள் தம்மைப் பார்த்து பதறுவதில் அலாதி இன்பம்!

 இதற்கு என்ன காரணம் என்று கேட்டால் அதற்கு பதில் கிடையாது!
 ஆனால் இது நடக்கிறது! உலகம் முழுவதும் நடக்கிறது! 

 சமூகத்தால் புறக்கணிக்கப் பட்டவர்கள் பிறர் தம்மை ஏறெடுத்துப் பார்க்க அல்லது ஒரு நொடி திரும்பிப் பார்க்க இப்படியான கேவலமான கொடூரமான செயல்களை செய்வார்கள்!
 தாழ்வு மனப்பான்மையின் உச்ச வடிவம்தான் ரசிக மனநிலை! 

 இதை தடுக்க நாம் என்ன செய்வது! 
 இவர்களைப் பார்த்து அதிர்ச்சி அடையாமல் இருந்தாலே போதும்!
  கடந்து சென்றுவிட்டாலே போதும்!
பொதுமக்கள் இவர்கள் மீது குறைந்தபட்ச மனிதநேயம் கூட காட்டாமல் புறக்கணித்தால் இந்த கூட்டம் ஒழியும்!

 வட இந்தியரில் பொதுவாக சமூக அக்கறை கிடையாது! அதனாலேயே இத்தகைய கொடூரமான கோமாளிகள் அங்கே உருவாகவில்லை! 
 
 விஜய் முகத்தைப் பார்க்க கூட்டத்தில் முண்டியடித்து நசுக்கப்பட்டு வியர்வையில் நனைந்து பல மணிநேரம் அடக்கி வைத்திருந்த சிறுநீரும் மலமும் வெளிவந்து கேவலமாக இறந்து கிடந்தவர்கள் மீது எனக்கு எந்த இரக்கமும் ஏற்படவில்லை! 
 ஏனென்றால் அவர்கள் சாக வேண்டியவர்கள் தான்!

 ஆனால் பாதிப்பட்டோரில் வேறு காரணங்களுக்காக அந்த கூட்டத்தில் போய் சிக்கியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்! 

 இனி இப்படியொரு நிகழ்வு நடக்காமல் இருக்க இந்ந ரசிகவெறி கும்பல் அதிகாரத்தை நோக்கி நகர்வதை தடுப்போம்!
 
 இவர்கள் நண்பனோ உறவினரோ எவராயிருந்தாலும் மனிதநேயம் உள்ளவர்கள் புறக்கணிப்போம்! 

 ( 1 ம் தேதியே எழுதிய பதிவு)

 



 
 



 

Thursday, 18 September 2025

கச்சத்தீவு தாரைவார்ப்பு கருணாநிதி பங்கு

கச்சத்தீவு தாரைவார்ப்பு கருணாநிதி பங்கு

 புனித ஜார்ஜ் கோட்டையில் 19.06.1974 இல் நடந்த ஒரு சந்திப்பு பற்றிய ஆவணம் RTI மூலம் பெறப்பட்டுள்ளது.
 இது அன்றைய வெளியுறவுத்துறை செயலாளர் அளித்த அறிக்கை ஆகும்.
 அன்றைய தினம் வெளியுறவுத்துறை ஏற்பாடு செய்த இந்த கூட்டத்தில் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி, தலைமை செயலர் பி.சபாநாயகம், உள்துறை செயலர் எஸ்.பி.ஆன்ட்ரூஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 அப்போது முன்னுரையில் 1973 இலேயே அக்டோபர் 13 மற்றும் 19 தேதிகளில் டெல்லியில் இது தொடர்பாக ஏற்கனவே முதல்வரோடு நடந்த பேச்சுவார்த்தை பற்றி மீள நினைவு படுத்தினார் உள்துறை செயலர்.
 அதில் 1973 அக்டோபர் 13 தமிழ அரசிடம் பேசிய பிறகே 14 தேதி இலங்கையுடன் இந்திய அரசு பேசத் தொடங்கியது. அதன் பிறகு அக்டோபர் 19 தேதி கச்சத்தீவு ஒப்பந்தம் பற்றி முழுமையாக தமிழக அரசுக்கு விளக்கப்பட்டு நன்கு கவனிக்கவும் முழுமையாக விளக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
 அப்படி நினைவு கூர்ந்த பிறகு தற்போது ஒப்பந்தம் தொடர்பான தமிழக அரசின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் கேட்க இந்த கூட்டம் என்று கூறி பிரதமர் மற்றும் வெளியுறவுத் துறை பிரதிநிதியாக இலங்கை இந்தியா இடைப்பட்ட பாக் நீரிணைப்பு சுமூகமாக பங்கு பிரிக்கப்பட ஒத்துழைக்குமாறு தமிழக முதல்வரைக் கேட்டுக்கொண்டு சந்திப்பை தொடங்கி வைத்தார். 
 இந்த ஒப்பந்த ஏற்பாட்டுக்கு தான் முழுமையாக உடன்படுவதாக முதலமைச்சர் கருணாநிதி உறுதியளிக்கிறார். ஆனால் அரசியல் காரணங்களுக்காக தன்னால் இதை வெளிப்படையாகச் செய்யமுடியாது என்றும் ஆனால் இது பெரிய பிரச்சனையாக மாறாமல் பார்த்துக் கொள்வேன் என்றும் உறுதியளிக்கிறார்.
 இதைப் பாராட்டிய வெளியுறவுத்துறை செயலர் மத்திய அரசுக்கு எதிராக இந்த பிரச்சனை திரும்பக்கூடாது என்று அறிவுறுத்தினார். இதை அறிக்கையாக மத்திய அரசுக்கு அளித்த ஆவணமே தற்போது வெளியிடப்பட்டது.

 அதாவது 1973 லிருந்தே மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் கச்சத்தீவு ஒப்பந்தம் பற்றி பேச்சுவார்த்தை நடத்திவந்துள்ளது!
கருணாநிதியிடம் பேசிய பிறகே இலங்கையிடம் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது!
  ஆனால் இதே கட்சிதான் மத்திய அரசை மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் கச்சத்தீவு கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டி வருகிறது.
  மத்திய அரசு 1974 இல் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்த ஒப்பந்தமும் 1976 இல் மீன்பிடி உரிமைகள் பறிக்கப்பட்டதற்கும் கடந்த 20 ஆண்டுகளில் 6184 மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கும் 1175 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதற்கும் யார் காரணம் என்று இந்த ஆவணத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம்

 - தற்போதைய வெளியுறவுத்துறை ஜெய்சங்கர் அளித்த பேட்டியிலிருந்து 

Tuesday, 9 September 2025

திமுக.வில் பட்டியல் வகுப்பினருக்கு முக்கிய பதவி கிடையாதா

திமுக.வில் பட்டியல் வகுப்பினருக்கு முக்கிய பதவி கிடையாதா?’- 
அதிகார தீண்டாமையை கடைபிடிக்கும் அறிவாலயம்
By இரா.வினோத்


திமுகவின் 71 ஆண்டு கால வரலாற்றில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகிய முக்கிய பதவிகள் இதுவரை ஒரு முறை கூட பட்டியல் வகுப்பினருக்கு வழங்கப்படவில்லை. தற்போது காலியாக இருந்த பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளில் ஒன்று ஆ.ராசாவுக்கு வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. சமூக வலைதளங்களில் திமுகவினரால் கொண்டாடப்படும் ஆ.ராசா பட்டியல் வகுப்பை சேர்ந்தவர் என்பதால் புறக்கணிக்கப்பட்டு இருப்பது அக்கட்சியின் சமூக நீதி கொள்கையை கேள்வி எழுப்புகிறது.


சத்தியவாணி :-
கடந்த 1949-ல் திமுக.வை அண்ணா தொடங்கிய போது முன்னணி தலைவர்களாக இருந்தவர்களில் ஒருவர் சத்தியவாணி முத்து. பட்டியல் வகுப்பினரான அவர், கட்சிக்காக கர்ப்பிணியாக இருந்த போதும் சிறை கொட்டடியை அனுபவித்தவர். அதனால் கட்சியில் கொள்கை பரப்புச் செயலாளராகவும், ஆட்சியில் அமைச்சராகவும் உயர்ந்தார். அண்ணாவுக்கு பிறகு கட்சியிலும், ஆட்சியிலும் புறக்கணிக்கப்பட்ட சத்தியவாணி முத்து, `தாழ்த்தப்பட்டோர் முன்னேற்ற கழகம்' என்ற தனிக்கட்சியை தொடங்கினார். பின்னர் அதிமுக.வில் இணைந்தார். அவருக்கு எம்ஜிஆர் மத்திய அமைச்சர் பதவி வழங்கினார்.


கடந்த 1959 சென்னை மாநாகராட்சி தேர்தலில்தான் திமுக.வுக்கு அரசியலில் முதல் வெற்றி கிடைத்தது. அந்த வெற்றியை பெற்று தந்தவர்கள் ஒருங்கிணைந்த சென்னையின் மாவட்ட செயலாளர்களாக இருந்த ஏ.கே.சாமியும், இளம்பரிதியும். இருவரும் பட்டியல் வகுப்பை சேர்ந்த செல்வாக்கான தலைவர்கள். இந்த வெற்றி தந்த தன்னம்பிக்கையிலே அண்ணா, `ரிப்பன் கோட்டையை கைப்பற்றி விட்டோம். இன்னும் சில கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஜார்ஜ் கோட்டையையும் கைப்பற்றுவோம்'' என்றார்.

பட்டியல் வகுப்பினர் திமுக.வை ஆதரித்ததால் 1980-களில் தமிழகம் முழுவதும் வெல்ல முடிந்த எம்ஜிஆரால் சென்னையில் மட்டும் அவரால் பெரிய வெற்றியை பெற முடியவில்லை. சென்னையில் திமுக.வின் தளபதிகளாக இருந்த ஏ.கே.சாமி, இளம்பரிதி, வை.பாலசுந்தரம் போன்ற ‌பட்டியல் வகுப்பினர் ஓரங்கட்டப்பட்டதால் அக்கட்சியில் இருந்து விலகினர். அதன் பிறகே சென்னையில் திமுக தோல்வியை தழுவ தொடங்கியது.


