வடுகரின் அறிவிக்கப்படாத போர்
~•°~•°~•°~•°~•°~•°~•°~•°~•°~•°~•°~•°
வடுகர்களின் பூர்வீகம் தெரியாவிட்டாலும் வேங்கட மலைக்கு அப்பால் ஆண்ட தமிழ் மன்னர்கள் காட்டுமிராண்டிகளான வடுகர்களை கூலிப்படையாக வைத்திருந்தனர் என்பது மட்டும் தெரிகிறது.
(தமிழர்களான) நன்னர்களுக்கு அடங்கி விசுவாசமாக நடந்துவந்த (வடுகர்களான) கோசர்களுக்கு நன்னன் செய்த ஒரு வன்கொடுமையே
வடுகர்கள் தமிழர் மீது பகைகொண்ட தொடக்கப்புள்ளி.
ஆனால் வடுகர்கள் நேரடியாக அல்லாது மறைமுகமாக குறுக்கு வழியில் உறவாடிக் கெடுத்து தலைமுறை தலைமுறையாக தமிழினத்தின் மீது அறிவிக்கப்படாத போர் புரிந்து அதில் முக்கால்வாசி வெற்றியும் பெற்றுவிட்டார்கள் என்றுதான் கூறவேண்டும்.
அந்த தொடக்கப்புள்ளி ஒரு பெண்கொலை.
நன்னனின் காவல்மரத்தின் (மாமரம்) ஒரு பழம் ஆற்றில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டது.
அதை விபரம் தெரியாத ஒரு வடுகர் பெண் எடுத்து தின்றுவிடுகிறாள்.
இதற்கு மரணதண்டனை அளிக்கிறான் கொடுங்கோலனான நன்னன்.
வடுகர்கள் அவளது எடைக்கு எடை தங்கமும் அதோடு 81 யானைகளும் தருவதாகக் கூறி அவளை விடுதலை செய்யுமாறு கெஞ்சுகின்றனர்.
ஆனாலும் மனமிரங்காத அந்த கொடிய மன்னன் அந்த அப்பாவி பெண்ணைக் கொலை செய்கிறான்.
(புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்
கொன்பதிற் றொன்பது களிற்றொ டவணிறை
பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான்
பெண்கொலை புரிந்த நன்னன் _பரணர், குறுந்தொகை 292)
அதன்பிறகு வடுகர்கள் ஒற்றுமையாகி சூழ்ச்சி மூலம் நன்னனை வீழ்த்தி அவனது காவல்மரத்தை வெட்டியெறிந்தனர்.
(நன்னன் நறுமா கொன்று
நாட்டிற் போக்கிய ஒன்று மொழிக் கோசர் போல வன்கட் சூழ்ச்சி
_ குறுந்தொகை 73)
ஆனாலும் வடுகர் நெஞ்சில் இந்த கொலை ஆறாத வடுவாக பல தலைமுறைகள் படிந்திருந்தது.
நன்னர்களை வீழ்த்திய வடுகர்களைத்தான்
நந்தர்களை வீழ்த்திய மோரியர் என்று வரலாறு பதிவுசெய்கிறது
பெரும் வல்லரசாக எழுந்த வடக்கு வடுகரான மோரியர் தென்வடுகர் உதவியுடன்
தமிழர் மீது போர் தொடுத்தனர்.
ஆனால் மூவேந்தரின் கூட்டணிப்படையிடம் படுதோல்வி அடைந்தனர்.
அதன்பிறகு தமிழர்களை சுற்றிவளைத்து தோற்கடிக்க தென்னிலங்கைக்கு படையனுப்பி
புத்தமதத்தைப் பரப்பி அங்கே சிங்களவரோடு கலந்து தமிழர்களுக்கு எதிராக சிங்களவரைத் தூண்டியபடி இருந்தனர்.
வடவடுகர் ஏற்படுத்திய மோரிய பேரரசு வீழ்ந்ததும் தென்வடுகரான களப்பிர காட்டுமிராண்டிகள் தமிழர் மீது படையெடுத்து வென்றனர்.
(இதுவே இருண்டகாலம் என்று கூறப்படுகிறது)
களப்பிரர்க்கு அடங்கி சிற்றரசாக இருந்த பாண்டியர் கடுங்கோன் காலத்தில் கிளர்ச்சி செய்து வடுகர்களை தோற்கடித்து ஒழித்தனர்.
அதே நேரத்தில் வட இலங்கையில் இருந்து ஆண்ட பாண்டியர் மீது ஆண்டுகளாக பலமுறை போர்தொடுத்து போர்தொடுத்து இறுதியில் தாதுசேனன் என்ற மோரிய குடிவழி மன்னன் குறுக்கு வழியில் பாண்டிய மன்னர் இருவரைக் கொன்றதன் மூலம் தமிழர்களை 700 ஆண்டுகள் கழித்து ஈழத்தில் வீழ்த்தினான்.
ஆனாலும் சோழ அரசின் பேரெழுச்சி அனைவரையும் அடக்கி தமிழர் பேரரசாக எழுந்தது.
வடக்கே வடுகர்களை துவம்சம் செய்தது.
இலங்கையிலும் வடுகர்களை ஒழித்தது.
இராசராசனை எதிர்த்து தோல்வியடைந்த வடுகன் அம்மன்னனின் பிறந்தநாளில் விடுதலை அடைந்து அரசவையில் பாட்டுப்பாடி சோழ இளவரசியை பரிசாகப்பெற்று அவள் மூலம் பெற்ற மகனை (அநாபய சாளுக்கியன் அல்லது குலோத்துங்க சோழனை) சூழ்ச்சி மூலம் சோழ அரியணையில் அமர்த்தினான்.
கலப்பினமாயினர் சோழர்.
இலங்கையை சிங்களவர் மீண்டும் பிடித்தனர்.
பாண்டியநாடு தவிர தமிழ்மண் முழுதும் வடுகரால் ஆக்கிரமிக்கப்பட்டது.
அப்போது பாண்டிய பேரரசு மீண்டும் எழுந்தது.
வடுக படைத்தளபதியுடன் வந்த சேரனை முறியடித்து
அரைவடுகரான சோழரை அடக்கி
வடமேற்கு தமிழகத்தில் நுழைந்திருந்த வடுக ஒய்சளரை விரட்டியடித்து
பல்லவ வம்சாவழி காடவரையும் தெலுங்கு சோழரையும் ஒழித்து
ஈழத்தையும் மீட்டான் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்.
முழுமையாக தமிழ்மண் ஒற்றையாட்சியில் மீண்டும் வந்தது.
ஆனால் வாரிசுரிமைப் போர்களால் பாண்டிய அரசு வலுகுன்றியது.
இதைப் பயன்படுத்தி வடக்கே ஆண்ட துருக்கிய மங்கோலிய சுல்தான்கள் தமிழகத்தில் பாதியை வென்றனர்.
அவர்களுக்குள்ளேயே உட்கலகம் நடந்தபோது வடுகர்கள் மீண்டும் தமிழகத்தில் விஜயநகரப் பேரரசாக நுழைந்தனர்.
துருக்கியரை வென்று பாண்டியரை அடக்கி தமிழகத்தை மீண்டும் கைப்பற்றினர்.
கண்டி சிங்களவருக்கு பெண்கொடுத்து அவர்களை மேலும் கலப்பினமாக்கி மீண்டும் தமிழருக்கு எதிராகத் தூண்டினர்.
(அதாவது மோரியர் காலத்தில் செய்ததை அப்படியே மீண்டும் செய்தனர்)
ஆங்கிலேயர் இங்கே நுழைந்ததும் அவர்களுக்கு அடிபணிந்து சிற்றரசாகத் தொடர்ந்த வடுக நாயக்கர்கள் அவர்கள் அகன்றதும் அவர்கள் உருவாக்கித்தந்த திராவிடம் எனும் பெயரால் மீண்டும் தமிழகத்தை ஆளத்தொடங்கினர்.
ஈழத்தில் சிங்கள பௌத்தம் எனும் பெயரால் தமிழர்களை ஒழிக்கத் தொடங்கினர்.
1958 ல் ஈழத்தில் வன்முறை தொடங்கியது.
1956 ல் தமிழகத்தின் எல்லைப் பகுதிகள் விழுங்கப்பட்டன.
2009 ல் இனப்படுகொலை நடந்து இலங்கை முழுதும் விழுங்கப்பட்டுவிட்டது.
2015 ல் இங்கே மண்ணோடு சேர்த்து தமிழினத்தை அழிக்க அணுவுலை மீத்தேன் ஹைட்ரோகார்பன் என நாசகாரத் திட்டங்கள் வடுகரால் தலைமேல் சுமந்து அழைத்து வரப்பட்டு தமிழ்மண் மீது சுமத்தப்பட்டுள்ளன.
முதலில் சோழன் இளஞ்சேட்சென்னி தமிழர் கூட்டணி அமைத்து மோரியரை விரட்டினான்
அடுத்து கடுங்கோன் பாண்டியன் களப்பிரரை விரட்டியடித்தான்
(அதன்பிறகு சோழர் எழுந்தனர்)
அடுத்து சடையவர்மன் சுந்தரபாண்டியன் தமிழ் நிலத்தை மீட்டான்
தற்போது மீண்டும் வடுகம் ஹிந்தியரின் உதவியோடு தமிழர் மண்ணை சுற்றிவளைத்துள்ளது. விரைவில் வீழ்த்தவுள்ளது
இப்போது அதை முறியடிக்கப்போகும் தமிழர் தலைவன் யார்?
Tuesday 11 July 2017
வடுகரின் அறிவிக்கப்படாத போர்
Subscribe to:
Post Comments (Atom)
கோசர்கள் அனைவரையும் தங்கள் இந்த கட்டுரையில் தமிழர் அல்லாதவர் என குறித்துள்ளார் இந்த தகவல் மறுப்புக்கு உரியது ஆகும். மேலும் தலையாலங்கானத்து பாண்டியனின் சார்பாக போரிட்ட கோசர்கள் நன்னனை கொன்று அழித்துள்ளனர்.அவர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் அல்ல தமிழ் நாட்டின் பூர்வ குடிகள் என்று பெரிய பெரிய ஆராய்ச்சியாளர்களும் உறுதி செய்துள்ளனர் இதை நண்பருக்கு தாழ்மையுடன் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
ReplyDeleteதூய தமிழர்களை சாதி கொண்டு எழுப்புவார் சாதியால் தமிழன் 👉 சீமான் (சான்றோர்_சாணார்_நாடார்)
ReplyDeleteகோசர் , குய் / கோண்டு , குசன் பண்டைய காலங்களில் தமிழ் பேசிய தமிழர்களே ; பிற்காலத்தில்தான் பிற இனம் , மொழி , மதமாக ஆகி போனார்கள். இப்போது தமிழுக்கு தமிழர்கு எதிர்ப்பாக இருக்கிராரக்ள.
ReplyDelete