Monday, 12 May 2025

கள்ளழகர் கதை ஒரு பொய்க்கதை

கள்ளழகர் கதை ஒரு பொய்க்கதை
26.04.2017

திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்,

மாசி மாதத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடக்கும்
இது மாசித் திருவிழா.
மீனாட்சியம்மனும் சுந்தரேஸ்வரரும் தம்பதிகளாக ஊர்வலம் வரும் தெருக்கள் இன்றும் மாசிவீதிகள் என்று அழைக்கப்படுகின்றன.

இரண்டு மாதம் கழித்து,
சித்திரை மாதத்தில் அழகர் ஆற்றில் இறங்குவார்.
அதுவும் மதுரையில் அல்ல தேனூர் அருகே.

என்றால் கள்ளழகர், மீனாட்சி கல்யாணத்தைப் பார்க்க வருகிறார் என்ற கதை பொய்தானே?!

திருமலை நாயக்கர் இந்த இரண்டு விழாவையும் ஒன்றாக்கி சித்திரையில் கொண்டாடுமாறு மாற்றியமைத்துள்ளார்.

மீனாட்சி அழகரின் தங்கை என்பதற்கு எனக்குத் தெரிந்தவரை எந்த சான்றும் கிடையாது.

இதேபோல இராசராசனின் சதய திருவிழாவும் மாதம் மாற்றப்பட்டுள்ளது.

கடவுள்கள் வரலாறை ஆள்பவன் நினைத்தால் மாற்றமுடிகிறதே?!

வந்தேறிகள் இப்படித்தான் ஆளும் அதிகாரத்தைக் கைப்பற்றி தமிழர்களின் ஒவ்வொரு விழாவையும் குழப்பி  வைத்துள்ளனர்.

முகம் சிதைந்த கண்ணகி சிலை


முகம் சிதைந்த கண்ணகி சிலை
20.12.2015

எச்சரிக்கை:
இப்பதிவைப் படிப்போருக்கு இனவெறி வர வாய்ப்புள்ளது.

சமண மதத்தைச் சேர்ந்த கண்ணகி ,
சோழநாட்டில் பிறந்து
பாண்டிநாட்டில் வழக்காடி
சேரநாட்டில் தெய்வமானாள்.

தமிழ் மூவேந்தர்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டார்கள் என்றும் தமிழர் இனவுணர்வு இல்லாமல் பாண்டிநாட்டான்,சோழநாட்டான், சேரநாட்டான் என்ற நாட்டு உணர்வுடன் இருந்தனர் என்றும் சிலர் கூறுகின்றனர்.

தமிழர்கள் என்றும் தமிழர்களாகத்தான் இருந்தனர் என்பதற்கான சான்றுதான் மூவேந்தரும் சமமாகப் போற்றப்பட்டு எழுதப்பட்ட சிலப்பதிகாரமும் இன்றும் தொடரும் கண்ணகி வழிபாடும்.

என்றால் ஈழம் விடுபடுகிறதே?
இல்லை, ஈழத்தான் மட்டும் சளைத்தவனா?
இன்று தமிழகத்தை விட அதிகமான கண்ணகிகோவில்கள் ஈழத்திலே உள்ளன.

கண்டியில் உள்ள புத்தர்கோயிலில் பத்தினி வழிபாடு பத்தினித்தெய்யோ என்ற பெயரில் திருவிழாவாகச் சிங்களவரால்  கொண்டாடப்பட்டு வருகிறது.
இது பத்தினித் தெய்வம் வழிபாட்டின் திரிபேயாகும்.
(இது கண்ணகி வழிபாடு கிடையாது).

சேரன் செங்குட்டுவன் இமயம் சென்று கல் எடுத்துவந்து கண்ணகிக்குக் கோயில் எழுப்பியதும் தமிழ் மன்னர்கள் அனைவரும் அப்பத்தினிக்குக் கோவில்கள் எழுப்பினர்.
ஈழத்திலும் அதேகாலகட்டத்தில் கண்ணகிக்கோவில்கள் கட்டப்பட்டன.
ஆக கண்ணகி வழிபாடு
மதம், நாடு தாண்டிய தமிழ் இன உணர்ச்சியின் அடையாளம் ஆகும்.

கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள் பழமையானதும் சேரன் கட்டியதுமான அந்தக் கோவில் இன்று மங்கலதேவி கண்ணகிக் கோவில் என்று அழைக்கப்படுகிறது.
மங்கல தேவி என்பது யார் என்ற கேள்விக்கு தமிழ்ப்பார்ப்பனர் உ.வே.சா வின் விளக்கமானது,
கண்ணகிக்கு வஞ்சிக்காண்டம் வரந்தரு காதையில்:
"மங்கலமடந்தை கோட்டத் தாங்கண்
வெங்கோட்டுயர் வரைச் சேனுயர் சிலம்பில்"
என்று குறிப்பு உள்ளது. மங்கல மடந்தை என்பதற்குப் பொருள் மங்கல தேவி என்றும் அது கண்ணகியைக்குறிக்கும் சொல்லாகும்
என்கிறார் தமிழ்த்தாத்தா.

தமிழ் நிலத்தை கிட்டத்தட்ட 1500ச.கி.மீ ஆக்கிரமித்து இன்று 38,863சகீமி பரப்பளவுகொண்ட கேரள மாநிலம் இன்னமும் மண்வெறி பிடித்து அலைகிறது.

தமிழக எல்லைக்குள் உத்தமபாளையம் தாலுகாவில் உள்ள வனப்பகுதியில் 4380 அடி உயர சிகரத்தில் உள்ளது கண்ணகிகோயில்.
1959 வரை கேரள அரசு, கண்ணகி கோவில் எல்லை குறித்து எவ்வித ஆட்சேபனையும் எழுப்பவில்லை.
அதன்பிறகு சிறிய சிறிய பிரச்சனைகளைச் செய்யத்தொடங்கியது.

பிரச்சனையைத் தீர்க்க 1976ல் தமிழ்நாடு கேரள அரசு அதிகாரிகள் கூட்டாக நடத்திய சர்வேயிலும் கண்ணகி கோவில் கேரள எல்லையில் இருந்து 40 அடி தூரம் தள்ளி தமிழகப்பகுதியில் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதற்கிடையில், கூடலூரில் சில தமிழார்வலர்கள் 'மங்கலதேவி கண்ணகி கோட்ட சீரமைப்புக்குழு'  என்று ஒன்றைத் தொடங்கி கோவிலைப் புதுப்பிக்க திட்டமிட்டனர்.

1976ல் இந்த சீரமைப்புக்குழு,
அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதியைச் சந்தித்து உதவி கேட்டது.
கூடலூரைச் சேர்ந்த, கே.பி.கோபால் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது கண்ணகி கோவிலுக்கு செல்லப் பாதை அமைக்க வேண்டும் என சட்டசபையில் பேசினார்.
இதனைத் தொடர்ந்து, தமிழகப்பகுதியில் கூடலூர் பனியங்குழி வழியாக 6 கி.மீ சாலையை போடுவதற்காக ரூ.20 லட்சம்நிதி ஒதுக்கப்பட்டது.
இதிலும் மலையாள அரசு எதிர்ப்பு தெரிவித்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று முட்டுக்கட்டை போட்டது.
இந்தநிலையில் கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பதவி நீக்கம் செய்யப்பட்டது.
இதனால் இத்திட்டம் தாமதப்பட்டது.

இந்த நிலையைப் பயன்படுத்திக்கொண்டு 1976ல் கேரள வனப்பகுதி வழியாக, தேக்கடியில் இருந்து கண்ணகி கோவிலுக்கு அவசர அவசரமாக மலையாள அரசு 16 கி.மீ பாதை ஒன்றை அமைத்தது.
இவ்வாறு போடப்பட்ட இந்தப் பாதையின் வழியாக தமிழக பக்தர்கள், கண்ணகி கோயிலுக்கு செல்லத்தொடங்கினர்.
தற்போது இந்த
சாலையை வைத்துக் கேரள
அரசு கண்ணகி கோயில் கேரளாவிற்குச்
சொந்தமானது என்று உரிமை
கொண்டாடுகிறது.

சித்திரை மாதம் வரும் சித்திரை முழுநிலவு தினத்தன்று இந்த மங்கலதேவி கண்ணகி கோயிலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் ஒருவாரம் சிறப்பு வழிபாடுகள் செய்து வந்தனர்.
மலையாளிகள் இதை மூன்று நாட்களாக்குதான் அனுமதிக்கமுடியும் என்று மூன்றுநாளாக்கினர்.
அதன்பிறகு ஒரே ஒருநாள் மட்டும் அனுமதி வழங்கினர்.
அதுவும் இப்போது காலை, 9மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே
என்று ஆக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கோவில் வழிபாட்டிற்காக தமிழ்நாடு அரசு அதிகாரிகள் மலையாள அதிகாரிகளைச் சந்தித்து கெஞ்சிக்கூத்தாடி அனுமதி வாங்குவதும், மலையாளிகள் அவர்கள் மனம்போன போக்கில் விதிமுறைகளை விதிப்பதும் தொடர்கதை ஆகிவிட்டது.

மற்ற நாட்களில்
தமிழர்கள் இங்கு செல்ல
அனுமதி அளிக்கப்படுவதில்லை.
மலையாள காவல்துறை நடமாட்டம் எப்போதும் உள்ளது.
இதனால் கோயில் பராமரிப்பின்றி பாழடைந்த மண்டபம் போல ஆகிவிட்டது.
கோவிலின் பல பகுதிகள்
சிதைந்து போய்விட்டன.கோவில் சுவற்றின் கற்கள் உடைந்து போய் கிடக்கின்றன.
கல்வெட்டுகள் அழிக்கப்பட்டுள்ளன.
(இரு கல்வெட்டுகள் மிகமுக்கியமானவை.
முதலாம் இராசராச சோழனின் கல்வெட்டு ஒன்றும், பாண்டியன் மாறவர்மன் குலசேகரன் காலத்துக் கல்வெட்டு ஒன்றும் மேலும் பல கல்வெட்டுகளும் இக்கோவிலில் உள்ளன).
இவையும் விரைவில் அழியவுள்ளன.

5-5-82இல் சித்திரை பெளர்ணமி அன்று கண்ணகி கோவிலில் நடைபெறும் திருவிழாவில் கலந்து கொள்ளச்சென்ற தமிழர்களை
கேரள அரசு கைது செய்தது. அதுபற்றி பேசச்சென்ற சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆர்.டி. கோபாலன், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கம்பம் நடராசன் ஆகியோரை
மலையாளிகள் மரியாதையின்றி நடத்தினர்.
இதை தமிழக முதலமைச்சரிடம் அவர்கள் முறையிட,  இதைச் சுட்டிக்காட்டி கேரள ஆளுநருக்கு தமிழக முதலமைச்சர் தந்தி அனுப்பினார்.
அதற்குக் கேரள அரசிடமிருந்து எந்தவிதமான பதிலும் இல்லை.

பிறகு அக்கோவில் மலையாளிகளின் துர்கா கோவில் என்று கூறிக்கொண்டு 15.3.1983ம் அன்று கண்ணகி கோவிலுக்குள் துர்க்கா தேவி சிலையை இ.சி. சுகுமாரன் என்பவர் மலையாள தாசில்தார் உதவியுடன் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் மற்றும் கேரள போலீஸ் அதிகாரிகளுடன் வந்து கோவிலுக்குள்  நிறுவினார்.

இதுவாவது பரவாயில்லை.
அதன்பிறகு கண்ணகிசிலையை முகத்தை உடைத்து சிதைத்தனர்.
வேறுவழியின்றி  தற்போது சித்திரை முழுநிலவு நேரத்தில் சந்தனத்தால் கண்ணகி முகம் வடிவமைக்கப்பட்டு வழிபாடு நடக்கிறது.

9மணிக்கு அனுமதிக்கப்படும் தமிழர்கள் வெறும் 8மணிநேரத்திற்குள் விழாவை நடத்திமுடித்து இடத்தைக் காலிசெய்தாகவேண்டும்.
வழிபாட்டு நேரத்தில் அங்கே இருக்கும் மலையாள காவல்துறை தமிழர்களை அடிப்பதும் திட்டுவதும் இஷ்டப்படி விதிமுறைகளை விதிப்பதும் வழிபாட்டில் முடிந்த அளவு இடைஞ்சல் செய்வதும் கண்கூடாகக் காணலாம்.
நான்கரை மணிக்குமேல் அடித்துவிரட்டத் தொடங்கிவிடுவார்கள்.

நம் எல்லைக்குள் நமக்கு தடை விதித்து மண்ணைக் கைப்பற்றிக்கொண்டு ஆண்டுக்கொருமுறை வரும் நம்மை தமது ராணுவமான காவல்துறையை அனுப்பி அப்பாவி மக்கள்மீது இனவெறியைத் தீர்த்துக்கொள்கிறான் மலையாளி.

தமிழ் ஆர்வலர்கள் சிலர் "மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை"என்ற
ஒரு அமைப்பு நிறுவியுள்ளனர்.
இந்த அமைப்பின் சார்பில் சித்திரை முழுநிலவு தினத்தன்று கண்ணகிகோயிலில் வழிபாடுகள் செய்வதுடன் அங்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் உட்பட பல உதவிகள் செய்து வருகிறது.
இந்த அமைப்பு தமிழ்நாட்டின்.கூடலூர் (தேனி) மலைப்பகுதியிலுள்ள பளியங்குடியிலிருந்து கண்ணகி கோயிலுக்குத் தனிப்பாதை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையுடன் கண்ணகிகோயில் தமிழ்நாட்டுக்குரியது அதை மீட்க வேண்டும் என்றும் போராடிவருகிறது.

மலையாளிகளின் அராஜகத்தைப் பொறுக்கமுடியாமல் தமிழர் ஒருவர் கோயிலுக்குப் போகும்வழியில் தனக்கு சொந்தமான இடத்தில் ஒரு கண்ணகிகோவில் கட்டி அங்கே வழிபாடு நடத்த வழிசெய்துள்ளார்.
கண்ணகி கோயிலில் அவமானப்பட்ட தமிழர்கள் மறுமுறை அங்கே போகமனமில்லாதவர்கள் இங்கே அதேபோல வழிபாடு நடத்துகின்றனர்.

நாதியற்ற தமிழினம் செய்யமுடிந்தவை இவைதான்.

இத்தனை கெடுபிடிகளிலும் தமிழகம் முழுவதிலும் இருந்து மக்கள் இப்போதும் சென்றுவருகின்றனர்.
ஜீப் கட்டணம், குமுளி வருவதற்கும்,.தங்குவதற்கும் என்று, எந்த வசதிகளும் செய்யப்படாத நிலையில் பக்தர்கள் நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கிறது.

கண்ணகியின் மீது கொண்ட ஈடுபாடு குறையாத தமிழக மக்கள் மனக்குமுறலுடன் மலையாள இனவெறியையும் தமிழக வந்தேறி அரசுகளின் பாரமுகத்தையும் சகித்துக்கொண்டு வழிபாட்டைத் தொடர்ந்து நடத்திவருகின்றனர்.
பழமையான, பாரம்பரியமான,  பல்வேறு தமிழ்கல்வெட்டுக்களை கொண்டு, தமிழர் அடையாளமாக திகழும் இந்த கண்ணகி கோவிலை பாதுகாக்கவும், பராமரிக்கவும் நாம் விரைந்து எதாவது செய்யவேண்டும். கோவிலை எப்பாடுபட்டேனும் தமிழர்கள் மீட்டு எடுக்க வேண்டும்.

