தமிழ்தேசிய வெள்ளம்
வேட்டொலி இணையம்
நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது.
கடந்த மாதம் 4500 முறை பார்க்கப்பட்டுள்ளது.
அதாவது ஒரு நாளைக்கு 150 பேர் சராசரியாக.
(இதில் என் பார்வைகள் சேர்க்கப்படவில்லை).
வேட்டொலிக்கு பெரும்பாலும் முகநூல் மூலம் வந்தடைகின்றனர்.
இது எனது பதிவுகள் உள்ள vaettoli.blogspot இணையம் மட்டும்தான்.
இதுபோக fbtamildata இணையத்தில் பிறரது தமிழ்தேசிய பதிவுகளையும் நான் தேடி எடுத்த சேமிப்பையும் ஏற்றிவருகிறேன்.
தொடங்கி 46 நாட்களில் 1916 பதிவுகள் ஏற்றியுள்ளேன்.
(இன்னும் 1000 பதிவுகள், 4000 புகைப்படங்கள் ஏற்றவேண்டி உள்ளது)
இதற்கு கடந்த மாதம் 3350 பேர் வருகை தந்துள்ளனர்.
அதாவது 111 பேர் / நாள்.
(இதிலும் என் பார்வைகள் சேர்க்கப்படவில்லை).
இவ்வலைக்கு பெரும்பாலும் கூகுள் தேடல் மூலம் வந்தடைகின்றனர்.
இது விரைவில் வேட்டொலியை விஞ்சிவிடும்.
(தற்போது 133 பேர் / நாள்).
மண்மீட்பு பதிவுகள் மிக முக்கியமானவை என்பதாலும்
blogspot ல் சிலசமயம் படங்கள் அழிந்துவிடுவதாலும் vaettoli.wordpress லும் அப்பதிவுகளை ஏற்றிவைத்துள்ளேன்.
இதிலும் நாள்தோறும் 2,3 பேர் வருகை தருகின்றனர்.
முகநூலில் போடுவது எல்லாம் காலப்போக்கில் அழிந்துவிடும்.
இணையத்தில் தேடினாலும் கிடைக்காது.
பல அரிய தமிழ்தேசியப் பதிவுகள் இப்படி அழிந்துவிட்டன.
ஆகவே தொலைநோக்குடன் உங்களது பதிவுகளை மேற்கண்டவாறு ஆவணமாகவும் ஆக்கிவையுங்கள்.
ஊடகத்தைத் தேடாமல் நீங்களே ஊடகமாக மாறுங்கள்.
தமிழ்தேசிய வெள்ளம் இணையத்தை நிரப்பட்டும்.
No comments:
Post a Comment