தமிழியம் ஒரு சுருக்கமான விளக்கம்.
தமிழியம் ஒரு இனவியல்.
உலக மனிதர்கள் சாதி, மத, பொருளாதார வேறுபாடுகளை ஆகியவற்றை ஒழித்து,
தமது இனத்தை (எந்த இரு குடும்பங்களும் திருமணத் தொடர்பு வைத்துக்கொள்ளும் வகையில்) ஒரே சமூதாயம் போல் ஒன்றிணைத்து,
கடவுள் நம்பிக்கையைக் கைவிட்டு அதற்குப் பதிலாகத் தமது தாய்நிலத்தின் இயற்கை வளங்களைப் போற்றிப் பாதுகாத்து (அது தனிமனித சொத்தாகமல் தடுத்து)
அவற்றை முறையாகப் பயன்படுத்தி தமது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொண்டு ,
தன் இனத்தின் மொழி, கலை, பண்பாடு ஆகியவற்றை வளர்ப்பதைத் தமிழியம் வலியுறுத்துகிறது.
என்றைக்கு மற்ற எல்லா வேறுபாடுகளும் ஒழிந்து இனவழியே மட்டும் உலக மாந்த இனம் வேறுபட்டிருக்கிறதோ அன்று,
இனம் கடந்து (இனத்தை ஒழித்து என்றாகாது) ஒட்டுமொத்த மாந்தரும் ஒரே பேரினமாக ஒன்றிணைய வழியேற்படுத்த முதல் படியே மற்ற வேறுபாடுகளை ஒழித்து இனமாக ஒன்றிணைவது.
தமிழியம் வலியுறுத்தும் இனவியல் கோட்பாடு இதுவே.
இன்னும் சுருக்கமாகக் கூறினால்,
நான் ஒரு மனிதன்.
என் இனம் தமிழினம்.
என் மொழி தாய்மொழியான தமிழ்.
என் சாதி தமிழ் இன மக்கள்.
என் மதம் தமிழ் பண்பாடு.
என் நாடு என் தாய்நிலம்.
என் கடவுள் என் தாய்நிலத்தின் இயற்கை.
( https://m.facebook.com/photo.php?fbid=393369544100038&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739)
Wednesday, 15 July 2015
தமிழியம் ஒரு சுருக்கமான விளக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment