Monday, 20 October 2025

தமிழருக்குத் தனிநாடு தேவையென்ற ஆதித்தனார் 1965 இல் ஆதித்தனார் தமிழ்நாடு தனிநாடு ஆவதன் அவசியம் பற்றி எழுதும் போது டெல்லி அதுவரை அதாவது 1947 லிருந்து 18 ஆண்டுகளாக தமிழகத்தைச் சுரண்டிய தொகை ரூ.2460 கோடி என்று கணக்கிட்டுக் கூறியுள்ளார். மத்திய அரசு வாங்கும் வரி வடக்கே போய் அதன் பங்கு வடக்கிலேயே பெரும்பகுதி செலவாகிவிடுகிறது. எனவே இது அல்ல பேரரசர்களுக்கு பயந்து குறுநில மன்னர்கள் கட்டும் கப்பம் போன்றது என்றும் கூறியுள்ளார். இதில் ஆச்சரியமான விடயம் ரூபாய்த் தாள்கள் பற்றி அவர் கூறிய கருத்து. அதாவது தமிழ்நாட்டில் எவ்வளவு காகித ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளனவோ அதே அளவு மதிப்புள்ள பொருட்களை டெல்லி சுரண்டி விட்டு அதற்குப் பதில் வெறும் காகிதத்தை ரூபாய் நோட்டாக தந்து ஏமாற்றிவிட்டதாக கூறுகிறார். 1965 இல் 2460 கோடி மிகப்பெரிய தொகை!இதற்குப் பிறகு இதே நிலை நீடித்தால் ஆண்டுக்கு 120 கோடி நாம் நஷ்டக் கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். அப்போதே ஆண்டுக்கு 2500 பேர் தற்கொலை செய்துகொள்வதைக் கவலையோடு குறிப்பிட்டு அதற்கு காரணம் வறுமை என்கிறார். மத்திய அரசு திட்டமிட்டு மக்கட்தொகை குறைப்பு நடவடிக்கைகளை தமிழகத்தில் புகுத்தி தமிழர் எண்ணிக்கையை இன்று பெருமளவு குறைத்துவிட்டது. ஆனால் வடவர்களோ பல மடங்கு பெருகிவிட்டனர். இதை அன்றே எதிர்த்த ஆதித்தனார் மக்கட்தொகை குறைப்பு என்பது செருப்பு அளவுக்கு காலை வெட்டுவது என்றாகும் என கூறியுள்ளார். அன்று தமிழ்நாட்டை விட சிறிய 106 நாடுகள் உலகத்தில் உள்ள போது தமிழ்நாடு ஏன் தனிநாடு ஆக முடியாது என்று கேட்கிறார். அந்த 105 நாடுகளின் பட்டியலையும் மக்கட்தொகையையும் கூட பட்டியலிட்டார். தமிழருக்கு தனி அரசு இருந்திருந்தால் 5கோடி தமிழர்களை 35 லட்சம் சிங்களவர்கள் ஏளனமாக நினைப்பார்களா?! கள்ளத்தோணி என்று கூறி விரட்டி அடிப்பார்களா என்று கேட்கிறார். தமிழகமும் ஈழமும் ஒன்றாக இணைய வேண்டும் என்று 1942 இலேயே 'தமிழ் ராஜ்யம்' எனும் நூல் எழுதி அதில் தமிழர் வாழும் பகுதிகளை குறித்து வரைபடம் வெளியிட்டார் ஆதித்தனார். அவரது வார்த்தைகளில் கூறினால்..."தமிழ் மக்கள் சிதறுண்டு கிடக்கும் நிலை நீங்கி ஒரே நாடாக ஒரே கொடையின் கீழ் தமிழ் இனம் வாழ வேண்டும்! பாண்டிச்சேரியிலும் ஈழத்திலும் சென்னை ராஜ்யத்திலும் சிதறுண்டு தனித்தனியாக வாழ்வதால் தமிழ் இனம் வலுவற்று கிடக்கிறது! இந்தப் பகுதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து சுதந்திர தமிழ்நாடு அமைத்துக் கொண்டு வல்லரசாக திகழ வேண்டும் என்பது தமிழ் இனத்தின் நியாயமான ஆசை! தமிழகத்தில் இருக்கிற 500 லட்சம் தமிழர்களும் இலங்கையில் இருக்கின்ற 35 இலட்சம் தமிழர்களும் ஒன்று சேர வேண்டும்! இந்திய தேசத்தை துண்டு போடுவது துரோகம் என்பதாக சொல்பவர்கள் தமிழ்நாடு துண்டுபட்டு கிடக்கிறதே அது தமிழர்களுக்கு செய்த துரோகம் இல்லையா?! பீர்மேடு, தேவிகுளம், நெய்யாற்றின் கரை ஆகிய பகுதிகள் தமிழ்நாட்டில் இருந்து பிரிக்கப்பட்டு மலையாளிகள் கையில் சிக்கி கிடக்கின்றனவே!? வட எல்லையில் வேங்கடம் வரையில் உள்ள தமிழ் பகுதிகள் ஆந்திராவில் ஆட்சியில் கிடைக்கின்றனவே?! பாண்டிச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்கள் டெல்லியின் கண்காணிப்பில் இருக்கின்றனவே?! 18 மைல் அகலம் உள்ள ஒரு சிறிய நீர்ப்பகுதிக்கு அப்பால் வட இலங்கையில் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். அதுவும் தமிழ்நாட்டின் ஒரு பகுதிதான்! அது தாயகத்தில் இருந்து பிரித்து கிடக்கிறதே?! இந்தப் பகுதிகள் எல்லாம் தமிழ்நாட்டுடன் சேர வேண்டாமா?! ஆகையால் தமிழ்நாடு ஒன்று சேர வேண்டும் என்று சொல்வது துரோகம் ஆகாது! " என்று தெளிவாகவே எழுதியிருக்கிறார். "தமிழ்நாடு வறண்ட நாடு ஆகையால் அது சுதந்திர நாடாக இருக்க தகுதியற்றது" என்று சட்டமன்ற உறுப்பினர் குழந்தை அம்மாள் ஒரு முறை பேசினார். "தமிழ்நாட்டில் நீர் வளம் நிலவலம் இல்லை" என்று தினமணி பத்திரிக்கை தலையங்கம் எழுதியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆதித்தனார் "தமிழ்நாட்டில் பாலாறு போன்ற ஆறுகளில் தண்ணீர் ஓடாமல் இருப்பதற்கு காரணம் மைசூர் நாட்டில் அணை கட்டி தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்வதே. இப்போது தமிழ்நாடு டெல்லியின் கீழ் இருப்பதால் நடவடிக்கை எடுக்க முடியாமல் இருக்கிறது. தமிழ்நாடு டெல்லியின் படியில் இருந்து விடுபட்டு சுதந்திர நாடு ஆனால் தண்ணீர் விடும்படி உரிமையுடன் கேட்க முடியும்.ஏனென்றால் சுதந்திர நாடுகளுக்கு தண்ணீர் உரிமை உண்டு. மேலும் மலையாளத்தில் ஓடுகின்ற சோலை ஆறு பரம்பிக்குளம் ஆகிய ஆறுகளின் தண்ணீரை தமிழ்நாட்டுக்கு பயன்படுத்த செய்யும் பணியை சுதந்திர தமிழர்கள் செய்ய முடியும்.மேலும் ஆறு மட்டுமே ஒரு நாட்டின் வளத்தை நிச்சயிப்பதாக சொல்ல முடியாது!" என்று எழுதியிருக்கிறார். மேலும் காவிரி ஆறு பற்றி அவர் எழுதும்போது "காவிரி ஆற்றின் ஒரு கிளை கன்னடர் நாடு வழியாக அதாவது மைசூர் மாநிலத்தின் வழியாக ஓடி வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். காவிரி ஆற்றுத் தண்ணீர் முழுவதும் மைசூரில் இருந்து வருகிறது என்று சிலர் சொல்வது மிகைப்படுத்தி கூறுவது ஆகும்.இதை காட்டி தமிழ்நாடு தனிநாடாக இயங்க முடியாது என்று சொல்வது நியாயமான காரணம் ஆகாது. பிரம்மபுத்திரா என்ற ஆறு இந்தியா, சீனா வழியாக 5000 மைல் ஓடி பின்னர் பாகிஸ்தானில் ஓடுகிறது. இதைப் போலவே ஐரோப்பாவில் டானியூப் என்ற நதி 6 நாடுகளை தொடுகிறது. பொதுவாக பார்த்தால் உலகில் ஆறுகளின் காரணமாக நாடுகளிடையே சண்டை சச்சரவு ஏற்படுவதில்லை. அதற்கு விதிகள் இருக்கின்றன. விதிகளை மீறினால் ஐக்கிய நாடுகள் அவையிலும் உலக நாடுகளின் நீதிமன்றத்திலும் தீர்த்துக் கொள்ளலாம். ஆகவே தமிழ்நாடு தனி நாடாக இயங்கினால் காவிரி ஆற்று தண்ணீரை இழந்து விடுவோம் என்பது வீண் புரளி. தண்ணீரை இழக்க மாட்டோம் என்பதோடு இழந்திருக்கும் தண்ணீர் உரிமைகளை மீண்டும் பெறுவோம்".அன்றும் சிறுபான்மை என்கிற சொல் அரசியலில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது இதை ஆதித்த நாள் வேறு பார்வையில் பார்க்கிறார். "இலங்கையில் 65 லட்சம் சிங்களவர்களும் 35 லட்சம் தமிழர்களும் வாழ்கிறார்கள். சிங்களவர் பெரும்பான்மையாக சட்டசபை க்கு வருகிறார்கள் அதனால் சிங்களவர் ஆதிக்கத்தில் ஆட்சி அமைய நேரிடுகிறது. தாய்த் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களும் நான்கரை கோடி பேர் இருக்கின்றனர். ஆனால் 38 கோடி பேர் தமிழர் அல்லாத பிறமொழியினர் பெரும்பான்மையாக ஆட்சியில் இருக்கின்றனர்.டெல்லி பாராளுமன்றத்தில் 40 பேர் தமிழர்கள் என்றால் 460 பேர் தமிழர் அல்லாதவர்கள் இருக்கின்றனர். தமிழர் சிறுபான்மை என்றாவதால் எல்லாத் தொல்லைகளும் உண்டாகின்றன. தமிழர்கள் தனியாக பிரிந்தால் மட்டுமே தமிழர்கள் பெரும்பான்மை என்ற நிலையை அடைய முடியும்! பலர் சொல்வது போல கன்னடர்கள் தெலுங்கர்கள் மலையாளிகள் உடன் தமிழர் சேர்ந்து திராவிடம் என்ற அமைப்பை ஏற்படுத்தினாலும் நான்கரை கோடி பேர் தமிழர்கள் இருப்பர் ஆனால் 10 கோடி பேர் தமிழர் அல்லாதவர்கள் இருப்பர். அப்போதும் சிறுபான்மையாகத் தான் தமிழர்கள் இருப்பார்கள். தொல்லைகள் நீடிக்க தான் செய்யும்.சிறுபான்மை நிலை ஒழிந்தால் இனம் வாழும் என்பதற்கு எடுத்துக்காட்டாக யூதர்களின் வரலாற்றை சொல்லலாம். பல நாடுகளில் யூதர்கள் சிறுபான்மையாக இருந்தார்கள் எல்லா நாடுகளிலும் அவர்கள் அடைந்த துன்பங்களுக்கு அளவு கிடையாது எல்லா நாடுகளாலும் யூதர்கள் விரட்டப்பட்டு கடைசியில் சிதறிக்கிடந்த 8 லட்சம் யூதர்கள் 1948 ஆம் ஆண்டு அரேபிய பாலைவனத்தில் ஒன்று சேர்ந்து இஸ்ரேல் என்ற சுதந்திர தனி நாட்டை அமைத்தார்கள் அதன்பிறகு அவர்களுடைய தொல்லைகள் நீங்கின. தமிழ்நாடு அதை விட 30 மடங்கு பெரியது" என்று எழுதும்போது ஈழத் தமிழர் துயரத்தையும் எழுதியுள்ளார்."1958 ஏப்ரல் மே மாதங்களில் தமிழர்களில் இலங்கையில் சிங்கள வெறியர்களின் கொலை கொள்ளை தீ வைத்தல் சூறையாடுதல் முதலிய கொடுமைகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள் 100 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் தமிழர்கள் வீடுகள் பொருட்கள் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சேதமாக்கப்பட்டன பஞ்சாப் படுகொலை விட இது 10 மடங்கு பயங்கரமானது என்று நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள். 