என்னதான் கேவலப்பட்டாலும் உணவுக்கு தமிழகத்தை நம்பியிருக்கும் வெறும் ஒன்றரை கோடி மலையாளிகள் ஏறிமிதிக்கும் கேவலமான இனமாக நாம் இருப்பது கொஞ்சம்கூட நியாயமே இல்லை

செந்தூர் என்பதே sindoor

செந்தூர் என்பதே sindoor

 தூர் என்பது பொடி எனும் பொருள் தரும்.
தூரல் - சிறு சிறு மழைத்துளிகள் 
தூர்ந்து போதல்- சிறு மணல் சேர்ந்து மேடாகுதல்.
தூர் வாருதல் - படிந்த நுண் மணலை அள்ளுதல்
தூர்த்தல் - சிறு மணலை அள்ளுதல் அதாவது சுத்தம் செய்தல் (திருநெல்வேலி வழக்கு)

 இவ்வாறாக செந்தூர் என்பது சிவந்த பொடியைக் குறிக்கும். இதுவே குங்குமம் ஆகும்.
 தூரம் ஆவது என்பது மாதவிலக்கைக் குறிக்கும் என்பதை நோக்குக.
 செந்தூரப்பூ சிவந்த நிறமுடையது.
 இது வடக்கே உள்ள குங்குமப்பூ  என்றும் செம்பருத்திதான் செந்தூரப்பூ என்றும் இருவேறு கருத்துகள் உள்ளன.
 அதேவேளை செந்தூர் பயன்பாடு ஆண்பாலுடன் தொடர்புடையது.

 செந்தூரன், செந்தூரப் பாண்டியன், திருச்செந்தூர் போன்றவை இச்சொல்லை அடிப்படையாகக் கொண்டவை.

 வடக்கே சென்ற இச்சொல் சிந்தூர் என்றாகி மீண்டும் தமிழுக்கு வந்து செந்தூரம் என்றானது.

Saturday, 10 May 2025

ஹிந்தியா வல்லரசாக என்ன செய்யவேண்டும்

ஹிந்தியா வல்லரசாக என்ன செய்யவேண்டும்? 20.07.2016 நான் ஹிந்தியனாக பிறந்து ஹிந்தியாவை ஆண்டால்... *) முதல் வேலையாக ஹிந்தியுடன் தொடர்பில்லாத பகுதிகளுக்கு விடுதலை அளித்துவிட்டு ஹிந்தி மொழிக் குடும்பத்துடன் தொடர்புடைய பகுதிகளை மீட்பேன் *) காஷ்மீருக்கு விடுதலை அளித்துவிடுவேன் *) சீன இனங்களுடன் தொடர்புடைய கிழக்கு மாநிலங்களான சிக்கிம், மணிப்பூர், நாகாலாந்து, திரிபுரா, அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம், மிசோரம் ஆகியவற்றுக்கு விடுதலை அளித்துவிடுவேன் *) தமிழ் மொழிக்குடும்ப பகுதியான தென்னிந்தியாவுக்கும் விடுதலை அளித்துவிடுவேன் *) வங்கதேசத்திலும் நேபாளத்திலும் உள்ள ஹிந்தி தொடர்பான பகுதிகளை ஹிந்தியாவுக்கு தரச்சொல்வேன். மறுத்தால் படை எடுத்து கைப்பற்றுவேன். *) பாகிஸ்தானின் மீது படையெடுத்து அதன் நடுவே ஓடும் சிந்து பேராறு வரையான ஹிந்தி தொடர்புடைய பகுதியை ஹிந்தியாவுடன் இணைப்பேன். ஆப்கானியா, பஷ்தூன், பலூச்சிஸ்தான் போன்ற பகுதிகளுக்கு விடுதலை அளிப்பேன். இதன்மூலம் பாகிஸ்தான் என்றநாடோ மாநிலமோ இல்லாது ஒழிந்து போகும். *) இத்தனை பெரிய நாட்டையும் வளங்களையும் மக்கள் எண்ணிக்கையையும் வைத்துக்கொண்டு பிச்சை எடுக்கும் வறிய நாடாக இருக்காமல் வறுமையை ஒழிக்க வேளாண்மைத் திட்டங்களைச் செயல்படுத்துவேன். *) கறுப்பு பணத்தை மீட்க முயற்சி செய்வேன். பெருமுதலாளிகளை இயற்கையைக் கொள்ளையடிக்க விடமாட்டேன். கையூட்டு, ஊழல் ஆகியவற்றை இல்லாது ஒழிப்பேன். *) வேதங்களில் குறைகளைக் களைந்து நடைமுறை வாழ்க்கைக்கேற்ப ஒரு எளிய ஹிந்து மத புனித நூலை உருவாக்குவேன். அது எல்லா மொழிகளில் கிடைக்கச் செய்வேன். மூடநம்பிக்கைகளையும் போலிச் சாமியார்களையும் ஒழிப்பேன். *) ஹிந்து மதத்தை ஹிந்தியாவின் தேசிய மதமாக அறிவிப்பேன். ஹிந்துநாடு (Hindutva republic of Hindia) என்று பெயர் மாற்றுவேன். எவரும் எந்த மதத்தையும் பின்பற்றலாம். சிறுபான்மை மதத்தினருக்கு பாதுகாப்பும் சலுகைகளும் வழங்குவேன். *) மக்கள் தொகையைப் படிப்படியாக பல கட்டங்களில் சரியாகத் திட்டமிட்டு குறைப்பேன் *) சேனையை பலமானதாக நவீனமானதாக வைத்திருப்பேன். நாட்டு மக்களின் உடல் நலத்தைப் பேணுவேன். *) பசு மாடு உட்பட அனைத்து விலங்குகளின் நலங்களையும் காப்பேன். காட்டு வளத்தைப் பெருக்குவேன். *) மக்களிடம் ஒழுக்கத்தைப் புகுத்துவேன். விதிகளை மீறும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவேன். *) ஹிந்தி மொழியை மற்ற ஹிந்திக் குடும்ப மொழியினர் மீது திணிக்கமாட்டேன். இறந்துபோன சமஸ்கிருதத்தைத் தூக்கிவைத்து அழாமல், இருக்கும் மொழிகளுக்கு உரிய உரிமைகளை அளிப்பேன். *) ஒவ்வொரு ஹிந்தி குடும்ப இனங்களுக்கும் சரியான மாநில உரிமைகள் அளிப்பேன். (இராணுவம், தகவல் தொடர்பு நடுவணரசு கட்டுப்பாட்டில்) *) திபெத்தியருக்கு ஆயுதம் கொடுத்து சீனாவிடமிருந்து விடுதலை பெற உதவுவேன். மங்கோலியாவுக்கும் உதவி செய்து சீனாவிடம் பறிபோன தமது பகுதிகளை மீட்க தூண்டுவேன். கேண்ட்டான் (ஹாங்காங்) சீனாவிடமிருந்து விடுதலை பெருவதில் உதவுவேன். இதன் மூலம் சீனாவைத் துண்டாடி வலுவிழக்கச் செய்வேன். *) இயற்கை வளங்களை முறையாகப் பயன்படுத்தி பொருளாதாரத்தைப் பெருக்கி எந்த வல்லரசுக்கும் அடிமையாக ஆகாமல் சொந்தக்காலில் இந்துநாட்டை நிற்கவைப்பேன். பிற நாடுகளில் குடியேறிய ஹிந்தியரை திரும்ப அழைத்து வருவேன். *) ஹிந்தியா மற்றும் அதனைச் சுற்றி நிலவழித் தொடர்புடைய நாடுகளை இணைத்து ஒரு ஒன்றியத்தைத் தொடங்குவேன். பொதுவான நாணயம் (currency) ஒன்றை உருவாக்குவேன் *) எந்த நாட்டில் இந்து, இந்தி இன மக்களுக்குக் கொடுமை நடந்தாலும் குரல்கொடுப்பேன்.

Thursday, 8 May 2025

பலூச்சிஸ்தான் விடுதலை

பலூச்சிஸ்தான் விடுதலை

  பலூச் மொழி பேசும் மக்கள் எப்போதுமே நேரடி ஆங்கில ஆதிக்கத்தில் இருந்ததில்லை!
 1947 இல் சுதந்திர நாடு என்று அறிவிக்கப்பட்ட பலூச்சிஸ்தானை பல்வேறு சதிகளைச் செய்து ஆக்கிரமித்தது பாகிஸ்தான்.
 ஆனால் பலூச்சிகள் துவண்டு விடவில்லை.
அன்று விடுதலைக்காக ஆயுதத்தை தூக்கிய அவர்கள் தொடர்ந்து நடந்த துரோகங்களுக்கு பிறகும் விடுதலைப் போராட்டத்தை சளைக்காமல் முன்னெடுத்து  இன்று உச்சக்கட்ட எழுச்சியில் இருக்கின்றனர்.
 பாகிஸ்தானால் இனி அவர்களுடன் மோதி வெல்ல முடியாது என்ற கட்டத்திற்கு வந்துவிட்டனர்.
 கூடிய விரைவில் விடுதலை அடைந்துவிடுவர்.
 இதை ஏதோ தாங்கள்தான் செய்தது போல ஹிந்திய அரசு பொய்க் கதைகளை பரப்பி வருகிறது.

 பலூச் மக்களின் வரலாற்றில் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களும் நாணித் தலைகுனிய வேண்டிய தருணங்களும் ஏராளம்!
 
 இது பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்!

  பலூச்சிகள் ஒரே மொழி பேசும் பல்வேறு இனக்குழுக்களாக சிதறி இருந்தனர்.
 ஆனால் இவர்களை 12 ஆம் நூற்றாண்டில் மொழி அடிப்படையில் ஒன்று திரட்டி ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்தியவர் மீர் ஜலால் கான்.
 இவர் செய்த தவறு இவர்களுடன் வாழும் பிராகுய் இன மக்களையும் இந்த கூட்டமைப்பில் இணைத்துக் கொண்டது.
  இந்த கூட்டமைப்பு அறிவிக்கப்படாத தலைமை ஒன்றை ஏற்படுத்தி அவரை அரசராகக் கொண்டு அதன் மூலம் பலூச்சிஸ்தானில் இருக்கும் பல்வேறு இன குழுக்களை ஒன்றிணைத்து நாடாக செயல்பட்டது.
 ஆனாலும் பலூச் இனக்குழுக்கள் ஒற்றுமை இல்லாமலேயே இருந்தன.
 குறிப்பாக வடக்கே இருந்த பலூச் இனக்குழுக்கள் இந்த கூட்டமைப்பையும் அதன் தலைமையையும் முழுமையாக ஏற்கவில்லை.
  ஆங்கிலேயர் இவர்கள் மீது படையெடுத்த போது இவர்களை பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் கட்டுப் படுத்தினர்.
 வடக்கை ஆக்கிரமித்து குத்தகை என்கிற பெயரில் ஒப்பந்தம் போட்டு தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தெற்கு பகுதியை தனக்கு அடங்கிய சுதந்திரப் பகுதியாக வைத்திருந்தனர். பலூச்சிகளின் எல்லைப் பகுதியில் கொஞ்சத்தை பிய்த்து ஈரானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் தாரை வார்த்தனர்.
 இப்படி நான்காக உடைக்கப்பட்ட பலூச் தாய்நிலத்தைப் பற்றி கவலைப்படாமல் தங்களுக்குள் அடித்துக் கொண்டு இருந்த பலூச்சியர்கள் இனம் பெரிதென எண்ணாமல் இனக்குழுவே பெரியது என்று எண்ணி குறுகிய மனப்பான்மையுடன் இருந்தனர்.
 ஆனால் மீர் ஜலால் வம்சாவளிகளும் தெற்கு பலூச்சிகளும் பலூச்சிய கூட்டமைப்பை கைவிடாமல் பலூச்சிஸ்தானை ஒன்றிணைத்து சுதந்திர நாடாக்குவதில் குறிக்கோளுடன் செயல்பட்டனர்.
 ஆங்கிலேயர் வெளியேறும்போது பலூச் கூட்டமைப்பு வசம் உள்ள தென்பகுதியை சுதந்திர நாடு என்று அறிவித்தனர்.
 அப்போது கூட வடக்கு பலூச்சிகள் அதில் இணையவில்லை. பறிபோன எல்லைகளை மீட்பது பற்றி யோசிக்கவில்லை. இவ்வளவு ஏன் பலூச்சிஸ்தான் என்று பெயர் கூட இல்லை. 
 இந்த சுதந்திர பிரகடனத்தை அன்று இந்தியப் பிரிவினையின் போது நேரு, ஜின்னா, மவுண்ட்பேட்டன் என அனைவருமே அங்கீகரித்தனர்.
  ஆனால் பாகிஸ்தான் நாடு அமைந்த உடனேயே ராணுவத்தை அனுப்பி சுதந்திர பலூச்சிஸ்தானை ஆக்கிரமித்தது.
 அன்று அதன் மன்னர் போல இருந்த கூட்டமைப்பின் தலைவர் ஆங்கிலேயரிடம் முறையிட அவர்களும் உதவ முடியாது என்று கூறிவிட்டனர் எங்கும் ஆதரவு கிடைக்காத நிலையில் தோல்வி அடைந்து சரணடைந்த மன்னர் பாகிஸ்தானுடன் இணையும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு விட்டார்.
  ஆனால் மன்னரின் தம்பி நவுரோஸ் கான் இதை ஒத்துக் கொள்ளாமல் தலைமறைவாகி பலூச்சிகளை ஒன்று திரட்ட முயன்றார். ஒரு தனிப்படையை திரட்டி கோரில்லா தாக்குதல்கள் நடத்தி  பலூச்சிஸ்தான் விடுதலைக்காக போராட ஆரம்பித்தார். ஓராண்டு போருக்குப் பிறகு அவரைப் பிடித்து சிறையில் தள்ளி பிறகு கொன்றது பாகிஸ்தான். 
 அப்போதும் பலூச் இனக்குழுக்கள் ஓரணியில் திரளவில்லை.
 ஆனாலும் தனித் தனியாக ஆயுதக் குழுக்கள் தொடங்கப்பட்டு எல்லா பலூச் இனக்குழுக்களும் போராட ஆரம்பித்தன.
  அன்றிலிருந்து இன்று வரை தூக்கிய ஆயுதத்தை கீழே போடவில்லை.
 பாகிஸ்தான் எவ்வளவோ முயன்றும் கொரில்லா குழுக்களை ஒழிக்க முடியவில்லை.
 பாகிஸ்தான் குரான் மீது சத்தியம் செய்து பலூச் ஆயுதக்குழுக்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்து சத்தியத்ததை மீறி சிறைபிடித்து முதுகில் குத்தியிருக்கிறது.
 இதனாலேயே பலூச்சிகளுக்கு அரசியல் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்டாலும் அவர்களால் பாகிஸ்தானை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
 1970 களில் பூமியைத் தோண்டி எரிவாயு எடுக்கும் நாசகர திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
 அதை எதிர்த்தும் பெரிய போராட்டம் நடத்தது.
 பிறகு 2000 களில் பாகிஸ்தானின் தெற்கே கடலில் துறைமுகம் அமைத்து அங்கிருந்து காஷ்மீர் வழியே சீனா வரைக்குமான பாதை அமைக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது.
 பலூச்சிகளின் நிலம் பிடுங்கப்பட்டது. வளங்கள் அழிக்கப் பட்டன. அதில் வேலைவாய்ப்பும் கிடைக்கவில்லை.
 இதனால் ஆயுதக் குழுக்கள் தொடர்ந்து இந்த பாதையில் தாக்குதல் நடத்தினர். 4 சீனர்களையும் கொன்றனர். 
 பாகிஸ்தான் முழுப் பலத்துடன் பலூச்சிஸ்தானில் இறங்கியது. ஆனாலும் கொரில்லா குழுக்களை வெல்ல முடியவில்லை.
  2000 களில் தான் இந்த இன குழுக்கள் ஒன்றாக சேர்ந்து கூட்டான பலூச்சிஸ்தான் ராணுவத்தை நிறுவினர்.
  பலூச் மக்கள் இப்போதுதான் மொழி அடிப்படையில் ஓரணியில் திரண்டு பெரும் எழுச்சி பெற்று அரசை எதிர்த்து சுதந்திர தாகத்துடன் போராடி வருகின்றனர்.
 இன்னொரு ஹிந்தியாவான பாகிஸ்தான் உடையட்டும்!
 தேசிய இனமான பலூச்சியர் விடுதலை அடையட்டும்!
 தமிழர் தனிநாடு அமைக்க முன்மாதிரியாக விளங்கட்டும்! 
 

 

Sunday, 4 May 2025

பஹல்காம் எங்கே இருக்கிறது

பஹல்காம் எங்கே இருக்கிறது பயங்கரவாத தாக்குதல் நடந்த பஹல்காம் எல்லைப் பகுதியில் இல்லை எல்லைக் கோட்டிலிருந்து காஷ்மீர் தலைநகர் sri nagar ஐயும் தாண்டி உள்நாட்டில் இருக்கிறது. தாக்குதல் நடத்தியவர்கள் மேற்கிலிருந்து வந்திருந்தால் (haveli இலிருந்து) pahalgam 270 கிமீ உள்ளது (ஏற்கனவே தாக்குதல் நடந்த pulwama பஹல்காம் அருகிலேயே உள்ளது அதுவும் எல்லையிலிருந்து 222 கிமீ) . சாலைகளை பயன்படுத்தாமல் கால்நடையாக மலைகளில் ஏறி இறங்கி வந்தாலும் நேர்கோடாக கணக்கிட்டாலும் 150 கி.மீ குறைந்த பட்சம் இருக்கும். வடக்கில் மலைகள் உள்ளன. வடக்கிலிருந்து வந்து தாக்குதல் நடத்த வாய்ப்பு குறைவு. அப்படி வடக்கிலிருந்து கால்நடையாக கணக்கிட்டாலும் குறைந்தது 100 கி.மீ வருகிறது. அதாவது dras இலிருந்து அமர்நாத் பனி லிங்கம் 64 கி.மீ. அமர்நாத்திலிருந்து பஹல்காம் வர ஸ்ரீநகர் சுற்றிதான் வரவேண்டும். நேர்கோடாக கணக்கிட்டாலும் 33 கி.மீ இருக்கும். ஆக எல்லையிலிருந்து 100 கிமீ மலைகளில் ஏறி இறங்கி வந்து தாக்குதல் நடத்துவது கூட சாத்தியம் தீன். ஆனால் தாக்குதல் நடத்திவிட்டு திரும்புவது சாத்தியமில்லை. மேற்கு வழியாக வந்தாலும் இதே நிலைதான். இத்தனைக்கும் இந்தியாவிலேயே அதிக ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டிருப்பது இந்த எல்லைப் பகுதியில்தான். உலகிலேயே அதிக ராணுவக் குவிப்பு உள்ள எல்லைகளில் இது இரண்டாம் இடம். ஏற்கனவே தாக்குதல் நடந்த புல்வாமாவுக்கு 66 கிமீ தூரத்தில் உள்ள பகல்காம் இல் மற்றொரு தாக்குதல் நடந்துள்ளது.

Saturday, 3 May 2025

சேனைத்தலைவர் என்றே பதிவோம்

சேனைத்தலைவர் என்றே பதிவோம் 

 சேனைத்தலைவர் உறவுகளே!
நான் பிறந்த தமிழ்க் குடியே!

 நடக்கவுள்ள சாதிவாரிக் கணக்கெடுப்பின் போது நமது குடிப்படங்களான மூப்பனார், முதலியார், செட்டியார், பிள்ளை போன்ற பின்னொட்டுப் பெயர்களையும் தவிர்த்து
 சேனைக்குடையார், சேனைக்குடியர், சேனையர், இலைவாணியர், கொடிக்கால் பிள்ளை போன்ற கொஞ்சம் மருவிய குடிப் பெயர்களையும் தவிர்த்து
 "சேனைத்தலைவர்" எனும் நமது உண்மையான குடிப் பெயரை மட்டுமே சாதியாக கணக்கெடுப்பிலும் சாதித் சான்றிதழ் இலும் நமது பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்!
 "சேனைத்தலைவர்" என்ற 7 எழுத்துகளே நமது முதல் இலக்கிய சான்று படி நமது அடையாளம் ஆகும்.
 
  கி.பி. 6ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட திவாகர நிகண்டு குறிப்பிடும் "செங்குந்தப் படையர் சேனைத்தலைவர் தந்துவாயர் காருகர் கைக்கோளர்.." எனும் வரிகளே அந்த சான்று!

 நாம் தமிழ்க்குடி அதிலும் போர்க்குடி என்பதற்கான வெளிப்படையான சான்றும் "சேனைத்தலைவர்" எனும் பெயரே! 
 இந்நாள் வரை இப்பெயரை அழியாமல் காத்து வந்த நாம் இனியும் அந்தப் பெயரை விட்டுக் கொடுக்கக் கூடாது!
 அதே நேரத்தில் அந்த பெயருக்கு ஏற்றாற்போல தமிழினத்தை சூழ்ந்திருக்கும் ஆபத்திலிருந்து காக்கவும் முற்பட வேண்டும்!

 தமிழினத்தில் வெறும் அரை சதவீதம் இருந்தாலும் நாம் முக்கியமான குடி!
சேர, சோழ, பாண்டியருக்கு அடுத்து படைத் தலைவர்களாக நாட்டை கட்டியாண்டது நாமே! 
 போர் வீரர்கள் லட்சக்கணக்கில் இருப்பர் ஆனால் அவர்களுக்கு தளபதிகள் சிலரே இருப்பர்!
 அந்த வகையிலேயே நாம் சிறுபான்மையாக உள்ளோம்!

 பிற போர்க்குடிகள் போல பழைய வரலாறுகளை தோண்டி எடுத்து நேரத்தை வீணாக்காமல் நாம் புதிய வரலாறு படைப்போம்! 
 
 மரத்திலிருந்து கிளை போல நாம் சக தமிழ்க்குடிகளில் இருந்தே வந்தோம்!
இன்று அனைத்து தமிழ்க் குடிகளையும் ஏற்றத்தாழ்வு இன்றி அரவணைத்து வழிநடத்தவேண்டிய பெரும் பொறுப்பும் நமக்கு உள்ளது! 
 தமிழரில் எவர் ஆளும் பொறுப்புக்கு வருகிறாரோ அவரே மூவேந்தர் வாரிசு! 
 அப்படி நாமோ அல்லது சக தமிழ்க்குடி ஒருவரோ அரியணைக்கு உயர்ந்தால் அதற்கு தோள்கொடுக்க வேண்டியதும் அரணாக நிற்க வேண்டியதும் நமது கடமை! 

சுருங்கச் சொன்னால்
 தமிழரைத் தமிழர் ஆள வேண்டும்!
அப்படி ஆள வைத்தவன் சேனைத்தலைவன் என்றிருக்க வேண்டும்!  

 சேனைத்தலைவர் என்றே பதிவோம்!
சேனைத்தலைவர் என்பதை நிரூபிப்போம்! 

நன்றி! 

Friday, 2 May 2025

மரபணு சோதனையின் அவசியம்

மரபணு சோதனையின் அவசியம்

 தமிழ் தேசியவாதிகளின் அன்பிற்குரிய நார்வே இங்கர்சால் அவர்கள் ஒரு தெலுங்கர் என்று யாரோ கிளப்பி விட அது தொடர்பாக ஒரு சிறிய உரையாடல் முகநூலில் நடந்தது.
நான் எப்போதும் போல அவருடன் இணைய வழி தொலைபேசும்போது இது பற்றி பேச்சு வந்தது.
 'தற்போது இனத்திற்கான ஒரே சான்று சாதி சான்றிதழ் மட்டுமே' என்று கூறி அதை காட்ட சொல்லி கேட்டேன்.
 முதலில் தயங்கினாலும் பிறகு தனது குடிச்சான்றை அவர் காட்டினார்.
  தமிழர்தான்!
 முழுமையான நம்பிக்கைக்கு உரியவர் ஆகிவிட்டார்!
 ஏன் இவ்வளவு தயக்கம் என்று கேட்டேன்.
 அதற்கு சாதி சான்றும் தற்போதைக்கு நம்ப தகுந்தது இல்லை என்றும் தன்னிடம் டி என் ஏ மேப்பிங் தொடர்பாக ஒரு யோசனை இருப்பதாகவும் அதன் மூலம் ஒரு ஆணினுடைய சந்ததியை அவர்களுடைய டி என் ஏ மரபணு மாதிரிகளை வைத்து வாழையடி வாழையாக கண்டுபிடித்து விடலாம் என்றும் அவ்வாறு செய்தால் நூறு சதவீதம் நம்ப முடியும் என்றும் கூறினார்.
 மரபணு ஆராய்ச்சி தற்போது உச்சத்தைத் தொட்டுவிட்டது. இத்தாலியில் கொல்லப்பட்ட ஒரு பெண்ணின் உடையில் கிடைத்த சிறு சதைத் துணுக்கை வைத்து அருகிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் டிஎன்ஏ சோதனை செய்து அதில் ஓரளவு ஒத்துப்போன ஒரு நபரைப் பிடித்து அவரது தூரத்து பங்காளி வரை தேடி குற்றவாளியைப் பிடித்த சாதனை நடந்துள்ளது.
 அதாவது கொடிவழி, கொத்து, கூட்டம் என்று பலவாறு அழைக்கப்படும் தந்தையிடமிருந்து மகனுக்கு கடத்தப்படும் அந்த மரபு மிக முக்கியமானது!
கோத்திரம் என்றும் கூறுவர்! 
 இதேவழியில் தான் குடிப்பட்டமும் கடத்தப்படுகிறது!
 இதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டும்!
 ஒவ்வொரு குடியும் தனது dna sample ஐ ஆவணப்படுத்தி heritage map ஐ உருவாக்க வேண்டும்.
 இந்த சான்று இருந்தால் காகிதச் சான்றுகள் அவசியமில்லை! 
  ஆனால் அதுவரை சாதிச் சான்றுதான் ஒரே வழி!
 அண்ணன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவரது குடியை வெளிப்படுத்த தற்போது இயலாது!
 சக தமிழ்தேசியவாதிகள் மன்னிக்கவும்! 
 இங்கர்சால் ஒரு தகைசால் தமிழர்தான்!