Wednesday 17 February 2016

ஒரு வந்தேறி(?) அளிக்கும் வாக்குமூலம்

ஒரு வந்தேறி(?) அளிக்கும் வாக்குமூலம்

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
என் தமிழ் உறவுகளே,
உங்களுக்கு இந்த தமிழ்மண்ணில் பிறந்துவளர்ந்த ஒரு "வந்தேறி"யின் வணக்கம்.

எங்கள் முன்னோர்கள் எப்போதோ நான்கைந்து தலைமுறைகளுக்கு முன் இந்த வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டிற்கு வந்தார்களாம்.

இன்று எங்களுக்கு தமிழையும் தமிழ்நாட்டையும் தவிர எதுவும் தெரியாது.
தமிழ்தான் எழுதப் படிக்கத் தெரியும்.
தற்கால தலைமுறையினர் தங்களுக்குள் தமிழில்தான் பேசிக்கொள்கின்றனர்.

நாங்கள் பணக்காரர்களும் இல்லை.
தமிழர்கள் கவலைப்படும் அளவுக்குப் பெரும்பான்மையும் இல்லை.

நாங்கள் 50,100 ஆண்டுகளுக்கு முன்பு வந்த மக்களைப் போல தாய்நிலத்துடன் தொடர்புடையோர் கிடையாது.
இங்கேயிருந்து விரட்டப்பட்டால் எங்களுக்கு வேறு கதியும் இல்லை.

வீட்டிற்குள் நாங்கள் பேசும் மொழி அதன் அசல் வடிவத்துடன் ஒத்துப்போவதில்லை.
எங்கள் தாய்மொழி நிகழ்ச்சிகளை தொலைகாட்சிகளில் எப்போதாவது பார்ப்போம்.
அது ஓரளவு புரியும்.

தமிழகத்தில் எங்களுக்கு எதிராக எதாவது பிரச்சனை என்றால் எங்கள் பூர்வீக மாநிலத்தார் எங்களுக்காகக் குரல் கொடுக்கவும் மாட்டார்கள்.
அவர்கள் எங்களைத் தமது இனமாக எண்ணுவதும் இல்லை.

மற்ற மாநிலங்கள் தமிழர்களைக் கொடுமை செய்தபோதும் எம் தமிழ்ச் சொந்தங்கள் எங்களை எதிரியாகப் பார்த்ததே இல்லை.

நாங்களும் தமிழ் உணர்வுடன்தான் வாழ்கிறோம்.
நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ நாங்கள் தமிழ்ப் பற்றுடன்தான் வாழ்கிறோம்.
எங்கள் சாதியிலேகூட தமிழ் எழுத்தாளர்களும் தமிழுக்காகப் போராடியவர்களும் உண்டு.
வெளிமாநிலத்தில் வேலை செய்யும் என் உறவினர்கள் தமிழர்களுடன்தான் சேர்கிறார்களே ஒழிய எங்கள் பூர்வீக மாநிலத்தாருடன் சேர்வதில்லை.
எப்படி சேர்வார்கள்?
எங்கள் தாய்மொழி அதன் அசல் வடிவத்துடன் ஒத்துப்போவதில்லை.
அவர்கள் பண்பாடு கலாச்சாரம் நாட்டுநடப்பு என எதுவும் எங்களுக்கு தெரியாது.

இன்று இளைய தலைமுறையினர் நிறைய மாறிவிட்டனர்.
திராவிடம் என்ற பெயரில் வந்தேறிகள் சுரண்டுவதாக முகநூலில் பல்வேறு ஆதாரங்களுடன் பதிவிடுகிறார்கள்.

நன்கு ஆராய்ந்து பார்த்ததில் அது உண்மை என்று தெரிகிறது.
எங்கள் மக்கள் அப்பாவிகள்.
அவர்கள் திராவிட கட்சிகளை ஆதரிப்பது சாதிப்பாசத்தால்தான்.
தமிழகத்தில் வேற்றினத்தார் ஆதிக்கம் கொடிகட்டிப் பறப்பது உண்மைதான்.
ஆனால் அது மக்களில் சில கொள்ளைக்காரர்கள் செழிக்க வழிசெய்துள்ளதே தவிர வேற்றின மக்களுக்கு சிறிதளவுதான் பயன்பட்டுள்ளது.

பல தலைவர்கள் பிறப்பால் வேற்றினத்தவர் என்பதே எனக்கும் தற்போதுதான் தெரிகிறது.
தமிழரல்லாதோர் தன் சொந்த அடையாளத்தை வெளியே சொல்லாமல் திராவிடம் என்ற பெயரில் தமிழர்களை ஏமாற்றி வந்துள்ளனர்.

திராவிடம் சரியான பாதையில் சென்றிருந்தால் இது தலைகீழாக நடந்திருக்கவேண்டும்.
திராவிடம் என்பது தென்னிந்திய இனங்கள் தமிழ்வழி வந்தவை என்ற பார்வையுடன் முழு தென்னிந்தியாவையும் இணைத்து அதில் தமிழின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கச் செய்திருக்கவேண்டும்.

ஆனால் திராவிடம் தமிழர்களை ஏமாற்றி தமிழரல்லாதார் பிழைப்பதற்குள் பிற மாநிலங்கள் தமிழகத்தை மதிக்காமல் திமிருடன் நடப்பதற்குமே வழிசெய்கிறது.

நான் திராவிடவாதி போல 'இது இந்தியா இங்கே எல்லாருக்கும் ஆள உரிமை உண்டு' என்று மழுப்பமாட்டேன்.

மற்ற மாநிலங்களில் அந்த அந்த மாநில மக்கள் ஆள்வதைப் போல இங்கே ஒரு தமிழர் ஆள்வது மட்டும் போதாது.
எனக்கு மிகவும் பிடித்த தானைத்தலைவர் பிரபாகரன் வழியில் போராடி தனித் தமிழ்நாடு அடையவும் வேண்டும்.

இதற்கு தமிழ்நாட்டின் உப்பைத் தின்ற நாங்கள் தோளோடு தோள்கொடுப்போம்.

இதன்மூலம் நாங்கள் தமிழர்கள் என்று ஆகமுடியாவிட்டாலும் தமிழர்நாட்டின் குடிமக்களாக ஆகமுடியும்.

ஆக இன்றிலிருந்து நான் திராவிடத்தையும் அதன் பின்னால் என் போன்றோரை கேடயமாக்கிக்கொண்டு ஒழிந்திருக்கும் தமிழின துரோகிகளையும் எதிர்க்கிறேன்.

பிறப்பால் ஒரு தமிழர் ஆளவேண்டும்.
அதுவும் முப்படையுடன் எவருக்கும் அடிபணியாத தனிநாடாக ஆளவேண்டும்.
மற்ற இனத்தார் எத்தனை சதவீதம் இங்கே வாழ்கிறார்களோ அதற்குத் தகுந்த அதிகாரப் பங்கீடு தந்தால் போதும்.
அதுதான் நியாயம்.
அதுதான் உலக நடைமுறை.
இதுவரை எங்களை அரவணைத்து வாழும் எம் தமிழ்ச் சொந்தங்கள் தங்கள் இனவழிச் சிறுபான்மையினரை சிறப்புடன் பேணுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

தமிழர் விடுதலைக்கும் தன்னாட்சிக்கு குறுக்கீடாக இருப்போர் அவர் வேற்றினத்தார் ஆனாலும்  தமிழராயிருந்தாலும் தமிழ்மண்ணில் வாழ உரிமை இல்லை.

எங்கள் முன்னோர்கள் செய்த பிழைகளை நீங்கள் மறந்துவிடுங்கள்.
எங்களை உங்கள் உடன்பிறந்தோராக ஏற்காவிட்டாலும் தோழர்களாக ஏற்றுக்கொள்ளுங்கள்.
இனி எங்களை வந்தேறிகள் என்றழைக்காதீர்கள்.
தமிழ்நாட்டவர் என்றழையுங்கள்.

நம் நாட்டிற்காக நாங்களும் போராடுவோம்.
ஒருவேளை எங்கள் பூர்வீக மாநிலம் தமிழர்களுக்கு கொடுமை செய்தால் அதன்மீது போர்தொடுங்கள்.
அதற்கு எங்களை அனுப்புங்கள்.
தமிழ்நாட்டின் சார்பில் நாங்கள் போய் அவர்கள் கொட்டத்தை அடக்குவோம்.
அவர்கள் எங்களைத் துரோகி என்று கூறினாலும் சரி.

அவர்கள் தண்ணீரை மறிக்கும்போது எங்களையும் சேர்த்துதானே அது பாதித்தது.

தமிழில் இருந்து பிரிந்து 500, 600 முன்பு தோன்றிய தென்னிந்திய மொழிகளை பேசுவோர் தாய் இனமான தமிழினத்திற்கு கேடு செய்ததுதான் துரோகம்.
நாங்கள் பிறந்து வளர்ந்த தமிழ் மண்ணிற்காகப் போராடுவது எப்படி துரோகம் ஆகும்?

எனவே இனியும் துரோகியாக நான் இருக்கப்போவதில்லை.

தாய்மொழி வேறான என் போன்ற தமிழ்நாட்டு குடிமக்களே!

உங்களில் ஒருவன் உங்களுக்கு அறைகூவல் விடுக்கிறேன்.
இனி நாம் தமிழர்களுடன் இணக்கமாகப் போவதே நல்லது!

அதுதான் நியாயமும் கூட.

நாம் தமிழ்நாட்டார்!

திராவிடம் ஒழிக!

தமிழ்த் தேசியம் ஓங்குக!

__________________________

? ? ? ? ? ? ? ! ! ! ! ! ! ! ! ! !

இப்படி யாரவது பதிவு போடுவார்கள் என்று நானும் எதிர்பார்க்கிறேன் யாரும் போடுவதில்லை.

தமிழ்தேசியம் கையோங்கட்டும்
வேறு வழி இல்லை என்ற நிலையில் இப்படியான பதிவுகள் வருகிறதா இல்லையா பாருங்கள்.

No comments:

Post a Comment