1961 பிப்ரவரி முதல் இலங்கையில் தமிழர்கள் ராணுவ ஆட்சியின் கீழ் சிக்கி சொல்ல முடியாத கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர் அண்மை காலம் வரை தமிழ் தலைவர்கள் சிறையில் இருந்தனர் இன்று தமிழுக்கு அங்கு எவ்வித உரிமையும் இல்லை தமிழர் வாழ் பகுதிகளில் சிங்களவர்களை கொடியேற்றி தமிழர்களின் தனித்தன்மையை அளிக்க சிங்கள அரசு முனைகிறது" மேலும் அவர் தமிழின விடுதலை பற்றி கூறுகையில் "5கோடி தமிழ் மக்கள் ஓர் இனம் என்பதை உணர்ந்து தமது அடிமை தளையை அறுத்து எறிவது என்று வீறிட்டு எழுந்தால் அதை எதிர்த்து உலகமே திரண்டாலும் தடுக்க முடியாது! டெல்லி அரசாங்கத்தாலும் முடியாது! அந்த அரசாங்கத்திற்கு உடந்தையாக இருக்கிற 38 கோடி வடவர்களாலும் முடியாது ! 30 லட்சம் அயர்லாந்து மக்களின் சுதந்திர போராட்டத்தை தடுப்பதற்கு அவர்களைப் போல் 15 மடங்கு அதிக எண்ணிக்கை உள்ள ஆங்கிலேயர்களால் முடியாமல் போய்விட்டது!" என்று கூறுகிறார். ஆதித்தனார் தனிநாடு கொள்கையுடன் 'தமிழ் ராஜ்ய கூட்டணி' அமைத்து அண்ணாதுரைக்கு முன்பே காங்கிரசை தேர்தலில் வென்றார். ஆனால் மத்திய அரசு ஆளுநரை வைத்து விளையாடி அவரை நியாயப்படி முதலமைச்சர் ஆவதைத் தடுத்தது என்பது வரலாறு! நன்றி: ஆதித்தனார் எழுதிய 'தமிழப் பேரரசு' நூல்

தமிழருக்குத் தனிநாடு தேவையென்ற ஆதித்தனார்

 1965 இல் ஆதித்தனார் தமிழ்நாடு தனிநாடு ஆவதன் அவசியம் பற்றி எழுதும் போது டெல்லி அதுவரை அதாவது 1947 லிருந்து 18 ஆண்டுகளாக தமிழகத்தைச் சுரண்டிய தொகை ரூ.2460 கோடி என்று கணக்கிட்டுக் கூறியுள்ளார்.
 மத்திய அரசு வாங்கும் வரி வடக்கே போய் அதன் பங்கு வடக்கிலேயே பெரும்பகுதி செலவாகிவிடுகிறது.
 எனவே இது அல்ல பேரரசர்களுக்கு பயந்து குறுநில மன்னர்கள் கட்டும் கப்பம் போன்றது என்றும் கூறியுள்ளார்.
 இதில் ஆச்சரியமான விடயம் ரூபாய்த் தாள்கள் பற்றி அவர் கூறிய கருத்து.
 அதாவது தமிழ்நாட்டில் எவ்வளவு காகித ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளனவோ அதே அளவு மதிப்புள்ள பொருட்களை டெல்லி சுரண்டி விட்டு அதற்குப் பதில் வெறும் காகிதத்தை ரூபாய் நோட்டாக தந்து ஏமாற்றிவிட்டதாக கூறுகிறார். 
 1965 இல் 2460 கோடி மிகப்பெரிய தொகை!
இதற்குப் பிறகு இதே நிலை நீடித்தால் ஆண்டுக்கு 120 கோடி நாம் நஷ்டக் கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். 
 அப்போதே ஆண்டுக்கு 2500 பேர் தற்கொலை செய்துகொள்வதைக் கவலையோடு குறிப்பிட்டு அதற்கு காரணம் வறுமை என்கிறார்.  
 மத்திய அரசு திட்டமிட்டு மக்கட்தொகை குறைப்பு நடவடிக்கைகளை தமிழகத்தில் புகுத்தி தமிழர் எண்ணிக்கையை இன்று பெருமளவு குறைத்துவிட்டது.
 ஆனால் வடவர்களோ பல மடங்கு பெருகிவிட்டனர். 
