ஈழத்தில் ஒரு வடுகர்
----------------------------------
ஈழத்தில் சிங்களவர் இசுலாமியத்தமிழர் மீது நடத்திய (1915) கலவரத்தின் போது கைதுசெய்யப்பட்ட சிங்களவரை
(முதல் உலகப் போர் நடந்துகொண்டிருந்தபோதே)
இங்கிலாந்து வரை சென்று வாதாடி விடுதலை செய்தவர் சர்.பொன்னம்பலம் இராமநாதன்.
இதில் விடுதலை ஆனவர்தான் 'சிங்களவரின் தந்தை' என்றழைக்கப்படும் டி.எஸ்.சேனநாயக.
இவ்வெற்றிக்குப் பிறகு நாடு திரும்பிய இவரை குதிரைவண்டியில் உட்காரவைத்து சிங்களவரே குதிரைகளாக அவ்வண்டியை ஊர்வலமாக இழுத்துவந்தனர்.
இதன் மூலம் இசுலாமியத்தமிழர் இசுலாமியரல்லாத தமிழரை வெறுக்கும் சூழலுக்கு அடித்தளமிட்டவர் இவரே.
அதிர்ச்சியான விடயம் என்னவெனில் இவர் ஒரு பொட்டுகட்டித் தெலுங்கர் என்பதுதான்.
ஈழத்தில் வெள்ளாள முதலியார் அனைவரும் தெலுங்கு தேவதாசி மரபினர்.
அதாவது வெள்ளாளர் வேறு வெள்ளாளமுதலிகள் வேறு.
தமிழர் பிரதிநிதியாகத் தன்னைக் காட்டிக்கொண்டே தியோஸோபிஸிகல் சொசைட்டி மூலம் பள்ளிகளில் புத்தமதக் கல்வியை வலியுறுத்தியவர் இவரே.
வேசாக் எனும் புத்த பண்டிகைக்கு விடுமுறை கிடைக்கச் செய்தவரும் இவரே.
ஆங்கில அடிவருடியும் கூட.
பேரரசி விக்டோரியா கையால் தங்கப்பதக்கமும் வாங்கியுள்ளார்.
பேரரசர் ஐந்தாம் ஜார்ஜ் பிறந்தநாளின் போது அவர் கையாலும் விருது வாங்கியுள்ளார்.
ஆங்கில விளையாட்டான கிரிக்கெட்டை இலங்கை முழுவதும் வளர்த்தவர் இவரே.
இவர் யாழ்ப்பாணத்தில் நிறுவிய கல்லூரிதான் பல்கலைக்கழகமாக உருப்பெற்றது.
ஈழத்துத் தமிழர் தலைவராகக் கருதப்படும் இவரின் உண்மை அடையாளம் முதலியார் என்ற பட்டத்தில் மறைக்கப்பட்டுள்ளது.
டி.எஸ்.சேனநாயக கூட ஆங்கிலேயரால் முதலியார் பட்டம் பெற்றவர் ஆவார்.
Tuesday 29 March 2016
ஈழத்தில் ஒரு வடுகர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment