Sunday, 12 July 2015

இனவெறிக்கு இரையான பாலாறு

இனவெறிக்கு இரையான பாலாறு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒரு இனத்தின் மீதான வெறுப்பைத் தீர்த்துக்கொள்ள மிகச்சிறந்த வழி  யாதெனில்

அதன் தாய்நிலத்தை ஆக்கிரமித்து
ஆற்றை அணைகட்டி தடுத்து
நீருக்கும் உணவுக்கும் தட்டுப்பாட்டை உருவாக்குவது,

இதை இன்னும் சிறப்பாக செய்யவேண்டுமானால்
தண்ணீர் வராத ஆற்றின் மணலை வரைமுறையில்லாமல் தோண்டி கொள்ளையடித்து வேற்றினத்தாருக்கு விற்பது,

இன்னமும் சிறப்பாக செய்ய அந்த ஆற்றின் நிலத்தடி நீரையும் விட்டுவைக்காமல் உறிஞ்சி எடுத்து தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தி காற்றை மாசாக்கி
கழிவுகளை அப்படியே ஆற்றில் கொட்டி நிலத்தடி நீரையும் நஞ்சாக்குவது.

இப்படி செய்துவிட்டால் அந்த இன மக்கள் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காமல்
வேலைவாய்ப்பு இல்லாமல்
குடிக்க குடிநீர் இல்லாமல்
பல வகை நோய்கள் வந்து திண்டாடுவதை இனவெறியுடன் ரசிக்கமுடியும்.

இதைத்தான் ஆந்திராவும் கர்நாடகாவும் கேரளாவும் தமிழகத்திற்கு செய்துவருகின்றன.

பாலாறு உற்பத்தியாகும் நந்திமலை முதல் அது கடலில் கலக்கும் இடம்வரைத் தமிழர்களுக்கு சொந்தம்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கன்னடவர் ஆண்ட மைசூர் சமஸ்தானம் 1850களிலேயே தமிழ் மக்களைப் பற்றி கவலைப்படாமல் தங்கள் பாசனவசதிகளை விரிவுபடுத்திக்கொண்டனர்.
பல ஏரிகளை வெட்டிக்கொண்டனர்.
இது 1802, 1892, 1924 ஆகிய ஆண்டுகளில் மைசூருக்கும் மதராஸ் மாநிலத்திற்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தங்களை மதிக்காமல் செய்யப்பட்ட நடவடிக்கை ஆகும்.

1931ல் இந்த பிரச்சனை பெரிதானது
மூன்று சட்டமன்ற உறுப்பினர்களையும் மூன்று அரசு அதிகாரிகளையும் கொண்ட குழு அமைக்கப்பட்டு
அதன் அறிக்கை பல திடுக்கிடும் உண்மைகளை வெளிக்கொண்டுவந்தது.

அதாவது பாலாற்றின் மழையளவு குறைவு அதனால் தண்ணீர் வரத்து குறைகிறது என்பது பொய்
மைசூர் அரசு விதிமுறைகளை மீறி ஏரிகளை வெட்டி தண்ணீரை எடுத்துக்கொண்டதே பாலாறு வறண்டதற்கு முக்கிய காரணம் என்பது வெளியே தெரிந்தது.

1956ல் எல்லைகள் நியாயமாக பிரிக்கப்பட்டிருந்தால் பாலாறு முழுக்க நம்கையில் இருந்திருக்கும்.

இதன் பிறகு தெலுங்கர்களும் தமது பகுதிகளில் அணைகளைக் கட்டி தண்ணீரைத் தடுத்தனர்.
இன்று வரை இது தொடர்ந்து நடைபெறுகிறது.

கர்நாடகாவில் 93 கி.மீ தூரமும்
ஆந்திராவில் 23கி.மீ தூரமும்
தமிழகத்தில் 222 கி.மீ தூரமும் பாலாறு பாய்கிறது.

கர்நாடகத்தில் விதிமுறைகளை மீறி 20க்கும் மேற்பட்ட சிறிய பெரிய அணைகள் கட்டப்பட்டு, ஏரிகள் வெட்டப்பட்டு செழிப்பாக உள்ளது.

ஆந்திரத்திலும் விதிமுறைக்கு புறம்பாக சிறிதும் பெரிதுமாக 30 அணைகள் கட்டப்பட்டு செழிப்புடன் காணப்படுகிறது.

ஆனால், தமிழகத்தில் பாலாற்றில் தண்ணீர் வந்து பல ஆண்டுகள் ஆகிறது.

ஒன்றரைக் கோடி தமிழர்களின் குடிநீராதாரம், 1200 ஏரிகள் அதன்மூலம் 2லட்சம் ஏக்கர் விவசாயம் முழுதுமாக அழியும் நிலைக்கு வந்துவிட்டது.

ஆந்திராவில் அடிப்படை மனிதாபிமானம் கூட இல்லாமல் கணேசபுரத்தில் அணை கட்டி தமிழகத்திற்கு சொட்டுநீர் கூட தரக்கூடாது என்ற திட்டம் தற்போது நிறைவேறி வருகிறது.

கன்னட தெலுங்கு அரசுகள் செய்வது 1956 மாநில நதிநீர் பங்கீடு சட்டத்தின் படியும்
1965 சர்வதேச நதிநீர் பங்கீடு சட்டத்தின்படியும் மன்னிக்கமுடியாத குற்றம் ஆகும்.

பாலாற்றை 90% மறித்ததால் தமிழகத்தில் அம்பலூர் தென்னை விவசாயம், தோட்டவேளாண்மை , சோளம் சாகுபடி போன்றவை அழிந்துவிட்டன.
ஆம்பூர் மல்லிகை விளைச்சல் முற்றாக அழிந்துவிட்டது.
அங்கே ஒரு வருடத்திற்கு 2போகம் 3போகம் குறையாமல் விளைச்சல் கண்ட விவசாயம் அழிந்து போனது.
சின்னத் தஞ்சாவூர் என்றழைக்கப்பட்ட வாயலூர் விவசாயம் அழிந்துபோனது.
1300 கிராமங்களுக்கு தண்ணீர் அளித்த புதுப்பாடி அணை தண்ணீரே வராமல் பயன்படாமலேயே போய் இன்று பழுதடைந்துவிட்டது.

இவற்றைக் கண்டுகொள்ளாத வந்தேறி திராவிட அரசுகள் பாலாற்றில் மணலை விற்று காசும்  பார்க்கின்றன.
மணல் அள்ள அரசு ஏலம் விட்டபோது அதை எதிர்த்து சமூக ஆர்வலர்கள் 2003ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடையாணை வாங்கினர்.

அன்று தமிழக முதல்வர் கன்னட பிராமணரான ஜெயலலிதா மணல் அள்ளுவதை விதிமுறைப்படி அரசே நடத்தும் என்று அறிவித்துவிட்டு சசிகலா மற்றும் ரதிமீனா மூலம் முற்றுமுழுதாக மணல் கொள்ளையை ஊக்குவித்தார்.
தனியார் ஏலம் எடுத்து மண்ணள்ளியதை விடவும் மோசமாக மணல்கொள்ளை இன்று அரசே செய்கிறது.

இதற்கு எதிர்ப்பு கிளம்பியபோது அதிமுக அமைச்சர் 3அடிக்கு மேல் எங்குமே மணல் அள்ளவில்லை என்று பச்சையாகப் புளுகினார்.
ஆனால் அப்போது 20க்கு மேலாக தோண்டிவிட்டிருந்தனர்
இவ்வுண்மை உயர்நீதிமன்ற கமிட்டி அளித்த அறிக்கை மூலம் வெளிவந்தது.

இவர்கள் மணல்கொள்ளையை எப்படி வெளிப்படையாக அடாவடியாக செய்தார்கள் தெரியுமா?
தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மணல் எடுக்கவேண்டும் என்று புதுப்பேட்டைக்குப் பிறகு ஆற்றையே மாற்றுவழியில் திருப்பிவிட்டு கொள்ளையடித்தனர்.

இன்று சராசரியாக ஒரு நாளைக்கு 2000லாரிகள் பாலாற்று மண்ணைத் தோண்டி அண்டை மாநிலங்களுக்கு விற்கின்றன.
ஏனென்றால், கேரளா,ஆந்திரா, கர்நாடக அரசுகள் தமது மாநிலத்தில் மணல் அள்ளத் தடைவிதித்து சட்டம் போட்டுள்ளன.
தமிழகத்தில் இருந்து காசு கொடுத்து மணலை வரவழைக்கின்றன.

மணல் கொள்ளையை தடுக்க நினைக்கும் அதிகாரிகளை ஈவிரக்கமின்றி கொலைசெய்துள்ளனர்.
மக்களைத் திரட்டி போராடிய தோழர் ராதாகிருஷ்ணன் மர்மமாகக் கொல்லப்பட்டார்.
ஆர்ப்பாட்டம் செய்த கோடீஸ்வரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

மண்ணை அள்ளிவிட்டு ஆற்றைச் சுற்றி நிலத்தடி நீரை உறிஞ்சி மக்களை குடிநீருக்கு திண்டாடவிட்டு விட்டு தொழிற்சாலைகள் அந்நீரை பயன்படுத்தவிடுகின்றன திராவிட வேற்றின அரசுகள்.