 இதை அன்றே எதிர்த்த ஆதித்தனார் மக்கட்தொகை குறைப்பு என்பது செருப்பு அளவுக்கு காலை வெட்டுவது என்றாகும் என கூறியுள்ளார்.
 அன்று தமிழ்நாட்டை விட சிறிய 106 நாடுகள் உலகத்தில் உள்ள போது தமிழ்நாடு ஏன் தனிநாடு ஆக முடியாது என்று கேட்கிறார். அந்த 105 நாடுகளின் பட்டியலையும் மக்கட்தொகையையும் கூட பட்டியலிட்டார்.
 தமிழருக்கு தனி அரசு இருந்திருந்தால் 5கோடி தமிழர்களை 35 லட்சம் சிங்களவர்கள் ஏளனமாக நினைப்பார்களா?! கள்ளத்தோணி என்று கூறி விரட்டி அடிப்பார்களா என்று கேட்கிறார்.
 தமிழகமும் ஈழமும் ஒன்றாக இணைய வேண்டும் என்று 1942 இலேயே 'தமிழ் ராஜ்யம்' எனும் நூல் எழுதி அதில் தமிழர் வாழும் பகுதிகளை குறித்து வரைபடம் வெளியிட்டார் ஆதித்தனார்.
 அவரது வார்த்தைகளில் கூறினால்...
"தமிழ் மக்கள் சிதறுண்டு கிடக்கும் நிலை நீங்கி ஒரே நாடாக ஒரே கொடையின் கீழ் தமிழ் இனம் வாழ வேண்டும்!
 பாண்டிச்சேரியிலும் ஈழத்திலும் சென்னை ராஜ்யத்திலும் சிதறுண்டு தனித்தனியாக வாழ்வதால் தமிழ் இனம் வலுவற்று கிடக்கிறது!
 இந்தப் பகுதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து சுதந்திர தமிழ்நாடு அமைத்துக் கொண்டு வல்லரசாக திகழ வேண்டும் என்பது தமிழ் இனத்தின் நியாயமான ஆசை!
 தமிழகத்தில் இருக்கிற 500 லட்சம் தமிழர்களும் இலங்கையில் இருக்கின்ற 35 இலட்சம் தமிழர்களும் ஒன்று சேர வேண்டும்!
 இந்திய தேசத்தை துண்டு போடுவது துரோகம் என்பதாக சொல்பவர்கள் தமிழ்நாடு துண்டுபட்டு கிடக்கிறதே அது தமிழர்களுக்கு செய்த துரோகம் இல்லையா?! 
  பீர்மேடு, தேவிகுளம், நெய்யாற்றின் கரை ஆகிய பகுதிகள் தமிழ்நாட்டில் இருந்து பிரிக்கப்பட்டு மலையாளிகள் கையில் சிக்கி கிடக்கின்றனவே!?
  வட எல்லையில் வேங்கடம் வரையில் உள்ள தமிழ் பகுதிகள் ஆந்திராவில் ஆட்சியில் கிடைக்கின்றனவே?!
 பாண்டிச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்கள் டெல்லியின் கண்காணிப்பில் இருக்கின்றனவே?!
 18 மைல் அகலம் உள்ள ஒரு சிறிய நீர்ப்பகுதிக்கு அப்பால் வட இலங்கையில் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். 
அதுவும் தமிழ்நாட்டின் ஒரு பகுதிதான்!
 அது தாயகத்தில் இருந்து பிரித்து கிடக்கிறதே?!
 இந்தப் பகுதிகள் எல்லாம் தமிழ்நாட்டுடன் சேர வேண்டாமா?!
 ஆகையால் தமிழ்நாடு ஒன்று சேர வேண்டும் என்று சொல்வது துரோகம் ஆகாது! " என்று தெளிவாகவே எழுதியிருக்கிறார்.

 "தமிழ்நாடு வறண்ட நாடு ஆகையால் அது சுதந்திர நாடாக இருக்க தகுதியற்றது" என்று சட்டமன்ற உறுப்பினர் குழந்தை அம்மாள் ஒரு முறை பேசினார்.
 "தமிழ்நாட்டில் நீர் வளம் நிலவலம் இல்லை" என்று தினமணி பத்திரிக்கை தலையங்கம் எழுதியது.
 இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆதித்தனார் "தமிழ்நாட்டில் பாலாறு போன்ற ஆறுகளில் தண்ணீர் ஓடாமல் இருப்பதற்கு காரணம் மைசூர் நாட்டில் அணை கட்டி தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்வதே.
 இப்போது தமிழ்நாடு டெல்லியின் கீழ் இருப்பதால் நடவடிக்கை எடுக்க முடியாமல் இருக்கிறது.
 தமிழ்நாடு டெல்லியின் படியில் இருந்து விடுபட்டு சுதந்திர நாடு ஆனால் தண்ணீர் விடும்படி உரிமையுடன் கேட்க முடியும்.
ஏனென்றால் சுதந்திர நாடுகளுக்கு தண்ணீர் உரிமை உண்டு. 
மேலும் மலையாளத்தில் ஓடுகின்ற சோலை ஆறு பரம்பிக்குளம் ஆகிய ஆறுகளின் தண்ணீரை தமிழ்நாட்டுக்கு பயன்படுத்த செய்யும் பணியை சுதந்திர தமிழர்கள் செய்ய முடியும்.
மேலும் ஆறு மட்டுமே ஒரு நாட்டின் வளத்தை நிச்சயிப்பதாக சொல்ல முடியாது!" என்று எழுதியிருக்கிறார்.
 மேலும் காவிரி ஆறு பற்றி அவர் எழுதும்போது "காவிரி ஆற்றின் ஒரு கிளை கன்னடர் நாடு வழியாக அதாவது மைசூர் மாநிலத்தின் வழியாக ஓடி வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும்.
 காவிரி ஆற்றுத் தண்ணீர் முழுவதும் மைசூரில் இருந்து வருகிறது என்று சிலர் சொல்வது மிகைப்படுத்தி கூறுவது ஆகும்.
இதை காட்டி தமிழ்நாடு தனிநாடாக இயங்க முடியாது என்று சொல்வது நியாயமான காரணம் ஆகாது. பிரம்மபுத்திரா என்ற ஆறு இந்தியா, சீனா வழியாக 5000 மைல் ஓடி பின்னர் பாகிஸ்தானில் ஓடுகிறது. இதைப் போலவே ஐரோப்பாவில் டானியூப் என்ற நதி 6 நாடுகளை தொடுகிறது.
 பொதுவாக பார்த்தால் உலகில் ஆறுகளின் காரணமாக நாடுகளிடையே சண்டை சச்சரவு ஏற்படுவதில்லை.
 அதற்கு விதிகள் இருக்கின்றன.
 விதிகளை மீறினால் ஐக்கிய நாடுகள் அவையிலும் உலக நாடுகளின் நீதிமன்றத்திலும் தீர்த்துக் கொள்ளலாம்.
 ஆகவே தமிழ்நாடு தனி நாடாக இயங்கினால் காவிரி ஆற்று தண்ணீரை இழந்து விடுவோம் என்பது வீண் புரளி. தண்ணீரை இழக்க மாட்டோம் என்பதோடு இழந்திருக்கும் தண்ணீர் உரிமைகளை மீண்டும் பெறுவோம்".

அன்றும் சிறுபான்மை என்கிற சொல் அரசியலில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது இதை ஆதித்த நாள் வேறு பார்வையில் பார்க்கிறார்.
 "இலங்கையில் 65 லட்சம் சிங்களவர்களும் 35 லட்சம் தமிழர்களும் வாழ்கிறார்கள்.
 சிங்களவர் பெரும்பான்மையாக சட்டசபை க்கு வருகிறார்கள் அதனால் சிங்களவர் ஆதிக்கத்தில் ஆட்சி அமைய நேரிடுகிறது.
 தாய்த் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களும் நான்கரை கோடி பேர் இருக்கின்றனர். ஆனால் 38 கோடி பேர் தமிழர் அல்லாத பிறமொழியினர் பெரும்பான்மையாக ஆட்சியில் இருக்கின்றனர்.
டெல்லி பாராளுமன்றத்தில் 40 பேர் தமிழர்கள் என்றால் 460 பேர் தமிழர் அல்லாதவர்கள் இருக்கின்றனர்.
 தமிழர் சிறுபான்மை என்றாவதால் எல்லாத் தொல்லைகளும் உண்டாகின்றன.
  தமிழர்கள் தனியாக பிரிந்தால் மட்டுமே தமிழர்கள் பெரும்பான்மை என்ற நிலையை அடைய முடியும்!
 பலர் சொல்வது போல கன்னடர்கள் தெலுங்கர்கள் மலையாளிகள் உடன் தமிழர் சேர்ந்து திராவிடம் என்ற அமைப்பை ஏற்படுத்தினாலும் நான்கரை கோடி பேர் தமிழர்கள் இருப்பர் ஆனால் 10 கோடி பேர் தமிழர் அல்லாதவர்கள் இருப்பர்.
 அப்போதும் சிறுபான்மையாகத் தான் தமிழர்கள் இருப்பார்கள். தொல்லைகள் நீடிக்க தான் செய்யும்.
சிறுபான்மை நிலை ஒழிந்தால் இனம் வாழும் என்பதற்கு எடுத்துக்காட்டாக யூதர்களின் வரலாற்றை சொல்லலாம்.
 பல நாடுகளில் யூதர்கள் சிறுபான்மையாக இருந்தார்கள் எல்லா நாடுகளிலும் அவர்கள் அடைந்த துன்பங்களுக்கு அளவு கிடையாது எல்லா நாடுகளாலும் யூதர்கள் விரட்டப்பட்டு கடைசியில் சிதறிக்கிடந்த 8 லட்சம் யூதர்கள் 1948 ஆம் ஆண்டு அரேபிய பாலைவனத்தில் ஒன்று சேர்ந்து இஸ்ரேல் என்ற சுதந்திர தனி நாட்டை அமைத்தார்கள் அதன்பிறகு அவர்களுடைய தொல்லைகள் நீங்கின.
 தமிழ்நாடு அதை விட 30 மடங்கு பெரியது" 
 என்று எழுதும்போது ஈழத் தமிழர் துயரத்தையும் எழுதியுள்ளார்.
"1958 ஏப்ரல் மே மாதங்களில் தமிழர்களில் இலங்கையில் சிங்கள வெறியர்களின் கொலை கொள்ளை தீ வைத்தல் சூறையாடுதல் முதலிய கொடுமைகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள் 100 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் தமிழர்கள் வீடுகள் பொருட்கள் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சேதமாக்கப்பட்டன பஞ்சாப் படுகொலை விட இது 10 மடங்கு பயங்கரமானது என்று நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள். 1961 பிப்ரவரி முதல் இலங்கையில் தமிழர்கள் ராணுவ ஆட்சியின் கீழ் சிக்கி சொல்ல முடியாத கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர் அண்மை காலம் வரை தமிழ் தலைவர்கள் சிறையில் இருந்தனர் இன்று தமிழுக்கு அங்கு எவ்வித உரிமையும் இல்லை தமிழர் வாழ் பகுதிகளில் சிங்களவர்களை கொடியேற்றி தமிழர்களின் தனித்தன்மையை அளிக்க சிங்கள அரசு முனைகிறது" 
 மேலும் அவர் தமிழின விடுதலை பற்றி கூறுகையில்
 "5கோடி தமிழ் மக்கள் ஓர் இனம் என்பதை உணர்ந்து தமது அடிமை தளையை அறுத்து எறிவது என்று வீறிட்டு எழுந்தால் அதை எதிர்த்து உலகமே திரண்டாலும் தடுக்க முடியாது! டெல்லி அரசாங்கத்தாலும் முடியாது! அந்த அரசாங்கத்திற்கு உடந்தையாக இருக்கிற 38 கோடி வடவர்களாலும் முடியாது ! 30 லட்சம் அயர்லாந்து மக்களின் சுதந்திர போராட்டத்தை தடுப்பதற்கு அவர்களைப் போல் 15 மடங்கு அதிக எண்ணிக்கை உள்ள ஆங்கிலேயர்களால் முடியாமல் போய்விட்டது!" என்று கூறுகிறார்.
 ஆதித்தனார் தனிநாடு கொள்கையுடன் 'தமிழ் ராஜ்ய கூட்டணி' அமைத்து அண்ணாதுரைக்கு முன்பே காங்கிரசை தேர்தலில் வென்றார்.
 ஆனால் மத்திய அரசு ஆளுநரை வைத்து விளையாடி அவரை நியாயப்படி முதலமைச்சர் ஆவதைத் தடுத்தது என்பது வரலாறு! 
நன்றி: ஆதித்தனார் எழுதிய 'தமிழப் பேரரசு' நூல் 

No comments:

Post a Comment