பாம்பு நிலவை விழுங்குமோ?
நேற்று நான் இட்ட விந்தணு அண்டத்துடன் சேரும் சென்னிமலை கோவில் சிற்பத்தை சிலர் பாம்பு நிலவினை விழுங்கும் காட்சி என்கின்றனர்.
அதற்காக அவர்கள் காட்டும் சான்று
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று
(குறள் 1146)
அதாவது காதலி கூறுகிறாள்
தன் காதலனை அவள் ஒருநாள்தான் சந்தித்தாளாம்,
ஆனால் அதை நிலவை விழுங்கிய பாம்பு போல அது பரவி ஊரே புறம் பேசுகிறாம்.
இதற்கு உரை எழுதிய அனைவரும் சற்றும் சிந்திக்காமல் இதுபோலவே எழுதியுள்ளனர்.
பாம்பு நிலவை விழுங்கும்?
வள்ளுவர் என்ன அவ்வளவு முட்டாளா?
இங்கே அரவு என்பது மேகத்தைக் குறிக்கிறது.
அரவு நுங்கு மதியின் நுதல் ஒளி
(அகநானூறு 134)
மழைதரும் கருமேகங்கள் சூழ்ந்ததால் நிலவின் ஒளி மங்கியது போல
அழுகையை வரவைக்கும் சோகத்தால் கண்களின் ஒளி மறைந்ததாம்.
இதே போல 'பாம்பு' என்பதும் மேகத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு உள்ளது
பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி
(நற்றிணை 128)
வெள்ளை நிற எருதை அடக்கும் கரிய நிற வீரனை வருணிக்கும் கலித்தொகை (135) 'அரவின்வாய்க் கோட்பட்டுப் போதரும் பால்மதியும்' என்கிறது.
நிலாவை மேகம் மறைக்கும் காட்சியை பல இடங்களில் உவமையாகப் பயன்படுத்தியுள்ளனர் சங்கத் தமிழர்.
அரவு நுங்கு மதியின்
(அகநானூறு 115)
பாம்பு சேர் மதி போல
(கலித்தொகை 15)
பெயல் சேர் மதி போல
(கலித்தொகை 115)
திங்கள் அரவு உறின்
(கலித்தொகை 140)
அரவு நுங்கு மதியுனுக்கு
(குறுந்தொகை 395)
அரவு செறி உவவு மதியென
(பரிபாடல் 10)
பாம்பு ஒல்லை மதியம் மறைய
(பரிபாடல் 11)
மதிசேர் அரவின் மானத் தோன்றும்
(சிறுபாணாற்றுப்படை 185)
நாகம் என்பது மேகத்திற்கு பயன்பட்டுள்ளது
நீடுநாக மூடுமேக மோட
(கம்பராமாயணம் கலன்காண்.37)
எம்மை நாக மேலிருத்து
(கந்த புராணம் திருவிளை. 99)
மேகமும் பாம்பைப் போல ஊர்ந்து செல்லும்
பாம்பு நாக்கைப் போல மின்னை வெளியிடும்
இதை தவறாகப் புரிந்துகொண்ட எவனோ பாம்புதான் நிலாவை விழுங்குகிறது என்று தமிழனே கூறிவிட்டான் அது உண்மையாகத்தான் இருக்கும் என்று நம்பி
பாம்பு நிலாவை விழுங்குவதால் சந்திர கிரகணம் வருகிறது என்று புராணம் எழுதி
ராகு கேது போன்றவற்றை படைத்து அதை வைத்தே ஜாதகமும் எழுதிவிட்டான்.
நன்றி: திங்களைப் பாம்பு கொண்டற்று
_பொன்.சரவணன் thiruttham. blogspot
Tuesday 9 February 2016
பாம்பு நிலவை விழுங்குமோ?
Subscribe to:
Post Comments (Atom)
அண்ணா. இந்த காணோளியை பாருங்கள். நிலவுக்கு வேறொரு பரிமானம் தந்துள்ளனர்.
ReplyDeletehttps://www.youtube.com/watch?v=SNVa5OqkQnw