Tuesday 26 September 2017

விஜய் தெலுங்குபதி

தமிழகத்தை நசுக்கும் மத்திய அரசின் தேசிய விருதை வாங்க மாட்டேன்
- நடிகர் விஜய் தெலுங்கு பதி

பிப்ரவரி 29, 2016 தினகரன் செய்தி

தமிழக தெலுங்கர் யுகாதி விழா

2016-02-29@ 00:26:52

சென்னை: அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பாக ‘தமிழக தெலுங்கர் யுகாதி விழா’ மீனம்பாக்கத்திலுள்ள ஜெயின் கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்தது.
யுகாதி விழாவிற்கு சம்மேளனத் தலைவர் சிஎம்கே. ரெட்டி தலைமை வகித்தார்.
ஒருங்கிணைப்பு செயலாளர் நந்தகோபால், பொருளாளர் அ.சங்கரன், மாநில துணை தலைவர் ஜெஎஸ்கே. சதீஷ்குமார், இளைஞரணி தலைவர் டி.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில் 'தமிழகத்தில் முக்கிய பங்களிக்கும் வீரபாண்டிய கட்டபொம்மன், ராணி மங்கம்மா, ஜி.டி. நாயுடு, ஓமந்தூரார் ஆகியோர் தெலுங்கர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.
இவர்கள் தமிழகத்தில் சிறந்து விளங்கினார்கள்.
அதேபோல் இங்கு அமர்ந்திருக்கும் பிரதாப் சி.ரெட்டி ஆகியோரும் சிறந்து விளங்குகிறார்கள்.
யார் எந்த மொழி பேசினாலும், தாய்மொழிக்கு பெருமை சேர்க்க வேண்டும்’ என்றார்.

இவ்விழாவில் தமிழக ஆளுநர் ரோசய்யா கலந்து கொண்டு, பின்னணி பாடகி பி.சுசிலா, வேல்டெக் கல்வி குழுமத்தின் தலைவர் டாக்டர். சகுந்தலா ரங்கராஜன், ஜெயா கல்வி குழுமத்தின் தலைவர் பேராசிரியர் கனகராஜ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

  திருமலா திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, உலக தெலுங்கு சம்மேளனத் தலைவர் வி.எல். இந்திரா டெக், அகில பாரத விஷ்வகர்மா மகாசபை நிறுவனர் ராஜமகாலிங்கம், திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

(தகவலுக்கு நன்றி: Asa Sundar)

2 comments:

  1. நம்ப முடியவில்லை!

    ReplyDelete
  2. விருந்தினராய் கலந்துக் கிட்டதால் அவர் தெலுங்கர் என்றில்லை!

    ReplyDelete