Saturday, 30 April 2022

ஒற்றை முழக்கம்

ஒற்றை முழக்கம்!
அமைப்போம் தனித் தமிழர்நாடு!

இதில் அடங்குவன...

இந்திக்கு எதிர்ப்பு !
ஹிந்தியருக்கு எதிர்ப்பு !
மத்திய அரசுக்கு எதிர்ப்பு !
ஹிந்திய கட்சிகளுக்கு எதிர்ப்பு !
திராவிடத்திற்கு எதிர்ப்பு !
திராவிட கட்சிகளுக்கு எதிர்ப்பு !
சிங்கள பேரினவாத எதிர்ப்பு !
இலங்கை அரசபயங்கரவாத எதிர்ப்பு !
நதிநீர் தடுப்புக்கு எதிர்ப்பு !
வந்தேறிகள் ஆதிக்கத்திற்கு எதிர்ப்பு !
அந்நியர் குடியேற்ற எதிர்ப்பு !
வேலைவாய்ப்பு பறிப்புக்கு எதிர்ப்பு !
காந்தியம், அம்பேத்கரியம், பிராமணியம், சாதியம், மதவாதம், இந்துத்துவம், கம்யூனிசம் போன்ற நமக்குப் பொருத்தமில்லாத கருத்தியல்கள் வலிந்து புகுத்தலுக்கு எதிர்ப்பு !
வடயிந்திய பெருமுதலாளிகளுக்கு எதிர்ப்பு!
பன்னாட்டு கார்ப்பரேட் எதிர்ப்பு !
ஹிந்தியர் ஏகாதிபத்திய மனநிலைக்கு எதிர்ப்பு!
கன்னட, மலையாள, தெலுங்கு, சிங்களவர் திமிருக்கு எதிர்ப்பு!
அண்டை மாநில அரசுகளின் அடாவடிகளுக்கு எதிர்ப்பு !
மீனவர் கொலைக்கு எதிர்ப்பு !
தமிழ், தமிழர், தமிழ்நிலம் மீதான எந்தவொரு சுரண்டலுக்கும் அடக்குமுறைக்கு எதிர்ப்பு!
ஈழத்தமிழர் மீதான ஹிந்திய திராவிட அடக்குமுறைக்கு எதிர்ப்பு!
தமிழ்தேசிய செயல்பாட்டாளர்கள் மீதான சட்ட அடக்குமுறைக்கு எதிர்ப்பு! 

ஒரு முழக்கம்!
ஒரே முழக்கம்!
ஒற்றை முழக்கம்!

அமைப்போம் தனித் தமிழர்நாடு! 

 எந்த சலுகைக்கும் மயங்காமல்...
 எந்த குழப்பத்திற்கும் ஆளாகாமல்...
 எவர் என்ன சொன்னாலும்....
 எந்தவொரு இனரீதியான கேள்விக்கும்....

கூறவேண்டும் ஒரே பதில்!

அமைப்போம் தனித் தமிழர்நாடு!

திரும்பத் திரும்பச் சொல்லுவோம்!
மந்திரம் போலச் செபிப்போம்!
உண்ணும்போதும் உறங்கும்போதும் சொல்லுவோம்!

அமைப்போம் தனித் தமிழர்நாடு!

எந்தவொரு கூடுதலிலும்.....
எந்தவொரு மேடையிலும்...
எந்தவொரு நிகழ்விலும்....
தொடங்கும்போதும்....
முடிக்கும்போதும்....
வணக்கமாகவும்...
விடைபெறும்போதும்....

அழுத்தமாகவும் உறுதியாகவும் சொல்லுவோம்!

அமைப்போம் தனித் தமிழர்நாடு!
அமைப்போம் தனித் தமிழர்நாடு!


Tuesday, 19 April 2022

நடராஜன் ஐயர் உண்மையான kgf நாயகன்

உண்மையான KGF நாயகன்

1989 இல் கோலார் தங்க சுரங்கத்தில் தங்கம் காலியானதும் அதை நம்பி வாழ்ந்து வந்த தொழிலாளர்களை (95% தமிழர்கள்) காப்பாற்ற பெரும் முயற்சி செய்தவர் ஒரு பார்ப்பனர். 

 ஆம்! அன்றைய சுரங்கத் தொழில்நுட்ப இயக்குநராக இருந்த நடராஜன் ஐயர் தான் அன்று கேள்விக்குறியாகி நின்ற பத்தாயிரம் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை காத்து நின்றவர்!

 தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைத் தக்கவைக்க வெளிச் சந்தையில் தங்கம் விற்கும் விலையை விட அதிக செலவு செய்து தங்கம் வெட்டி எடுக்க வைத்தவர்! 

 இவரை பதவி நீக்கம் செய்தபோது கோலார் தங்க வயலே கொதித்து எழுந்து அவரை மீண்டும் பணியில் அமர்த்தியது!

 இரவு பகலாக ஆய்வு செய்து அப்பகுதியில் மேலும் புதைந்திருக்கும் மூன்று தங்க மலைகளைக் கண்டுபிடித்தார்!

 ஆனால் தொழில்நுட்பம் இல்லையென்று அவற்றைத் தோண்டியெடுக்க அரசு மறுத்துவிட்டது.

 அவர் இருந்தவரை மாற்று ஏற்பாடுகள் செய்து தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புக்கு வழி செய்தார்! 

 அவர் காலத்துக்குப் பிறகுதான் கோலார் தொழிலாளர்கள் அனாதையாகிப் போனார்கள்!