Saturday 24 August 2024

மறவர் விளைநிலத்தில் பள்ளர் ஊரணி

 மறவர் விளைநிலத்தில் பள்ளர் ஊரணி

 புதுக்கோட்டை மாவட்டம்,
திருமயம்‌ வட்டம்‌,
 செவலூர்‌, 
பள்ளன்‌ ஊரணியின்‌ கிழக்குக்‌  கரையில்‌ நடப்பட்டுள்ள தூணின்‌ கல்வெட்டு. 

காலம்: சகாப்தம்‌ 1569, (கி.பி. 1647). 

 தற்போதைய புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் செவலூர் கிராமத்தில் பள்ளர் சமூகத்திற்கு குடிதண்ணீர் குளம் இல்லாமல் இருந்த காரணத்தால் உலகப்பன் செர்வைகாரர் அவர்களின் ஆணையின் பேரில் மேற்படியூர் நாயகத்தா தேவன், உத்திங்க தேவன், பசுப்பதேவன், சிலம்பத்தேவன் ஆகிய நான்கு மறவர்களது காணியாட்சியான அரங்கன் வயலில் நான்காள் நடவு நிலத்தை விட்டுக்கொடுத்து ஊரணி வெட்டிக்கொள்ள சொன்னது தொடர்பான கல்வெட்டு.

 சான்று:  "தமிழகத் தொல்லியல் கழகம்" வெளியிடும் ஆண்டு இதழான "ஆவணம்" இன் பதினேழாவது பதிப்பு "இதழ்  - 17" (2006 ஆண்டுக்கானது)

 அதாவது தேவேந்திரர் சமூகத்தின் குடிநீர் தேவைக்காக மறவர் சமூகத்தார் விளைநிலத்தை விட்டுக்கொடுத்த சான்று இது!

05.04.2020 அன்று இட்ட பதிவு
தலைப்பு: கிபி 1647 பள்ளருக்காக மறவர் அளித்த கொடை

 

No comments:

Post a Comment