காலில் விழாததுதான் குறை
ஒரு மாநில முதல்வர்,
இன்னொரு மாநில முதல்வரை
(நேரம் ஒதுக்கிக் கேட்டு) நேரில் போய் சந்திப்பது வரலாற்றில் நடக்காத கேவலம்.
முதலில் இந்த மரபை உடைத்து தன்மானத்தை விட்டு தானே நேரில் போய் சந்திரபாபு நாயுடுவை சந்தித்த அற்ப மனிதர் பன்னீர்செல்வம்.
(அப்படி செய்தும் நியாயமாக நமக்குத் தரவேண்டிய தண்ணீர் வரவில்லை.
ஏதோ பிச்சை கிடைத்தது)
இப்போது எடப்பாடி பழனிச்சாமி இந்த அவமானகரமான செயலை செய்யவுள்ளார்.
இந்திய ஜனநாயகத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்க வழியில்லைதான்.
அதற்காக இப்படியா?!
முதுகெழும்பில்லாத பிராணிகளை அரியணையில் ஏற்றினால் இப்படித்தான் மானத்தை வாங்குவார்கள்.
இனியாவது (கெட்டவனாக இருந்தாலும்) கொஞ்சமாவது நெஞ்சுரம் கொண்டவர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்புவோம்.
Tuesday, 30 January 2018
காலில் விழாததுதான் குறை
சட்டநாதன் அறிக்கை பற்றிய தவறான தகவலை பரப்ப வேண்டாம்
Monday, 29 January 2018
கொங்கு மண்டலம்
கொங்கு மண்டலம்
நில அமைவின் அடிப்படையில் தமிழகத்தின் இதயம் கொங்கு பகுதி ஆகும் (ஈழத்திற்கு திருகோணமலை போல).
தமிழர்நாட்டின் தாய்நிலத்தின் உள்ளேயே மலைகளால் சூழப்பட்ட பாதுகாப்பான பகுதிகள் இவை இரண்டும்.
இவற்றில் நாம் இராணுவ தலைமைச் செயலகத்தை நிறுவலாம்.
பாதுகாக்கப்படவேண்டிய எதையும் இவ்விரு பகுதிகளில் வைத்துக்கொள்ளலாம்.
நான் இப்போது கொங்கு பகுதியில் இருக்கிறேன்.
இங்கே திருநெல்வேலியில் பார்த்ததைவிட ஆழமான தமிழ் இனவுணர்வு மற்றும் பண்பாடு காணக்கிடைக்கிறது.
கொங்கு மண்டல தமிழ்மக்கள் பாராட்டிற்கு உரியவர்கள்.
நான் திரிகோணமலை போனதில்லை.
ஆனால் நல்லவிதமாக நிறைய கேள்விப்பட்டுள்ளேன்.
மேற்கண்ட இரண்டு பகுதிகளும் அதிதீவிர அந்நிய குடியேற்றங்களுக்கு ஆளாகியுள்ளன.
விரைவில் எதாவது செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
Thursday, 25 January 2018
மருத்துவ மாணவி (படக்கதை)
Wednesday, 24 January 2018
பொய்களின் மடம்
பொய்களின் மடம்
காஞ்சி காமகோட்டி மடம் ஆதிசங்கரர் நிறுவியது என்பது முழுப் பொய்.
அதன் தலைமை மடாதிபதிகள் சங்கராச்சாரியார் என்ற பட்டத்தைப் பயன்படுத்த தகுதி இல்லாதவர்கள்.
அந்த மடம் உருவானது 1780களில்.
ஆதிசங்கரருக்கும் காஞ்சி மடத்திற்கும் தொடர்பே கிடையாது.
காஞ்சி சங்கராச்சாரிகள் அத்தனைபேரும் முழிப்பொய்யர்கள் என்பதையும் அவர்கள் கூறும் வரலாறு அனைத்துமே கட்டுக்கதை என்பதையும்
ஆதிசங்கரர் நிறுவிய சிருங்கேரி, பூரி, துவாரகா, பதரி ஆகிய நான்கு மடங்களினுடைய உண்மையான சங்கராச்சாரிகள் தொடர்ந்து கூறிவருகின்றனர்.
இதற்கெல்லாம் சான்று காஞ்சி சங்கராச்சாரிகள் பத்திரிக்கைகளில் எழுதிய தொடருக்கு வரிக்கு வரி பதிலடி கொடுத்து 'வாரணாசி ராஜ்கோபால் சர்மா' (பிராமணர்) எழுதிய "Kanchi Kamakoti Math - A Myth" என்ற புத்தகம்.
அந்த கொலகாரனுக மொதல்ல சங்கராச்சாரியே கெடையாது ஓய்!
Thursday, 11 January 2018
பொங்கல் கொண்டாடும் தமிழின இசுலாமியர் கிறித்தவர் புகைப்பட தொகுப்பு
தமிழர் அனைவருக்கும் பொதுவான பொங்கல் திருநாளை கொண்டாடும் தமிழின இசுலாமியர், கிறித்துவர் படங்கள் குறைவாகவே காணக்கிடைக்கின்றன.
அதற்கு காரணம் தமிழின கிறித்தவர், இசுலாமியர்கள் பொங்கல் கொண்டாடும்போது பிற தமிழர்கள் போலவே உடை அணிவதினால் வேறுபாடு தெரிவதில்லை.
கிடைத்த படங்களை பதிவேற்றி உள்ளேன்.
Tuesday, 9 January 2018
சல்லிக்கட்டு நினைவுகள் (தொகுப்பு)
சல்லிக்கட்டு நினைவுகள் (தொகுப்பு)
புகைப்படங்களாக நிகழ்வுகள்
https://m.facebook.com/aathi1947/albums/1125717077531944/
Wednesday, 3 January 2018
ஜனநாயகம் என்பது என்ன?
ஜனநாயகம் என்பது என்ன?
ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலமாம்.
இங்கே ஜனநாயகம் என்பது என்ன?
பெரும்பான்மை பலத்தினால் பூனைகள் (சிறுபான்மையான) புலிகளை ஆள்வதுதான் ஜனநாயகம்.
இந்திய ஒன்றியத்தில் இருப்பதோ மோசமான ஜனநாயகம்.
அதாவது புலிகளுக்கு (தமிழர்களுக்கு) வாய்ப்பே கொடுக்காமல் தொடர்ச்சியாக பூனைகளே (ஹிந்தியர்களே) ஆள்வது.
புலிகள் வேட்டையைத் (வன்முறையைத்) தொடங்காமல் இதிலிருந்து தப்பிக்க முடியாது.
புலிகளுக்கும் பூனைகளுக்கும் தனித்தனி ஜனநாயகம்(நாடு) அமைவது வேண்டுமானால் சரியாக இருக்கலாம்.