குறிஞ்சிப்பாடி ராஜாங்கம், ஓ.பி.ராமன், டாக்டர் ராமகிருஷ்ணன் போன்ற பட்டியல் வகுப்பு தலைவர்களால் ஆட்சியில் அமைச்சர் பதவி பெற முடிந்தாலும், கட்சியில் பெரிய பொறுப்புக்கு வர முடியவில்லை. பொள்ளாச்சி பொதுத் தொகுதியில் வென்ற சி.டி.தண்டபாணி, முரசொலி மாறனை விட டெல்லியில் செல்வாக்காக இருந்தார். நாடாளுமன்ற துணைக் குழு தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்த அவர், முரசொலி மாறனுக்காக பலி கொடுக்கப்பட்டார்.

கடந்த 1980-களில் திமுக இளைஞர் அணியை கட்டமைத்ததில் முக்கிய பங்கு வகித்தவர் பரிதி இளம்வழுதி. பட்டியல் வகுப்பை சேர்ந்த அவர், மு.க.ஸ்டாலினுக்கு வலதுகரமாக செயல்பட்டு, 6 முறை எம்எல்ஏ.வாக வெற்றிப் பெற்றார். ஆட்சியில் அமைச்சர் பதவியை பெற முடிந்த அவரால் கட்சியில் துணை பொதுச் செயலாளர் பொறுப்பை மட்டுமே அடைய முடிந்தது. ஒரு கட்டத்தில் திமுக.வில் ஒதுக்கப்பட்டதால் பரிதி இளம்வழுதியும் கட்சியில் இருந்து விலகி, அதிமுக.வில் இணைந்தார்.

இதனால் பரிதி இளம்வழுதி வகித்த துணை பொதுச் செயலாளர் பதவி, மற்றொரு பட்டியல் வகுப்பில் அருந்ததியர் பிரிவை சேர்ந்த வி.பி.துரைசாமிக்கு வழங்கப்பட்டது. திமுக.வில் சாதி பாகுபாடு காட்டப்படுவதாக குற்றம் சாட்டிய வி.பி.துரைசாமி, 2-வது முறையாக அக்கட்சியில் இருந்து விலகினார். பாஜக.வில் இணைந்த அவருக்கு உடனடியாக துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.

வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பேசி ஆட்சியைப் பிடித்த திமுக.வில் பட்டியல் வகுப்பினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில்லை. பிரதான பதவிகளில் தொடங்கி மாவட்ட செயலாளர், நகர செயலாளர் பதவி வரை வாய்ப்பு மறுக்கப்படுகிறது. 65 மாவட்ட செயலாளர்களைக் கொண்ட அக்கட்சியில் பட்டியல் வகுப்பை சேர்ந்த ஒரே ஒருவருக்கு மட்டுமே அந்த பதவி வழங்கப்பட்டிருக்கிறது.

பச்சை அக்கரை:- 
திமுக.வில் பட்டியல் வகுப்பினர் புறக்கணிக்கப்படும் அதே வேளையில், எம்ஜிஆர் அதிமுக.வை தொடங்கியவுடன் அவ்வகுப்பை சேர்ந்த எஸ்.எம்.துரைராஜூக்கு பொருளாளர் பதவி வழங்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து சௌந்தர பாண்டியன் என்பவருக்கு பொருளாளர் பதவியும், தொழில்துறை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. பட்டியல் வகுப்பை சேர்ந்த டாக்டர் வேணு கோபாலுக்கு, ஜெயலலிதா நாடாளுமன்ற குழு தலைவர் பதவியை வழங்கினார். சாதி பாகுபாட்டுக்கு ஆளான தனபாலுக்கு சட்டப்பேரவைத் தலைவர் பதவியும், உணவுத் துறை அமைச்சர் பதவியும் வழங்கினார். ஏ.எஸ்.பொன்னம்மா, செ.கு.தமிழரசன் ஆகிய பட்டியல் வகுப்பினரை தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராகவும் நியமித்தார்.

அதே போல காங்கிரஸில் பட்டியல் வகுப்பை சேர்ந்த மரகதம் சந்திரசேகருக்கு நேரு அமைச்சரவையிலும், கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் என்ற பெரும் பதவியும் வழங்கப்பட்டது. முனுசாமி பிள்ளை, கக்கன், டி.ஆர்.பரமேஷ்வரன், ஜோதி வெங்கடாசலம் போன்றவர்களுக்கு முறையே உள்ளாட்சித் துறை, உள்துறை, இந்து அறநிலையத் துறை, சுகாதாரத் துறை வழங்கப்பட்டது. ஜோதி வெங்கடாசலத்துக்கு கேரள மாநில ஆளுநர் பதவி கூட வழங்கப்பட்டது. பட்டியல் வகுப்பை சேர்ந்த இளையபெருமாள் கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டதோடு, தேசிய ஆணையத்தின் குழுத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

இன்னொரு தேசிய கட்சியான பாஜக.வும் பட்டியல் வகுப்பை சேர்ந்த டாக்டர் கிருபாநிதியை 2000-ம் ஆண்டு மாநிலத் தலைவராக நியமித்தது. கடந்த மார்ச் மாதம் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த மார்ச்சில் எல்.முருகன் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். திமுக.வினரால் பிற்போக்கான கட்சியாக சொல்லப்படும் பாஜக.வில் எவ்வித பின்புலமும் இல்லாத முருகனால் தலைவராக முடிகிறது. முற்போக்கான கட்சியாக சொல்லப்படும் திமுக.வில் பட்டியல் வகுப்பை சேர்ந்தவர், எவ்வளவு பெரிய ஆளுமையாக இருந்தாலும் பிரதான பதவிக்கு வர முடியாதது ஏன்?

திமுக.வில் பிற வகுப்பினர் தாக்குப் பிடித்து பிரதான பதவியை பிடிக்க முடிகிறது. ஆனால் பட்டியல் வகுப்பினர் சத்தியவாணி முத்துவில் தொடங்கி வி.பி.துரைசாமி வரை அக்கட்சியில் தாக்குப் பிடிக்க முடியாமல், தொடர்ந்து வெளியேற்றப்படுகின்றனர். ஒரு காலத்தில் பட்டியல் வகுப்பினரின் கட்சி என அழைக்கப்பட்ட திமுக.வில், இன்று அவ்வகுப்பினர் இல்லாத கட்சியாக மாறி இருக்கிறது. சமூக நீதி, சாதி ஒழிப்பு பேசி, பெரியாரின் பெயரை மேடைதோறும் உச்சரிக்கும் திமுக, அதனை கட்சியில் கடைப்பிடித்து, 20 சதவீத மக்கள் தொகை கொண்ட பட்டியல் வகுப்பினருக்கு உரிய பிரதிநிதித்துவத்தை அளிக்குமா?

நன்றி: Hindu Tamil 
08.09.2020

Sunday, 7 September 2025

சசிகலா செங்கோட்டையனை புறக்கணித்தாரா

சசிகலா செங்கோட்டையனை புறக்கணித்தாரா
 இதோ விளக்கம்!
சசிகலா சரியாகவே நடந்துள்ளார்!
நியாயப்படி அவர் கட்டுப்பாட்டில் பலமாக இன்று இருந்திருக்க வேண்டிய அதிமுக அப்போது பாஜக வின் தூண்டுதலால் எடப்பாடி பழனிச்சாமி துரோகத்தால் ஜனநாயகப் படுகொலை நடந்து விதிகளெல்லாம் மீறப்பட்டு சசிகலாவிடம் இருந்து பிடுங்கப்பட்டு இந்த நிலையில் இருக்கிறது! 
 அன்று வளர்மதி பாடநூல் கழகத் தலைவராக நியமித்தார், தளவாய் சுந்தரம் அரசின் சிறப்பு பிரதிநியாக நியமித்தார். இருவருமே சசிகலாவின் சமூகத்தவர்கள் கிடையாது.
 அன்று முதல்வரை நியமிக்கும் அதிகாரம் இருந்த போதும் 4 சீனியர் முக்குலத்து அமைச்சர்கள் இருந்தபோதும் மூப்பு அடிப்படையில் சீனியரான எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்கினார் சசிகலா. 
 எடப்பாடியை விட சீனியரான நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம் ஆகியோர் தேர்தலில் தோல்வியடைந்து இருந்தனர்.
 அன்று ஓபிஎஸ் தர்மயுத்தம் என்று அவரே வெளியே போய்விட்டார்.
 செங்கோட்டையனை 2016 இல் ஜெயலலிதா வே அமைச்சராக நியமிக்கவில்லை! 
 அதனால் ஓ.பன்னீர்செல்வம் உடன் வெளியேறிய மாஃபா பாண்டியராஜன் வகித்த கல்வியமைச்சர் பதவியை செங்கோட்டையனுக்கு வழங்கினார். 
ஓபிஎஸ் வகித்த நிதியமைச்சர் பதவியை மீனவ சமுதயாத்தைச் சேர்ந்த ஜெயக்குமாருக்கு வழங்கினார்.
 இப்படி சசிகலா நியமித்த எவருமே முக்குலம் இல்லை! 
 இப்படி கட்சி விதிப்படி சமுதாய உணர்வில்லாமல் நியாயமாக நடந்துகொண்டார் சசிகலா!

Thursday, 28 August 2025

அடகுக்கடை விளம்பரம்

 அடகுக்கடை விளம்பரம்

 அவன் பீரோவைத் திறந்து எதையோ அவசரமாகத் தேடிக் கொண்டிருந்தான்.
 அவள் பின்னாள் வந்து நின்று "நா என்ன தேடுறேன்?" என்று கேட்டாள்.
 அவன் அரைநொடி மௌனத்திற்குப் பிறகு "ஒண்ணுமில்ல! அது வந்து..." என்று இழுக்க 
 அவள் அருகே வந்து பீரோவுக்குள் கைவிட்டு ஒரு பத்திரத்தை எடுத்து காட்டி "இதை தானே தேடுறேன்?"
 அவன் தலைகுனிந்து நின்றான்.
 "என் பேர்ல இருக்குறதே இந்த வீடு ஒண்ணுதான்! அதுவும் நா கஷ்டப்பபட்டு கட்டினது! ஈயெம்மை கூட முடியல! அப்படி என்ன அவசரம் எனக்கு?!"
 "லோன் கிடைக்கல தங்கம்! கடைசி நேரத்துல ரிஜெக்ட் ஆயிருச்சு!" என்ற படி அவள் கழுத்தைப் பார்த்தான்
 ரெட்டை வடம் மயில் வில்லை பொறித்த தங்க சங்கிலி ஜன்னல் வழியே வந்த சூரிய ஒளிக் கீற்று பட்டு மின்னிக் கொண்டிருந்தது.
 "என் ப்ரென்டு சரவணா கிட்ட கேக்கலாம்ல?!"
"அவன் ஒரு வாரமாவது டைம் கேக்குறான்!"
 "ஒரு வாரம் கழிச்சு பணம் போட முடியாதா?!"
"இல்ல இன்னைக்கே போட்டாகணும்! இல்லைனா உன் தொழில் அவ்வளவுதான்! நீ வாக்கு வேற குடுத்துட்ட!"
அவள் அமைதியாக நின்றாள்!
 "ஒரு வாரம் இதை நம்ம காசி மாமா கிட்ட வச்சி பணம் வாங்கி சமாளிச்சு அப்பறம் கண்டிப்பா மீட்டுடலாம்"
 "சரி! என் இஷ்டம்!" என்று சொல்லிவிட்டு டக்கென்று திரும்பி சென்றாள்.
 அவன் உடைகளை உடுத்திக் கொண்டு பைக் சாவியை எடுத்துக்கொண்டு வெளிய வந்து வாசலில் நின்றபடி பேசிக் கொண்டிருந்தான்!
 "மாமா...! ரொம்ப அவசரம்தான் ஆனா வட்டி ரொம்ப  அதிகமா இருக்கே! ஒரு வாரத்துல மீட்டுருவேன்! கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க மாமா!"
 அவள் வாசல் பக்கம் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்!
 அவன் உறைந்து போய் வாசல் திண்டு மேல் உட்கார்ந்தான்!
 தலையை பிடித்துக் கொண்டான்.
 
 "செல்வீ....!" அவள் உள்ளே இருந்து கூப்பிட்டாள்!
அவன் சற்றே கலங்கியிருந்த கண்களை துடைத்து விட்டு உள்ளே வந்தான்! 
"என்ன தங்கம்?!"
 கையில் ஒரு பெட்டியைக் கொடுத்தாள்!
திறந்து பார்த்தான்! அதில் அந்த ரெட்டைவட சங்கிலி இருந்தது.
 அவள் கழுத்தைப் பார்த்தான்.
மெல்லிய நூல் போன்ற தாலி சங்கிலி மட்டும் கிடந்தது.
 "உன் கிட்ட கேட்ருக்கலாமே?! நீ இருக்கும்போது நான் கண்டவங்க கிட்ட  கெஞ்சுறேன்?!" என்று கொஞ்சம் கோபமாக கேட்டாள்.
 "எங்கிட்ட இருக்கிறதே இது மட்டும்தானே?! அடுத்த மாசம் எங்க வீட்டுல கல்யாணம் வருது! நா பிறந்த வீட்டுல இப்டி வெறுங்கழுத்தா போய் நின்னா உன்ன பத்தி என்ன நினைப்பாங்க?!"
 அவள் கழுத்தை தடவிப் பார்த்தான்.
அவள் அவனுடைய இரு கைகளையும் பிடித்து விரல்களைக் கோர்த்து மாலை போல கழுத்தில் போட்டுக்கொண்டாள்! மார்பில் உரசிக் கிடந்த கைகளைப் பிடித்து மார்போடு அழுத்தியபடி அவன் கண்களை ஊடுறுவிப் பார்த்து சொன்னாள்  "நான் தான் உன்னோட உண்மையான தங்கம்!".
 அப்படியே இழுத்து கண்ணோடு கண் ஒற்றினான்.
 அவள் கன்னத்தில் வழிந்த நீரில் இரண்டு கண்ணீர் கலந்திருந்தது. 

 

 

Friday, 8 August 2025

வடவரில் முஸ்லிம் எவ்வளவு

வடவரில் முஸ்லிம் எவ்வளவு

தமிழகத்தில் இருக்கும் ஹிந்தியரில் முக்கால்வாசிப் பேர் சரியான நிறுவனப் பணிகளில் முறைப்படி பணிபுரிபவர்கள் அல்லர்.
 இவர்களில் கணிசமானோர் முஸ்லிம்கள்! 

 இருக்கும் புள்ளிவிபரங்களை அலசுவோம்
 திருப்பூர், சென்னை போன்ற நகரங்களில் முறைப்படி வேலைக்கு அமர்த்தப்பட்ட வடவர்களின் புள்ளிவிபரம் த.நா. தொழிலாளர் நலத்துறையிடம் உள்ளது.
 அவர்களது எண்ணிக்கையில் முஸ்லிம் எண்ணிக்கையை கண்டறிய அவர்களது பூர்வீக மாநிலத்தில் எத்தனை சதவீதம் முஸ்லிம்கள் என்று தெரிந்தால் கணிக்கலாம்!

 உதாரணமாக மேற்கு வங்கத்தில் ஏறத்தாழ 27% முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.
 அங்கிருந்து இருந்து 100 பேர் தமிழகம் வந்தால் அதில் 27 பேர் முஸ்லிம் இருப்பார்கள் என்று கொள்கிறோம்.

அப்படி கணக்கிட்டால்

ஒரிசா 286500
முஸ்லிம் (2.17%) 6217

பீகார் 247016 
முஸ்லிம் (16.87%) 41671

ஜார்கண்ட் 190518 
முஸ்லிம் (14.53%) 27681

மே.வங்கம் 184960 
முஸ்லிம் (27.01%) 49940

அஸ்ஸாம் 92105 
முஸ்லிம் (14.22%) 13097

உ.பி 89462
முஸ்லிம் (19.26%) 17230

மொத்தம் 906745
முஸ்லிம் மொத்தம் 155836
அதாவது 17%  

 இந்த சரியான புள்ளிவிபரப்படியே 9 லட்சம் பேர்!
 அதில் முஸ்லிம்கள் ஒன்றரை லட்சம் பேர்!
ஆனால் உண்மை இதைவிட பல மடங்கு அதிகம்! பெ.மணியரசன் அவர்களது புள்ளிவிபரப்படி தமிழக மக்கட்தொகை அதிகரிப்பையும் குழந்தை பிறப்பு விகிதத்தையும் வைத்து பார்த்தால் ஒரு கோடி பேர் (தமிழகத்தில் பிறக்காத மக்கள்) நுழைந்திருக்கின்றனர்.

 இதிலும் முஸ்லிம்கள் (இருக்கவேண்டிய) 17% ஐ விட மிக மிக அதிகம்!

 பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு வடயிந்தியா முழுக்க முஸ்லிம்களுக்கு எதிராக பொதுமக்கள் இயங்குகிறார்கள்! 
 வடக்கே ஒரு முஸ்லிம் பிறப்பிலிருந்து இறப்பு வரை பல தடைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது!
 ஏற்கனவே இந்திய அளவில் sc மக்களை விட முஸ்லிம் மக்கள் கல்வியில் பின்தங்கியுள்ளனர்!
 இதனால் குற்றச் செயல்களிலும் அவர்களே அதிகமாக உள்ளனர்!
 வடக்கே பொதுமக்கள் முஸ்லிம்களை தீண்டத்தகாதவராக பார்க்கின்றனர்! 
 ஆரம்ப கல்விக் கூடங்களில் ஆசிரியர்கள் பாகுபாடு!
 கல்லூரிகளில் சீனியர் மாணவர்கள் இழிவுபடுத்துவது!
அரசு நிறுவனங்களில் வேலை கிடைக்காமை!
 தொழில் செய்வோர் சக இந்து போட்டியாளர்களை எதிர்கொள்ள முடியாமை!
 அரசியலில் சரியான தலைவர்கள் இல்லாமை!
 தினசரி வாழ்க்கையில் ஹிந்துத்துவ ரவுடிகளை எதிர்கொள்வது!
 அரசு அதிகாரிகள் போலீஸ் என எல்லா அதிகாரிகளும் முஸ்லிம்கள் மீது வெறுப்பை கொட்டுவது! 
 ஊடகங்கள் தீவிரவாத முத்திரை குத்துவது!

இப்படி எல்லாவகையிலும் ஒடுக்கி ஒதுக்கி தள்ளப்பட்டு தமிழகம் வருகிறார்கள்!
 
  ஒரு காலத்தில் ஐரோப்பியர்கள் கடுமையான குற்றவாளிகளை (அவர்கள் வெள்ளையராக இருக்கும் பட்சத்தில் கொல்ல விருப்பமில்லாமல்) ஆஸ்திரேலியாவில் கொண்டுபோய் விட்டுவிடுவார்களாம்! 
 அதாவது உலகத்தை விட்டே ஒதுக்கிவைப்பது!
 அப்படித்தான் இங்கே வடக்கத்தி முஸ்லிம்கள் வந்து சேர்கின்றனர்.
 இவர்களுக்கு அடுத்து வந்துசேர்வது வடக்கத்தி sc மக்கள்!
 இப்படி வருகிற வடவரில் பெரும்பாலோர் பாஜக வுக்கு வாக்களிக்க மாட்டார்கள்! 
 அப்படி இருக்க இவர்களில் 6.5 லட்சம் பேரை ('சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்' மூலம்) தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்க்கவுள்ளனர்.
 
 அதாவது வடவர் வருகையில் தமிழக பாஜக வுக்கு தேர்தலில் பெரிய லாபம் ஒன்றும் இல்லை! 

 இருந்தாலும் வருகின்ற சிலரில் தமக்கு வாக்களிப்பார்கள் என்கிற எச்சை புத்தியில் இதை ஆதரிக்கிறார்கள்! 

 திமுகவும் இதற்கு உடந்தை!
இத்தனை நாள் பிராமணரைக் காட்டி ஆரியம் திராவிடம் என்று ஓட்டியாயிற்று!
 இனி இவர்களைக் காட்டி வடவன்- தென்னிந்தியன் என்று ஓட்ட வேண்டியதுதான் அவர்கள் வேலை!

 நான் முன்பே கூறியதுபோல வடவர் போரினாலோ பஞ்சத்தாலோ அல்லது நல்ல வாய்ப்புகளை அடையவோ கூட இங்கே வருவதில்லை!
 அப்படி வேறுவழியில்லாமல் இங்கே வந்தால் அவர்களை அரவணைக்கலாம்! அதுவும் நிலமை சரியாகும் குறிப்பிட்ட காலம் வரை!
 ஆனால் வடவர்கள் இங்கே வருவது தமது அரசியலில் அடைந்த படுதோல்வியின் காரணமாகத்தான்!
 எல்லா வளங்களும் இருந்தும் தன் தாய்நிலத்தில் தன் இன ஆதிக்கவாதிகளை எதிர்க்கத் துப்பில்லாமல் இங்கே ஓடி வருகின்றனர்.

 இவர்களை தமிழகத்தில் இருக்கும் எல்லா இனத்து முதலாளிகளும் பயன்படுத்திக் கொள்கின்றனர்!
 இதனால் தமிழினத் தொழிலாளர்கள் வேலை இழக்கின்றனர்!
 இதனால் மோதல் நிலை உருவாகிறது!
ஏற்கனவே பின்தங்கிய நிலையில் உள்ள வடவர்கள் இங்கே தமது குடும்ப-சமுதாய கண்கானிப்பும் இல்லாமல் சுதந்திரமாக திரிவதால் குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் அடிக்கடி நடக்கிறது!போலிஸ் மண்டையை உடைத்ததும் 9 வயது சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததும் நடந்தது!
 அப்படியே முதலாளிகளுக்கும் சரியான நிரந்தரமான தொழிலாளர்கள் இல்லாமல் எல்லா தொழில்களிலும் தரம் குறைகிறது!
 (தமிழினத் தொழிலாளிகள் திராவிட ஆட்சியில் குடிக்கு அடிமையாக்கப்பட்டு கிடப்பதும் ஒரு காரணம்!)

 ஆகவே இத்தகைய குடியேற்றத்தை தடுப்பதுதான் அனைவருக்குமே நல்லது! 
அரசு தடுக்காவிட்டால் பொதுமக்கள் தடுக்க வேண்டும்!
வடவரை எந்த இடத்திலும் சிறிதளவேனும் ஆதரிப்பது கூடாது!
நமக்குள் இருக்கும் மனிதநேயம் தடுத்தாலும் இதைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்! 
 
 அவரவர் மண்ணில் அந்தந்த மண்ணின் மைந்தர் தத்தமது தேசியவாத அரசியலை வளர்த்தெடுத்து தன்னிறைவு அடைவதே நிரந்தர தீர்வு! 



 

Tuesday, 22 July 2025

தமிழ்தேசிய சொர்க்கம்

தமிழ்தேசிய சொர்க்கம்

 அன்று பூவுலகை விட்டு விண்ணுலகம் வந்த தமிழர்கள் அவர்களது 'இனநலன் கணக்கு' பார்க்கப்பட்டு சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ அனுப்பட்டுக் கொண்டு இருந்தனர்.
 ஒருவர் பேன்ட் சர்ட் போட்டு கறுப்பு கண்ணாடி போட்டிருந்தார். ஆங்கிலம் கலந்து பேசிக்கொண்டு இருந்தார்.
 அவரை சொர்க்கத்துக்கு அனுப்பினார்கள்.
 இன்னொருவர் வேட்டி சட்டையில் தூய தமிழில் பேசிக் கொண்டு இருந்தார். அவரை நரகத்துக்கு அனுப்பினார்கள்!!
 இவர்களுக்கு பின்னால் நின்ற ஒருவர் எனக்குத் தெரிந்தவர் அவரை கணக்கு பார்த்து பூவுலகிற்கே அனுப்பிவிட்டனர்.
 எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
அங்கே நீதிபதி போல தமிழ்த்தாய் அமர்ந்திருந்தார்.
 முதலில் மூன்றாவது நபரைப் பற்றி கேட்டேன்.
"அவர் இனத்திற்கென்று எதுவும் செய்யவில்லை.
சாமானியனாக வாழ்ந்தார். அதனால் மீண்டும் பிறக்க அனுப்பிவிட்டேன்" என்றார் தமிழ்த்தாய்.
 நான் "அவர் ஜாதி பட்டத்தை தன் பெயருக்கு பின்னால் சேர்த்துக் கொண்டவர் ஆயிற்றே" என்று கேட்டேன்.
 அதற்கு "உலகம் முழுவதும் அப்படித்தானே?!
உலகின் மிக மதிக்கப்படும் தலைவர்கள் தம் பெயரையும் தம் குடிப்பட்டத்தையும் சேர்த்துதானே வைத்திருந்தனர்! சாதிப் பட்டத்தை பயன்படுத்துவது தவறில்லை பிற சாதிகளை மேலாகவோ கீழாகவோ எண்ணுவதுதான் தவறு!"
 "சரி! இன்னொருவரை நரகத்திற்கு அனுப்பினீர்களே அவர் யார்?!"
 "அவர்தான் எழுத்தாளர் தூயத்தமிழன்!"
"அவரா?! அவர் எழுத்துகளை வாசித்திருக்கிறேனே?!
 நல்ல எழுத்தாளர்தானே?!  இன உணர்வு உள்ளவர்தானே?! பிறகு ஏன் அவரை நரகத்தில் தள்ளினீர்கள்?!"
 "அவர் மொழிப்பற்றாளர்! மொழிபற்று மட்டுமே இன உணர்வு ஆகாது! தமிழில் கோர்வையாக நான்கு வரி எழுதத்தெரியாதவர்கள் கூட இனத்திற்காக பெரும் போராட்டங்களைச் செய்யவில்லையா?! 
அவர் தூய தமிழில் பேசுகிறார் மகிழ்ச்சிதான்! ஆனால் 'தமிழ் பேசுவோரெல்லாம் தமிழர்' என்றும் 'சாதியை விட்டொழிப்பதே தமிழ்தேசியம்' என்றும் 'தமிழர் தூய தமிழில் பேச வேண்டும்' என்றும் 
'கடவுள் நம்பிக்கையை விடவேண்டும்' என்றும் பேசியும் எழுதியும் வந்தார்"

"சரியாகத்தானே இருந்துள்ளார்?!"

"என்ன சரி?! இவரால் இயல்பான இனவுணர்வுடன் போராட வந்த பலரும் தலைதெறிக்க ஓடிவிட்டனர்"

"எப்படி?"

 "இன அடையாளமான குடிப்பட்டத்தை மறைத்துக்கொண்டு....
 தமிழை நன்கு கற்று சிறப்பாகப் பேசத் தெரிந்த வேற்றினத்தவரை எல்லாம் ஆதரித்து...
 இயல்பான சாதிய மத பற்றுடன் இருந்தவர்களை வெறியர்கள் என்று தூற்றி...
 ஆங்கில சொற்களை கலந்து பேசினால் அவன் பிறப்பையே சந்தேகப்பட்டு...
 என் வயிற்றுப் பிள்ளைகளான பார்ப்பனர்களை வேற்றினம் என்று வெறுப்பை பரப்பி... 
 'தமிழ் வாழ்ந்தால் தமிழன் வாழ்வான்' என்று முட்டாள்த்தனமாக எண்ணிக்கொண்டு....
 இனப்பற்றை புறந்தள்ளி மொழிப்பற்றை முதன்மையாகக் கொண்டு...
 ச்சே ச்சே இத்தக்கைய நபர்களால்தான் தமிழினத்தில் புகுந்த வந்தேறிகள் அதிகாரத்திற்கு உயர்ந்து இனத்தையே அழிக்கின்றனர்"

 "என்றால் மொழி பெரிது இல்லையா?! அதுதானே இனத்தின் உயிர்?"

 "இனம் என்பது ஒரு மனிதன் என்றால் மொழி என்பது அவனது முகம்!
 இனம் எனும் உயிர் வாழவேண்டும்! மொழி எனும் அடையாளம் அவ்வளவு முக்கியமில்லை"

 "சரி அந்த கறுப்புக் கண்ணாடி ஆசாமியை சொர்க்கத்துக்கு ஏன் அனுப்பினீர்கள்?!"
 
"முதலில் அவர் தன் குடிப்பட்டத்தை சேர்த்துக் கொண்டு வாழ்ந்ததால் வந்தேறிகள் ஊடுறுவலைத் தடுத்து நிறுத்தினார்"
 
 "அதைத்தானே பூமிக்கு திரும்பச் சென்றவரும் செய்தார்?!" 

 "ஆம்! ஆனால் இவர் இனத்திற்கு பெரிய நன்மை ஒன்றைச் செய்துள்ளார்!"

"அப்படி ன்ன செய்தார்?!"

"நான்கு பிள்ளைகள் பெற்றுள்ளார்!"

"அட! இது பெரிய இனத்தொண்டா?!"

"என்ன இப்படி கேட்டுவிட்டாய் இனம் பெருக வேண்டும் இல்லாவிட்டால் அழிவுதான்!"
 உனக்கு எளிதாக புரியவைக்கிறேன்!
இனம் என்பதை ஒரு மனிதனாக கற்பனை செய்துகொள்!
 அவனுக்கு உயிர் வேண்டும்!
உயிரைக் காத்துக் கொள்ளும் தற்காப்பு சிந்தனை வேண்டும்!
அவன் பலசாலியாக இருக்க வேண்டும்!
அவன் அறிவாளியாகவும் இருக்க வேண்டும்! 
அதன் பிறகுதான் அவன் அழகாக இருக்கிறானா?! பாடுகிறானா?! ஆடுகிறானா?! என்ற தகுதிகள் எல்லாம்!
அதே போல,
 தமிழினம் வாழ இனம் பெருக வேண்டும்! மக்கட்தொகை பெருக வேண்டும்!
 பிற இனங்களுடன் போட்டி போடும் வலு வேண்டும்!
அதாவது இனத்திற்கு அரசும் ராணுவமும் வேண்டும்!
 அறிவியலும் தொழில்நுட்பமும் வேண்டும்!
 அதற்குப் பிறகுதான் அது தாய்மொழியை வளர்க்கிறதா?! சமத்துவத்தைப் பேணுகிறதா?! பழமையை நிறுவுகிறதா?! பிற இனங்களுக்கு உதவுகிறதா? என்பதெல்லாம் கணக்கில் வரும்"
இதைவிட வேறொரு நன்மையும் இனத்திற்கு செய்துள்ளார்"

"அது என்ன?!"

 "வேறொரு இனத்தில் பிறந்த பெண்ணை காதல் திருமணம் செய்துள்ளார். அவள் மூலம் பிறந்த அந்த நான்கு குழந்தைகளையும் தமிழினத்திலேயே மணம் முடித்துள்ளார்"

 "புரியவில்லையே?!"

 "அதாவது ஒரு பெண் மூலம் வேறொரு இனம் விருத்தியாவதை தடுத்து தன் இனத்தில் அந்த விருத்தியைக் கொண்டுவந்துள்ளார்.
 அந்த நால்வரும் அம்மாவழியில் திருமணம் செய்திருந்தால் அவரை நரகத்தில் போட்டிருப்பபேன்!"

 "என்றால் வேற்றின பெண்களை குறிவைக்க சொல்கிறீர்களா?!"

 "அட முட்டாள்! தமிழினத்தில் பிறந்த ஆணோ பெண்ணோ வேறு இனத்தில் திருமணம் செய்து தமது சந்ததிகளை தமிழினத்தில் மணமுடித்து அடுத்த சந்ததிகளை உருவாக்குவது இனத்திற்கு பெரிய நன்மை!"

 "தமிழ்த்தாயே நீங்கள் கூறுவது பூலோகத்தில் பலரும் தமிழ்தேசியம் என்றால் என்ன என்று கூறும் வரையறைக்கு மாறாக இருக்கிறதே?!"

 "தமிழ்த்தாயே எனக்கும் உங்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்று ஆசை! நான் இனத்திற்குள்ளேயே திருமணம் செய்துவிட்டேன்! அதிக பிள்ளைகள் பெற்றுக்கொள்ளும் வயதையும் கடந்துவிட்டேன்! தமிழிலும் புலமை கிடையாது! நான் என்ன செய்ய?!"
 
 "இனப்பற்றோடு இரு! இன அரசியல் பற்றி அறிந்திரு! என்றாவது ஒருநாள் என் வயிற்றில் பிறந்த வீரமறவர்கள் இனம் காக்க வீறுகொண்டு எழுவார்கள்! அப்போது முடிந்தால் அவர்களுடன் சேர்ந்துகொள்! அல்லது முடிந்த அளவு உதவி செய்! நீ என்ன சாதியோ மதமோ எந்த நாட்டில் வாழுகிறாயோ அதையெல்லாம் இரண்டாம் இடத்தில் வை! நீ ஒரு தமிழன் என்ற இன உணர்வை முதல் இடத்தில் வை!
 எனக்கு ஆங்கிலேயர் போல உலகை தம் மொழியும் தம் இனமும் தம் மதமும் ஆள வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை! 
 என் நிலத்தில் என் மக்கள் தனி நாடு அமைத்து பாதுகாப்பாக நிம்மதியாக வாழவேண்டும்!
 அவ்வளவுதான் என் ஆசை!

" இதை என்னால் முடிந்த அளவு மக்களிடம் கொண்டுசெல்கிறேன் அன்னையே! நன்றி!"


 

Saturday, 19 July 2025

வெட்டி முண்டம்

வெட்டி முண்டம்

 இது மதுவிலக்கு பற்றிய சிறுகதை! 
மதுப்பிரியர்கள் படிப்பது அவர்களது விருப்பம்!
போதை இறங்கிவிட்டால் நான் பொறுப்பில்லை! 

 இதோ நல்ல வெயில் காலத்தில் திங்கட்கிழமை மதியம் வயிறு முட்ட தின்றுவிட்டு நடு வீட்டில் செங்கல் தரையில்  தலையணை வைத்துக்கொண்டு  காற்றாடியை முழு வேகத்தில் வைத்துக் கொண்டு இடுப்பில் இருந்த லுங்கிக் கட்டை அவிழ்த்து மார்பு வரை மூடி  இணையத்தில் இலவசமாக தரவிறக்கம்  செய்த புதிய ஒரு திரைப்படத்தை சுவற்றில் மாட்டி இருக்கும் டிவியில் போட்டு ஜன்னல்களையும் கதவுகளையும் அடைத்து விட்டு சத்தத்தை அதிகமாக்கி பார்த்துக்கொண்டிக்கும் போதே தூங்கி கிடக்கும் இவர்தான் இந்த கதையின் நாயகர். 
 இவர் என்றா சொன்னேன் மன்னிக்கவும் இவன்!
 இவன் ஒரு வெட்டி முண்டம்.
 இவனுடைய அன்றாட வேலை காலையில் 9 மணிக்கு மிக நிதானமாக எழுந்து நிதானமாக காலை கடன்களை முடித்துவிட்டு நல்ல உடைகளை உடுத்திக் கொள்வான். குழந்தைக்கும் இவனுக்கும்  அவனது மனைவி எதாவது ஒரு பழத்தை மிக்சியில் நாட்டு சக்கரையுடன் அரைத்து கூழ் போல கொடுப்பாள். அதைக் குடித்துவிட்டு பனிரெண்டாயிரம் ரூபாய் செல்போன் (அதில் 5ஜி இன்டர்நெட்) பணம் நிரம்பி வழியும் பர்ஸ், ஆயிரம் ரூபாய் ப்ளூடூத் நெக் பேன்ட், கர்சீப் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு எப்போதுமே முழு டேங்க் பெட்ரோல் இருக்கும் பைக்கை வெளியே இறக்கி குழந்தையை ஏற்றிக்கொண்டு பள்ளியில் கொண்டு விட செல்வான். சாலை வழியே போகாமல் தெரு வழியே சுற்றி சுற்றி போவான். அப்போது குழந்தையுடன் பேசிக்கொண்டே போவான்.
குழந்தையை பள்ளியில் இறக்கி டாட்டா காட்டிவிட்டு நல்ல தேநீர் கடைக்குப் போய் ஒரு தேநீரை வாங்கி அமர்ந்துகொண்டு நிதானமாக ரொம்ப நிதானமாக குடிப்பான். வாட்சப்பில் பத்து  ஸ்டேடஸ் போடுவான். ஒரு பருப்பு வடை அல்லது பஜ்ஜி வாங்கிக்கொள்வான்.
 அருகிலிருக்கும் பெட்டிக் கடையில் வேர்க்கடலையோ, பிஸ்கட்டோ வாங்கிக்கொள்வான்! வெயில் காலம் என்றால் குளிர்பானம் ஒன்று வாங்குவான். வீட்டிற்கு வந்து பழைய சோற்றை மோரில் பிசைந்து இரண்டு வகை ஊறுகாய் வைத்து வீட்டில் செய்த வத்தல் மற்றும் வாங்கிவந்த வடையுடன் மிக நிதானமாக டிவி பார்த்துக்கொண்டே சாப்பிடுவான். இப்போது நேரம் பதினோரு மணி ஆயிருக்கும். பிறகு கடையில் போய் அமர்வான்.
இவன் வீட்டிற்கு முன்பக்கமே கடை வைத்திருக்கிறார்கள். இவனுடைய அம்மாவும் மனைவியும் கடையை நடத்தி வந்தார்கள். அந்த கடைக்கு பொருட்கள் வாங்கி வருவது அந்த இருவரும் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் நேரத்தில் கடையில் போய் அமர்வதை தவிர இவனுக்கு வேறு எந்த வேலையும் இல்லை. இதுவும் இவன் மாமனார் புண்ணியம். ஓரளவு வசதியான சமூகத்தில் ஆனால் தின்றுகெட்ட குடும்பத்தில் பிறந்தவன் இவன்!
  இவன் கடையில் இருக்கும் நேரத்தில் வெயில் ஏறியிருக்கும் கடைக்கு ஆட்கள் வருவதும் குறைவாக இருக்கும்!
கடையில் எவனாவது வந்து எதையாவது எடுத்துக்கொண்டு போனால் கூட தெரியாத அளவுக்கு விட்டால் செல்போனுக்கு உள்ளே விழுந்துவிடும்படியாக அதை நோண்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பான். சமூக வலைகளில் புரட்சிகரமாக எதையாவது எழுதி பத்து லைக் வாங்க முக்கிக்கொண்டு இருப்பான். ஆனால் அது எப்போதும் நடந்ததில்லை.
 சிறிது நேரம் கழித்து தேநீர் போடச் சொல்லி அதையும் வாங்கி குடிப்பான்.
வெயில் நன்றாக உச்சிக்கு வந்து இறங்கும்போது 3 மணிக்கு மதிய சாப்பாடு சாப்பிடுவான். நல்ல அரிசியில் சோறு, வீட்டில் அரைத்த மசாலாவில் குழம்பு, அதில் நிறைய காய்கறிகள், கடலை எண்ணெயில் கூட்டு, ஆம்லேட், வாசலுக்கு வரும் கெட்டியான மோர், வீட்டு வத்தல், இரண்டு சுவையில் குரு ஊறுகாய், சின்ன அப்பளம் இரண்டு என்று அரைமணி நேரம் நிதானமாக சாப்பிடுவான். முன்னொரு காலத்தில் வடக்கே நல்ல வேலை கிடைத்து அங்கே போய் கைநிறைய சம்பாதித்து பை நிறைய பணத்துடன் அரிசிச் சோற்றுக்கு சிங்கி அடித்த  அனுபவம் உள்ளதால் சோற்றின் அருமை அதுவும் வீட்டுச் சமையலின் அருமை அவனுக்குத் தெரியும். "சாப்பாட்டுக்கு செலவு பண்ணலைனா நோய்க்கு செலவு பண்ண வேண்டி இருக்கும்" என்பது இவன் அப்பாவின் வேதவாக்கு.
 இவன் அப்பாவை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
இவன் ஒட்டுண்ணி என்றால் இவன் அப்பன் ஒரு பொணந்தின்னி. அதாவது தட்டில் ஒரு உயிரினம் செத்துகிடக்காவிட்டால் அவனுக்கு தொண்டையில் கடப்பாரை வைத்து இடித்தாலும் சோறு இறங்காது.
எதுவும் இல்லையென்றாலும் பத்துரூபாய் பாக்கெட் கருவாடை வாங்கி தோசைக்கல்லில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கருக்கியாவது கொடுக்கவேண்டும் அல்லது ஒரு முட்டையையாவது ஆப்பாயில் போட்டு வைக்கவேண்டும். தட்டு சுத்த சைவமாக இருந்தால் அவனுக்கு அவனுடைய  நாயைப் போலவே கோபம் வந்துவிடும். உடனே அந்த நாயைப்போலவே தட்டை தள்ளிவிட்டு நடுவீதியில் நின்று கத்துவான். குடிகாரனாக இருந்தாலும் கட்டிய மனைவி அவனை சகித்துக் கொண்டாள். காரணம் அவன் அப்பன் கடைசி வரை வேறு எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்த்ததில்லை. இல்லையென்றால் என்றோ பாயாசத்தைப் போட்டிருப்பாள். சரி! அவனது அப்பன் தின்று கெட்ட கதையை பிறகு பேசுவோம்! இப்போது கதையை விட்ட இடத்திற்கு வருவோம்! 
 நம் வெட்டி முண்டம் சாப்பிட்டுவிட்டு 4 மணிக்கு குழந்தையை அழைத்துவர போவான். மீண்டும் தெருவழியே சுற்றிக்கொண்டு குழந்தையுடன் பேசிக்கொண்டே வரும் வழியில் பேக்கரியில் நிறுத்தி சாக்லேட்டோ அல்லது சிறிய விளையாட்டு பொருட்களோ வாங்கிக்கொடுப்பான்.
அப்படியே அவனும் தேநீர் குடிப்பான் அல்லது குளிர்பானம் குடிப்பான்.
 வீட்டிற்கு வந்ததும் கை கால் கழுவி லுங்கியை மாற்றிக்கொண்டு மெத்தையில் பல தலையணைகளை அடுக்கி ஒரு டேபிள் பேன், ஒரு சீலிங் பேன், ஒரு கூலர் என்று காற்றோட்டமாக  குழந்தையுடன் ஆனந்தமாக தூங்குவான்.
 அல்லது குழந்தைகளுக்கான படங்களை இணையத்தில் எடுத்து டிவியில் ஓடவிட்டு குழந்தை பார்க்க அவன் அருகிலேயே படுத்து தூங்கிவிடுவான்.
 மாலை 6 மணிக்கு தேநீர் போட்டுவிட்டு அவன் மனைவி எழுப்புவாள். எழுந்து கை,கால், முகத்தைக் கழுவிக்கொண்டு சூடான தேநீருக்குள் உள்ளூர் உற்பத்தியான கைசுற்று முறுக்கை உடைத்துப் போட்டு ஸ்பூனால் எடுத்து தின்றுகொண்டே மூவரும் குடிப்பார்கள். முறுக்கு தீர்ந்துவிட்டால் பிஸ்கெட் அல்லது குக்கரில் சூடான பாப்கான் செய்துகொள்வார்கள். மழை பெய்தால் இவனே இவன் கையால் மேகி செய்வான். மற்றபடி இவனுக்கு வெந்நீர் வைக்க கூட தெரியாது.
 6:30 மணிக்கு வண்டியை எடுத்துக்கொண்டு இவனது நண்பனின் மெடிக்கல்  கடைக்கு போவான். இவன் ஒரு வெட்டி முண்டம் என்றால் இவனது நண்பன் ஒரு வீணாப்போன தெண்டம். இருவரும் அங்கே அமர்ந்து இந்த உலகத்தை எப்படி திருத்துவது என்று விவாதிப்பார்கள். அப்படியே அங்கே அருகில் ஒரு கடை இருக்கிறது. இங்கே வாழைத்தண்டு சூப், முருங்கை கீரை  சூப், உளுந்தங்கஞ்சி, பருத்திப்பால், சுண்டல், களி என்று இயற்கையாக எதையாவது உள்ளே தள்ளிக்கொண்டே பேசுவார்கள்.
 அல்லது கொஞ்சம் தள்ளி ஒரு தள்ளுவண்டியில் சூப், குடல், காளான், சில்லி சிக்கன் என்று எதையாவது தின்பார்கள். நீள்வட்டத்தின் இரு மையங்கள் போன்ற இவர்களைச் சுற்றி ஒரு நட்பு வட்டம் இருந்தது.
 இருட்டும் நேரம் அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தள்ளுவண்டியில் சூடாக தோலுடன் அவிக்கப்பட்ட வேர்க்கடலை வாங்கி தின்பார்கள் அல்லது சுக்கு காபி, சுண்டல் வாங்கித் தின்பார்கள். இப்போது அங்கே உலக பிரச்சனைகளுக்கு நூறு சதவீதம் சரியான தீர்வுகள் காணப்படும். 
  இருட்டிய பிறகு தேநீர் கடை சென்று சூடான பக்கோடா தின்றுகொண்டு தேநீர் குடிப்பார்கள். இது எல்லாவற்றுக்கும் இவன்தான் செலவு செய்வான்.
கடன் மட்டும் கொடுக்கமாட்டான். இவன் நண்பன் வீணாப்போன தண்டம் ஒரு நூறு ரூபாய் கடன் கேட்டதற்கு ஒரு வாரம் அவனை அன்பிரன்ட் செய்துவிட்டான்.  
 உலகத்தை திருத்திய பிறகு வீணாப்போன தெண்டம் மெடிக்கலில் இருந்து 8 மணி வாக்கில் கிளம்புவான். ஏடிஎம் இல் பணம் எடுத்துக்கொண்டு பெரிய கடைகளில் தன் கடைக்கு தேவையான பொருட்களை வாங்கிகொண்டு பண்ணையில் பால் வாங்கிக்கொண்டு தின்ன இரண்டொரு பழங்கள் வாங்கிக்கொண்டு 9மணி வாக்கில் வீட்டுக்கு வருவான்.
 குழம்பை சுட வைத்து தோசை சுட்டு சட்னியும் வைத்து சாப்பிடுவான். ஒரு தோசைக்கு ஒரு கின்னம் குழம்பு குடிப்பான். அப்படியே ஒரு ஆப்பாயிலும் உள்ளே தள்ளுவான். வாரம் ஒருமுறை பரோட்டா, சால்னா, காடை, சில்லி சிக்கன் என வாங்கி வந்து தின்பார்கள்.
 பிறகு டிவியைப் போட்டுக்கொண்டு விளம்பர இடைவெளிகளில் செல்போனை நோண்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பான். 
 பத்து மணிக்கு மேல் வண்டியை உள்ளே எடுத்துவிட்டு கதவைப் பூட்டுவான். அனைவரும் படுக்கையில் படுப்பார்கள். மனைவியும் குழத்தையும் தூங்குவார்கள் இவன் படுத்துக்கொண்டே செல்லை நோண்டிக்கொண்டு இருப்பான். பனிரெண்டு மணிக்கு மேல் பாலை குடித்துவிட்டு பழம் சாப்பிடுவான். பிறகு மெல்ல தூங்கிவிடுவான். தூக்கம் வராவிட்டால் மனைவியை எழுப்புவான். அப்போதும் அவள் வெளியே எங்கேயாவது கூட்டிப்போ என்பதைத் தவிர வேறு எதுவும் கேட்பதில்லை. 
 இவன் வெளியே எங்கேயும் போகமாட்டான்.
பக்கத்து ஊருக்கு போகக்கூட மூக்கால் அழுவான். கேட்டால் இமயமலை உயரமே 9 கிலோமீட்டர்தான் என்பான்.
 9 மணிநேரம் தூங்கி 3 வேளை சாப்பிட்டு நினைத்தபோதெல்லாம் ஒன்றுக்கும் இரண்டுக்கும் போய் நாக்கைத் தவிர எந்த உடல் பாகத்திற்கும் அதிக வேலை கொடுக்காமல் சுகபோகமாக வாழ்ந்துவந்த அவனது வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பம் வந்தது. அவனது பெண் குழந்தை ஆளாகிவிட்டது. இப்பதானே நடக்க ஆரம்பித்தாள் என்று குழம்பி நின்ற அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஆனால் குடும்ப பெரியவர்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டார்கள். மாமனாரும் மச்சான்களும் எல்லாவற்றையும் சிறப்பாக செய்தார்கள். அவன் மீது அனைவரும் கொஞ்சம் மரியாதை வைத்திருப்பது அவனுக்கு அப்போது தெரிந்தது.
சடங்கு வீட்டில் ஒப்புக்கு சப்பாணியாக சுற்றிக்கொண்டு இருந்தான்.  கடைசியில் கணக்கு பார்க்கும்போது செலவை விட வரவு அதிகமாக இருந்தது .  பெரிய திருப்பம் என்று நினைத்தது சிறிய திருப்பம் ஆகிவிட்டதால் அவன் பழையபடி வெட்டி முண்டமாகவே வாழ்க்கையைத் தொடர முடிவெடுத்தான்.  அன்று இரவு அவனது மாமியாரும் மனைவியும் பேசிக்கொண்டனர். அவனது மாமியார் அவர்கள் வாழ்க்கையில் முன்னேறவே இல்லை என்று அங்கலாய்த்துக் கொண்டார். தன் கணவனைக் குறைகூறியதும் பொறுக்க முடியாத அவன் மனைவி "என் புருசன் குடிப்பதில்லை! ஒழுங்கா இருக்காரு! இதுக்கு மேல என்ன வேணும்?!" என்று சினந்தாள்.
 இந்த கதை மூலம் இதை எழுதியவர் இந்த உலகத்துக்கு சொல்ல வருவது என்னவென்றால் குடிப்பழக்கம் இல்லாதவன் பத்த பைசா பேறாத வெட்டி முண்டமாகவே இருந்தாலும் மதிக்கப்படுவான்!
ஆக இதுதான் அந்த மதுவிலக்கு சிறுகதை!
 பெரிதாக எதிர்பார்த்தவர்கள் மன்னிக்கவும்! 
கடைசியாக ஒரே ஒரு பஞ்ச் டயலாக்!
 குடிப்பவனுக்கு குடி மட்டும்தான் போதை! 
குடிக்காதவனுக்கு வாழ்க்கையே போதை! 

Friday, 18 July 2025

தமிழ்நாடு பெயர்மாற்றமும் அண்ணாதுரையும்

தமிழ்நாடு பெயர்மாற்றமும் அண்ணாதுரையும்

*1920 இல் காங்கிரஸ் கட்சி 'அமையவுள்ள தங்களது ஆட்சியில் மொழி உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்' என்று உறுதியளித்து அதற்கு முன்மாதிரியாக கட்சி கட்டமைப்பை மொழிவாரி கிளைகளாக மாற்றி அமைத்தது.
 அப்படி அமைந்ததே 'தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி' எனும் கிளை (அதாவது தமிழ்நாடு என்பதே மக்கள் இயல்பாக பயன்படுத்திய சொல்.
 மக்கள் ஆதரவைப் பெற இதைச் செய்த அதே காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்த பிறகு மொழிவாரி உரிமைகளை தர மறுத்தது).

*  1920 இல் காங்கிரசின் இந்த கொள்கையை ஏற்று தீவிர காந்தி பக்தரான வரதராஜுலு நாயுடு "தமிழ்நாடு" எனும் காங்கிரஸ் ஆதரவுப் பத்திரிக்கையைத் தொடங்கி 1931 வரை நடத்தினார் (1925 இல் தமிழ்நாடு காங்கிரசுக்கு இவர் தலைவரானார்).

*1942 இல் 'தமிழ் ராஜ்யம்' என்ற பெயரில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனர் நூல் ஒன்று வெளியிட்டார்.
 அதில் இருந்த வரைபடத்தில் அன்றைய மதாராஸ் மாகாண தமிழர் பெரும்பான்மை மாவட்டங்கள், பாண்டிச்சேரி காரைக்கால், திருவனந்தபுரம் உள்ளடக்கிய குமரி, இலங்கையின் வடபகுதி எல்லாம் இருந்தது (பார்க்க: படம்).

* குமரியை தமிழகத்துடன் இணைக்க போராடிய போராளிகளை 'தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில்' சேர்க்க முடியாது என்று காமராஜர் துரத்திவிட்டார்.
 இதையடுத்து 1945 இல் குமரித் தமிழர்கள் சாம் நத்தானியேல் நாடார் தலைமையில் காங்கிரசில் இருந்து பிரிந்து தொடங்கிய கட்சி  1946 இல் 'திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்' என்று பெயர்மாற்றப்பட்டது. தமிழ்நாடு என்ற பெயரில் இருந்த முதல்  கட்சி இதுவே (தமிழ்நாடு என்பதே இயல்பான பெயராக அப்போதும் விளங்கியது).

* 1947 இல் தமிழர் கழகம் எனும் கட்சி தொடங்கி 'தமிழர் நாடு' எனும் பெயரில் பத்திரிகையும் தொடங்கினார்  'முத்தமிழ் காவலர்' கி.ஆ.பெ.விசுவநாதம் பிள்ளை 

 *1953 இல் மதராஸ் என்ற பெயரை மாற்றுவது குறித்து சட்ட மேலவையில் முதன்முதலாகப் பேசினார் ம.பொ.சி  (ஆனால் 1953 இல் 'ஆந்திர ராஜ்யம்' உருவாகிவிட்டது. 1956 இல் 'ஆந்திர பிரதேசம்' ஆனது).

* 1955 இல் ம.பொ.சி தனது தமிழரசுக் கழக செயற்குழு கூட்டத்தில் தமிழர் மாநிலத்துக்கு 'தமிழ்நாடு' என்ற பெயரை முன்மொழிந்தார்.

 * 1955 இல் சட்டசபையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் "தமிழ் ராஜ்யம்" என்று பெயரிடுமாறு குரல் கொடுத்தார்.
தனது பத்திரிக்கையிலும் தொடர்ந்து எழுதினார்.

* 1956 இல் 'மதராஸ் மாகாணம்' அதே பெயரால் 'மதராஸ் மாநிலம்' ஆனது.
'மதராஸ்' என்ற பெயருக்கு பதிலாக 'தமிழ்நாடு' என்று பெயரிட சங்கரலிங்க நாடார் உண்ணாவிரதம் இருந்தார்.

* காமராசர் பாராமுகமாக இருக்க 74 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து 1956 அக்டோபரில் அவர் இறந்தார்.
அதற்குப் பிறகு 42 நாட்கள் கழித்து சட்டமன்றத்தில் பெயர்மாற்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
ஆனால் காமராசர் அதைத் தள்ளுபடி செய்தார்.

* 1960 இல் ம.பொ.சி தலைமையில் மீண்டும் பெயர்மாற்றத்திற்கான மக்கள் திரள் போராட்டம் நடந்தது.
இதில் அண்ணாதுரை கலந்துகொண்டதோடு சரி.

* 1961 இல் சின்னதுரை கொண்டுவந்த தீர்மானத்தில் மதராஸ் மாகாணம் தமிழில் எழுதும்போது 'தமிழ்நாடு' எனவும் ஆங்கிலத்தில் 'மெட்ராஸ் ஸ்டேட்' என்றும் எழுதப்படும் என்று நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம் உறுதியளித்தார்.
அந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையை 'தமிழ்நாடடின் நிதிநிலை அறிக்கை' என்ற பெயரிலேயே தாக்கல் செய்து வாசித்தார்.

அதாவது பாதி வெற்றி அடைந்த இந்த நிலையில்தான் அதுவரை வேடிக்கை பார்த்த ('திராவிட நாடு' பத்திரிக்கை நடத்திவந்த) அண்ணாதுரை இதில் நுழைகிறார்.

இதற்குக் காரணம் அண்ணாதுரை 1962 பிப்ரவரியில் நடந்த தேர்தலில் தான் பிறந்த மண்ணான காஞ்சிபுரத்திலேயே மண்ணைக் கவ்வினார்.

அப்போது மக்கள் மத்தியில் 'தமிழ்நாடு' பெயர்மாற்றத்திற்கு இருக்கும் பரவலான ஆதரவை கவனித்து மக்கள் கவனத்தைப் பெற இந்த விடயத்தில் பங்கெடுக்கிறார் அண்ணாதுரை.

* 1962 இல் காமராசர் ஆட்சியில் பெயர்மாற்றத் தீர்மானம் மீண்டும் கொண்டுவரப்பட்டு நிறைவேறாமல் போனது.

* 1963 இல் இந்திய பாராளுமன்றத்தில் அண்ணாதுரை தமிழ்நாடு பெயர்மாற்றத்திற்கு குரல்கொடுத்து தனது வாதத் திறமையால் அனைவரையும் கவர்ந்தார்.
இதுவே இவர் இப்பெயர்மாற்ற போராட்டத்தில் செய்த குறிப்பிடத் தகுந்த பங்களிப்பு ஆகும்.

* பிறகு 1964 இல் பக்தவச்சலம் ஆட்சியில் இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டு மீண்டும் நிறைவேறாமல் போனது.

* அதற்கடுத்த இந்தியெதிர்ப்பு போராட்டத்தில் மத்திய மற்றும் மாநில காங்கிரஸ் அரசுகள் செய்த அடக்குமுறைகள் மக்கள் மனதில் வெறுப்பை ஏற்படுத்தி 1967 ஏப்ரலில் தி.மு.க ஆட்சியைப் பிடிக்க காரணமானது.

(இந்தியெதிர்ப்பு போராட்டமும் இவ்வாறே!
அதாவது சோமசுந்தர பாரதியார் தலைமை ஏற்று நடத்தியதே.
அண்ணாதுரை பங்கு அதிலும் பெரிதாக ஏதுமில்லை.
ஈவேரா ஒரு படி மேலே போய் போராடும் மாணவர்களை சுடச்சொல்லி எழுதிவந்தார்)

* ஆட்சிக்கு வந்து மூன்று மாதம் கழித்து 18.7.1967 அன்று சட்டமன்றத்தில் அண்ணாதுரை பெயர்மாற்றம் செய்ய மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.
அது ஏகமனதாக நிறைவேறியது.
 அன்று அண்ணாதுரை பேசியதைக் கவனிப்போம்...
"மதிப்பு மிக்க திரு. ம.பொ.சி அவர்கள் இதிலே மிகுந்த மன எழுச்சி பெற்றது இயற்கையானதாகும். அவர்கள் பல ஆண்டுகளாக 'தமிழ் நாடு' என்ற பெயர் இந்த நாட்டுக்கு இடப்படவேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையோடு பாடுபட்டவர்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தோழர்களும், திராவிட முன்னேற்றக் கழகம் என்பதிலே “திராவிட” என்பதை நினைத்துக் கொண்டிருப்பதாலே "தமிழ்நாடு" என்பதிலே அக்கரை இல்லாமல் போய்விடுமோ என்று சிலர் எண்ணிய நேரத்தில் ‘தமிழ்நாடு' என்று பெயரிடுதல் வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நாங்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்திக்கொண்டு வந்திருக்கிறோம்."

அதாவது ம.பொ.சி பாடுபட்டார், திமுக வலியுறுத்தியது.
 இதிலிருந்து இது யாருடைய போராட்டம் என்பது தெளிவாகப் புரிகிறது அல்லவா?! 

* ஓராண்டு கழித்து 1968 ஆண்டுக் கடைசியில் பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது.

* 14.01.1969 அன்று முதல் தமிழ்நாடு என்ற பெயர் நடைமுறைக்கு வந்தது.
அடுத்த ஒரு மாதத்தில் அண்ணாதுரை புகையிலைக் குதப்பும் பழக்கத்தால் வந்த புற்றுநோயினால் உயிரிழந்தார்.

ஏதோ அண்ணாதுரை சாகும்வரை போராடி பெயர்மாற்றம் கொண்டுவந்தது போல புனைக்கதைகள் எழுதப்படும் அதே வேளையில்
"தமிழ்நாடு" என்ற பெயருக்காக உயிர்நீத்த சங்கரலிங்க நாடாரை 'பெயர்மாற்ற விழா' அன்று நினைவுகூர்ந்ததோடு சரி அதன்பிறகு இருட்டடிப்பு செய்துவிட்டனர்.

  தமிழ்நாடு என்ற பெயரை முன்மொழிந்து போராட்டம் நடத்தி சாதித்துக் காட்டிய ம.பொ.சி கூட பிற்பாடு மெல்ல மெல்ல இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டார்.

 இன்று தமிழ்நாடு என்ற பெயரை உருவாக்கியதே அண்ணாதுரைதான் என்றும் அவர் இல்லாவிட்டால் நாம் 'மதராசி'களாக இருந்திருப்போம் என்றும் திராவிடவாதிகள் பேசுவதைப் பார்க்கிறோம்.

அண்ணாதுரைக்குப் பிறகும் இவர்களின் லட்சணம் (செயலழகு) எவ்வாறு என்றால்,

* கால் நூற்றாண்டு கழித்துதான் 1996 இல் மதராஸ் சென்னை ஆனது.

* (பிற மாநிலங்கள் போல அல்லாமல்) தமிழகத்தின் உயர்நீதி மன்றம் தமிழில் "சென்னை உயர்நீதிமன்றம்" ஆங்கிலத்தில் "மதராஸ் ஹைகோர்ட்" என்றே இன்றுவரை உள்ளது.
"தமிழ்நாட்டு உயர்நீதி மன்றம்" என்று இல்லை

* பிற மாநிலங்கள் தமது மாநிலத்தின் பெயரிலேயே தலைமைப் பல்கலைக்கழகம் வைத்துள்ளன.
ஆனால் இன்றுவரை தமிழகத்தின் தலைமைப் பல்கலைக்கழகம் "அண்ணா பல்கலைக்கழகம்" என்றே உள்ளது. 
"தமிழ்நாடு பல்கலைக் கழகம்" என்று இல்லை.
 இதிலும் ஒரு சதி 'அண்ணாமலைப் பல்கலைக்கழகம்' என்பதை சுருக்கி 'அண்ணா பல்கலை' என்று அண்ணாதுரையைக் குறிக்கும் வகையில் திரிக்கின்றனர். 

 அண்ணாதுரையும் தமிழுக்கோ தமிழருக்கோ செய்தது ஏதுமில்லை!  

(23.08.2018 மற்றும் 31.10.2021 பதிவுகள் இணைத்து மேலதிக தரவுகள் சேர்த்தது இப்பதிவு)

Wednesday, 16 July 2025

பெண்ணுரிமை என்று ஈவேரா உளறியவை

பெண்ணுரிமை என்று ஈவேரா உளறியவை

 ஈ.வே.ரா தன் வாழ்நாளில் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை ஒரு நிலைப்பாட்டில் இருந்து மாறாமல் இருந்தார் என்றால் அது அவரது பெண்களைப் பற்றிய நிலைப்பாடுதான்!

"பெண்கள் விடுதலைக்கு பிள்ளை பெறும் தொல்லை அடியோடு ஒழிந்து போகவேண்டும்.
அது ஒழியாமல் சம்பளம் கொடுத்து புருஷனை நியமித்துக் கொள்வதாயிருந்தாலும் பெண்கள் பொதுவாக உண்மைவிடுதலை அடைந்துவிட முடியாது என்றே சொல்லுவோம்"
- ஈ.வே.ரா (குடி அரசு,12-08-1928)
------------------
"தவிர 'பெண்கள், பிள்ளை பெறுவதை நிறுத்திவிட்டால் உலகம் விர்த்தியாகாது, மானிட வர்க்கம் விர்த்தியாகாது'
என்று தர்ம நியாயம் பேசச் சிலர் வருவார்கள்.
உலகம் விர்த்தியாகாவிட்டால் பெண்களுக்கு என்ன நஷ்டம்?
மானிட வர்க்கம் பெருகாவிட்டால் பெண்களுக்கு என்ன ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடும்?"
- ஈ.வே.ரா (குடி அரசு,12-08-1928)
-------------------
"பெண்கள் பிள்ளை பெறுவதில்லை என்கின்ற காரியத்தில் ஆண்களுக்கு எவ்விதக் கஷ்டமும் நஷ்டமும் கிடையாது என்பதோடு ஆண்களுக்கு இலாபமும் உண்டு என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
எப்படியெனில் ஒரு மனிதன் தான் பிள்ளைகுட்டிக்காரனாய் இருப்பதினாலேயே யோக்கியமாகவும் சுதந்திரமாகவும் நடந்து கொள்ளப் பெரிதும் முடியாமலிருக்க வேண்டியவனாய் விடுகிறான்.
அன்றியும் அவனுக்கு அனாவசியமான கவலையும் பொறுப்பும் அதிகப்படவும் நேரிடுகின்றது"
- ஈ.வே.ரா (குடி அரசு,12-08-1928)
-----------------
ஆண், பெண் இருவர்களின் சுயேச்சைக்குமே கர்ப்பமாவதும், பிள்ளைகளைப் பெறுவதும் இடையூறான காரியமாகிறது. அதிலும் பெண்கள் சுயேச்சைக்கு, கர்ப்பம் என்பது கொடிய விரோதியாய் இருக்கிறது. அதனால்தான் நாம் கண்டிப்பாய் "பிள்ளை பெறுவதை நிறுத்தியே ஆக வேண்டும்' என்கிறோம்.
- "குடியரசு' (6.4.1930)
---------
"ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக்கொண்டால் பெண்கள் மூன்று ஆசைநாயகர்களை வைத்துக்கொள்ள முற்பட வேண்டும்.
உடனே நிலைமை சரிப்பட்டுப்போகும்.
உண்மையான சமரசம் தோன்றிவிடும்.
பிறகு கஷ்டமே இருக்காது"
- ஈ.வே.ரா (குடி அரசு 8-2-1931)
-----------------
"ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரியாக வேஷ்டி கட்டவேண்டும்.
ஜிப்பா போடவேண்டும்.
உடைகளில் ஆண், பெண் வித்தியாசம் இருக்கக்கூடாது"
- ஈ.வே.ரா (நூல்: பெரியார் ஒரு வாழ்க்கை நெறி)
--------
"பெற்றோர்கள் தங்கள் பெண்களை பெண் என்றே அழைக்காமல் ஆண் என்றே அழைக்கவேண்டும்.
பெயர்களும் ஆண்கள் பெயர்களையே இடவேண்டும்"
- ஈ.வே.ரா (குடியரசு, 21-09-1946)

---------
"திருமணம் என்பது மனிதத்தன்மைக்காக ஏற்படவில்லை. மனிதன் பெண்களை அடிமைகொள்ளவே ஏற்பட்டது. அது ஆண்களுக்கு நன்மையாகவும் பெண்களுக்குக் கேடாகவும் இருக்கிறது. பெண்ணடிமைக்கு அடிப்படைக் காரணங்கள் திருமணம், கற்பு என்பவைகளேயாகும்.  பெண்களை அடிமையாக வைத்திருப்பது என்பது ஆண்களுக்கு லாபமாக இருக்கிற காரணத்தால், பெண்கள் உரிமைக்கு ஆண்கள், ஒப்புவது இல்லை. இந்த நிலை மாறியாக வேண்டும். நாளைக்கே ஒரு அரசாங்கம் வந்து, திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று சட்டம் செய்து விட்டால் பிரச்சனை இல்லை... எனவே, பெண்ணடிமை ஒழிய திருமண முறை ஒழிந்தாக வேண்டும். அதோடு மட்டுமல்ல. மனிதன் சுதந்திர மனிதனாக இருக்க வேண்டுமென்றாலும், இந்த திருமண முறை ஒழிந்தே ஆக வேண்டும்."
- ஈ.வே.ரா (நூல்: உயர்ந்த எண்ணங்கள்) 
----------------
"உத்தியோகத்துக்குப் போக ஆரம்பித்தால் பிள்ளைபெற வேண்டும் என்ற எண்ணமே பெண்களுக்கு வராது.
உத்தி யோகத்தில் சரிபகுதி பெண்களுக்குக் கொடுக்க வேண்டும்.
அதில் அவர்களை திருப்பி விட்டால் தாங்களாகவே பிள்ளை பெறுவதைத் தடுத்துக்கொள்வார்கள்.
பிள்ளை பெறுவதைத் தொல்லையாக கருதுவார்கள்.”
- ஈ.வே.ரா 17-3-1970
----------
"தாலி என்பது நாய்க்கு நகராண்மைக் கழகம் கட்டும் பட்டை போன்றது.
தாலி பெண்ணை அடக்கி ஆளும் மூர்க்கத் தனத்தின் சின்னம்.
தாலிபற்றிப் புலவர்கள் பேசும்போது காளையை அடக்குதல், புலிவேட்டையாடுதல் போன்ற பொருத்தமற்ற இலக்கிய ஆதாரங்களை அள்ளி வீசுவார்கள்.
பெண்களுக்கு அறிவு வந்தாலொழியத் தாலியை நீக்கமுடியாது"
- ஈ.வே.ரா (நூல்: நாய்க்கு லைசன்ஸ் பெண்ணுக்குத் தாலி)
-----------
"உலகில் ‘கற்பு’, ‘காதல்’ என்பன போன்ற வார்த்தைகளை எப்படி பெண் மக்களை அடிமைப்படுத்தி, அடக்கியாளவென்று ஏற்படுத்தி பயன்படுத்தப்பட்டு வருகின்றனவோ,
அது போலவேதான் ‘ஒழுக்கம்’ என்னும் வார்த்தையும்"
- ஈ.வே.ரா ( நூல்: மெட்டீரியலிசம் அல்லது பிரகிருதிவாதம்)
-----------

'பெண்களே உங்களுடைய கர்ப்பப் பைகளை வெட்டி எறியுங்கள்'

‘பெண் விடுதலைக்கு ஆண்மை அழிய வேண்டும்’ (தலைப்பு)

‘ஆண்கள் முயற்சியால் செய்யப்படும் எவ்வித விடுதலை இயக்கமும் எவ்வழியிலும் பெண்களுக்கு உண்மையான விடுதலையை அளிக்க முடியாது’

(நூல்: பெண் ஏன் அடிமையானாள்)
----------------
ஈவேரா சொன்னவற்றை சுருக்கமாகச் சொன்னால்
 "ஒரு பெண் திருமணம் செய்யாமல் குழந்தை பெறாமல் வாழவேண்டும் அதுதான் பெண் சுதந்திரம்" 

06.09.2017 அன்றைய முகநூல் பதிவை மேம்படுத்திய பதிவு