கதிராமங்கலம், நெடுவாசல், தஞ்சாவூர் போராட்டங்கள்
ஏன் பெரும்போராட்டமாக பரவ முடியவில்லை என்றால்,
அதற்கு முக்கிய காரணம் கல்லூரிகளில் தேர்வு நடந்ததும் தற்போது விடுமுறை நடப்பதும்தான்.
கதிராமங்கலம் அருகாமையில் உள்ள கல்லூரி மாணவர்கள் எப்படியும் வாட்சப் குழு வைத்திருப்பீர்கள்.
அதாவது மயிலாடுதுறை, கும்பகோணம் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள்
கல்லூரியைத் தவிர வேறொரு இடத்தில் ஒன்றுகூடி மாநில நெடுஞ்சாலையை சில மணிநேரமேனும் மறித்து போராட்டம் ஒன்று நடத்தி
அதில் பிற தமிழக இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்து முழக்கமிட்டு
அதை வீடியோ எடுத்து சமூக வலைகளில் போடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கும்பகோணத்தில் இருக்கும் அரசு ஆண்கள் கல்லூரி, அரசு மகளிர் கல்லூரி, அரசு கலைக் கல்லூரி
மயிலாடுதுறையில் இருக்கும் டிஜி அரசு கல்லூரி, தர்மபுரம் ஆதீனம் கல்லூரி போன்ற கல்லூரி மாணவர்கள் இதைச் செய்யலாம்
கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் படிக்கும் கதிராமங்கலத்தைச் சேர்ந்த மாணவர்கள் மேற்கண்ட கல்லூரிகளை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
பாதிக்கப்படுவது கதிராமங்கலம் மட்டுமில்லை அதைச் சுற்றி இருக்கும் வீடுகளும் கல்லூரிகளும் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும்தான்.
அரசியல்வாதிகளை நம்பாமல் மண்ணையும் மக்களையும் நேசிக்கும் மாணவர்கள் பேதங்களைக் கடந்து களத்தில் இறங்குமாறு கோரப்படுகிறார்கள்.
நன்றி
(முடிந்த அளவு பரப்புங்கள்)
No comments:
Post a Comment