தமிழருக்கு "எமனான" தமிழ்:
************************
என்ன தலைப்பு அதிர்ச்சியாக இருக்கிறதா?
ஆனால், இதுதான் கசப்பான உண்மை; தமிழருக்கு எதிராகத் தமிழை எப்படி பயன்படுத்துவது என்பதை நம் இன எதிரிகளும் துரோகிகளும் நன்றாகவே அறிந்துள்ளனர்;
தொல்காப்பியத்துக்கு உரை எழுதி, இராவண காவியம் தடையை நீக்கி, கண்ணகிக்கு சிலை வைத்து, தமிழுக்கு செம்மொழிப் பட்டம் வாங்கிக் கொடுத்து, திருவள்ளுவருக்கு சிலை எடுத்து தமிழ்பற்றாளனாகக் காட்டிக்கொண்டே தமிழர் தாலியை அறுத்த கொலைஞன்தான் இந்த உத்தியை அறிமுகப்படுத்தியது; இது ராசபக்ச போர்முடிந்த மறுநாள் தமிழில் உரையாற்றியது போன்றது;
2009ல் பல இலக்கம் தமிழர் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கடைசிக்கட்டத்தில் நின்றிருந்த நேரம் ஒரு தமிழன் ஆசுக்கார் வாங்கச் செல்கிறான், அவன் அன்று அந்த விருதைத் தூக்கி தரையிலடித்துவிட்டு 'என் மக்கள் கொல்லப்படும் இந்நேரத்தில் எனக்கு இது தேவையில்லை' என்று மட்டும் கூறியிருந்தால் உலகமே அதிர்ந்திருக்கும் பல இலக்கம் உயிர்கள் காக்கப்பட்டிருக்கும்;ஏன் இதற்கு முன் நடிகர்களும் பாடகர்களும் கவிஞர்களும் மக்களுக்காகக் குரல் எழுப்பியதே இல்லையா;
சார்லி சாப்ளின்,மார்ல் பிராண்டோ, அருந்ததி ராய் போன்றவர்கள் குரல் எழுப்புவதில்லையா;
அவனோ நிலைமையை எவ்வளவு தந்திரமாகச் சமாளித்தான்; ஆசுக்கார் மேடையில் தமிழில் பேசினான்;
அவன் பேசியது இந்திய ஊடகங்களில் வரவும் இல்லை; இன்று இணையத்தில் தேடினால் கிடைக்கவும் செய்யாது; நாமும் அவன் அன்று காற்றில் கரைத்த வார்த்தைகளை எண்ணி மெய்சிலிர்க்கிறோம்;
நான்கூடத் தமிழ் பற்றிக் கவலைப்பட யாருமில்லை என்றுதான் நினைத்தேன்; உண்மையில் தமிழ்மேல் பைத்தியம் பிடித்த ஒரு கூட்டமே இருக்கிறது; தமிழர் வரலாற்றைக் காக்க, தமிழ் இலக்கியத்தைக் காக்க, தமிழின் புகழை உலகெல்லாம் பறைசாற்ற, எழுத்துலகில் தமிழை முன்னேற்ற, இணையத்தில் தமிழை பயன்படுத்த என்று முழுமூச்சாக செயல்படும் ஆயிரக்கணக்காணோர் உள்ளனர்;
ஆனால், கேவலம் தமிழனைக் காப்பாற்ற, இனவிடுதலைக்காகப் போராட ஒருவர்கூட இல்லை என் சொந்தங்களே ஒரு தனிமனிதர் கூட இல்லை;
எம் தேசியத் தலைவர் தமிழில் புலமை பெற்று தமிழனுக்காகப் போராடவில்லை; தமிழரசனாரோ,வீரப்பனாரோ இன்னும் பல விடுதலை வீரர்களோ தமிழ்ப்பற்றின் காரணமாகப் போராடவில்லை; அவர்களிடம் இருந்தது இனப்பற்று மட்டும்தான்;
சுற்றி பாருங்கள் தமிழர்களே; கண்களைத் திறந்து பாருங்கள்; நம்மிலிருந்து வந்தவர்கள், நம்மிடம் பாடம் கற்றவர்கள், நம்மால் ஆளப்பட்டவர்கள், நம்மால் நேர்மையாக நடத்தப்பட்டவர்கள் இன்று நம்மையே அடக்கியாளும் வல்லமை பெற்றிருக்கும் காரணம் என்ன?
