நான்.
2012, 2013களில் முகநூல் தமிழ்தேசியவாதிகள் எத்தனைபேர் தெரியுமா?
வெறும் 5,6 பேர்.
அவர்களும் கத்துக்குட்டிகள்.
அன்று 30,35 வயது இளைஞர்கள் ம.தி.மு.க வில் இருந்தனர்.
இணையம் முழுக்க அவர்களே நிரம்பிக் கிடந்தனர்.
அன்று அந்த 5,6 தமிழ்தேசியர்கள் இல்லையென்றால் ஈழ ஆதரவை மொத்தமாக வாரிச்சுருட்டி ம.தி.மு.க மூன்றாவது கட்சியாக வளர்ந்திருக்கும்.
இது நடக்காமல் தடுத்தவர் சீமான் என்று பலரும் நினைப்பார்கள்.
அதுதான் இல்லை.
சீமான் அண்ணன் அப்போது இயக்கம்தான் ஆரம்பித்தார்.
அவருக்கு வந்தேறிகளை அடையாளம் தெரிந்திருக்கவில்லை.
தமிழ்பேசும் தமிழரல்லார்தான் அனைத்திற்கும் காரணம் என்ற விழிப்புணர்வை முதன்முதலில் முகநூலில் பரப்புரை செய்தவர் "தமிழறிவன் தே" என்பவர் ஆவார்.
அவர்தான் எனக்கு வழிகாட்டி.
பார்ப்பனர் தமிழரே என்பதையும்
இந்தியா நமக்கான நாடு கிடையாது, தமிழருக்கு தனிநாடு வேண்டும் என்பதையும்
ஈ.வே.ராவின் உண்மையான முகத்தையும்
தமிழ்பேசுவோர் அனைவரும் தமிழர் அல்லர் என்பதையும்
தமிழகத்தை ஆண்ட,ஆள்கிற அத்தனை பேரும் தமிழர் அல்லாதார் என்பதையும்
தமிழ் என்பது பிறப்புவழி இன அடையாளம் ஆதலால் உலகம் முழுவதும் தமிழை மறந்த தமிழினத்தவரும் நம்மினமே என்பதையும்
பார்ப்பனர் தமிழரே என்பதையும்
தமிழ்த்தாய் வாழ்த்தை வந்தேறிகள் தம் வசதிக்கேற்றவாறு திருத்தியுள்ளனர் என்பதையும்
திராவிடம் என்பதே வந்தேறிகளின் கூடாரம் என்பதையும்
எனக்கு காட்டியவர் அவர்தான்.
ஆனால் அவர் சைவப்பற்று கொண்டவராகவும் இசுலாமிய கிறித்துவ தமிழர்களை வெறுப்பவர்களாகவும் இருந்தார்.
2013களில் தமிழறிவன் போய்விட்டார்.
அந்த காலகட்டம் பேசியில் தமிழ் எழுத்துகூட தெரியாத காலகட்டம்.
தமிழ்தேசியவாதிகளுக்கு அரசியல் அறிவோ
புள்ளிவிபரங்களோ வரலாறோ
எதுவுமே தெரியாது.
திராவிடவாதிகள் (அதிலும் குறிப்பாக மதிமுகவினரில் "வால்டேர் வில்லியம்ஸ்" "ஹரி ஹரன்" போன்றோர் ) தமிழ்தேசியவாதிகளை ஈவு இரக்கமே இல்லாமல் கூட்டம் கூட்டமாக வந்து விவாதத்தில் தோற்கடிப்பார்கள்.
பதில் அளிக்க தெரியாத தமிழ்தேசியர்கள் ஏடாகூடமாக பதில் சொல்ல அது குடுமிப்பிடி சண்டையில் போய் முடியும்.
அதாவது இன்று திராவிடவாதிகள் எவ்வளவு பரிதாப நிலையில் இருக்கிறார்களோ
அதைவிட மோசமான நிலையில் தமிழ்தேசியவாதிகள் இருந்தோம்.
ஈழத் தமிழர்களுக்கோ வைகோவை எதிர்க்க மனமில்லை.
அன்று மதிமுகவை விட இணையம் அதிகம் பயன்படுத்திவந்தோர் ஈழத்தமிழர்களே.
அவர்கள் சமாதானம் செய்யத்தான் முயற்சித்தார்கள்.
அவர்கள் எதிர்பார்ப்பெல்லாம் 8கோடி தமிழர்கள் 100கோடி இந்தியரின் ஆதரவை பெற்று ஈழம் அமைய வழிசெய்யவேண்டும் என்பதுதான்.
இதற்கு ஏற்றாற்போல "ஸ்ரீனிவாஸ் திவாரி" போன்றவர்கள் இந்தியா ஈழம்பெற்றுத் தரும் என்று வலம்வந்தனர்.
பிறகு விரக்தி அடைந்து ஈழத்தமிழர்கள் 2012 வாக்கில் முகநூலில் இருந்தே ஒதுங்கிக் கொண்டார்கள்.
ஆக அன்று எங்களிடம் தெளிவு இல்லை.
தரவுகள் இல்லை.
ஈழத்தமிழர் ஆதரவு இல்லை.
ஒரு பதிவு போட்டால் நூறு எதிர்பதிவுகளைச் சந்திக்கவேண்டி இருந்தது.
வழிகாட்ட யாருமில்லை.
ஆனாலும் ஒரு வெறி.
நாங்கள் தொடர்ந்து இயங்கினோம்.
பிறகு நாங்கள் 2,3 பேர்தான் இருந்தோம்.
2014ல் அவர்களும் காணாமல் போய் நான் மட்டும்தான் இன்றுவரை தொடர்ந்து இயங்கிவருகிறேன்.
(காணாமல் போன தமிழ்தேசியர்களில் "மாணிக்கவாசகம்" அண்ணன் மீண்டும் தற்போது திரும்பியுள்ளார்)
2014க்குப் பிறகுதான் திறன்பேசிகளின் வரவால் பல சராசரி இளைஞர்களுக்கும் முகநூல் மூலமாகப்
படிப்படியாக விழிப்புணர்வு பரவியது.
2014ன் முடிவில் சிங்கள தலைவர்களே வடுக தெலுங்கர்கள்தான் என்ற அதிர்ச்சிகரமான உண்மையை "இசைப்பிரியா தம்பி" என்பவர் ஆராய்ந்து வெளியிட்டார்.
அதன்பிறகுதான் வடுக வந்தேறிகளின் உண்மையான முகம் பலருக்கும் தெரிந்தது.
(ஆனாலும் பெரும்பான்மையான ஈழத்தமிழர்கள் இன்னமும் திருந்தவில்லை)
திராவிட எதிர்ப்பாளர்கள், தமிழ் மொழிப்பற்றாளர்கள், இந்துத்துவவாதிகள், சாதியவாதிகள் என பலரும் திராவிடத்திற்கு எதிராக முகநூலில் களம் இறங்கினர்.
இன்று முகநூல் முழுவதும் திராவிடம் மண்ணைக் கவ்விக்கொண்டு இருக்கிறது. தமிழ்தேசியம் கொடிகட்டிப் பறக்கிறது.
இதற்கெல்லாம் காரணம் அன்று திராவிடத்தோடு இறுதிவரை மல்லுகட்டிய கத்துக்குட்டிகள்தான்.
அந்த ஆரம்பகால போராளிகளில்
தமிழறிவன் தே
மதிமுகிலன் தமிழ்வேங்கை
கிருஷ்ணா தமிழ்டைகர்
அகழ்வான் கணேசன்
சாரதாதேவி சத்தியமூர்த்தி
ஆகியோரே என் நினைவுக்கு வருகின்றனர்.
ஆனாலும் தமிழ்தேசியம் ஒரு பலமான இயக்கமாக, ஒரு வலுவான கட்சியாக இன்னும் வளரவில்லை என்பது கவலையளிக்கிறது.
தமிழ்தேசியம் தனக்கென ஒரு ஊடகம் இல்லாவிட்டாலும் ஒரு சமூக வலையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு இன்று தமிழ் இளைஞர்கள் மனதில் வேரூன்றி வருகிறது.
இதற்கு நான் ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளேன் என்பதே எனக்கு மனநிறைவாக உள்ளது.
தாய்நிலத்திலிருந்து பலநூறு கிலோமீட்டர் தொலைவில் ஒரு திறன்பேசியையும் 2ஜி இணையத்தையும் வைத்துக்கொண்டு என்னால் முடிந்தது இவ்வளவுதான்.
ஆனாலும் செய்யவேண்டிய பணிகள் இன்னும் நிறைய உள்ளன.
அன்று 'இந்தியா என் தாய்நாடு' என்று பிதற்றிக்கொண்டு aathi1947 என்று முகநூல் ஆரம்பித்த நான் இன்று எவ்வளவு தெளிந்துவிட்டேன் என்பது எனக்கே வியப்பாக உள்ளது.
2013லிருந்து பதிவுபோட தொடங்கிய நான் தமிழ்தேசியத்திற்கு தேவையான அத்தனை தகவல்களையும் திட்டங்களையும் பதிவு போட்டுவிட்டதாகவே உணர்கிறேன்.
அதற்காக முகநூலிலிருந்து போய்விடமாட்டேன்.
தொடர்ந்து இயங்குவேன்.
Friday, 7 October 2016
நான்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment