Friday, 1 November 2024

இன உரிமைக்காக மத்திய அரசை கண்டித்த தேவர்

இன உரிமைக்காக மத்திய அரசை கண்டித்த தேவர்

 உடைத்து சொல்லவேண்டும் என்றால் சில ஆண்டுகள் முன்பு வரை தேவர் ஜெயந்தி என்ற பெயரில் ஒரு ரசிக கூட்டம் நடிகர் கார்த்திக் ஜெயந்தி தான் கொண்டாடி வந்தனர்.
 கொண்டாடினர் என்றால் பிற சமூக மக்களின் எரிச்சலைக் கிளப்பும் வகையில் அடாவடி செய்து வந்தனர்.
 இதனால் தேவர் என்பவரே சாதித் தலைவர் என்றும் அவர் உருவாக்கிய கூட்டம்தான் இது என்றும் பொதுமக்கள் எண்ணி வந்தனர்.
 தேவர் எத்தனை பெரிய மனிதர் என்று அப்போது யாருக்குமே தெரியவில்லை
 2009 க்கு பிறகு தமிழ்தேசியம் எழுச்சி பெற்ற பிறகு தற்போது நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது!
 பிற சமூக இளைஞர்கள் மத்தியில் தேவர் மீதான தவறான பார்வையும் மாறிவிட்டது!
 முக்குல இளைஞர்கள் மத்தியிலும் சக குடிகள் மீதான சரியான புரிதல் ஏற்பட்டுள்ளது.
 இருந்தாலும் இப்போதும் அரிவாளைத் தூக்கும் பள்ளி மாணவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
 காரணம் திராவிடம்!
திராவிடத்தை புட்டத்தில் மிதித்து சவக்குழியில் தள்ளிவிட்டால் அது உருவாக்கி வைத்துள்ள சாதியவாதமும் மது வெறியும் உடன்கட்டை ஏறிவிடும்!
 எல்லா முரண்களும் தீர்ந்துவிடும்!
 சாதி ஒழிப்பு என்கிற பம்மாத்து மறைந்து சாதிய சமத்துவமும் தமிழ்க் குடிகள் ஒற்றுமையும் ஓங்கும்!
 பூலித்தேவர் போல தமிழர்நாட்டு அதிகாரத்தை மீட்கவும் தமிழினம் தலைப்படும்!
 அதைப் பார்த்து எல்லா இனங்களும் தத்தமது உரிமைகளை மீட்டு  தற்போதைய பிரிட்டிஷ் மாடல் இந்தியா மறைந்து தேசிய இனங்கள் அதிகாரப்பகிர்வு பெற்று நேதாஜி வழி இந்தியா கூட அமைய வாய்ப்புள்ளது!
 
 தேவரே கூட பிரிட்டிஷ் வழி நேரு அரசாங்கத்தை மாநில உரிமைகளை வலியுறுத்தி கண்டித்துள்ளார்.

 "தமிழரசு காணவும், தமிழகத்தின் எல்லைகளை மீட்கவும் தமிழை அரசு மொழியாக்கவும் சரியான நேரத்தில் தமிழ் அரசு கழகம் முன் வந்திருக்கிறது.
தமிழ்நாடு - தமிழுக்கும் தமிழ்ப் பண்புக்கும் முரண்பட்ட முறையில் ஆங்கிலேய ஆட்சி காலத்திலிருந்தே அலைக்கழிக்கப்பட்டு வருகிறது.
அந்த அலைக்கழிவு, முடிவில் ‘தமிழ் மாகாணம்’ என்று கூட சொல்ல இயலாது ‘எஞ்சிய சென்னை’ என்பதன் முறையிலேயே இழிவான முறையில் தமிழ் மாகாணத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.
 சரித்திர சான்றான திருப்பதியையும் இழந்து நிற்கிறது.
இந்நிலையில், சென்னையை ஒட்டி, ஜனத் தொகையிலும் சர்வமுறையிலும் தமிழ்நாட்டிற்குப் பாத்தியப்பட்ட சித்தூரையும், திருத்தணி போன்ற தேவாலயத்தையும் இழந்து நிற்கிறது.
இதற்கென ஒரு போராட்டம் எழுந்த பின்னரும் காங்கிரஸ் மந்திரிசபை ஆங்கிலேய முறையை பின்பற்றி அடக்குமுறையால் கையாள நினைக்கிறதே தவிர அறிவு வந்ததாக தெரியவில்லை.
எனினும், இந்த வடக்கெல்லைப் போராட்டம் நீடிக்குமானால் இதில் மந்திரிசபை வழக்கம்போல அசட்டுத்தனத்தைக் கையாளுமானால் விபரீத விளைவுகளை எதிர்பார்க்க நேரும்.
அது பல பொட்டி ஸ்ரீராமுலுகளை தமிழ்நாட்டில் தயாரிக்கும் என்று எச்சரித்து தமிழ் எல்லைப் போராட்டத்திற்கு ஆசிகூறுகிறேன்"
- முத்துராமலிங்கத் தேவர்
 7.6.1956 அன்று கன்னியாகுமரி யில் ம.பொ.சி ஏற்பாடு செய்த  கூட்டத்தில் பேசியது
(01.04.2016 அன்று இட்ட "திருத்தணியைத் தமிழகம் மீட்ட வரலாறு" பதிவிலிருந்து)
.
 இதேபோல மூக்கையாத் தேவர் கச்சத்தீவு பறிக்கப்பட்டபோது குரல் கொடுத்தார் என்பதையும் இங்கே குறிப்பட வேண்டும்

 நாம் இனமாகத் தொடர்ந்து முன்னேறுவோம்!
தேசிய இனங்களுக்கு உரிய உரிமைகள் அல்லது பிரிவினை என்கிற நேதாஜி வழி நடப்போம்!
தேவர் நம்மோடு இருப்பார்! 


 
 
 

No comments:

Post a Comment