27.11.1982 தமிழகத்தில் இராமேசுவரத்தில்தான் புலிகள் இயக்கத்தின் முதல் வீரமரணம் பதிவாகிறது.
செ. சத்தியநாதன் (அ) சங்கர் என்கிற புலி வீரர் யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் முற்றுகையில் விழுப்புண்ணடைந்து தமிழகத்தில் பண்டுவம்(சிகிச்சை) பெறும்போது வீரச்சாவு அடைந்தார்.
அவரது நினைவாகவே மாவீரர் நாள் கடைபிடிக்கப்படுகிறது.
புலிகளுக்கு தமிழகத்தில் மாவீர நினைவிடங்கள் பல உண்டு.
கிடைத்தவற்றை இதில் சேர்த்துள்ளேன்.
(தலைவர் படங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
ஆனால் அவர் மாவீரர் ஆனதாக உறுதியாகக் கூறமுடியாது)
மேலும் தகவலறிந்தோர் கருத்திடவும்.
அதை பதிவில் சேர்க்கிறேன்.
1. கொளத்தூர் அருகே புலியூர்,
பொன்னம்மான் நினைவிடம்
2. விழுப்புரம் அருகே சடையாண்டிக்குப்பம்,
ஐயனார் சிலையுடன் பிரபாகரன் சிலை.
3. புலியூர் அருகே மேட்டூர் வனப்பகுதி,
கேணல் றோய் (ரோய்) சமாதி.
4. அரியலூர் அருகே குமிழியம்,
திலீபன் நிழற்குடை.
5. மதுரை நகரம்,
திலீபன் தெரு.
6. புதுக்கோட்டை அருகே சுந்தம்பட்டி (அ) மாவீரர் கிராமம்.
7. தஞ்சாவூர், போசன் கல்லறை மற்றும் கல்வெட்டு
8. வேளாங்கண்ணி அருகே பொய்கைநல்லூர்,
பிரபாகரன் முழு உருவ சிலை காவல்தெய்வமாக வழிபாடு
No comments:
Post a Comment