அவர்கள் மொழிப்பற்றா இல்லைவேயில்லை இனப்பற்று; சக இனத்தை அழித்தேனும் தன்னினமும் சந்ததிகளும் வாழ்வாங்கு வாழவேண்டும் என்கிற வெறி;
தமிழைத் தேசியமொழியாக்க வக்கில்லையென்றதும் காகத்தை தேசியப்பறவையாக அறிவியுங்கள் என்றாராம் அண்ணா, அப்போதுதானே அதையே சொல்லி ஏமாற்றமுடியும்;
2,30,130 சகீமி பரப்புள்ளது தமிழர் தாய்நிலம்; இதில் கேவலம் 1,30,058 (56%) மட்டும் பிச்சை போடுவதுபோல போட்டுவிட்டு அதற்கு 'தமிழ்நாடு' என்று தமிழ்ப்பற்றோடு பெயர் வைத்து ஏமாற்றிவிட்டனர்; (அதையும் 1920லிருந்து வந்தேறிகளே ஆண்டுவருகினறனர்;
தலைநகருக்கு சென்னப்ப நாயக்கன் என்ற ஆங்கிலேயருக்கு முதலில் நிலம்விற்ற தெலுங்கனின் பெயரைவைத்து சரிகட்டியாயிற்று);
நம்மை 800வருடமாகக் கண்டவனும் ஆள்கிறான்;
70,000சகீமி(30%) மூன்று மாநிலங்கின் ஆக்கிரமிப்பில்,
21,952சகீமி(9.5%) சிங்களவர் கையில்,
8,073சகீமி (3.5%) அந்தமான்-நிகோபர் தீவுகள் வங்காளியர் ஆதிக்கத்தில்,
இவை அனைத்து இந்தியா என்ற வல்லாதிக்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில்;
இதை நினைத்து கவலைப்பட ஒருவர் கிடையாது; இனியும் எத்தனை நாட்கள்தான் முன்தோன்றிய முன்தோன்றிய என்று பழமையையே பேசிக்கொண்டிருப்பீர்கள்;
மொழிப்பற்றை விடுங்கள்; அதிகாரம் இல்லாமல் என்னதான் நீங்கள் கரடியாய்க் கத்தினாலும் கூட்டமாகக் கூச்சல் போட்டாலும் தமிழை அழிப்பவர்கள் ஓயமாட்டார்கள், தமிழ் மொழியின் அழிவு சிறிது தள்ளிப்போடப்படும் அவ்வளவுதான்; மொழிப்பற்று இனத்தைக் காக்க உதவி செய்யுமேயன்றி விடுதலையைப் பெற்றுத் தராது; இனியும் குருடர்களாக இருக்காதீர்கள்; தமிழ்பேசும் அனைவரும் தமிழர் கிடையாது அதை உணருங்கள்; 'என்னையும் தமிழனாக ஏற்றுக்கொள் இல்லையென்றால் துரோகம் செய்வேன்' என்று சொல்லும் வந்தேறிகளை அறவே ஒதுக்குங்கள்; மொழி என்பது இனத்தின் ஒரு கூறு மட்டுமே; எவன் பிறப்பால் தமிழனோ, எவன் இனத்தால் தமிழனோ, எவன் தமிழ்மக்கள் மீது அக்கறை கொண்டவனோ அவனை மட்டுமே நம்புங்கள்; நமது பிரச்சனைகளை தமிழரிடம் மட்டுமே சொல்லுங்கள்;
மற்ற எவரிடமும் மூச்சுவிடாதீர்கள்;
என்று நாம் வல்லரசாகிறோமோ அப்போது மற்றவர்கள் நம் வரலாற்றைத் தேடித் தேடி படிப்பார்கள்; நம் மொழியை விழுந்து விழுந்து கற்பார்கள்; நமக்கு ஒரு நாடு வேண்டும்;
நமது வீரவரலாற்றை எண்ணிப்பாருங்கள்;
ஆனால்,அத்தகைய வரலாறு இல்லாத இனமாக இருந்தாலும் நாம் போராடித்தான் ஆகவேண்டும்;
தெளிவான வரலாறுகூட இல்லாத நாடோடி இனமெல்லாம் தம் சின்னஞ்சிறு தாய்நிலத்தை காக்க இனப்பற்றோடு போராடுகிறார்களே,அவர்களைப் பார்க்கும்போது உங்களுக்குக் கூசவில்லையா?
*தமிழன் என்ற பெருமைகொள்ள இன்று நம்மிடம் எதுவும் இல்லை*
ஆகவே, மற்றவர்கள் மதிக்கும் நிலையில் இல்லாவிட்டாலும் ஏறி மிதிக்கும் நிலையிலிருந்து வெளியேற முயலுங்கள்;
இனப்பற்று மட்டுமே என்றோ மாந்தநேயம் செத்துப்போன இவ்வுலகில் நம்மை வாழவைக்கும்; இனியும் பார்ப்போர் முகம் சுளிக்கும் ஈனப்பிறவிகளாக இருக்காதீர்கள்..
No comments:
Post a Comment