வாணியம்பாடியில் 1500 தோல் தொழிற்சாலைகள் 1996ல் உச்சநீதிமன்றம் தடைவிதித்தும் அதை மதிக்காமல் கழிவுகளையும் குப்பைகளையும் ஆற்றில் கொட்டிவிடுகின்றன.
இப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள நிக்கல், குரோமியம் கலந்த வேதிக்கழிவுகள் என்றுமே எந்தமுறையிலும் சுத்திகரிக்கமுடியாதவை.
ஆம்பூர் மக்கள் அனைவருக்குமே மாசடைந்த குடிநீர் அருந்தி அருந்தி மஞ்சள் காமாலை எப்போதும் உள்ளது. வீட்டில் ஒருவருக்காவது  சிறுநீரகக்கல் பிரச்சனை உள்ளது.
தோல் தொழிற்சாலைகளால் ராணிப்பேட்டை உலகின் 5வது மாசடைந்த நகரமாக ஆகிவிட்டது.
செங்கல்பட்டு பெப்சி ஆலை ஒரு நாளைக்கு 4லட்சம் காலன் குடிநீரை உறிஞ்சுகிறது.
ஓரியர் சாராய தொழிற்சாலை, கல்பாக்கல் பேரழிவு அணுவுலை, திருமுக்கூடல் சீனி ஆலைகள், மேலும் பல சாய பட்டறைகள், விருப்பம் போல் குடிநீரை வரைமுறையின்றி உறிஞ்சி கழிவுகளை பாலாற்றில் கொட்டிவருகின்றன.

பாலாற்றுப் படுகை மக்கள் விவசாயம் அழிந்து வாழ்வாதாரம் சிதைந்து தம்மை சீரழித்த தொழிற்சாலைகளிலும் மணல்கொள்ளைக்காரர் களிடமும் வேலைக்கு சென்று ஒரு நாளைக்கு 50ரூ கூலி வாங்கி வருகின்றனர்.
வறுமையில் வீழ்ந்த இப்பகுதி மாணவர்களையும் கூலியாசை காட்டி குழந்தை தொழிலாளர்களாக எடுபடி வேலைக்கு பயன்படுத்துகின்றனர்.

மக்கள் ஆரம்பத்தில் போராட்டம் நடத்தியபோது காவல்துறை பிடித்துகொண்டு போய் கொடுமைபடுத்தியது.
இப்போது ரெய்டு வரும் அரசு அதிகாரிகளும் கூலியாட்களான அப்பாவி மக்களைப் பிடித்துக்கொண்டுபோய் காவல் துறையிடம் ஒப்படைத்து கொடுமைப்படுத்துகின்றனர்.

தமிழக அரசாங்கம் தொழிற்சாலையில் வேலைசெய்வோருக்கு தரும் மருத்துவ வசதியில் இருந்து இப்பகுதி மக்களுக்கு கடல்நீரை குடிநீராக்க ஒதுக்கப்படும் நிதி வரை ஊழல் செய்துவருகிறது.

சென்னையில் குடிநீர் பஞ்சம் வந்தபிறகு பாலாற்றில் நீர் உறிஞ்சி சென்னை மக்களுக்கு விற்கப்படுகிறது.
வேலூரில் ஒன்பது நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீரே வருகிறது.
செங்கல்பட்டு குடிநீருக்கும் சாக்கடைத் தண்ணீருக்கும் பெரிய வேறுபாடு இல்லை.
மாசுக்கட்டுப்பாடு அதிகாரிகள் சோதனைக்கு குடிநீரை எடுத்துசெல்வதோடு சரி அதன் சோதனை முடிவை தெரிவிப்பதே இல்லை.
ஆலைகள் குடிநீரை உறிஞ்சி அதை கொள்ளைவிலையில் அம்மக்களுக்கே விற்கின்றன.

நேற்று சொந்தநிலத்தில் பெரும்விவசாயியாக இருந்தவர்கள் இன்று கூலிக்கு மாரடிக்கும் தொழிலாளியாக, உணவுக்கும், நீருக்கும் வழியில்லாமல், பல்வேறு நோய்களால் உடல்சிதைந்து வாழும்பிணம்(zombi) போல அலைகின்றனர்.

பாலாறு பாதுகாப்பு மக்கள் இயக்க தலைவர் எம்.எம்.பஷீர் தன்வாழ்நாள் முழுவதும் போராடி இன்று தள்ளாத வயதிலும் மனக்குமுறலுடன் பேசுகிறார்.
இதையெல்லாம் பார்த்து மனம்கொதிக்க கொதிக்க ஒரு கேணைப்பயல் முகநூலில் பதிவேற்றுகிறான்.
இதை பிழைக்கத்தெரிந்த நீங்கள் கண்டுகொள்ளத் தேவையில்லை.

ஆனாலும் உறுதியாகக் கூறுவேன்
பாலாற்றைக் காக்கவாவது வேண்டும் தமிழருக்கு 'தனித்தமிழ் குடியரசு'.
====================
en peyar palar- youtube

அணையை உடைப்போம்
https://m.facebook.com/photo.php?fbid=558433434260314&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&source=56

No comments:

Post a Comment