அடகுக்கடை விளம்பரம்
அவன் பீரோவைத் திறந்து எதையோ அவசரமாகத் தேடிக் கொண்டிருந்தான்.
அவள் பின்னாள் வந்து நின்று "நா என்ன தேடுறேன்?" என்று கேட்டாள்.
அவன் அரைநொடி மௌனத்திற்குப் பிறகு "ஒண்ணுமில்ல! அது வந்து..." என்று இழுக்க
அவள் அருகே வந்து பீரோவுக்குள் கைவிட்டு ஒரு பத்திரத்தை எடுத்து காட்டி "இதை தானே தேடுறேன்?"
அவன் தலைகுனிந்து நின்றான்.
"என் பேர்ல இருக்குறதே இந்த வீடு ஒண்ணுதான்! அதுவும் நா கஷ்டப்பபட்டு கட்டினது! ஈயெம்மை கூட முடியல! அப்படி என்ன அவசரம் எனக்கு?!"
"லோன் கிடைக்கல தங்கம்! கடைசி நேரத்துல ரிஜெக்ட் ஆயிருச்சு!" என்ற படி அவள் கழுத்தைப் பார்த்தான்
ரெட்டை வடம் மயில் வில்லை பொறித்த தங்க சங்கிலி ஜன்னல் வழியே வந்த சூரிய ஒளிக் கீற்று பட்டு மின்னிக் கொண்டிருந்தது.
"என் ப்ரென்டு சரவணா கிட்ட கேக்கலாம்ல?!"
"அவன் ஒரு வாரமாவது டைம் கேக்குறான்!"
"ஒரு வாரம் கழிச்சு பணம் போட முடியாதா?!"
"இல்ல இன்னைக்கே போட்டாகணும்! இல்லைனா உன் தொழில் அவ்வளவுதான்! நீ வாக்கு வேற குடுத்துட்ட!"
அவள் அமைதியாக நின்றாள்!
"ஒரு வாரம் இதை நம்ம காசி மாமா கிட்ட வச்சி பணம் வாங்கி சமாளிச்சு அப்பறம் கண்டிப்பா மீட்டுடலாம்"
"சரி! என் இஷ்டம்!" என்று சொல்லிவிட்டு டக்கென்று திரும்பி சென்றாள்.
அவன் உடைகளை உடுத்திக் கொண்டு பைக் சாவியை எடுத்துக்கொண்டு வெளிய வந்து வாசலில் நின்றபடி பேசிக் கொண்டிருந்தான்!
"மாமா...! ரொம்ப அவசரம்தான் ஆனா வட்டி ரொம்ப அதிகமா இருக்கே! ஒரு வாரத்துல மீட்டுருவேன்! கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க மாமா!"
அவள் வாசல் பக்கம் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்!
அவன் உறைந்து போய் வாசல் திண்டு மேல் உட்கார்ந்தான்!
தலையை பிடித்துக் கொண்டான்.
"செல்வீ....!" அவள் உள்ளே இருந்து கூப்பிட்டாள்!
அவன் சற்றே கலங்கியிருந்த கண்களை துடைத்து விட்டு உள்ளே வந்தான்!
"என்ன தங்கம்?!"
கையில் ஒரு பெட்டியைக் கொடுத்தாள்!
திறந்து பார்த்தான்! அதில் அந்த ரெட்டைவட சங்கிலி இருந்தது.
அவள் கழுத்தைப் பார்த்தான்.
மெல்லிய நூல் போன்ற தாலி சங்கிலி மட்டும் கிடந்தது.
"உன் கிட்ட கேட்ருக்கலாமே?! நீ இருக்கும்போது நான் கண்டவங்க கிட்ட கெஞ்சுறேன்?!" என்று கொஞ்சம் கோபமாக கேட்டாள்.
"எங்கிட்ட இருக்கிறதே இது மட்டும்தானே?! அடுத்த மாசம் எங்க வீட்டுல கல்யாணம் வருது! நா பிறந்த வீட்டுல இப்டி வெறுங்கழுத்தா போய் நின்னா உன்ன பத்தி என்ன நினைப்பாங்க?!"
அவள் கழுத்தை தடவிப் பார்த்தான்.
அவள் அவனுடைய இரு கைகளையும் பிடித்து விரல்களைக் கோர்த்து மாலை போல கழுத்தில் போட்டுக்கொண்டாள்! மார்பில் உரசிக் கிடந்த கைகளைப் பிடித்து மார்போடு அழுத்தியபடி அவன் கண்களை ஊடுறுவிப் பார்த்து சொன்னாள் "நான் தான் உன்னோட உண்மையான தங்கம்!".
அப்படியே இழுத்து கண்ணோடு கண் ஒற்றினான்.
அவள் கன்னத்தில் வழிந்த நீரில் இரண்டு கண்ணீர் கலந்திருந்தது.
No comments:
Post a Comment