Sunday 3 September 2017

அனிதா இடத்தில் மலையாள மாணவி

அனிதா இடத்தில் மலையாள மாணவி
×,×,×,×,×,×,×,×,×,×,×,×,×,×,×,×,×,×,×,×,×,×,×,×

கேரள மாநில கொல்லம் அருகே எலமேடு பகுதியைச் சேர்ந்தவர் மாணவி ரேவதி.
இவர் மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக நடத்தப்பட்ட நீட் தேர்வில் பங்கேற்றார்.
நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்ற மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில், மாணவி ரேவதிக்கு சென்னை கே.கே.நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்தது.
அனுமதி கடிதத்துடன் கல்லூரிக்கு சென்ற மாணவியிடம் சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட சில ஆவணங்கள் இல்லை.
விரைவில் சான்றிதழ்களைச் சமர்ப்பிப்பதாக மாணவியின் பெற்றோர் கூறியதை கல்லூரி நிர்வாகத்தினர் ஏற்க மமறுத்துவிட்டனர்.
இந்த விஷயம் தொடர்பான தகவல், தொழிலதிபர் ஒருவரின் மூலம் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனின் கவனத்துக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து, கேரள முதல்வர் பினராயி விஜயன், செப்டம்பர் 4-ம் தேதிக்குள் மாணவியின் சான்றிதழ்கள் ஒப்படைக்கப்படும் என்று அம்மாநில அதிகாரிகளின் மூலமாக கல்லூரி நிர்வாகத்துக்கு உறுதி அளித்துள்ளார்.
இதையடுத்து மாணவி ரேவதி கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஏழையாகப் பிறந்தாலும் மலையாளியாகப் பிறக்கவேண்டும்.
இருப்பிட சான்றிதழோ சாதி சான்றிதழோ இல்லாமல் போனாலும்
கடைசி தேதி முடிந்த பிறகும்கூட தமிழகத்தில் இடம் கிடைக்கும்.
அதற்கு துணையாக தமிழகத்தில் மலையாள தொழிலதிபர்களும் கேரள முதலமைச்சரும் இருப்பார்கள்.

ஏதோ தன் பரம்பரை சொத்தில் பங்கு கொடுத்தது போல 'ஏழை மாணவிக்கு உதவிய கேரள முதலமைச்சர்' என பாராட்டி எழுத தமிழ் ஊடகங்களும் இருக்கும்.

தமிழ் இனத்தில் ஏழைகள் உட்பட அனைவரும் மாணவி அனிதா போல சாவதைத் தவிர வேறு வழியில்லை.

No comments:

Post a Comment