கச்சத்தீவு தாரைவார்ப்பு கருணாநிதி பங்கு
புனித ஜார்ஜ் கோட்டையில் 19.06.1974 இல் நடந்த ஒரு சந்திப்பு பற்றிய ஆவணம் RTI மூலம் பெறப்பட்டுள்ளது.
இது அன்றைய வெளியுறவுத்துறை செயலாளர் அளித்த அறிக்கை ஆகும்.
அன்றைய தினம் வெளியுறவுத்துறை ஏற்பாடு செய்த இந்த கூட்டத்தில் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி, தலைமை செயலர் பி.சபாநாயகம், உள்துறை செயலர் எஸ்.பி.ஆன்ட்ரூஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது முன்னுரையில் 1973 இலேயே அக்டோபர் 13 மற்றும் 19 தேதிகளில் டெல்லியில் இது தொடர்பாக ஏற்கனவே முதல்வரோடு நடந்த பேச்சுவார்த்தை பற்றி மீள நினைவு படுத்தினார் உள்துறை செயலர்.
அதில் 1973 அக்டோபர் 13 தமிழ அரசிடம் பேசிய பிறகே 14 தேதி இலங்கையுடன் இந்திய அரசு பேசத் தொடங்கியது. அதன் பிறகு அக்டோபர் 19 தேதி கச்சத்தீவு ஒப்பந்தம் பற்றி முழுமையாக தமிழக அரசுக்கு விளக்கப்பட்டு நன்கு கவனிக்கவும் முழுமையாக விளக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
அப்படி நினைவு கூர்ந்த பிறகு தற்போது ஒப்பந்தம் தொடர்பான தமிழக அரசின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் கேட்க இந்த கூட்டம் என்று கூறி பிரதமர் மற்றும் வெளியுறவுத் துறை பிரதிநிதியாக இலங்கை இந்தியா இடைப்பட்ட பாக் நீரிணைப்பு சுமூகமாக பங்கு பிரிக்கப்பட ஒத்துழைக்குமாறு தமிழக முதல்வரைக் கேட்டுக்கொண்டு சந்திப்பை தொடங்கி வைத்தார்.
இந்த ஒப்பந்த ஏற்பாட்டுக்கு தான் முழுமையாக உடன்படுவதாக முதலமைச்சர் கருணாநிதி உறுதியளிக்கிறார். ஆனால் அரசியல் காரணங்களுக்காக தன்னால் இதை வெளிப்படையாகச் செய்யமுடியாது என்றும் ஆனால் இது பெரிய பிரச்சனையாக மாறாமல் பார்த்துக் கொள்வேன் என்றும் உறுதியளிக்கிறார்.
இதைப் பாராட்டிய வெளியுறவுத்துறை செயலர் மத்திய அரசுக்கு எதிராக இந்த பிரச்சனை திரும்பக்கூடாது என்று அறிவுறுத்தினார். இதை அறிக்கையாக மத்திய அரசுக்கு அளித்த ஆவணமே தற்போது வெளியிடப்பட்டது.
அதாவது 1973 லிருந்தே மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் கச்சத்தீவு ஒப்பந்தம் பற்றி பேச்சுவார்த்தை நடத்திவந்துள்ளது!
கருணாநிதியிடம் பேசிய பிறகே இலங்கையிடம் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது!
ஆனால் இதே கட்சிதான் மத்திய அரசை மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் கச்சத்தீவு கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டி வருகிறது.
மத்திய அரசு 1974 இல் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்த ஒப்பந்தமும் 1976 இல் மீன்பிடி உரிமைகள் பறிக்கப்பட்டதற்கும் கடந்த 20 ஆண்டுகளில் 6184 மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கும் 1175 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதற்கும் யார் காரணம் என்று இந்த ஆவணத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம்
- தற்போதைய வெளியுறவுத்துறை ஜெய்சங்கர் அளித்த பேட்டியிலிருந்து
No comments:
Post a Comment