Tuesday 1 August 2017

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் ரேசன் பொருட்கள் வழங்க கெடுபிடி விதிகள்?

அதான பாத்தேன்!

தமிழ்நாட்டுல மட்டும் இப்டி பண்ணுறானுகளேனு.

இந்திய ஒன்றியத்துலயே
தமிழ்நாட்டுலதான் 99% ரேசன் பொருட்கள் உரியவருக்கு போய்ச்சேருதுனு வறுமை ஒழிப்பு தொடர்பா நடந்த ஒரு ஆய்வு சொல்லுது.

மத்த மாநிலத்துல எத்தன சதவீதம்னு கேக்குறீங்களா?

மத்த எந்த மாநிலத்துலயும் இப்படி ஒரு திட்டமே இல்ல.

பல மாநிலங்கள்ல வறுமைக்கோட்டுக்கு கீழ (B.P.L) இருக்குறவங்களுக்கு மட்டும்தான் ரேசன் கொடுக்குறானுக.

ஆனா அந்த பிபிஎல் கார்டு வச்சிருக்குற அத்தன பேரும் பணக்காரனாத்தான் இருப்பான்.
'அவன் பிபிஎல் கார்டு வச்சிருக்குற பெரிய ஆளு'னு மக்கள் நெனைக்குற அளவுக்கு வடயிந்தியாவுல ஆளும் வர்க்கத்தோட அடையாளமா அது ஆகிப்போச்சு.

ஆளும் வர்க்கமே அது மூலமா வர்றத பங்கு போட்டுக்குவாங்க.
  பொருள் வந்து அப்பறம் அத பதுக்கி அடுத்து கொஞ்சகொஞ்சமா திருட்டுத்தனமா பிளாக்ல விக்கிறதெல்லாம் கெடயாது.
அரசாங்க குடோன்ல இருந்து நேரா தனியார் குடோனுக்கு போயிரும்.
செல நேரம் தனியார் சப்ளை லைனுக்கே போய்ச்சேரும்.
வெளிப்படயா நடக்குது.

தமிழ்நாட்டுல எதோ புண்ணியவான்கள் கொஞ்சம் மிச்சமிருக்கறதால பீத்த அரிசியா இருந்தாலும் மக்களுக்கு போய்ச்சேருது.
ஓரளவு ஒழுங்கா போய்க்கிட்டிருக்க திட்டத்த கெடுத்து கொழப்பி அத வடயிந்தியப் பாணில அப்பிடியே லம்ப்பா ஆட்டய போட வழி பாக்குறானுக.

எந்த ஏழையாவது தங்களோட ரேசன் நடுத்தர வர்க்கத்துக்கு போகுறதால பற்றாக்குறைனு போராட்டம் பண்ணாங்களா?

இல்லையே!

ஒரு நாட்ட எப்படி ஆளக்கூடாது ஒரு புத்தகம் எழுதறவன் இங்க வந்து நடக்குறத அப்படியே எழுதினா போதும்.

எதையும் கொடுக்கத்தான் துப்பில்ல.
கெடைக்குற கொஞ்சநஞ்சத்தயாவது விடுங்கடா!

கொள்ளைக்கார பாவிகளா!

No comments:

Post a Comment