Monday, 9 September 2024

தமிழ்நாடு பல்கலைக்கழகம் அமைப்போம்

தமிழ்நாடு பல்கலைக்கழகம் 

13.07.2015 அன்றைய பதிவு

1926ல் 'ஆந்திரப் பல்கலைக்கழகம்' தெலுங்கர்களால் வெற்றிகரமாக அமைக்கப்பட்டது.

தெலுங்கு மாணவர்கள் தமக்கென்று தனியாக 'ஆந்திரப் பல்கலைக் கழகம்' அமைந்துவிட்டபோதும் சென்னை பல்கலையிலும் இடம்பிடிப்பது தொடர்கிறது.

இதன்பிறகு மலையாளிகள் திருவனந்தபுரம் பல்கலைக் கழகத்தை 'கேரளா பல்கலைக் கழகம்' ஆக்கிக்கொண்டனர்.

கன்னடர்களும் தார்வார் பல்கலைக் கழகத்தை 'கர்நாடகப் பல்கலைக்கழகம்' ஆக்கிக்கொண்டனர்.

இவர்களைப் போலவே குஜராத், மகாராஷ்ட்டிரா,ஒரிசா, காஷ்மீர், பீகார், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய இனவாரி-மாநில-தலைமை பல்கலைக் கழகங்கள் தோன்றின.

இவைகளில் அம்மாநில மொழிக்கும் அம்மாநிலத்து மாணவருக்குமே முதல் உரிமை.

தமிழகம் மட்டும் 'தமிழ்நாடு பல்கலைக்கழகம்' இன்றுவரை அமைக்கவில்லை.

தமிழரான சுப்பராயன் ஆட்சியில் 1929ல் தமிழகத்திற்கு தனியாக ஒரு பல்கலைக்கழகம் அமைக்க குழு ஒன்று அமைக்கப்பட்டபோது 'அண்ணாமலைப் பல்கலைக்கழகம்' நிறுவினால் போதும் என்று அக்குழு பரிந்துரைத்தது. அக்குழுவினர் ஜஸ்டிஸ் கட்சி உறுப்பினர்கள்.

(இதுவரை ம.பொ.சி அவர்களது நூலில் உள்ள தகவல்கள்)

 இன்றுவரை அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஒரு பொதுசத்திரம் போன்றது. அங்கே தமிழுக்கு முதலிடம் கிடையாது.

இதேபோலத்தான் தந்தை செல்வா 1956ல் 'திரிகோணமலைப் பல்கலைக்கழகம்' கேட்டார். இன்றுவரை அது கிடைக்கவில்லை.

சிறிலங்காவின் மொத்தம் 15 பல்கலைக்கழகங்களில் சிங்கள மாநிலங்களின் பெயர்தாங்கிய பல்கலைக்கழகங்களே அதிகம். ஆனால் மட்டக்களப்பு பல்கலையின் பெயர் 'கிழக்குப் பல்கலைக் கழகம்' அதன் ஒரு வளாகம் திரிகோணமலையில் இயங்குகிறது.
தமிழர்களுக்கு அங்கே இருப்பது 'யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்' மட்டும்தான்.
அதாவது அங்கேயும் ஒரு 'தமிழ்ப் பல்கலைக் கழகத்தை' நம்மால் நிறுவமுடியவில்லை.

தமிழர்களுக்கென்று ஒரு நாடு!
கல்விக்குத் தலைமையிடமாக ஒரு பல்கலைக்கழகம்!
அதில் உலகின் அத்தனை துறைகளையும் தாய்மொழியில் கற்கும் வசதி!
இதை நாம் சாதிக்கவேண்டும்!

---------------------------

மேலும் சில தகவல்கள்,

(பிரிட்டிஷ் ஆண்ட) இந்தியாவின் முதல் பட்டதாரி, சென்னை பல்கலைக்கழகத்தில் 1857ல் இளங்கலை (B.A) பட்டம் பெற்ற சி.வை.தாமோரம் பிள்ளை ஆவார்.

இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஈழத்தமிழர். தமிழ்த் தாத்தாவுடன் துணைநின்று தமிழ்த்தொண்டு ஆற்றியவர்.

1905ல் சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து தமிழை நீக்க வந்தேறிகள் செய்த சதியை பாண்டித்துரைத் தேவர், பூரணலிங்கம் பிள்ளை ஆகியோரின் உதவியுடன் பெருமுயற்சி செய்து தடுத்து நிறுத்தியவர் பார்ப்பனரான சூரியநாராயண சாஸ்திரி அதாவது திரு.பரிதிமாற்கலைஞர்.

No comments:

Post a Comment