வரலாற்றை நிறுத்திய வந்தேறிகள்!
வரலாறு ஒரு சக்கரம் போன்றது.
தமிழர் வரலாறு ஆயிரம் ஆண்டுக்கு ஒரு முறை (இமயம் வரை) ஆதிக்கம் செலுத்துவதாக சுழலும் (அப்படியே ஜெர்மனி போல).
கரிகாலன் இமயத்தைக் குடைந்த ஆயிரம் ஆண்டு கழித்து ராஜேந்திரன் இமயம் வரை ஆண்டான். அதிலிருந்து ஆயிரம் ஆண்டு ஆகி தற்காலம் தமிழர்கள் அந்த எழுச்சிக்கு தயாராக இருந்தோம்.
இதற்கு ஆரம்ப அடிப்படை தேவையான கருத்தியல் சிந்தனைகள் தோன்றியிருந்தன.
தனிநாடு, அகன்ற தமிழர்நாடு, குமரிக் கண்டம் போன்ற நிலம் சார்ந்த சிந்தனையும் நம்மிடம் வந்துவிட்டது.
மாநில அதிகாரம், இந்திய அரசியலில் ஆதிக்கம், ஈழம், புலிகள், வீரப்பன், ஆயுதக் குழுக்கள், மும்பை முதல் மலேசியா வரை நிழலுலக ஆதிக்கம், உலகளாவிய குடியேற்றம், பொருளாதார பெருக்கம், மொழி வளர்ச்சி என நாம் 1980 - 2000 காலவாக்கில் ஏறத்தாழ பாதி வெற்றி அடைந்திருந்தோம்.
நியாயப்படி நாம் 2009 இல் ஈழம் அடைந்து அவ்வழியே தமிழகத்தை ஆயுதப் புரட்சி மூலம் விடுதலை செய்து எல்லைகளை விரிவாக்கி சிங்களத்திற்கு பதிலடி கொடுத்து இந்நேரம் நம் தாய்நிலத்தில் ராணுவ பலத்துடன் தன்னாட்சியுடன் இருந்திருக்க வேண்டும்.
இதன் விளைவாக தேசிய இனங்கள் எழுச்சி பெற்று அடுத்த கால் நூற்றாண்டில் (சோவியத் போல) இந்தியா உடைந்து தென்னிந்திய இனங்களின் நாடுகள் கூட்டாட்சி உருவாகி அதன் ஆதிக்கம் இமயம் வரை பாகிஸ்தான் வரை பரவியிருக்கும் (ஐரோப்பிய யூனியன், நேட்டோ போல).
அடுத்த கால் நூற்றாண்டில் (அன்று கம்யூனிசம் போல) உலகின் மூலை முடுக்கெல்லாம் தேசிய இனங்களின் எழுச்சியும் பெரிய நாடுகள் உடைந்து புதிய நாடுகள் தோன்றுவதும் நடந்து உலகையே வழிநடத்தும் சக்தியாக நம் தமிழர்நாடு இருந்திருக்கும்!
ஆனால் இது எல்லாமே மண் கோட்டை போல இடிந்துவிழுந்தது!
காரணம் வடுக சதி, அதன் நீட்சியான வந்தேறிகள், அதன் மையமான கருணாநிதி குடும்பம்!
கருணாநிதி என்கிற கொடூர நரி வரலாற்று சுழற்சியையே நிறுத்தி விட்டான் என்றால் அது மிகையில்லை.
தமிழக முதலமைச்சர் பதவியை கைப்பற்றாமல் விட்டதன் விளைவு இன்று எல்லாவற்றையும் இழந்து ஈழம் அழிந்து, மக்கட்தொகை குறைந்து, தொடர்ந்து சுரண்டப்பட்டு, மண்வளங்கள் கொள்ளை போய், வாழ வக்கில்லாமல், தண்ணீருக்கு பிச்சை எடுத்து கண்டவனிடம் உதை வாங்கும் நிலையில் நிற்கிறோம்.
ஆயுதம் ஏந்திய அத்தனை பேரும் கொல்லப்பட்டு தமிழுக்காக தமிழருக்காக உழைத்தவர்கள் நாதியில்லாமல் நல்ல சாவு கூட வாய்க்காமல் அழிந்து அடையாளமின்றி போய்விட்டார்கள்.
கால சுழற்சி படி நாம் வல்லரசாக இருந்து கடலில் இறங்கி குமரிக் கண்டத்தை மீட்டு உலக கடற்கரை நகரங்கள் நமதே என்று நிறுவி இருந்திருக்க வேண்டும்.
எதுவுமே நடக்காமல் போய்விட்டது!
இன்று தமிழினம் மிகவும் பரிதாப நிலையில் தற்கொலை செய்யப்போகும் ஒருவன் போல சோர்ந்து நிற்கிறது.
அருண் மொழி ராஜராஜ சோழனும் சடையவர்மன் சுந்தர பாண்டியனும் அமர்ந்த அரியணையில் இன்று அவர்களின் கால்தூசு தேறாத அந்நியரெல்லாம் அமர்ந்துள்ளது மிகவும் வேதனை!
இந்த இனத்தைப் பார்க்கையில் விரக்தியாகவும் இதன் வரலாற்றைப் படிக்கும் போது நம்பிக்கையும் ஏற்படுகிறது!
இன்று தமிழர்களாக இருப்போர் அன்றைய மானத் தமிழர்களை சத்தமில்லாமல் இரவோடு இரவாக கொன்று புதைத்துவிட்டு அவர்களைப் போல வேடமிட்டு தமிழர்களாகிவிட்ட வந்தேறிகளோ என்று ஐயம் கூட வருகிறது.
இருந்தாலும் எனக்கு நூறாண்டுகள் கழித்து ஒரு தகப்பன் தன் மகனுக்கு நம் இனம் இவ்வளவு இழிநிலையில் இருந்தோம் என்று கூறினால் அவன் அதை நம்பாமல் நகைப்பான் என்று ஏன் தோன்றுகிறது?!
06.10.2023 அன்றைய பதிவு மெருகேற்றி