அண்ணாதுரை பேசியது தமிழ்தேசியம்
தி.மு.க தமிழ்தேசியம் பேசித்தான் ஆட்சிக்கு வந்தது!
அண்ணாதுரை தனிக் கட்சி தொடங்கியதும் தமிழ்தேசிய கூறுகளை மட்டும் வைத்துக் கொண்டு திராவிட கூறுகளை கை கழுவி விட்டார்.
திராவிடம் என்ற பெயரில் தமிழ்த் தேசியம் தான் பேசினார்!
1949 இல் தி.க விலிருந்து பிரிந்து தனிக் கட்சி ஆரம்பித்தபோது அன்று ஈவேரா கூறிவந்த மக்களுக்கு ஒவ்வாமல் இருந்த வரட்டு நாத்திகம், கண்மூடித்தனமான பார்ப்பன வெறுப்பு ஆகியவற்றைக் கைவிட்டார்!
தனித்தமிழ்நாடு, இந்தி எதிர்ப்பு, தமிழ்ப் பற்று, மதுவிலக்கு ஆகியவற்றை முதன்மைக் கொள்கைகளாகக் கைக்கொண்டார்!
1957 இல் முதல் தேர்தலிலேயே காமராசர், இராஜாஜி, ஈவேரா என்ற மூன்று பெரும் ஆளுமைகளைத் தாண்டி 14% வாக்கு பெற்றார்.
அவர் பேசிய தமிழ்தேசியமும் அவர் முன்வைத்த தனித்தமிழ்நாடு கொள்கையும் தான் அவரை 1962 இல் 27% வாக்குபெற்று எதிர்க்கட்சியாக உயர்த்தியது (அப்போது அண்ணாதுரை நின்ற சொந்த தொகுதியான காஞ்சிபுரம் தொகுதியில் தோற்றுவிட்டார். இதிலிருந்தே அவர் தனிப்பட்ட செல்வாக்கு இல்லாதவர் என்பதை அறியலாம்).
1967 இல் 77% வாகுகள் பெற்றபோது அவரது முதன்மை வாக்குறுதிகளில் 'தமிழ்நாடு' பெயர்மாற்றம் ஒன்றாகும்!
தான் தெலுங்கர் என்றாலும் தனக்குப் பிறகு அரசியல் வாரிசாக நெடுஞ்செழியன் என்ற தமிழரைத் தான் முன்னிறுத்தினார்.
அண்ணாதுரை வென்றதற்கு காரணம் தமிழர்களிடம் எப்போதுமே இருக்கும் 'இந்திய எதிர்ப்பு' மனநிலை மற்றும் 'தனிநாடு' அடையும் வேட்கை!
வெற்றிக்காக மேலும் சில சமசரங்கள் செய்தார் என்பதும் வென்றபிறகு கொள்கைகளை எல்லாம் கைவிட்டார் என்பதும் உண்மை!
அண்ணாவின் மறைவிற்குப் பிறகு தி.மு.க நெடுஞ்செழியன் கைக்கு வந்தது!
ஆனால் அவரை சதி செய்து வீழ்த்தி தமிழரல்லாதவர் கட்சியை ஆக்கிரமித்துக் கொண்டனர்.
பிறகு எம்.ஜி.ஆர் தனிக் கட்சி தொடங்கிய போது பெயருக்கு மட்டுமே அதில் திராவிடம் இருந்தது!
மற்றபடி அது முழு தமிழர் கட்சியாக இருந்தது!
புலிகளை வளர்த்துவிட்டது!
எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு அதுவும் நெடுஞ்செழியன் கைக்கு வந்தது.
இப்போதும் தமிழரல்லாதார் அதை அபகரித்துக் கொண்டனர்.
தமிழர்கள் எப்போதுமே தமிழ்தேசியத்துக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
நீதிக் கட்சி 'சொத்துள்ளவர்கள் மட்டும் வாக்களிக்கும் முறை' இருந்தபோது வென்றது ஏனென்றால் தமிழகத்தில் நிலவுடைமையும் செல்வமும் வந்தேறிகள் கையில் பெரும்பாலும் உள்ளது!
ஈவேரா ஆதரித்த கட்சியோ நபரோ ஒருமுறை கூட தேர்தலில் வென்றதே இல்லை!
எவர் வென்றாலும் அவர்தான் தாவி ஒட்டிக்கொள்வார்!
தோல்வியே காணாதவர் என்று கூறப்படும் கருணாநிதி இருந்தவரை திமுக ஒரே ஒருமுறை தவிர்த்து பெரும்பாலும் தோல்வி அல்லது மைனாரிட்டி ஆட்சி என்றுதான் இருந்தது!
வாக்குப்பதிவு இயந்திரம் வந்தபிறகு தேர்தல் முடிவுகள் மீது நம்பிக்கை வராதபடி எப்போதும் நடக்கிறது!
இப்போதும் குளறுபடிகள் இல்லாத தேர்தல் நடந்தால் தமிழ்தேசியம் பேசும் கட்சிதான் வெல்லும்!
No comments:
Post a Comment